• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 14

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
சஞ்சய் காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சிக் கேட்டும் சத்யாவோ ஆஃபிஸ் வர மறுத்து விட்டாள். அவன் ஆபிஸில் இருந்த நேரத்தில் தெரியாத எண்ணிலிருந்து அழைபேசி அழைப்பு வர அவனது புருவங்கள் சுருங்கின.

அட்டன் செய்து காதில் வைத்தவனை ஆர்பாட்டமான குரல் வரவேற்றது.

"ஹலோ ஹூ இஸ் திஸ்..?" என்றதும் அங்கே என்ன கேட்கப்பட்டதோ "யா சஞ்சய் ஹியர்..." என்றதும் மறுபக்கம் பேசியதென்னவோ ஆத்விக் தான்.

ஆத்விக் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள சஞ்சய்யின் முகமோ கோபத்தில் சிவந்தது.

சட்டென அழைப்பை துண்டித்து விட்டான். மீண்டும் மீண்டும் அழைப்பு வர அதனை கட் பண்ணி விட்டவன் இறுதியில் அந்த அழைப்பை ஏற்கவேயில்லை.

அங்கே ஆத்விக்கோ கோபத்தில் பற்களை நறநறுத்தவன் நவீனிடம் "அவன் மட்டும் சத்யாட அண்ணனா இல்லாம இருந்திக்க இன்னேரம் உயிரோட இருந்திருக்க மாட்டான். டேமிட்.." என மேசையில் குத்தியவன் அடுத்த கணம் ஸ்ஸ்ஸ் என முனங்கினான்.

"நமக்கிது தேவையா?" அவனது கைக் காயத்தை சுட்டிக் காட்டிய நவீன் மீது பேப்பர் வெயிட்டை தூக்கி எறிந்தான். அதனையும் அவன் லாவாகப் பற்றியதுமல்லாமல் ஆத்விக்கை கிண்டலாக பார்த்து வைக்க அவனோ வாய்க்குள் பல கெட்ட வார்த்தைகள் சொல்லி அவனைத் திட்டிக் கொண்டிருந்தான்.

நவீனோ "நல்ல வேளை இவன் வெளியால சத்தம் போட்டு திட்டல்ல. இல்லன்டா நம்ம மானம் ரீடர்ஸ் மத்தில பறந்து கவுந்து கெடந்திருக்கும்...உஃப்.." என்று மனதில் நினைத்து விட்டு காற்றை குவித்து ஊதினான்.

பின் விளையாட்டை விட்டு விட்டு "ஆமா இப்போ என்ன செய்யப் போற..?" என்றான்.

"வேறென்ன அந்த சஞ்சய்ய மொதல்ல கரெக்ட் பண்ணனும் போல..." என்றான் சளிப்பாய்.
அவனது பதிலில் நவீனிற்கு சிரிப்புத் தான் வந்தது.

...

சஞ்சய்யோ தன் தங்கைக்கு அவர்கள் கொடுத்த வலியில் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

மாலையானதும் வீட்டிற்கு போகவென வந்த சஞ்சய் காரைத் திறக்கச் செல்ல எதேச்சையாக வாசல் பக்கம் திரும்பினான். அங்கே கண்ணில் கூலர்சுடன் ஆத்விக் அவனது லம்போகினியில் சாய்ந்து நிற்க, அருகே நவீன் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சஞ்சய் திரும்பி தங்களைப் பார்த்ததும் ஆத்விக்கிற்கு அவன் சிக்னல் கொடுத்ததெல்லாம் சஞ்சய்யின் பார்வையிலிருந்து தப்பவில்லை.

அவர்களை பார்த்து உதட்டை வளைத்தவன் பின் பார்க்காதது போல காரில் ஏறப் போக, பதறி ஓடி வந்தது என்னவோ நவீன் தான்.

"சஞ்சய்..சஞ்சய்.." என்றதும் அவன் நின்று முறைத்ததில்
"எதுக்கு முறைக்கிறானு தெரிலயே...?" என சட்டென நிதானித்த நவீன், நினைத்ததையே வெளியிலும் கேட்டு வைத்தான்.

"எதுக்கிப்போ இப்படி பாசமா பார்க்குறீங்கனு தெரிஞ்சுக்கலாமா..?" என்றான் பச்சைக் குழந்தையாய்.

