• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் -12

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
 அத்தியாயம் 12

காரை அர்ஜுன் ஒட்டி கொண்டிருக்க அதன் வேகத்தை விட ஆருத்ராவின் பேச்சின் வேகம் அதிகமாக இருந்தது.

“இப்ப எதுக்கு என்னை பார்க்க வந்திங்க இந்த நான்கு நாளா எங்க போனிங்க?என்னமா பேசினிங்க ...அதை கேட்டு கொஞ்சம் ஏமாந்துட்டேன்.நீங்களும் டைம் பாஸ்க்கு ஒரு ஆளு ...தாலி கட்டறதுக்கு ஒரு ஆளுன்னு நினைக்கிற வகைதானா ? இச்சே என்னை சொல்லணும்.....நீங்க சொன்ன உடனே சரின்னு சொன்னேன் பாருங்க” என எண்ணெயில் விழுந்த கடுகு போல் பொரிந்து தள்ள

அவன் பதில் எதுவும் சொல்லாமல் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு காரை செலுத்துவதில் கவனமாக இருக்க

பேச்சை நிறுத்தி அவனை பார்த்தவள் ....அவன் தன்னை கவனிக்கவே இல்லை என்ற இயலாமை அவளயும் மீறி வெடிக்க தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

கார் சட்டென்று நிற்க “...ஆரு...ஆரு “என அர்ஜுன் அழைக்க ....அவள் நிமிராமல் அழுது கொண்டே இருக்க

“ஆரும்மா !!!!! இங்க பாருடா” என அவன் அன்புடன் அழைக்க

நீ பேசாத ....நீயும் எல்லார் மாதிரிதான்.நான் தான் தேவை இல்லாம என் மனசுல ஆசையை வளர்த்துகிட்டேன்.உனக்கு என்மேல ஆசையே இல்ல” என அவனை நிமிர்ந்து பார்காமலே பொரிய ...

அவளை அப்படியே பூபந்து போல் காரில் இருந்து தூக்கியவன்

அப்போது தான் கார் நின்றதை கவனித்தவள் “ஏய் .....என்ன பண்ற .....என்னை விடு ...என்னை விடு” என கத்த

“ஏய் சும்மா இருடி...படபடனு பொரிஞ்சுகிட்டே இருக்க” என அவன் அதட்ட

“நீ இன்னும் என்னை திட்ட வேற செய்யறியா ....என்னை விடு ...நான் போறேன் “என குதித்து அவனை விட்டு விலக

“ஆரூ கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு குட்டிமா “என அவன் கெஞ்ச

“வேண்டாம் நீ ஒரு பிராடு ...என் கூட பேசாத ....நான் பட்ட வேதனை உனக்கு தெரியுமா? உனக்கு எங்க அதெல்லாம் தெரியபோகுது” என அவள் கோபமாக கத்த

“ஆரூ கொஞ்சம் அமைதியா இருக்கியா ....நானும் சொல்லிகிட்டே இருக்கேன்....நீ பாட்டுக்கு பேசிட்டே இருக்க “என அர்ஜுன் மிரட்ட
சட்டென்று அமைதியான ருத்ரா ...அப்போது தான் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இது என்ன புது இடமா இருக்கே என திருதிருவென முழித்தாள்.

“பேசாமல் என் கூட வா “என அவள் கையை பிடித்து கொண்டு சிறிது தூரம் நடந்தவன்

திடீரென்று நடை தடை பட திரும்பி அவன் அவளை முறைக்க.. ...அவளோ தனது அழகிய விழிகளை விரித்து அதிசயத்து நின்று கொண்டிருந்தாள்.

அவள் பார்த்த திசையை பார்த்தவன் இதழில் புன்னைகயுடன்.......”என்ன ஆரூ உனக்கு பிடிச்சருக்கா “ என அவன் அவள் காதருகில் கேட்க
பதில் சொல்ல முடியாமல் கண்களை அந்த இடத்தில இருந்து விலக்காமல் பார்த்து கொண்டே நின்றாள்.

“குட்டிம்மா இங்க நின்னா எப்படி ?கிட்ட வந்து பாரு” என அவன் கையை பிடித்து இழுக்க

ஏதோ கனவில் நடப்பது போல் அவன் பின்னே சென்றாள்.

