• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல், பாகம்-9

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம்-9

அவனும் திரும்ப ரோஹனின் சட்டையை பிடித்து கொண்டு இருவரும் சண்டை போட்டனர்.

ஏய்.... நானாவது உன்னை இங்கே இருக்கிறவனுங்களுக்கு கூட்டிக் கொடுத்தேன் டி.... இவனை நம்பி போற இல்ல.... உன்னை வெளிநாட்டு ஆளுங்களுக்கு வித்திடுவான்.... உன்னை வெச்சு நிறைய பணம் சம்பாதிக்க நினைக்கிறான்.

இந்த முறை ஆத்திரம் தாங்காமல் அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் வனஜா.

என்னாட சொன்ன.... பொறுக்கி நாயே....இவரையா தப்பா பேசுற.... உனக்கு என்ன தகுதி இருக்கு.... இவரை பத்தி பேச.... உன்னை மாதிரி கேவலமானவன் உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டாங்க.... என்றாள்.

ஏய்.... என்னையே அடிச்சிட்ட இல்ல.... உங்க மூணு பேரையும் உயிரோட விடமாட்டேன்.... என்று கத்திவிட்டு சென்றான்.

அப்போது மயங்கி விழுந்தாள் வனஜா.

ரோஹன் வனஜாவை காரின் பின் சீட்டில் ஏற்றி படுக்க வைத்துவிட்டு.... அவன் முன் சீட்டில் அமர்ந்தான்.

லீலா காரின் பின் சீட்டில் ஏறி.... அவளை தன் மடியில் படுக்க வைத்து கொண்டாள்.

ராஜூ..‌. பைக்கை எடுத்துக் கொண்டு எங்க பின்னாடியே வாடா.... என்றாள் லீலா.

இரண்டு மூன்று முறை காரின் கண்ணாடி வழியாக வனஜாவை பார்த்தான் ரோஹன்..... மயக்கமாக இருந்தாள் வனஜா. லீலா ஒரு முறை கூட ரோஹனை பார்க்க வில்லை.... வனஜாவை பார்த்து கொண்டே வந்தாள்.... வனஜா.... வனஜா.... எழுந்திருடி.... என்று அவளை உளுக்கிக் கொண்டே வந்தாள்.

ரோஹன் எதுவும் பேசாமல் காரை ஓட்டிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றான்.

அவளை அட்மிட் செய்து விட்டு வெளியே இருந்த சேரில் அமர்ந்தான் ரோஹன்.

இரண்டு சேர்கள் தள்ளி அமர்ந்தாள் லீலா.

ராஜூ.... இங்க டா... இங்கு வா.... உள்ளே நுழைந்த ராஜூவை பார்த்து கூப்பிட்டாள் லீலா.

என்னாச்சு அக்கா.... வனஜா அக்காவுக்கு....

தெரியல டா.... டாக்டர் பார்த்து கொண்டு இருக்காங்க....

வெளியே வந்த டாக்டர்....

இவங்க ஹஸ்பண்டு யாரு.... என்றார் நர்ஸ்.

நான் தான் ... என்று சொல்லி எழுந்தான் ரோஹன்.

உள்ளே வாங்க....டாக்டர் கூப்பிடறார்..... என்றார் நர்ஸ் .

லீலாவும் எழுந்து உள்ளே போக வந்தாள்.

நீங்க இங்கேயே இருங்க லீலா.... என்றான் ரோஹன்.

இவங்க பேஷன்டுக்கு என்ன வேணும்.... என்றார் நர்ஸ்.

ஃபிரெண்டு....

ஓ.... ஓகே.... வெயிட் பண்ணுங்க மேடம்.... டாக்டர் கூப்பிடும் போது உள்ளே வாங்க.... என்றார் நர்ஸ்.

ஓகே .... என்று சொல்லி அமர்ந்தாள் லீலா.

உள்ளே சென்றதும்....

உட்காருங்க மிஸ்டர்.... உங்க பேரு?.... என்றார் ஒரு லேடி டாக்டர்.

ரோஹன்....

உட்காருங்க மிஸ்டர் ரோஹன்....

என்னாச்சு மேடம்.... என் ஒயிஃபுக்கு....