அவனை இன்னும் முறைத்த சஞ்சய் "முன்னப் பின்ன தெரியாதவங்கள இப்படித் தான் மரியாதை இல்லாம பெயர் சொல்லி கூப்புடுவீங்களா மிஸ்டர்..?" என்றதும், மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட நவீன் "நேத்துத் தானடா மீட் பண்ணினோம்..." என்று மனதில் அவனை திட்டியவன் "அது தான உங்க பேர்.." என்றான் திருதிருத்தவனாக.

"ச்சே..." என்ற சஞ்சய் அவனுடன் பேச விரும்பாமல் மீண்டும் முன்னேற, அதற்குள் அங்கே வந்திருந்தான் ஆத்விக்.

"மிஸ்டர் சஞ்சய்..." என்றதும், அவனிடம் பதிலில்லை.

"இவன் சரிபட்டு வரமாட்டான்.." என நவீனின் காதில் குசுகுசுத்தவன் "டேய் மச்சான்.." என்றதும் சட்டென திரும்பிப் பார்த்தான் சஞ்சய்.

அதில் ஆத்விக்கிற்கு இதற்கடையோரப் புன்னகையொன்று வந்து மறைய, நவீனோ வாயை பொத்திக் கொண்டு சிரித்தான்.

அதில் சஞ்சய்க்கு மூக்கு விடைத்தது. எரிச்சலடைந்தவன் "என்ன வேணும் உங்க ரெண்டு பேருக்கும்..?" என்றான்.

நவீனும் ஆத்விக்கும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்து விட்டு ஒன்று போலவே "சத்ய ஸ்ரீ தான் வேணும்..." என்றனர்.

அதில் ஏகத்துக்கும் கடுப்பான சஞ்சய் "அவ ஒன்னும் நீங்க வச்சு விளையாடுறதுக்கு டாய்ஸ் இல்லை.. அவள் ஒரு உணர்வுள்ள மனுஷி.. காட் இட்..?" என்றான் கோபமாய்.

இவர்கள் ஏதோ அவனை கிண்டலாக பேசி சமாதானம் செய்ய வந்தால், அவன் உண்மையான கோபத்திலும் வெறுப்பிலும் பேச வாயடைத்துப் போய் நின்றிருந்தனர். அதில் நவீனின் முகம் சட்டென தொங்கி விட ஆத்விக்கின் உடல் இறுகியது.

முதலில் கலைந்த நவீன் "நா..நாங்க செஞ்சது தப்பு தான். ஒரே ஒரு தடவை நாங்க சொல்லுறத கேளுங்க. அதனால ஸ்ரீட வாழ்க்கையும் நல்லா இருக்கும்..." என்று முடிப்பதற்குள் முந்திக் கொண்ட சஞ்சய் "என் தங்கச்சிய நல்லாப் பாதுக்க என்னால முடியும். அதுக்காக நீங்க பேசுறதெல்லாம் கேட்க முடியாது. ஏற்கனவே நீங்க பேசுனத என் குட்டிமா கேட்டது போதும்..." என்றதும் ஆத்விக்கிற்கு அத்தனை கோபம் சஞ்சய் மீது. தன் தகுதிக்கு இவனிடமெல்லாம் கெஞ்ச வேண்டி இருக்கிறதே என்று சலிப்படைந்தாலும் சத்யாவிற்காக பொறுத்துக் கொண்டான். ஆனால் அதையே சஞ்சய்யும் அவன் வாயால் கூறி இருந்தான்.

"இன்னேரம் இந்த இடத்துல வேற யாராவது இருந்திருக்க நடக்கிறதே வேற. நீங்க ரெண்டு பேரும் என்றதால சும்மா விட்டு வச்சிருக்கேன்.." என்றான் சஞ்சய் ஆத்விக்கை ஓரக்கண்ணால் அளந்தபடி. அதில் அவனது கைமுஷ்டி இறுகியது. அதனையும் சஞ்சய் கவனிக்கத் தவறவில்லை.