அந்த இடத்தை அடைந்ததும் அதன் அழகில் இவள் தடுமாற
அவளை தன தோழோடு அணைத்து பிடித்த அர்ஜுன் ...”என் இதய தேவதைக்கு இந்த ஏழையின் சிறிய பரிசு “என சொல்ல

அவனை நிமிர்ந்து பார்த்தவள் ....அவள் கண்களில் இருந்த கண்ணீரில் அவன் முகம் மங்கலாக தெரிய

“அஜுன் என்ன இது ....நிஜம் தான ....கனவு இல்லயே” என கேட்க

அவன் சிரித்து கொண்டே ...”ஆகா என் குட்டிமாக்கு என்ன ஆச்சு....அத்தனையும் நிஜம்....இன்னும் உள்ளே வந்து பாரு” என அழைக்க

மீண்டும் அவள் அந்த தோட்டத்தை பார்க்க அனைத்தும் வெள்ளை ரோஜா செடிகள் ...அவன் அழைத்து வந்தது அவனோட பண்ணை வீட்டிற்க்கு....

அங்கு மரத்தினால் ஆன சின்ன குடில்....அதை சுற்றிலும் ரோஜா செடிகள்....அதுவும் வெள்ளை ரோஜா பூக்கள் பூத்து குலுங்க ....பாதை முழுவதும் பல வண்ண பூச்செடிகள் பூத்து மனம் வீச அதன் அழகில்தான் மதிமயங்கி நின்றாள் ருத்ரா.

அவன் வலுகட்டயமாக அவளை உள்ளே அழைத்து செல்ல அந்த வீட்டின் அமைப்பு அவளை மேலும் ஆச்ரியபடுதியது .மரத்தினால் இப்படி எல்லாம் கட்ட முடியுமா என அதிசயப்பட...அதன் உள் கட்டமைப்பு அவன் எந்த அளவிற்கு கலாரசிகன் என்பதை விளக்கியது.

அவள் அதை பார்த்து கொண்டே இருக்க ...”.ஆரூ இங்க...இப்படி உட்கார் “என மரதிண்ணையில் அவளை இழுத்து அமர செய்ய அவளும் சுத்தி விட்ட பொம்மை போல் அவனருகில் அமர்ந்தாள் .

“ஆரூ ...ஆரூ” என அவன் அவள் அருகில் மெதுவாக அழைக்க

“ம்ம்ம்” என அவளும் மெதுவாக கேட்க

“ஆரூ சாரிடா ....நான் பண்ணது மிகப்பெரிய தவறு.....எனக்கு புரியுது ...என்னை மன்னிச்சுடுடா” என அவன் கேட்க

அதற்குள் பழைய நிலைக்கு வந்தவள் ...உடனே முகத்தை திருப்பி கொண்டு பேசாமல் இருக்க

“ப்ளீஸ்!!!!!!!!” என அவன் கெஞ்ச

“நீங்க சாரின்னு ஒரு வார்த்தையில் முடிச்சுடிங்க.....ஆனா என் மனசு பட்ட பாடு உங்களுக்கு தெரியுமா?” என அவள் மனம் பட்ட வேதனை வார்த்தையாக வெளிவர

“தப்புதாண்டா....அதற்காக நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துகிறேன்.ஆனா நீ கார்ல வரும்போது சொன்னியே டைம் பாஸ்காக உன்னை லவ் பண்றேன்னு ...இனி மறந்தும் அப்படி சொல்லாதடா ....நீ வேனா என்னை முழுசா ஏத்துக்காம இருக்கலாம்.ஆனா என்னை பொறுத்த வரைக்கும் நீதான் என் மனைவி.இதில் மாற்றம் இல்லை” .

