• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 1

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
ஒரு நொடியில் தொலைத்தேன் உன்னை..!!
நீ சென்றாலும் உன் நினைவுகள் என்னை விட்டுச் செல்ல மறுக்கிறது..!!


ஐந்து வருடங்களுக்கு முன் எழுதிய டயரியின் இந்தப் பக்கத்தை மனதின் ஓரம் எழுந்த வலியுடன் வாசித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் ஆத்விக்.

தன் டயரியில் மூழ்கியிருந்தவனை தாய் ப்ரனீத்தாவின் குரல் கலைத்திருந்தது. எப்போதும் போல வலிகளை மறைத்தவனாக அழுத்தம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு ஆயத்தமாகி கீழே வந்து கொண்டிருந்தான்.

அந்தப் பெரிய அரண்மனைக்கும் சொத்துகளுக்கும் வாரிசு அவன் மாத்திரமே என்பது, அவனது தோற்றத்தில் புலப்படும். செல்வந்த குடும்பத்துப் பையன் என பார்ப்போர் சரியாக எடைபோடும் முக லட்சணம்... பரந்த நெற்றியில் அவனைப் போல அடங்காமல் தாவும் முடிகள். பார்வையாலே அடுத்தவர்களை கலவரப்படுத்தும் அழகிய அரக்கன் அவனோ..!!? அந்த இதழ்களில் தான் எத்தனை அழுத்தம்..!? அது சிரித்துப் பேசும் ஓரிடம் அன்னை ப்ரனீத்தா.
உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடல் அவனது. சேர்டை மீறியும் திமிறிக் காணப்படும் புஜங்கள். மொத்தத்தில் இன்றைய காலப் பெண்கள் விரும்பும் ஆறடி ஆடவனே..

வழமை போல படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தவனை வாஞ்சையுடன் பார்த்து நின்றார் ப்ரனீத்தா.

அவரது பார்வையில் மீசை துடிக்க சிரித்தவன் அவரருகில் வந்து "குட் மானிங் மாம். சைட் அடிச்சது போதும் வாங்க சாப்பிடலாம்..." என கண் சிமிட்டியவனின் சீண்டலில் புன்னகைத்தவர் தன் வயிற்றுப் பிள்ளைக்கு உணவைப் பறிமாறினார்.

சரியாக அந்நேரம் பார்த்து வெளியே வந்தார் அவனது தந்தை சூர்ய ப்ரகாஷ்.

வந்தவரோ "என்னடா என் பொண்டாட்டிய வழமை போல சீண்டிட்டு இருக்கியா..?" என்கவும் அவனோ "அது தான் பார்க்க தெரிதுல. மறுபடி என்ன கேள்வி..?" என்றவாறு புருவத்தை உயர்த்தியவனைப் பார்த்து சிரித்தவர் "அதில்லப்பா.. ஏஸ் யூசுவல் அவட புள்ளை சிரிச்சு பேசுறானு எனக்கு ஸ்வீட் செஞ்சு தருவாளானு தான் கேட்டேன்..." என்றார் மனைவியை ஓரக்கண்ணால் அளந்தபடி.

ப்ரனீத்தாவோ அவரை இயன்றமட்டும் முறைத்துக் கொண்டே "ஏன் அப்படியே போய் ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கவா...? கண்ணா உங்க அப்பா சுகர் டேப்லட் எடுத்துக்கிட்டாரானு கேளுப்பா.." என்று முக வாயை தோளில் இடித்துக் கொண்டார். ஏனென்றால் அவர் சொல் பேச்சு கேட்காமல் இனிப்பாய் சாப்பிட்டு விட்டு பாதி நாட்கள் ஹாஸ்பிட்டலிலே கழித்து வருபவர்.

அவரோ தன் வாயிலே சனியை வைத்திருப்பார் போலும்.."ஆத்வி கண்ணா..!! கொஞ்சோ கொஞ்சம் ஸ்வீட்ஸ் சாப்பிட்டா ஒன்னும் ஆகாதுப்பா..." என அப்பாவியாய் கூறியவரை பார்வையால் பொசுக்கிவிட்டு ப்ரனீத்தா சமையல் கட்டை நோக்கி நடையை கட்டியிருந்தார்.

