• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
மேலே சென்ற தங்கை இன்னும் வராமல் இருக்க சஞ்சய்க்கோ ஏதோ நெருடியது. அவனும் அவளறைக்குச் சென்று கதவை தட்டப் போக அதுவோ தானாக திறந்து கொண்டது.

உள்ளே சென்று சத்யாவைத் தேட அவளோ குழந்தை போல சுருண்டு படுத்திருந்தாள். தூக்கத்திலும் அவளது முகத்தில் தெரிந்த கவலையில் சஞ்சய் அண்ணனாக மிகவும் வருந்தினான்.

அப்படியே அவளது தலைக்கருகில் அமர்ந்து மெல்லத் தடவி விட அதில் அவளுக்கு முழிப்புத் தட்டியது. லேசாக கண்களை திறந்து பார்த்தவள் அது சஞ்சய் என்றதும் தலையணையில் இருந்த தலையை தூக்கி அவனது மடியில் வைத்து விட்டு, விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள். அதில் மெல்லிய முறுவல் வர உதட்டை விரித்தவன் தலையைக் கோதி விட்டுக் கொண்டே "ஏன்டா குட்டிமா இவ்வளவு சீக்கிரம் தூங்கிட்ட..? நடந்தத கெட்ட கனவா நெனச்சு மறந்துறு.." என்றான்.

எல்லாவற்றிற்கும் வலியை மறைத்தவளாக புன்னகையுடன் அமைதியாக இருந்தவளைப் பார்க்கப் பார்க்க சஞ்சய்க்கு ஏதோ போல் இருந்தது. அண்ணனின் மடியில் அவள் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போக பெரு மூச்சுடன் அவளை கட்டிலில் வாகாக தூங்க வைத்தவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே வந்தான்.


...


அங்கே அழகான மங்கையொருத்தி குளித்து விட்டு வந்து இரவு உடைக்கு மாறியவள் அறை முழுவதும் தொங்கிக் கொண்டிருந்த தன்னவனின் புகைப்படங்களை என்றும் போல காதலுடன் பார்த்தவாறே கட்டிலில் தொப்பென விழுந்தாள்.

..

அடுத்த நாள் பொழுது பல சாதனைகளை படைக்கவென அமோகமாக ப் புலர்ந்தது.

வழமை போல ஆத்விக்கும் நவீனும் காலையில் ஜாக்கிங் சென்றிருந்தனர்.

இடையில் சஞ்சய்யை சந்தித்த நவீன் அவனைப் பார்த்து பல்லைக்காட்டினான் என்றால் ஆத்விக் எரிக்கும் பார்வையுடன் அவனை எதிர் கொண்டான். ஆனால் சஞ்சய்யோ இருவரையும் கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. அப்படியே பாதையில் பார்வையை வைத்தவனாக அவர்களை கடந்து சென்று விட்டான். அவனது செயலில் நவீனிற்கு தான் முகம் தொங்கி விட்டது.

இப்படியே சற்றுத் தூரம் நண்பர்கள் இருவரும் வந்து கொண்டிருக்க அந்த அழகிய விழிகளுக்குச் சொந்தக்காரியோ தன்னவனை பல கோணங்களில் புகைப்படம் எடுத்துத் தள்ளி விட்டாள். வீடு வந்து சேர்ந்தவர்களின் கையில் சூர்யா இனிவிடேஷன் கார்ட் ஒன்றை வைக்க இருவரும் புரியாமல் பார்த்து நின்றனர்.