“இல்ல அஜுன் அது வந்து” என ருத்ரா ஆரம்பிக்க

கொஞ்சம் பொறு ...நான் முடிச்சறேன்.நான் உன்னைய வெளியே கூட்டிட்டு போய் சமாதான படுத்தலாம்னு தான் வந்தேன்.ஆனா நீ நம்ம காதலை சந்தேகப்பட்ட மாதிரி பேசினதும் தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.இது எல்லாம் நான் எப்போ செய்ய ஆரம்பிச்சேன் தெரியுமா? ....உன்னை என் வீட்ல பார்த்த அடுத்த ஒரு வாரத்திலே இந்த வேலைய ஆரம்பிச்சுட்டேன்.என் மனசுக்கே முழுசா தெரியாது நான் உன்னை நேசிக்கிரானானு.ஆனால் உன்னோட முதல் சந்திப்பு இந்த வெள்ளை ரோஜா உடன்தான்.இந்த பூவின் நிறம் போலவே உன்மனமும்.அதற்க்கு பிறகு எங்க வெள்ளை ரோஜா இருந்தாலும் வாங்க ஆரம்பிச்சுட்டேன்.அதற்க்கு பின்பு நான் உன்னை அடிகடி பார்த்து ,,,,அப்போது என் மனதில் இருக்கும் ஆசையை கொண்டுதான் இந்த குடிலை வடிவமைத்தேன் .என்னோட ஒவொவொரு அணுவிலும் நீ இருக்கிற ஆரூ....நீ அந்த வார்த்தையை சொன்னதும் நான் நொறுங்கிட்டடேன் தெரியுமா ?என்னை நம்பாம சந்தேகத்தோடத்தான் காதலிக்கிறேனு சொன்னியா நீ “என அவன் வேதனயுடன் கேட்க

“அய்யோ!!!!! அஜுன் என அவன் வாயை பொத்தியவள் ...இல்ல அஜுன்...நீங்க என் கூட பேசல ...பார்க்கல அப்டிங்கரத என்னால் தாங்கிக்கவே முடியல ...அதான் அப்படி பேசிட்டேன் ...சாரி அஜுன்” என வேதனையுடன் சொல்ல

“பரவாயில்லை ஆரூ....இது நம்ம முன்பே முடிவு பண்ணினது தான ....நம்ம பத்தி நம்ம இரண்டு பேருக்குமே முழுசா தெரியாது.இனி மேல் தெரிஞ்சுக்கணும்னு ...அதனால் இப்படி தான் இருக்கும் ....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் ....ஆனா வெறுக்க கூடாது என்ன புரியுதா?” என கேட்க

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசாமல் பார்த்து கொண்டே இருக்க

“ஆரூ எனக்கு வேலையுனு வந்திட்டா மற்றது எல்லாம் இரண்டாவது பட்சம்தான்.நான் சொல்லவரது உனக்கு புரியும்னு நினைக்கிறேன் ...எனக்குனு பிசினெஸ்ல சில கனவுகள் இருக்கு...அதை அடையனும்னா இப்படி இருந்தாதான் நடக்கும்.என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோடா.ஆனால் அதுக்காக உன் மேல அன்பு இல்லைனு மட்டும் நினச்சுடாத ப்ளீஸ்” என அவன் தன்னிலை விளக்கம் கூற

“அஜூன் என்ன இது ,,,சாரி அஜுன்...எனக்கு புர்யுது நீங்க சொல்லவரது .அப்புறம் நானும் கொஞ்சம் கோபத்துல ஏதாவது பேசிட்டாலும் நீங்க கோவிச்சுக்க கூடாது சரியா? நீங்க சொன்ன நான் கேட்டுக்குவேன்” என அவள் கெஞ்சும் குரலில் சொல்ல

“ஆகா ....நீ கோபமா பேசலயினாதான் நான் கோபித்து கொள்வேன் .உன்கிட்ட பிடிச்சதே அதான்” என அவன் சிரிக்க

“ஆனால் அஜுன் என தயங்கியவள் உங்களுக்கு வேலை அதிகம் இருந்தா எனக்கும் மெசேஜ் மட்டும் பண்ணிடுங்க என சொல்லும்போதே குரல் தடுமாற என்னால முடியலடா ....நீ என்கூட பேசலயினா என்னால இயல்பா இயங்க முடியல” என கூறியவள் அவன் மார்பில் சாய்ந்து அவனை அணைத்து கொள்ள

“குட்டிம்மா !!!!!!! என அவளை இறுக அணைத்தவன்
...கண்டிப்பாட...இனி தினமும் உன் கூட பேசிடறேன் என சொல்லிவிட்டு அவள் முகத்தை நிமர்த்தி நெற்றியில் தன இதழ் பதித்தவன்....நீ எனக்கு கிடைத்த வரமடி” என்றவன் மேலும் அவளை இறுக அணைத்தான்.