நவீனின் புறம் திரும்பிய ஆத்விக் தன்னை கட்டுப்படுத்தியவனாக "நவீன் இவன் சொல்லுறது சரி தான். எனக்கிருக்கிற தகுதிக்கு இவன் கிட்ட பேசுறதே பெருசு. அப்படியும் நிக்கிறன்னா அதுக்கு முக்கிய ரீசன் என் ஸ்ரீ..." என்றவனை நவீன் பார்வையாலே அடக்க, அங்கே சஞ்சய்யின் உதடு சிரிப்பில் விரிந்தது.

"வெல் மிஸ்டர். ஆத்விக். உங்க தகுதிக்கு என் கிட்ட பேசவே விருப்பமில்லாத உங்களுக்கு என் தங்கச்சி மட்டும் எதுக்கு...?" என்றவனை திரும்பி முறைத்தான் ஆத்விக்.

தான் மரியாதையில்லாமல் பேசியும் அவன் தனக்கு மரியாதை தந்ததை ஆத்விக்கும் மனதில் குறித்துக் கொண்டான்.

"பிகாஸ் ஐ லவ் ஹேர்.." என அவனது வார்த்தைகள் ஆணித்தரமாக வந்து விழுந்தன.

இப்போது பேண்ட் பாக்கெட்டினுள் கையிட்டு நின்று கொண்ட சஞ்சய் "ஓஓஓ.. ஆனால் சத்யா இப்போ உங்கள லவ் பண்ணலயே..." என்றான், தங்கை இன்னும் அவனை காதலிக்கிறாள் என்ற உண்மை தெரிந்திருந்தும்.

அதில் ஆவேசமாக அவனை நெருங்கிய ஆத்விக், நவீன் தடுக்கத் தடுக்க அவனது கண்களை நேராகப் பார்த்துக் கொண்டே "ஐ நோ என்ட் ஐ ட்ரஸ்ட் ஹேர், அவள் என்னை இன்னும் காதலிக்கிறா..." என்றான் ரௌத்திரத்துடன்.

அவனது தோளைத் தொட்டு அவனை தள்ளி நிறுத்திய சஞ்சய்யின் கைகளை ஆத்விக் பார்த்துக் கொண்டிருக்க சஞ்சய்யோ சின்னச் சிரிப்புடன் "வெல்..வெல்.. அப்போ இந்த நம்பிக்கை அன்னைக்கு சத்யா வருண் கூட பேசிக் கொண்டிருக்கும் போது எங்கப் போச்சு..?" என்றான் எகத்தாளமாய், தன் தங்கை அனுபவித்த வலியை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக.

அவன் கேட்பதும் சரி தானே. இருவரும் தங்களை திரும்பிப் பார்த்தனரே தவிர எதுவும் பேசவில்லை. அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்க்கு அவர்கள் மேல் கட்டுக்கடங்காத கோபம் இருந்தாலும், உலகமே போற்றும் இந்தத் தொழிலதிபன் பதிலின்றி அமைதியாக நிற்பதும் அவனாலும் சகிக்கத்தான் முடியவில்லை.

இருந்தும் "என் தங்கச்சிட வாழ்க்கையும் அவட சிரிப்பும் எனக்கு ரொம்ப முக்கியம்..." என்று அழுத்திக் கூறியவனின் பாசமும் அவர்களை அசைத்துப் பார்த்தது என்பது உண்மை.

"அவ எடுக்கிற முடிவுக்கு நாங்க யாரும் எதிர்த்து எதுவும் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போறதில்லை. சீ இஸ் அவர் ஹெப்பினஸ். நீங்க செஞ்சத மன்னிச்சு அவ உங்கள ஏத்துக்கிட்டாலும், மன்னிக்காம நாங்க சொல்லுற மாப்பிளைக்கு கழுத்த நீட்டினாலும் அதுல நாங்க தலையிட மாட்டோம்..." என்றான் அவர்களின் வருகை எதற்காகவென்று அறிந்தவனாய். ஆத்விக் தன்னைப் பார்க்க வந்ததிலே சஞ்சய்க்குப் புரிந்து விட்டது அவனுக்கு உண்மை அனைத்தும் தெரிந்து விட்டதென.