பயப்படும் படி ஒண்ணும் இல்ல.... அவங்க பிரெக்னென்டா இருக்காங்க....

வாட்.... ரியலி.... தேங்க்ஸ்.... தேங்க் யூ ஸோ மச் டாக்டர்.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.... என்றான் ரோஹன்.

கொஞ்சம் இல்ல.... ரொம்பவே வீக்கா இருக்காங்க.... ஸோ.... டேப்லெட்ஸ் தரேன்.... பேபி கிரோத்துக்கு ஒரு 2 மன்த்ஸூக்கு வீக்லி 2 இன்ஜெக்ஷன்ஸ் போடனும்.

ஏன் டாக்டர்....

பேபியோட டெவலப்மெண்டுக்கு தான்.....கவலைப்படத் தேவையில்லை....

இதனால என் ஒயிஃபுக்கு எதாவது பிரச்சனையாகுமா?

இந்த இன்ஜெக்ஷன்னால போத் பேபி அன்ட் மாம் க்கு நல்லது....

ஓ.... ஓகே டாக்டர்.... நான் போய் பார்க்கலாமா?....

கண்டிப்பா.... அவங்களை பார்த்துக்க வீட்ல எதாவது லேடீஸ் இருக்காங்களா?

இல்ல டாக்டர்.... யாராவது ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணி தரமுடியுமா?.... எவ்வளவு வேண்டுமானாலும் பே பண்ண நான் ரெடி....

அவங்களுக்கு அம்மா, சிஸ்டர்ஸ்.... யாரும் இல்லையா?

இல்ல டாக்டர்.... எதுக்கு கேட்கறீங்க....

இல்ல.... அவங்க ரொம்ப டென்ஷனா இருக்காங்க....மென்ட்டலி ஸ்டெரெஸ்டா இருக்காங்க.... நர்ஸ் வெச்சு பார்த்துக்கிட்டீங்கன்னா.... அவங்க பேஷன்ட் மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.... அதனால தான் அவங்களோட கிளோஸ் ரிலேட்டிவ்ஸ் இருந்தா கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவாங்க....

ஓ.... அது ஒண்ணும் பிரச்சினை இல்லை டாக்டர்.... நானே அவங்களை பார்த்துக்கிறேன்....

ஓகே.... மிஸ்டர் ரோஹன்.... நீங்க போய் உங்க ஒயிஃபை பாருங்க.... என்று சொன்னார் டாக்டர்.

அவளுடைய ரூமிற்கு சென்றான் ரோஹன்.

அவளுடைய அருகில் அமர்ந்து கண்கள் கலங்க....

அவளுடைய கைகளை பிடித்து முத்தமிட்டான்.

என்னாச்சு டார்லிங்....

ஸ்வீட்டி.... நம்ம ரெண்டு பேரும் அப்பா அம்மா ஆயிட்டோம்.... என்றான் ரோஹன்

என்னங்க சொல்றீங்க.... என்று சொல்லி கண்கள் கலங்க அவனை கட்டி அணைத்து கொண்டாள் வனஜா.

இங்க பாரு ஸ்வீட்டி.... நீ ரொம்ப வீக்கா இருக்கன்னு டாக்டர் சொன்னாங்க.... ஸோ.... டாக்டர் அட்வைஸ் படி நடக்கனும்....
வெட்னெஸ்டே மார்னிங் நமக்கு ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல கல்யாணம்.... அப்புறம் கோவிலுக்கு போய் தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கலாம்.... நம்ம பேபி இந்த உலகத்துக்கு வரும்போது நம்ம ரெண்டு பேரும் அம்மா அப்பாவா நம்ம பேசியை வரவேற்கனும்.... என்றான் ரோஹன்.

ஹூம்.... ஹூம்.... என்று சொல்லி கொண்டே இருந்தவளுக்கு தீடீரென்று வலிப்பு வந்துவிட அவள் கை கால்கள் இழுத்து கொண்டது.

பயந்து போன ரோஹன் டாக்டர்.... டாக்டர்.... என்று அலறிக் கொண்டு ஓடிப் போய் கூப்பிட்டான்.