அந்த அணைப்பு சில பல நிமிடம் நீடிக்க ...பின்னர் ருத்ரா சுதாரித்து அவனிடம் இருந்து விலக

“ஆகா அம்மணி தெளிவாகிட்டா என சொன்னவன் எப்படி இருக்கு நம்ம குடில்? “என கேட்க

“ஒரு நிமிடம் அவன் கண்களையே பார்த்து கொண்டிருந்தவள் வேகமாக அவனை இழுத்து இதழோடு இதழ் பதிக்க அங்கு ஒரு சந்தோஷ பகிர்வு இனிதாக நடந்தது. .

சில நொடிகளில் அவனிடம் இருந்து விலகி தோட்டத்திற்கு ஓடியவள் ஆங்கு இருக்கும் பூக்களை எல்லாம் சுத்தி சுத்தி ஓடிகொண்டே “டேய் அஜுன் உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சருக்கு...ஐ லவ் அஜுன்” என கத்தி கொண்டே தோட்டம் முழுவதும் சுற்றி வர

அவளை பார்த்து சிரித்து கொண்டே “கோபமும் சரி...சந்தோசமும் சரி...நம்ம ஆளுக்கு எல்லாமே ஓவர் டோஸ் தான் என தனக்கு தானே சொல்லி கொண்டவன்....ம்ம்ம்....இவளை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் என நினைத்தவன்,ஆரூ நேரமாகிடுச்சு கிளம்பலாமா” என கேட்க

“அய்யோ ...ஆமா அஜுன்...நானும் அங்கிள் கிட்ட சொல்லலை என பதட்டத்தோடு ஓடி வந்தவள் கால் தடு மாற அவளை அப்படியே அலாக்காக மறுபடியும் தூக்கியவன் எந்த கடைல நீ அரிசி வாங்கிற ...இந்த வெயிட் இருக்க”என கிண்டலாக சொல்ல

“எல்லாம் நம்ம ஹம்சிக்க மொத்வாணி வாங்கிற கடைலதான்”என அவளும் சிறிது கொண்டே சொல்ல அவளை காருக்குள் அமரவைத்து வண்டியை கிளப்பினான்.

அவளது ஸ்கூட்டி நிற்கும் இடத்திற்கு வந்ததும் காரை நிறுத்த
ஆரூ அர்ஜுனிடம் திரும்பி “இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அஜுன்...தாங்கஸ்” என சொல்ல

“ஆகா தேங்க்ஸ் இப்படியா சொல்வாங்க” என அவன் கேட்க

“ஒ ...அப்போ இப்படி சொல்வாங்களா “ என எம்பி அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டவள் ....கண்ணா இரண்டாவது லட்டு திங்க ஆசையா என மனதில் ஒரு குரல் எழும்ப

“இன்னொரு கன்னத்திற்கு என் அவன் மறு கன்னத்தை காட்ட இனி அடிதான் விழும் “என் சொல்லிகொண்டே இறங்க மனம் இல்லாமல் இறங்க பிரிவின் ஏக்கத்துடன் இருவிழிகளும் பார்த்தன.

நான்கு விழிகள் ஏக்கத்துடன் பார்க்க.....”சிக்கிட்டான்யா சித்தப்பு” என இரரண்டு விழிகள் அவனை பார்த்து கொக்கரித்தது.

காலை வேலையில் ap இன்டர்நேஷனல் சுறுசுறுப்பாக தான் பணியை ஆரம்பிக்க “குட் மார்னிங் லோட்டஸ்” என கார்த்தி தாமரைக்கு விஷ் பண்ண

“குட்மார்நிங் என்றவள் அவன் கண்களை பார்த்து என்ன கார்த்தி உடம்பு சரி இல்லியா ...கண்ணு எல்லாம் சிவந்திருக்கு” என கேட்க.....