தங்களைப் புரிந்து கொண்ட அவனது கூர்மையை மெச்சுதலாக பார்த்து வைத்த ஆத்விக் "அவள என் வழிக்கு எப்படி கொண்டு வரனும்னு எனக்குத் தெரியும்.." என்றவனிடம் ஏதோ சொல்ல வந்த சஞ்சையைத் தடுத்த ஆத்விக், மேலும் தொடர்ந்தவனாக "ஐ நோ மிஸ்டர்.சஞ்சய்.. என்னை வேணானு சொல்லிட்டுப் போனவள நெனச்சு ஐஞ்சு வருஷமா மனசுக்குள்ளே செத்துக்கிட்டிருந்த நான், இப்போ அவ மேல தப்பில்லைனு தெரிஞ்ச பிறகு அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்க தங்கச்சி உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட ஜாஸ்தியா அவ எனக்கு முக்கியம். அவட ஹேப்பினஸ்ஸும் லய்ஃபும் எனக்கும் ரொம்ப இம்போர்ட்டன்ட்.." என்றான் உறுதியாய்.

வார்த்தைக்கு வார்த்தை என் ஸ்ரீ..என் ஸ்ரீ.. என்றவனது பேச்சில் சஞ்சய்க்கு அந்நேரமிருந்த கோபம் பறந்து தான் போனது. அவனது கண்களில் நிறைந்த புன்னகையின் சாயல்.

"சத்யா இப்போதைக்கு என்னை மன்னிக்கமாட்டானு எனக்குத் தெரியும்.." என்றவனுக்கு இறுதியில் குரல் சற்று மங்கியொலித்தது. "இருந்தும் இனி அவளை விட்டுக் கொடுக்க நான் தயார் இல்லை. எல்லாத் தப்பும் என் மேல தான். அதுக்காக எவ்வளவு இறங்க வேணுமோ அவ்ளோ இறங்குவேன் என் ஸ்ரீக்காக ஒன்லி.." என்றான் கண்கள் சிவக்க. அவனையோ பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்க்கு ஆத்விக்கை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துப் போனது. அவனும் தன் தங்கை மீது அளவு கடந்த காதல் கொண்ட ஒருவனைத் தானே தேடிக் கொண்டிருந்தான். அந்தக் காதலை அவனது கண்களில் கண்டு கொண்டான் அண்ணனானவன்.

பெருமூச்சு விட்டவனாக "அவ கிட்ட நான் மனசார மன்னிப்புக் கேட்கனும். அதுக்கு உங்க உதவி தேவை..." என்றான் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.

அதில் சஞ்சய் உதட்டை வளைத்து சிந்தித்தான். பின் என்ன நினைத்தானோ "ஓகே..." என சம்மதம் தர, நண்பர்கள் இருவரும் புன்னகைத்தனர்.

"எனக்கொரு ஆர்ஜன்ட் வேர்க் இருக்கு. கேன் ஐ கோ...?" என்ற சஞ்சய்யின் நிதானமும் அமைதியும் ஆத்விக்கை கவர்ந்தது.

இந்த நிதானம் தன்னிடம் இருந்திருந்தால் இன்னேரம் தாங்கள் பிரிந்திருக்க நேர்ந்திருக்காதோ... என்று கூட அவனுள்ளம் கேட்டுக் கொண்டது.

பின் காரில் ஏறப் போன சஞ்சய்யிடம் "என்ட் சஞ்சய், ஐ எம் ரியலி சாரி. நாங்க சொல்ல வரத கேட்காம உங்க பாட்டுக்கு பேசவும் கோவத்துல ஏதோ மரியாதையில்லாம தகுதி அப்படி இப்படினு பேசிட்டேன். எக்சுவலி நான் அப்படி பேசுற கெரேக்டர் இல்லை. சாரி எகைன்..." என உணர்ந்து தன்மையாய் மன்னிப்புக் கேட்டான் ஆத்விக்.

அதற்கும் புன்னகைத்த சஞ்சய் தன் அவசரத்தை வலியுறுத்தி ஒருவாறு சென்று மறைந்தான்.

அவன் கிளம்பியதும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர். அதில் நவீன் "பார்க்க நல்லவரா தெரியிறார். அவர்ர பேச்சுலயே தெரியுது சத்யா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கிறாருனு.." என்றவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்து வைத்தான் ஆத்விக்.


தொடரும்...


தீரா.