• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 16

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
இப்படியே நாட்கள் கடந்து செல்ல அன்றொரு நாள் ஆத்விக்கின் திட்டத்தின்படி சஞ்சய் சத்யாவை மால் ஒன்றுக்கு அழைத்து வந்திருந்தான்.

தன்னவள் செல்லும் பாதையெங்கும் அவனது பாதங்கள் நகர்ந்து கொண்டே சென்றன, அவள் அறியாது. ஓரிடத்தில் அவளது பாதம் தேங்கி நிற்க ஆத்விக்கும் சற்று மறைவில் நின்று கொண்டு இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் "ஹாய்..." என்ற குரல் கேட்டு திரும்பிய சத்யாவை வரவேற்றதோ ஓர் ஆடவன். அவனது முகஜாடையை எங்கோ பார்த்திருப்பது போல இருந்தது அவளுக்கு. இருந்தும் புரியாதவளாய் தன்னையே சுட்டிக்காட்டி "என்னையா..?" என்று கேட்டவளுக்கு சின்னச் சிரிப்பை பரிசாகத் தந்தவன் ஆம் என தலையாட்டி விட்டு "ஆர் யூ சத்ய ஸ்ரீ...?" என்றதும் அவளும் தலையை தயங்கித் தயங்கியே ஆட்டி வைத்தாள்.

"ஐ எம் ப்ரதீக். யுவர் சைல்ஹூட் ப்ரெண்ட்..." என்றதும் அப்போது தான் அவளது முகம் தெளிந்தது.

"ஓஓஓ மறந்தே போச்சு. எப்படி இருக்க ப்ரதீக்..?" என சினேகிதமாக சிரித்தவளிடம் "நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுல..?" என்றவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்து வைத்தாள் சத்யா.

பின் அவனும் "ஹேய் நெக்ட் வீக் எனக்கு மேரேஜ். உன் கூட தான் கான்டெக்ட் இல்ல. பட் சஞ்சய் அண்ணா கூட பேசுறது தான்.." என்றதும் "ஓஓஓ" என்றவளுக்கு இத்தனை நாட்கள் கழித்து சந்திக்கும் நண்பனிடம் சட்டென பேச முடியவில்லை.

அவனும் புரிந்து கொண்டவனாக "அது தான் எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆனதும் உன்னைய நேர்ல வந்து மீட் பண்ணி இதை தந்துட்டு போகலாம்னு சஞ்சய் அண்ணாகிட்ட கேட்க, நீ இன்னைக்கு இங்க வரதா சொன்னார்.." என்றவன் கார்டை நீட்ட வாங்கியவள் நிறைந்த புன்னகையுடன் "கங்ராட்ஸ்..." என்றாள். அவனும் அதனை ஏற்றுக் கொண்டே விடைபெற்றுச் செல்ல அவள் திரும்பியதும் கண்டது என்னவோ தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆத்விக்கைத் தான். அவனைப் பார்த்தவுடன் மலர்ந்த அவளது வதனம் அடுத்த கணம் அப்படியே துணி கொண்டு துடைத்தைப் போல முகத்தில் பயத்தை தத்தெடுத்துக் கொண்டாள். அவளின் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு அவள் பயம் புரிவதாவது. "என்னைப் பார்த்து பயப்படுறாளா..ஏன்..?" என புரியாமல் அவன் விழிக்க அவளோ துப்பட்டாவால் அவளது முகத்தை மூடிக் கொண்டு மறுபக்கம் திரும்பி விட்டாள். அவளுக்கு "இனி என் லய்ஃப்ல உன் முகத்தை நான் பார்த்திற கூடாது..." என்று அன்று அவன் சொன்னது காதில் ரீங்காரமாய் கேட்டுக் கொண்டிருந்தது.