“இல்லையே நல்ல தான இருக்கேன்.....ஒ அதுவா எல்லாம் நம்ம அகில் சார்நாள என் ஆரம்பித்தவன்,சட்டென்று சுதாரித்து அது எல்லாம் ஒண்ணுமில்ல” என தடுமாற

“கார்த்தி உண்மைய சொல்லு...எதாவது பிரச்சனயா....நீ எதாவது தப்பு பண்ணிட்டியா ....அவருக்கு தப்பு பிடிக்காது....கண்டபடி திட்டிடுவார்...” என தாமரை சந்தேகமாக கேட்க

“அச்சோ நான் ஒன்னும் பண்ணல...சார் தான் நேத்து கொஞ்சம் ட்ரிங்க்ஸ் அதிகம் சாப்பிட்டு என இலுத்தவன்....அதுனாலதான்...நீ என்னை தப்ப நினைச்சிடாத லோட்டஸ் ...உன் கார்த்தி ரொம்ப நல்லவன்மா “என அங்கு லவ் ட்ராக் அவன் ஆரம்பிக்க ...

என்னது அகில் சாரா...இருக்கவே இருக்காது...நீ பொய் சொல்ற...நீ தான் சாப்பிட்ருப்ப” என அவள் அவனிடம் சண்டை போட

“நிஜமா லோட்டஸ் ...என்னை நம்பு...உன் மேல சத்தியம்”என நகர்ந்து அவள் அருகில் கையை கொண்டு சென்றவன் அவனுக்கு பின்னல் நின்று கொண்டிருக்கும் அபியை அப்போது தான் பார்த்தாள் தாமரை .

உடனே “வாங்க மேடம்...குட்மார்னிங்” என அவள் வேகமாக சொல்ல
திரும்பி பார்த்த கார்த்தி...”அச்சோ நான் சொன்னத கேட்டு இருப்பாங்களோ “என சந்தேகத்துடன் எதுவும் பேசாமல் அவளை பார்த்து கொண்டே நிற்க

“என்ன கார்த்தி காலையிலே இங்க அரட்டை...போய் வேலை பார்க்கலையா” என கம்பனியின் முதலாளி என்ற மிடுக்கோடு பேசியவள் தாமரையின் அருகில் இருக்கும் தனது கேபினுக்கு சென்று அமர்ந்தாள்.

“இதோ கிளம்பிட்டேன் மேடம்....என சொல்லி கொண்டே வேகமாக வெளியே வந்தவன்....நான் பேசினத இவங்க கேட்டுடாங்குலோ என சந்தேகம் வர.....அச்சோ இந்த லூசு வேற எதையும் உளறி வைக்க கூடாதே ....அண்ணி மேட்டர் நமக்கு மட்டும் தான தெரியும் என நினைத்தவன் உடனே அலைபேசியில் அழைத்து நான் சொன்னது ஏதும் மேடம் கிட்ட சொல்லிடாத” என சொல்லி விட்டு போனை வைத்தான்.


காலையில் மிகவும் லேட்டாக எழுந்த அகில் அச்சோ நேத்து ரொம்ப உளரிட்டனோ என நினைத்தவன் ...சரி இனி நடப்பதை பார்ப்போம் என்ன்ற முடிவுடன் கிளம்பி அலுவலகம் வந்தான்.

அகிலிடம் இருந்த தாமரைக்கு அழைப்பு வந்ததும் அவள் எழுந்து செல்ல...அது வரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் பொங்கி வர அபி கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.

“என்னை இந்த அளவுக்கு வெறுத்திட்டியா மாமா நீ....எப்பவுமே சாப்பிடதவன் நேத்து நீ சாப்பிட்டு இருக்கேனா அந்த அளவுக்கு நான் உனக்கு வேண்டதவளா போய்ட்டனா ....உன் மனசுல என்னதான் நினச்சுட்டு இருக்க..... என தன் எண்ணம் போனபடி சிந்தித்தவள்....பின்னர் கண்களை துடைத்து கொண்டு இனி உன் முன்னாடி நான் வரமாட்டேன்.ஆனா உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்....என்னை புரிஞ்சு நீயா வருவ” என உறுதி எடுத்து கொண்டு தனது வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

உள்ளே வந்த தாமரை “அபி நமக்கு டிசைநர்ஸ் கிடைச்சுட்டாங்க ...மெயில் வந்திருக்கு...அதான் அகில் சார் கூப்ட்டார்.இனி ஒன்னும் பிரச்சனை இல்லை. இந்த ஆர்டர் சூப்பரா முடிச்சுடலாம்” என்றவள்
“நீங்களும் டிசைன் பண்ண போறிங்களா” என அவள் கேட்க

“ஆமாம் தாமரை...நீதான் எனக்கு அதற்க்கு உதவி பண்ணனும்.அந்த டிசைநேர்ஸ் கொடுக்கிற விபரங்களி எல்லாம் எனக்கு ஒரு காபி கொடு...நானும் ட்ரை பண்றேன்” என கேட்க

“கண்டிப்பா மேடம்.அர்ஜுன் சார் சொல்லிருக்கார்.உங்களுக்கு எல்லா உதவியும் பண்ணி தர சொல்லி” என சொன்னாள்.