"டேட்..." என தந்தையை அடிக் கண்ணால் முறைத்து வைத்த ஆத்விக் "பார்த்திங்களா கோவிச்சிட்டு போய்ட்டாங்க. போங்க போய் உங்க வழில சமாதானப்படுத்துங்க..." என்று விட்டு மீண்டும் சாப்பாட்டுத் தட்டில் கை வைத்தவனைப் பார்த்து தன் அதி முக்கிய கேள்வியை சூர்யா கேட்டு வைத்தார்.

"அதென்ன என் வழி..?" என்று திருதிருத்தவரிடம் "ஏன் நீங்க அம்மாட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்குறது எனக்கு தெரியாதுனு நெனச்சிங்களா..?" என்றவாறு கைகளை கழுவியவனைப் பார்த்து அசட்டு சிரிப்புடன் எழுந்து சென்றார் சூர்யா.

...


இங்கே ஆபிஸ் வந்த ஆத்விக்கோ ஒருவரையும் பாராது தன் கூலிங் கிளாஸை கலற்றி சேட்டில் செருகிய வண்ணம் தன் அக்மார்க் நடையுடன் உள்ளே நுழைந்தான்.

அவனுக்கு மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றவர்களுக்கு ஒரு தலையசைப்பு தானும் அவன் தரவில்லை. அவர்களும் அதனை பெரிதாக எடுத்த மாதிரி தெரியவில்லை. வழமையாக வாங்கும் அடி தானே என அவர்களும் தங்கள் வேலையில் மூழ்கி விட்டனர்.

தன் கேபின் வந்தவன் அடுத்த கணம் தன் பீ.ஏ உம் நெருங்கிய நண்பனுமான நவீனை அழைத்திருந்தான்.

ஆத்விக் மற்றும் நவீன் இருவரும் சிறுவயதிலிருந்தே உயிர் தோழர்களாகிப் போயினர்.

நவீனோ ஆச்சிரமத்தில் வளர்ந்த பையன். அன்பிற்காக ஏங்கும் வளர்ந்த குழந்தையென்றும் சொல்லலாம். அதனாலே குட்டி ஆத்விக் வந்து அன்பாகப் பழகியவுடன் உடனே ஒட்டிக் கொண்டான். அவனுக்கு ஆத்விக்கே எல்லாமுமாகிப் போனான். சிறுவயதிலே இருவரும் நெருங்கிப் பழகியதாலோ என்னவோ ஆத்விக்கின் தாய் தந்தையையே இவனும் அம்மா அப்பா என்று சொல்லி வளர்ந்திருந்தான். அவர்களும் ஆத்விக்கையும் நவீனையும் ஒரே மாதிரியே பார்க்கின்றனர்..

இருந்தாலும் இவர்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் இவர்களுடன் வீட்டில் தங்க மறுத்து விட்டான் நவீன். அதனால் வெளியே வாடகை வீடெடுத்து வாழ்ந்து வருகிறான்.

இவர்கள் இருவரும் ஒன்றாகவே பள்ளிப்படிப்பை முடித்து விட்டு ஒரே காலேஜிலும் படித்தனர்.

காலமும் அதன் போக்கில் மின்னலென சென்றிருக்க இவர்களும் தங்களது படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடித் திரிந்தனர்.

அந்த சமயம் பார்த்து சூர்யாவும் தன் கம்பனியை இவர்களிடம் ஒப்படைத்து விட்டு ஃபுல் டைம் ரெஸ்ட் எடுத்து விட்டார்.

அவர்களும் ஏதோ ஓர் கம்பனியில் வேலை பார்ப்பதை விட தன் சொந்தக் கம்பனியை எடுத்து நடத்துவதில் ஆர்வம் காட்டியதில் இதோ மொத்த உலகமுமே இவர்களின் பெயரை புகழ்ந்து சொல்லும்படி முன்னேறி இருந்தனர்.

நவீனும் பார்க்க சுமாரான பையன் தான். ஆபிஸில் ஆத்விக் பின்னாடி பல பெண்கள் சுற்றித் திரிகின்றனர் என்றால் நவீன் பின்னாடியும் அதில் சிலதுகள் சுற்றும். பெருசா எதிர்பார்த்திராதீங்க நண்பா..?? இவன் பின்னாடி அவர்கள் சுற்றக் காரணம் ஆத்விக்கை கரெக்ட் பண்ணி தர சொல்லித் தான்..பாவம் அவன் நிலை அப்படி..

"இவன் பொண்ணுங்கள பார்த்தாலே சிங்கமா மாறிருவானு இந்த காட்டுவாசிங்களுக்கு யாரு சொல்லி புரிய வைப்பா..." என்பது நவீனின் மைன்ட் வாய்ஸ்.

...


"மே ஐ கமின் சார்..?" என்ற நவீனின் குரலிற்கு "எஸ் கம் இன்.." என அனுமதி வழங்கி இருந்தான் வேங்கையவன்.

"சார் கூப்பிட்டிங்களா...?" என்றவாறு உள்ளே நுழைந்த நவீனை ஆழ்ந்து பார்த்த ஆத்விக் "எஸ் நவீன். ஹியர், புதிய ப்ராஜெக்ட் பத்தி டீடெயில்ஸ் அரேன்ஜ் பண்ண சொன்னேன்ல. என்னாச்சு..?" எனக் கேட்டான்.

"முடிஞ்சு சார். திஸ் இஸ் த ஃபைல்" என்றவாறு கோப்பொன்றை நீட்டியவனிடமிருந்து அதனை வாங்கிப் படித்த ஆத்விக் "வெல் நவீன். லெட்ஸ் புட் த மீட்டிங் டுமோரோ..." என்ற ஆத்விக்கிடம் விடை பெற்று திரும்பிய நவீன் ஏதோ நினைவு வந்தவனாக "சார்..." எனத் தயங்கி நின்றான்.

அவனை ஓர் பார்வை பார்த்து விட்டு "சொல்லுங்க மிஸ்டர். ஏதாச்சும் கேட்கனுமா ..? என்றதும்

"அ..து அம்மா எப்படி இருக்காங்க..?" என்றான் நவீன்.

"இவ்ளோ தானா..? அதுக்கு ஏன்டா இவ்வளவு தயக்கம்.. அவங்க நல்லா இருக்காங்க. உன்ன தான்டா அம்மா கேட்டுட்டு இருந்தாங்க.. ஓவர் சீன் காட்டாம வீட்டுக்கு வர வழிய பாரு.." என முறைத்து வைத்தான் ஆத்விக்.

"எப்ப வரனும் எப்ப வரக்கூடாதுனு எங்களுக்கு தெரியும். நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்.." என்றானே பார்க்க பேனை ஒன்று பறந்து வந்து அவனது நடு மண்டையில் நங்கென்றிருந்தது.

"ஸ்ஸ் ஆஆ எருமையே..." என மண்டையை தடவியவனைப் பார்த்து இடைப்பல் தெரிய வசீகரமாக சிரித்த ஆத்விக் "இவ்வளவு நேரமும் வாய் கிழிய சார் சார்ன்டியே.. இப்போ எங்க போச்சு அந்த மரியாதை..? நம்ம வீட்டு மசாலாவ இங்க அரைக்காம மொதல்லா மரியாதையா சார்னு கூப்பிடு..." என கட்டளையாக வெளி வந்தன அவனது வார்த்தைகள்.

"ஓஓ இங்க அது ஒன்னு தான் கொறச்சல்..." என்பதை நவீன் வாயினுள் தான் முனுமுனுத்துக் கொண்டான். வெளியே சொன்னால் தான் பல்லு பறக்குமே...

"அங்க என்னடா முனங்குற...?" என்றவனின் தலை லெப்பினுள் நுழைந்திருந்தது.

அதில் அலேட்டான நவீன் "அதொன்னுமில்லங்க சார். அங்க யாரோ என்னைத் தேடுறாங்களாம். ஓரெட்டுப் போய் பார்த்துட்டு வரேன்..." என நைஸாக கலன்று சென்றிருந்தான்.

அவனைப் பற்றி அணுஅணுவாக அறிந்து வைத்திருந்த ஆத்விக்கின் உதட்டில் அவன் வெளியேறிய பின், ஓர் அழகிய கீற்றுப் புன்னகை...!!!


தொடரும்...


தீரா.
 
Last edited:
  • Like
Reactions: Durka Janani