அது நியூ இயர் செலிப்ரேஷனுக்கான அழைப்பிதழ். ஏனோ அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஆத்விக்கின் மனம் உந்தியது. சில சமயங்களில் எமது உள்ளம் பேசுவது நலவிற்காக இருக்குமே.. அது போலத் தான் இதுவும். இவர்கள் ஃப்ரெஷ்ஷாகி விட்டு கீழே வந்து சாப்பிட அமர
"என்னப்பா இன்னைக்கு தான் ஆஃபிஸ் லீவ்ல.. அப்பறம் பார்ட்டிக்கு போற ஐடியா இருக்கா..?" என்றார் சூர்யா. ஏனென்றால் வழமையாக ஆத்விக் இப்படியெல்லாம் பார்ட்டீஸ்ல கலந்து கொண்டதில்லை. விரும்பினால் செல்வான். இல்லையென்றால் அப்படியே ஆபிஸே கதியென அமர்ந்து விடுவான்.

"ம்ம் போய் தான் பார்ப்போமே.." என்றுவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து மொத்தக் குடும்பமும் திகைத்திருந்தது.

நவீனோ "என்னடா இது ஷாக்கா இருக்கு. எந்தப் பார்ட்டியையும் எட்டிப் பார்க்காத நம்மாளு இன்னைக்கு போவோங்குறா.. கனவா நனவா...?" என மனதில் நினைத்து விட்டு ஆத்விக்கின் கையில் நோண்டி விட்டான்.

"ஆஆஆ இடியட் என்னடா..?" என்ற ஆத்விக்கிடம்

"இல்ல மச்சி.. நீ திடீர்னு பார்ட்டிக்கெல்லாம் போவோம்னு சொன்னியா.. அது தான் ட்ரீமோனு நெனச்சிட்டேன்..ஹீ.." என பல்லைக் காட்டி விட்டு தட்டினுள் முகத்தை புதைத்து விட்டான். ஆத்விக் அவனை முறைத்து விட்டுத் திரும்ப இவர்களைப் பார்த்து தாய் தந்தை சிரித்துக் கொண்டிருந்தனர்.

...


வீட்டிற்குள் நுழைந்த சஞ்சய் வாசலில் இருந்து ஆரம்பித்தது தான் தெரியும். மாடியேறும் வரை ஆத்விக்கை வசைபாடிக் கொண்டே வந்தான்.

"என் தங்கச்சிட லய்ஃபலயே சிரிப்பில்லாம ஆக்கிட்டல்ல..? அப்போ இவ்வளவு நாளும் அவ மனசார சிரிக்கல்ல..? எல்லாம் உங்களால தானடா.. உங்கள சும்மா விடமாட்டேன்டா.. இடியட்ஸ்..." என தாளித்து வைத்தான்.

இப்படியே இவன்பாட்டிற்கு இவன் புலம்பிக் கொண்டு வர சந்தியா பயத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.

"டேய் கண்ணா! என்னடா தனிய பேசிட்டு வர.." என்றார். விட்டால் அழுது விடுவார் போல..ஹா..ஹா

அப்போது தான் சஞ்சய் திரும்பி தாயைப் பார்த்தான். அவன் திருதிருவென முழித்து விட்டு "அவ்வ் இப்போ என்னத்த சொல்லி சமாளிக்கிறது..?" என்று நினைத்து விட்டு, சொன்னான் பாருங்க மொக்கையா ஒன்னு...!!!

"ஹாங் அ..அம்மா இஇஇதோ இதத் தான் தூசி தட்டிட்டு இருந்தேன்..." என தரையை சுட்டிக் காட்டியவனின் பதிலில் வாயைப் பிளந்து விட்டார் அவர். அவனையும் தரையையும் அவர் மாறி மாறி பார்த்த பின்னரே சஞ்சய்க்கு தன் மடத்தனம் புரிந்தது. மனதினுள் இளித்து விட்டு தாயின் அருகில் வந்து அவரது தோளைத் தொட்டு பக்கவாடாக அணைத்தவன் "ஒன்னுமில்லம்மா அது ஏதோ வேற டென்ஷன்.." என்றவனின் கையைத் தட்டி விட்டவரும் "என்னமோ தெரியலடா. அண்ணனும் தங்கச்சியும் ஒரு மார்க்கமா தான் இருக்கிங்க. இதுக்குத் தான் சொல்லுறது காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கனும்னு..." என முந்தானையை எடுத்து மூக்கை உறிஞ்ச "அட போமா. எப்ப பாரு இது தான் பேச்சு. போய் வேலையைப் பாருங்க.." என்று சளித்தவனாக எஸ் ஆகி விட்டான்.