லீலாவும் ராஜூவும் பதறிக் கொண்டு உள்ளே வந்து வனஜாவின் நிலையை பார்த்து பயந்துவிட்டனர்.

டாக்டர்கள் இருவர் வந்து வனஜாவை ஐ.சி.யூ விற்கு மாற்றி.... சிகிச்சை அளித்தனர்.

கவலையில் அமர்ந்திருந்தான் ரோஹன்.
அவனருகில் சென்று....

சார்.... கவலைப்படாதீங்க அக்காவுக்கு ஒண்ணும் ஆகாது.... என்றான் ராஜூ.

அமைதியாக இருந்தான் ரோஹன்.

டாக்டர் அவனிடம் வந்து....

சார்.... உங்க ஒயிஃபுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்திருக்கா?..... அப்படி வந்திருந்தா.... எத்தனை முறை வந்திருக்கு.... என்றார்.

மேடம்.... அதுவந்து.... எனக்கு தெரியாது.....
அவங்க பேரு என்ன?

ஷெரின்.... இல்ல வனஜா....

என்ன மிஸ்டர் நீங்க.... உங்க ஒயிஃப் பேரு கூட உங்களுக்கு கரெக்டா தெரியாதா?

இல்ல மேடம்.... நேம் சேஞ்ச் பண்ண போறோம்.... அதான் கொஞ்சம் நியூ அன்ட் ஓல்டு நேம்ல கன்ஃபியூஸ் ஆயிட்டேன்....

எனக்கு அவங்களை ஒரு வருஷமா தான் தெரியும்.

அவங்களோட மெடிக்கல் இஸ்டரி தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?

நான் இருக்கிறேன் டாக்டர்.... என்று சொல்லி எழுந்து வந்து நின்றாள் லீலா.

சொல்லுங்க.... அவங்க வயசு...

26....

அவங்களுக்கு இந்த மாதிரி முன்னாடி வந்திருக்கா?

ஆம்.... இரண்டு முறை வந்திருக்கு....

எப்போ எப்போ....

ஒண்ணு ஆறு வருஷத்துக்கு முன்னாடி.... இன்னொன்று ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி.

என்ன டேப்லட்ஸ் எடுத்திருக்காங்க....

தெரியல மேடம்.....அவளோட டைரில எழுதி வெச்சிருப்பா டாக்டர்.... அதை பார்த்து வேணும்னா சொல்றேன்.....

ஓகே.... கொஞ்சம் சீக்கிரமா பார்த்து விட்டு சொல்லுங்க.... முடிஞ்சா பிரிஸ்கிரிப்ஷன் இல்ல அவங்க போட்டு மீதமுள்ள மாத்திரைகள் எதாவது கொண்டு வாங்க....

ஓகே டாக்டர்..... என்றாள் லீலா.

டாக்டர் சென்றதும்....

என்னோட ஸ்வீட்டி டைரி எழுதுவாளா?

ஆம்.... என்று தலை அசைத்தாள் லீலா.

நான் பார்த்தது இல்லையே.....

ராஜூ.... வாடா நம்ம போய்.... டைரி .... அப்புறம் மாத்திரை இல்ல டாக்டர் சீட்டு இருந்தால் கொண்டு வரலாம்.

வீட்டில் ஆள் இருக்காங்களா?.... என்றாள் லீலா ரோஹனை பார்த்து....

ஹாங்.... இருக்காங்க....

கொஞ்சம் அவங்களுக்கு கால் பண்ணி நாங்க வருவோம்.... வனஜா ரூமை திறந்து டைரி மற்றும் மாத்திரைகள் சீட்டு எடுத்து கொண்டு வருவோம்.... ன்னு சொல்லிடுங்க.

ஓகே.... என்றான் ரோஹன்.

அவர்கள் இருவரும் கிளம்பி சென்றனர். நேற்று இருந்த லீலா இவள் இல்லை என்பது போல நடந்துக் கொண்டாள். அவனை ஒரு முறை கூட ஏறெடுத்து பார்க்க வில்லை.... ரோஹன்.... சே.... லீலா நல்லவள் தான் போல.... நாம் தான் அவளை தப்பா நினைச்சிருக்கோம்.... என்று நினைத்து கொண்டான் ரோஹன்.

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari