• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் வா - 01

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
ஒளி படைத்த கண்ணினாய் வா வா

அத்தியாயம் 1

ஓம் விநாயகா போற்றி
கனங்க நாதா போற்றி
வேற்றுள்உறைவாய் போற்றி
விநாயக பெருமானே போற்றி
ஒற்றை கொம்பனேபோற்றி
ஒளிநிறை முகத்தாய் போற்றி
பாவங்கள் போக்குவாய் போற்றி போற்றி !!!!!!!!

அந்தி காலை பொழுதில் ஆதவன் கண்விழிக்கும் முன்பே கண் விழித்து குளித்து பூஜை அறையில் விநாயக பெருமானை வணங்கி விட்டு தான் தன் வேலையை தொடங்குவாள் வனஜா .

சாம்பிராணி புகையுடன் ஸ்லோகத்தை சொல்லி கொண்டே பூஜை அறையை விட்டு வெளியே வந்தவள்….. “ருத்ரா எழுந்திரு லேட் ஆகுது பாரு…… வெளியே போகணும்னு சொன்னியே” என்று கூறி கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

வனஜா ருத்ராவின் தாய் .மென்மையின் மறு உருவம் .அதிர்ந்து பேச மாட்டார் .எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அமைதியாக அழுத்தமாக எதிர் கொள்வார் .மகள் என்றால் உயிர். .அவரை யாரும் இப்படிதான் என்று கணிக்க முடியாது .

அலாரம் சத்தம் கேட்டு அலறி அடித்து கொண்டு எழுந்த ருத்ரா “அச்சோ நேரமாச்சே ...ஏம்மா சீக்கிரமா எழுப்பி விட கூடாதா” என்று சலித்து கொண்டே சமையலறைக்குள் வந்தாள்.

வனஜா அவளை பார்த்து முறைத்தவள் “ஏண்டி நானும் ஐந்து மணியில இருந்து கரடியா கத்தறேன் ....பைவ் மினிட்ஸ் , பைவ் மினிட்ஸ்னு தூங்கிட்டு இப்போ லேட் ஆகிடுச்சுனு என்கிட்ட வந்து புலம்பறது . போ போய் ப்ரெஷ்பண்ணிட்டு குளிச்சுட்டு வா... நான் டீ போட்டு வைக்கிறேன்” என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க....

உடனே “என் செல்ல அம்மா” என கட்டிபிடித்து அவள் கன்னத்தில் ருத்ரா முத்தமிட

“ஏய் பல்லுவிலக்கமா முத்தம் கொடுக்காதேனு எத்தனை முறை சொல்றது....நீ கிளம்பு முதல்ல” என அங்கிருந்து அனுப்பியவர் அவளின் குழந்தைதனத்தை ரசிக்கவும் செய்தார்.

ருத்ரா என்கிற ஆருத்ரா இந்த கதையின் நாயகி .மாநிறம் ,லட்சணமான முக அமைப்பு .பேசும் கண்கள் ,அவள் அன்னைக்கு நேர் எதிரான குணம் .எப்போதும் ஒரு வேகம் ,எதையும் சீக்கிரம் அடைந்து விட வேண்டும் என்ற துடிப்பு, சிறுமையை கண்டால் சீற்றம் என மொத்தமாக கூறினால் படபடக்கும் பட்டாசு அவள் .CA முடித்து விட்டு அவளது உறவினறான ராமநாதன் ஆடிட்டரிடம் பயிற்சி எடுத்து கொண்டு இருக்கிறாள் .

வீட்டில் கண்ணாடி முன்பு நின்று கொண்டு “இந்த அங்கிள்க்கு இப்பனு பார்த்தா உடம்பு சரியில்லாம போகணும் .எனக்கு அங்க MD தவிர யாரையும் தெரியாது. .அங்க நான் போய் என்ன பண்றது........இந்த பணக்காரங்களே இப்படிதான் கல்யாணத்திற்கும் பார்ட்டி வைப்பாங்க, கருமாதிக்கும் பார்ட்டி வைப்பாங்க...... .இந்த பணத்தை நான்கு குழந்தைங்க படிப்புக்கு செலவு பண்ணா எவ்ளோ நல்லா இருக்கும்” என்று புலம்பிய படியே கிளம்பி வெளியே வந்தாள் .

காலை நேரத்தில் நீல நிற சுடிதார் அணிந்து தேவதைபோல் மகள் நடந்து வர வனஜாவின் முகத்திலோ பெருமிதம் .என் மகள் இவள் .இவளை பார்த்தா அப்படி சொன்னார்கள் என்று நினைவு பழையதை நோக்கி செல்ல

அம்ம்மா என்ற ஆருத்ராவின் சத்தம் அவரை உலகிற்கு கொண்டுவந்தது .

“என்னம்மா நான் தான் பார்ட்டிக்கு போறேன்ல அப்புறம் எதுக்கு டிபன் செஞ்சிங்க.....எனக்கு டீ மட்டும் போதும்” என்று அம்மாவை பின்புறம் அணைத்து படி சொல்ல

“அச்சோ ருத்ரா நீ முதல்ல கையை எடு .நீ ஒன்னும் சின்ன குழந்தை அல்ல .இப்ப என்ன உனக்கு டிபன் வேண்டாம் .இந்தா டீ… குடிச்சுட்டு கிளம்பு” என அவர் அவளை தள்ளி நிறுத்த .

“என் செல்ல அம்மா” என கன்னத்தில் முத்தமிட்டவள் “அவர் கையில் இருந்த டீயை வாங்கி மடமடவென்று குடித்து விட்டு “நான் கிளம்பறேன்மா” என கூறிகொண்டே தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

போகும் வழியில் பூக்கடையை பார்த்தும் பூச்செண்டு வாங்க வேண்டும் என்பது நினைவிற்கு வர அவள் ரெகுலராக வாங்கும் கடைக்கு சென்றாள்.

அவளை பார்த்ததும் கடைக்காரபெண் செல்வி புன்னகையுடன் “வாங்க அக்கா...நல்லா இருக்கீங்களா ...என்னக்கா உங்களுக்கு ரொம்ப பிடிச்ச வெள்ளை ரோஜா செண்டுதானே இந்தாங்க” என்று எடுத்து கொடுத்தாள்.

“அப்பப்பா என்ன வேகம்... உன் படிப்பு எப்படி போயிட்டு இருக்கு .நல்ல படிக்கணும்..... புரிஞ்சுதா....... இந்தா பணம் பத்திரம்” என்று கூறிவிட்டு திரும்பி நடந்தாள்.

இந்த பூக்கள் அழகா...இல்லை அந்த கடை பெண்ணின் புன்னகை அழகா என மனதில் நினைத்து கொண்டு ரோடு கிராஸ் பண்ண அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்கள் அவளை இடிக்கும்படி கிட்டே வர அதிர்ந்து பின் வாங்கினாள்ஆருத்ரா.

“டேய் உனக்கு அறிவிருக்கா...வண்டிய இப்படிதான் ஓட்டுவியா....அலையறானுக” என்று திட்டிகொண்டே பார்ட்டி நடக்கும் ஹோட்டல் சென்றாள்.

.உள்ளே நுழைந்ததும் AP இன்டர்நேஷனல் பங்ஷன் எந்த ப்ளோர் என்று வரவேற்ப்பரையில் கேட்டு அந்த அறைக்கு சென்றாள்.

பார்த்த உடன் புரிந்து விட்டது ஆருத்ராவிற்கு நாம் இங்கு அதிக நேரம் இருக்க கூடாது. பொக்கே கொடுத்து விட்டு உடனே கிளம்பி விட வேண்டும் என்று .... .

அப்போது யாரோ தன அருகில் வருவது போல் உணர்ந்த ஆருத்ரா சட்டென்று பின்னோக்கி நகர ஒருவன் நல்ல குடி போதையில் அவளை அணைப்பது போல் அருகில் வந்தான். ஆருத்ரா கோபத்தில் அவனை முறைக்க ஏறிய போதை இறங்க அவன் தடுமாறி கொண்டே “சாரி... சாரி” என கூறியவாறு ஓட்டம் பிடித்தான்.

சுறு சுறுவென்று கோபம் தலைக்கு ஏற எங்கு போனாலும் இந்த மாதிரி ஓநாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை என சலித்து கொண்டே அருகில் இருப்பவரிடம் “நான் MD பார்க்கணும். எங்கு இருக்கிறார்” என்று கேட்க அதோ என்று கை காட்ட அந்த கும்பலை நோக்கி சென்றாள்.

அங்கிருக்கும் கும்பலை கண்டு முகம் சுளித்தவல் நான் அப்பவும் சொன்னேன்.... .இந்த மாதிரி பார்ட்டிக்கு எல்லாம் போக மாட்டேன்னு...... இந்த அங்கிள் கேட்டால்தானே........ . நேற்று இரவு போன் பண்ணி ருத்ராம்மா எனக்கு உடம்பு சரி இல்ல.இந்த பார்ட்டிக்கு நான் கண்டிப்பா போகணும் .எனக்கு பதிலா நீ போயிட்டு வர்றியா..... .அது AP இன்டர்நேஷனல் பத்மநாபன் அவர்களின் பார்ட்டி தான்” என்று சொல்ல இவளாலும் தட்ட முடியவில்லை .

பத்மநாபன் சாரை பற்றி அவளுக்கு நன்றாக தெரியும் .மிகவும் நல்ல மனிதர் .பணம் இருக்கு என்ற பந்தா இல்லாதவர். இவளிடமும் நன்றாக பழகுவார்.அதனால் தான் அவள் ஒத்துகொண்டாள்.

மேலும் அவரது அனைத்து நிறுவனங்களின் கணக்குகளும் இவர்களிடம் தான் இருக்கிறது .எனவே தொழில் முறையில் பார்த்தால் அவசியம் செல்ல வேண்டும் .

ஆனால் இங்கு வந்து பார்த்தாள் நடக்கு செயல்கள் அவளது கோபத்தை தான் அதிகபடுத்தின .எவ்வளவு நேரம் காத்திருப்பது... .இந்த கும்பல் எப்போது கலைவது.....பெயர் எழுதி கொடுத்து விட்டு கிளம்பலாம் என்று யோசித்தபடி நிற்க



அப்போது “எக்ஸ்க்யூஸ்மி”... என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தவல். அங்கு ஒரு இளைஞன் இவளை பார்த்து புன்னகையுடன் “ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆறு அடி உயரம் இருப்பான் . மாநிறத்திற்கும் குறைவான நிறம், கூர்மையான நாசி . சிரிக்கும் கண்கள் என மனம் அவனை அளவெடுக்க ,என்னது இது என்று அதிர்ந்தவள்….

முகத்தில் எரிச்சலுடன் “இப்படி எத்தன பேர் கிளம்பி வந்திர்க்கிங்க...ஏண்டா நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா.ஒரு பொண்ணு தனியா நிற்க கூடாதே ...உடனே வந்திடுவிங்களே உதவி செய்யறேன்னு” என படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் பின்னர் சுதாரித்து “ஏய் என்ன திமிறா……., ஆமா இவ உலக அழகி. இவளுக்காக அலையறோம்…… .திருவிழால காணாம போன பொண்ணு மாதிரி முழிச்சுக்கிட்டு நிற்கிறியே...... உதவி செய்யலாம்னு வந்தேன்” என்றவன் .

“போங்கடி நீங்களும் உங்க......” என சொல்லி முடிப்பதற்கு முன்னர் “வாம்மா ருத்ரா .ராமநாதன் போன் பண்ணினார்” என கூறிகொண்டே பத்மநாபன் அங்கு வந்தார்.

அவரை பார்த்த உடன் முகத்தில் புன்னகை வரவழைத்து கொண்டு “குட்மார்னிங் சார்...... வாழ்த்துக்கள்” என்றபடி பூங்கொத்தை கொடுத்தாள்.

உடனே அவர் “என்கிட்டே ஏம்மா கொடுக்கிற ...இவன்கிட்ட கொடு
...அடடா உனக்கு தெரியாது இல்லையா ......இவன் என் ஒரே மகன் .பெயர் அர்ஜுன் .MBA முடிச்சிருக்கான் .......நம்ம கம்பெனில GM பொறுப்பு ஏத்துக்க போறான் .அதுக்குதான் இந்த பார்ட்டி” என்று சொல்ல

ஒரு நிமிடம் அதிர்ந்த ருத்ரா பின்னர் அலட்சியமாக “எனக்கு உங்களை மட்டும்தான் தெரியும் சார் .வேறு யாரையும் தெரியாது” என்று கூறி விட்டு அர்ஜுனை பார்த்து ஒரு கேலி புன்னகை செய்தாள்.

அவரும் சிரித்து கொண்டே “அதுவும் சரிதான்மா....என்னைத்தானே நீ அதிகம் பார்த்து இருக்கிறாய் என்றவர் . அர்ஜுனிடம் திரும்பி “இந்த பொண்ணு பெயர் ஆருத்ரா .நம்ம ஆடிட்டர் அங்கிளோட உறவுக்கார பெண் .CA முடித்துவிட்டு அவரிடம் வேலை பார்க்கிறாள். திறமையான பெண்” என்று அவளை புகழ கண்களில் சுவாரசியத்தோடு அவளை பார்த்து கொண்டே நின்றான் அர்ஜுன்.

அப்போது “சார் எனக்கு நேரமாகிடுச்சு .நான் கிளம்புகிறேன் .வாழ்த்துகள் சார்” என்று இரண்டு பேருக்கும் பொதுவாக பூங்கொத்தை நீட்ட

உடனே “வாங்கிகோ அர்ஜுன், ருத்ரா நீ இருந்து சாப்பிட்டு போம்மா . ஒரு அவசர வேலை இருக்கு வந்து விடுகிறேன்” என கூறிகொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் பத்மநாபன் .

இப்போது அங்கு அர்ஜுனும் ஆருத்ராவும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் ஆனால் அதே இடத்தில நின்று கொண்டு இருந்தனர் .

“இப்படியே எவ்ளோ நேரம் நிற்பாய் .அப்புறம் யாரவது வந்து உதவி வேண்டுமானு கேட்டா திட்ட வேண்டியது” என கேலியாக கூற அவனை திரும்பி முறைத்தவள்

“நான் எப்படியோ நிற்கிறேன் .உங்களுக்கு என்ன,? நான் கிளம்புகிறேன்” என சொல்லிகொண்டே வாயிலை நோக்கி நடந்தாள்.

அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவன் திடீரென “ஒரு நிமிடம் மிஸ் ருத்ரா அந்த பூங்கொத்து கொடுப்பதற்க்கா இல்லை கண்ணில் மட்டும் காட்டி எடுத்து செல்வதற்கா” என கிண்டலாக கேட்க அப்போது தான் தன் கையில் உள்ள பூங்கொத்தை கவனித்தாள் ஆருத்ரா .

ஒரு நிமிடம் யோசித்தவள் பின்னர் தலையை சிலுப்பி கொண்டு “நான் கொடுத்தேன் நீங்க தான் வாங்கவில்லை “ என சொல்ல

அவன் சிரித்து கொண்டே “நீ எங்கே என்னிடம் கொடுத்தாய் .என் அப்பாவிடம் தானே கொடுத்தாய்” என பேச்சை வளர்க்க .

உடனே “இல்லை இல்லை இரண்டு பேருக்கும் பொதுவாக கொடுத்தேன்” என்று அவசர அவசரமாக சொன்னாள். ,

“அப்போ நீ எனக்கு தரவில்லை அப்படிதானே” என அவன் பாயிண்டை பிடிக்க ...

அச்சோ நாமே வாயை கொடுத்து மாட்டிகிட்டோமே என நாக்கை கடித்தவள்.....”இப்ப என்ன சார் வேணும் உங்களுக்கு .... இந்த பூங்கொத்து தானே ......இந்தாங்க பிடிச்சுக்குங்க..... இப்போ சந்தோசமா” என்றபடி அவன் கையில் பூங்கொத்தை திணித்து விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள் .

அவனோ அதை வாங்கி கொண்டு “ஆருத்ரா சாப்பிடாம போறிங்களே” என அவன் அழைக்க



“அதையும் நீங்களே கொட்டிகிங்க....... பார்ட்டியாம் பெரிய பார்ட்டி” என புலம்பிகொண்டே வண்டியை எடுத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

பார்ட்டி முடிந்ததும் அனைவரயும் வழியனுப்பி வைத்து விட்டு தன அறைக்கு வந்தவன் அப்போதுதான் கவனித்தான் அந்த வெள்ளை ரோஜா பூங்கொத்தை தான் கையிலே வைத்திருப்பதை .....
அதை பார்த்து புன்னகையுடன் அவள் வாங்கி வந்தது அல்லவா ....என அதை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன்

ஒ வந்தது பெண்ணா ?
வானவில் தானா
பூமியிலே பூபரிக்கும் தேவதை தானா
காதலிலே என் மனதை பறித்து நீதான
உன் பேரே காதல் தானா?
தில்லான போல வந்த மானா ?

என்ற பாடலை முனுமுனுத்துகொன்டே கட்டிலில் படுத்தவன் அலுப்பில் உறங்கி விட்டான் .

ஹோட்டலில் இருந்து நேராக வீட்டிற்கு வந்தவள் ....உள்ளே நுழைந்ததும் “அம்மா எங்க போனிங்க ,பசிக்குது ...டிபன் எடுத்து வைங்க.என கத்தியவள் அதுக்குதான் நான் சொன்னேன் போக மாட்டேன்னு..பெரிய பணக்காரங்கனா அவங்களோட இருக்கட்டும்.......அவன் என்ன அப்படி பார்க்கிறான்...... .கையில கொடுத்தாதான் துரை வாங்குவாராம்...... .எல்லாம் பணம் இருக்கிற திமிரு....... ,இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் எங்கிட்ட மாட்டாமலா போய்டுவான்........ .அப்போ கையாள வேற என்ன கொடுக்க முடியும்னு அவனுக்கு காட்டனும்........ .என்னை யாருன்னு நினைச்சான்” என புலம்பிகொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவளை யோசைனையுடன் பார்த்து கொண்டிருந்தாள் வனஜா .


அன்று அவர் பேசியது இன்று இவள் பேசுகிறாள் .கடவுளே இது என்ன கொடுமை .இதை கண்டு நான் சந்தோஷபடுவதா இல்லை வருத்த படுவதா எனக்கே புரியவில்லையே......என மனம் தவித்து போனது.

நடப்பவை எல்லாம்
நமக்கு புரிந்து விட்டால்
நமக்கு மேல் ஒருவன்
இருப்பதே மறந்துவிடும் ........

காத்திருப்போம் காலம் சொல்லும் பதிலை எதிர்பார்த்து ...............................
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
நைஸ் ஸ்டார்ட் மேம்..
மோதலி ஆரம்பித்திருக்கிறது
 
  • Like
Reactions: Thani

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
59
27
18
Deutschland
அழகான ஆரம்பம் 💐
ஒத்த பார்வையிலே அர்ஜுன் மனசில் ருத்ரா இடம் புடிச்சிட்டாள் ....
அப்புறம் சாரே ....அந்த வெள்ளை ரோஜாவை பத்திரமா பாத்துக்கோ ...😜
சூப்பர் ❤️
 
  • Like
Reactions: Vathani