சிரித்துகொன்டே “தேங்க்ஸ் தாமரை “என்றவள் தனது வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

நாட்கள் ஓடின ....அங்கு இரண்டு புறாக்கள் அலைபேசியில் தங்கள் காதலை உரம் போட்டு வளர்க்க ...இங்க குயில்கள் இரண்டும் பார்காமலே தங்களது காதலை உறுதி செய்து கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு கார்த்தியும் அகிலும் பேசிகொண்டிருக்கும்போது அகில் சந்தோஷ மூடில் இருக்க

“என்ன அண்ணா ...அண்ணிகிட்ட இன்னைக்கு பேசினிங்களா” என கார்த்தி கேட்க

“இல்லைடா...எங்க அவ வீட்ல இருக்கா...ரொம்ப ரோசக்காரி...வேண்டாம்னு சொன்ன உடனே வரலை பாரேன்” என சிரித்து கொண்டே சொல்ல

என்னது வரலியா ...கெட்டுது போங்க ...அவங்க தான் ஆபீஸ்க்கு முதல்ல வந்தாங்க...நீங்க பார்க்கலியா ?”என கேட்க

என்னது வந்தாளா ...நான் பார்க்கவே இல்லைடா...எங்க இருந்தா ?

“நம்ம தாமரையோட அறையில்தான் இருந்தாங்க.அர்ஜுன் சார் அவங்களையும் டிசைன் பண்ண சொல்லிருக்கார்” என்றதும்

“அப்படியா ...நிஜமா எனக்கு தெரியாதுடா “என சொல்லி விட்டு சிறிது நேர அமைதியாக இருந்தவன்

அண்ணா ரொம்ப போட்டு குழப்பிக்காதிங்க...நீங்க நான்குநாளா தறி விஷயமா வெளியே சுத்திட்டு இருக்கீங்க....உங்களுக்கு எப்படி தெரியும் ?”என சொல்லி விட்டு

“ஆனாலும் அண்ணி ரொம்ப ரோசகாரங்கதான்.சொன்னபடி உங்க முன்னாடி வராமேயே இருக்காங்க பாருங்களேன்...நான் கூட பேசி இருப்பிங்கன்னு நினச்சேன்” என சொல்ல

“அவ ஒரு அழகான ராட்சசிடா...நினச்சத சாதிப்பா.... என சிரித்து கொண்டே சொன்னவன்...சரி எனக்கு தூக்கம் வருது” என எழுந்திரிக்க

“ஆஹா அண்ணா ரொமான்ஸ் மூடுக்கு போய்ட்டார்....கலக்குங்க அண்ணா “என்று கிண்டல் அடித்து விட்டு படுக்க சென்றான்.

மறுநாள் வந்த உடன் தாமரையை அழைத்தவன் “அபி வந்து இருக்கங்களா?” என கேட்க

“வந்திருக்காங்க சார்...செம டேலன்ட் பெர்சன் சார்.சின்சியர் வொர்க் எனக்கே அவங்கள பார்க்க பார்க்க பொறாமையா இருக்கு. உங்கள பார்த்து நான் அதிசயபட்ருக்கேன்....அதற்கு பிறகு இவங்க....சின்ன பொண்ணுதான் ...ஆனா நிறைய திறமை இருக்கு .நீங்க தான் சார் அவங்கள டிசைனரா வேண்டாம்னு சொல்லிடிங்க ....ரொம்ப நல்லா பண்றாங்க ...நேத்து சாப்பிட கூட போகல ...என சொன்னவள் சார் நம்ம டிசைனர்ஸ் மீட்டிங் இருக்கு அடுத்த வாரம் இருக்கு ...அதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கணும்னு அர்ஜுன் சார் மெயில் பண்ணிருக்கார்” என்ற சொல்ல

“ம்ம் ..நானும் பார்த்தேன் என சொன்னவன் சரி நீ கிளம்பு நான் பார்த்துகிறேன்” என்றான்.