மாடியேறி மேலே போனவன் எதன் மீதோ மோத, சட்டென ப்ரேக் போட்டு விட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே நின்றிருந்ததோ சாக்ஷாத் சத்யாவே தான்.

"ஏன்டா காண்டாமிருகம் கண்ண எங்க வச்சிட்டு வர.." என்றாள் தலையைத் தடவிக் கொண்டே.

தனது தங்கையின் பழைய பேச்சு மீண்டதில் அவளிடம் கொஞ்சம் வாலாட்ட நினைத்த சஞ்சய்யும் "சரி எனக்குத் தான் கண்ணு தெரியல. உன் கண்ணு முன்னாடி தான நல்ல டெக்டர்ட பல்ப் மாதிரி பெருஸ்சா இருக்கு. நீ பார்த்து வர வேண்டியது தானே.." என்றான் நக்கலாய்.

அதில் வெகுண்டெழுந்த வெடி குண்டு "டேய் தடியா..! யாருட கண்ணடா கிண்டல் பண்ணுற..?உன்ன.." என்றவள் அவனது தலையில் ஓங்கிக் கொட்ட, சஞ்சய்க்கு வலித்தது தான். இருந்தும் அவளை இப்படிப் பார்த்து ஒரு வாரமாகி இருக்க அதனை தாங்கி நின்றிருந்தான்.

இவள் முறைப்புடன் அவனை கடந்து செல்ல, அவனோ சிரிப்புடன் படியேறி சென்று விட்டான்.

இப்படியே பொழுது கழிய, ஆத்விக்கிற்கு பாடம் கத்துத் தரவென விதி வந்து இருள் சூழ்ந்து கொண்டது.

பேண்ட் சேட் மற்றும் ப்ளசர் அணிந்து கோட்டை கையில் எடுத்துக் கொண்டு இருவரும் ஒன்று போல தயாராகி கீழே வந்தவனர். வந்தவர்கள் அப்படியே பார்ட்டி ஹாலிற்கு சென்று விட்டனர்.

ஆத்விக் வந்திறங்கியதும் அங்கிருந்தவர்கள் அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர். நவீனிற்கு அவர்களின் நிலை சிரிப்பைத் தர வாய்க்குள் சிரித்து வைத்தான்.

அவனருகில் ஓடி வந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த நபர் "ஆத்விக் சார். அடடே வாங்க வாங்க..." என மனம் நிறைந்த புன்னகையுடன் அவர்களை வரவேற்று வாழ்த்தினார். நவீனையும் சிறு தலையசைப்புடன் வரவேற்றவர் அவர்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

..

அங்கு சத்யா தன்னை நம்பாமல் விட்ட ஆத்விக்கின் நினைவில் உறக்கம் தொலைத்து அழுது கொண்டிருந்தாள்.

இந்நேரம் நடந்தவற்றை நவீன் கூறி இருந்து, அதனை அவன் நம்பி இருந்தால், தன்னை தேடி வந்திருப்பான் இல்லையா..!? அப்படியென்றால் ஆத்விக் இன்னும் தன்னை நம்பவில்லையா!? என நினைத்து நினைத்து கலங்கினாள்.

உன்னை மறப்பதற்கு நீ ஒன்றும் நீரில் எழுதப்பட்ட எழுத்தல்ல..
என் மனதில் வரையப்பட்ட காதல் ஓவியம்..

நீயே நான் தொலைத்த என் காதல் ஓவியமாய் என்னுள்...!


தொடரும்...

தீரா.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
ஆத்விக் உனக்கு ஆப்புதானா
 
Top