தாமரை சென்ற பிறகு அவள் அபியை பற்றி சொன்ன வார்த்தைகள் அவனை சுற்றி சுற்றி வர அவளை பார்க்க வேண்டும் என ஆவல் அதிகமாக

உடனே தாமரையை அறைக்கு சென்றவன்....எதாவது காரணம் சொல்ல வேண்டுமே என நினைத்தவன்

“தாமரை எனக்கு நம்ம டைலரிங்க்ல வொர்க் பண்ற வோர்கேர்ஸ் விபரம் வேணும்...அர்ஜன்ட்” என சொல்லிகொண்டே உள்ளே வர

அங்கு கண்ணாடி தடுப்பிற்கு அந்தபுறம் அபி அமர்ந்து அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் வந்ததை கூட அவள் கவனிக்க வில்லை ...

தாமரை அவனது அவசரத்தை பார்த்து “சார் அது அந்த லாக்கரில் இருக்கிறது...நான் உங்க அறைக்கே எடுத்துட்டு வரேன் சார் “என்று சொல்ல

“இல்ல நான் இங்க வெயிட் பண்றேன்...சீக்கிரம் எடுத்திட்டு வாங்க...இது எல்லாம் உங்க கிட்ட வைத்து கொள்வது இல்லியா “ என சொல்லிவிட்டு அங்கேயே இருக்கையில் அமர்ந்தான்.

வேகமாக அவள் வெளியே செல்ல
இங்கு நடந்து எதிலையும் கவனம் இல்லாமல் அபி தனது வேலையிலே கவனமாக இருக்க


சோர்ந்து இருந்த அவளது முகம் அவளது வேலையின் கடினத்தை சொல்ல ...தனது மூச்சு காற்றை வைத்தே தன்னை கண்டு கொள்பவள் இன்று தான் இவ்வளவு அருகில் இருந்தும் தன்னை அறியாமல் அவள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்த அகிலின் மனம் மிகவும் வருந்தியது.அவளை அணைத்து இதற்க்கு தானடி சொன்னேன்...உனக்கு இந்த வேலை வேண்டாமென்று....என்னை புரிந்து கொள்ளவே மாட்டாயா?
என மனம் ஏங்க அவனை அறியாமல் அவளை நோக்கி சென்றான்.

இரண்டு அடி எடுத்து வைத்திருப்பான் அதற்க்கு தாமரை “சார் இந்தாங்க “என அந்த விபரங்களை கொடுக்க அதை வாங்கி கொண்டு வேகமாக வெளியே வந்தான்.

சிறிது நேரத்தில் அபியை தேடி ஜூஸ் வர “ நான் கேட்கவே இல்லையே” என சொல்ல

“இல்ல மேடம் அகில் சார் தான் கொடுக்க சொன்னார்” என கூறிவிட்டு சென்றான் அபீஸ் பாய்.சிறிது நேரம் அதை பார்த்து கொண்டே இருந்தவள் எதுவும் பேசாமல் எடுத்து குடித்துவிட்டு தனது வேலையை தொடர்ந்தாள்.

இரவு வெகு நேரம் ஆகியும் அபியின் அறையில் விளக்கு எறிய பத்மநாபன் அவளை பார்க்க சென்றார்.

“என்ன அபி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க என கேட்டு கொண்டே உள்ளே செல்ல” அங்கு கணினியில் வேலைபார்த்து கொண்டிருந்தாள் அவள்.

“என்னடா பண்ணிட்டு இருக்க...இன்னும் friends கூட சாட்டா” என கேட்க
“இல்லப்பா ...இப்போ புதுசா கிலாத்துல மாடர்ன் பைன்டிங்கள ஆண்டிக் மாடல் கொண்டுவந்து இருகாங்க ...அதை பத்தின விபரங்களை தேடிட்டு இருக்கேன்” என சொல்ல

“அபிம்மா உனக்கு எதுக்குடா சிரமம் ...நான்தான் சொன்னேன்ல ...நீ சும்மா கத்துக்கோ ...போதும்...ரொம்ப போட்டு அலட்டிகாதடா” என சொல்ல

“ஏம்பா நீங்க கூட என்னை நம்பலையா “என வேதனையாக கேட்க

“அபிம்மா என்னடா இப்படி சொல்லிட்ட ....நீ என்னோட உயிர்டா...உன்னை நம்பாம எப்படி?நீ சிரம்படகூடதுன்னு நினைகிறேண்டா ...நான் என் வாழ்கையில் நிறிய பால்ய சந்தோசங்களை இழந்து தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கேன்.அந்த நிலைமை என் குழந்தைகளுக்கும் வரகூடாதுன்னு நினைக்கிறேன்.நீ என் ரத்தம்டா....அது என்னைக்கும் சோட போகாது. இப்போ நீ சின்ன பொண்ணுதான...கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருக்கட்டும் அப்டினுதான் சொன்னேன்” என சொல்ல

“அப்பா எனக்கு பிடிச்சுதான் இந்த வேலையை செய்யறேன்.எனக்கு இதுல சந்தோசம்தான்பா” என அவள் சொல்ல

“அவளை தன தோளோடு அணைத்து எனக்கு பெருமைய இருக்குடா....நீ பண்ணுடா நான் உனக்கு இருக்கேன் “என உற்சாக படுத்த

“ஆனா அப்பா அர்ஜுன்” என சொல்ல ....

அபி இது ரொம்ப பெரிய ஆர்டர்...அதுனால அவன் பயப்படறான்.நீ உன்னோட டிசைன்ஸ் காட்டு..... நல்ல இருந்தா கண்டிப்பா அவன் எடுத்துகுவான்.நீ கலக்குடா என சந்தோசமாக அவளை வாழ்த்திவிட்டு ஆனா அபி நேரத்திற்கு தூங்கனும்,சாப்பிடனும் .அது இரண்டும் பண்ணினால் மட்டுமே உனக்கு இதற்கு அனுமதி” என சொல்ல

"நீங்க ஒன்னும் கவலை படாதிங்க ....இப்ப எல்லாம் ஆபீஸ்க்கு மூன்று முறை ஜூஸ் வந்திடுது ...அதை குடிச்ட்டு தெம்பா வேலை செய்யறேன்...இன்னைக்குதான் கொஞ்சம் லேட்” என சொல்லி விட்டு

அப்பதான பத்து நீங்க வந்து என்ன பார்த்து இவ்ளோ பாசமா பேசற ...ஆமா நீ என்ன இந்த நேரத்துல தூங்காம சுத்திட்டு இருக்கீங்க ....எதாவது தப்பு பண்ணிங்கள...அடிச்சு உங்களை வெளியே துரதிட்டாங்களா உன் டார்லிங்” என அவளது கிண்டலை ஆரம்பிக்க

"அவர் சிறித்து கொண்டே உனக்கு அம்மாவச்சே ...அப்புறம் எப்படி இருப்பா? "என சொல்ல
“போச்சு இன்னைக்கு உங்க டார்லிங்கிட்ட..... மங்களம் ட்ரம்ஸ் மியுசிக்கோட உங்களுக்கு உண்டு” என சொல்லி விட்டு சிரித்தவள்” ரொம்ப தேங்க்ஸ்பா” என சொல்ல

அவளை அனைத்து விடுவித்தவர் குட் நைட் அபி சீக்கிரம் படு என சொல்லி விட்டு சென்றார்.

“எல்லாம் தயாராக இருக்கிறது .buyers வந்தா டிசைனை கன்பார்ம் பண்ணிட்டு வேலையை தொடங்கிடலாம் “என அகில் அர்ஜுனுடம் சொல்ல

“ஆமாம் அகில் ...நானே எதிர்பார்க்கல ...இவ்ளோ சீக்கிரம் வேலை முடியும்னு...இனி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லும்போது அலைபேசி ஒலிக்க அதை காதில் வைத்தவன் என்னது!!!!!!!! “என அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்து விட்டான்.

கனவுகளை விதையாக வைத்து

அதற்க்கு உழைப்பு என்னும் நீர் ஊற்றி

வேர்வையை வேலியாக மாற்றி

செழித்து வரும் வேலையில்

அது சிதைந்து போவது போல்

சேதி வந்தால் மனம் தாங்குமா ?????????????????

தேடி வந்த சேதி என்ன?????????????? தெரிந்துகொள்ள காத்திருங்கள்.....