அவளது செயலில் அவனுக்கு சுருக்கென வலித்தது. தன் கண்ணில் பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அவள் தன்னை மறைக்கிறாள் என, அவளுக்கு வலிகளை கொடுத்தவனுக்கு புரியாதா என்ன..? அப்படியே தன் பாதங்களை அவளை நோக்கி நகர்த்த அவளோ அவனை உணர்ந்தவளாக தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தாள். ஓர் கட்டத்திற்கு மேல் தடுப்பொன்று தடுத்திருக்க மேலும் செல்ல முடியாமல் நின்றவள் திரும்புவதற்குள் அவளை நெருங்கியிருந்தான் ஆடவன். அவளுக்கு அந்த ஏசிக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது. பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டிருந்தவளின் கலங்கிய விழிகளை பார்க்க முடியாமல் தலையைக் கோதியவாறு பார்வைத் திருப்பினான் ஆத்விக்.

இவனது பார்வை சென்ற திக்கில் பார்க்க அங்கே சஞ்சய்யுடன் பேசிக் கொண்டிருந்தது என்னவோ ப்ரதீக் தான். அவனுக்கு ப்ரதீக் கூட கருத்தில் படவில்லை. யதார்த்தமாக அந்தப் பக்கம் தலையைத் திருப்பிருந்தான். இவளுக்குத் தான் திக்கென்றிருந்தது. ப்ரதீக்குடன் இப்போது பேசியதையும் இவன் தப்பாக புரிந்து கொண்டானோ என பதபதைத்தவள், அவன் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்த முன், அவளே பேச்சில் முந்திக் கொண்டாள்.

ஒற்றைக் கண்ணிலிருந்து சலேரென விழிநீர் எட்டிப் பார்க்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் "ஆத்விக்..!! அவன் என் சின்ன வயசுப் ஃப்ரெண்ட்..." என்றாள்.

அவளது கண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இவளின் இந்தப் பேச்சு புரியவில்லை.

தொடர்ந்தவளாக "நான் சும்மா தான் பேசிட்டு இருந்தேன். மறுபடியும் என்னைய தப்பா நெனச்சிறாத ஆத்விக்... நான் எந்தத் தப்பும் பண்ணல.." என்றவளுக்கு கேவல் வெளிப்பட்டது. உதடு துடிக்க அழுகையுடன் நின்றிருந்தவளைப் பார்க்க அவனது இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது.

தான் சந்தேகப்படுகிறேன் என நினைத்து பேசுபவளின் பேச்சு அவனுக்கு சாட்டையடியாய் இருக்க அதற்கு மேலும் தாங்கமுடியாமல் அவளை இழுத்து அணைத்திருந்தான். காற்றுக் கூட புக முடியாதளவு தன்னுள் அவளை சிறைப்படுத்தியிருந்தவன் இத்தனை நாட்களும் அனுபவித்த வலிகளை அந்த ஒற்றை அணைப்பில் தீர்த்துக் கொள்ள முனைந்தான்.

அவளோ உச்சகட்ட அதிர்ச்சியில் அதிர்ந்து போய் இருக்க அவனோ "சாரிடி கண்ணம்மா. என்னைய மன்னிச்சிரு. உன்னைய நம்பாம விட்டது என் தப்புத் தான். ப்ளீஸ் ஐ எம் ரியலி சாரி. இதுக்கு மேல நீ இல்லாம சத்தியமா முடியாதுடி. ஐ நீட் யூ பேட்லி. ஐ லவ் யூ சோ மச்....சாரி" என்றவன் அவளுள் தன் கண்ணீரை புதைத்தான்.

நிமிடங்கள் நீண்டு கொண்டிருக்க சுற்றுப் புறம் அறிந்து அவளை விடுவித்தவன் அவளது மதி முகத்தை கையில் தாங்கி "சாரி...என்ட் லவ் யூ..." என அவளது நெற்றியில் தன் முதல் முத்தம் பதித்தான் ஆடவன்.

நடப்பவை அவளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்க அவளது காதுகளைத் தீண்டிச் சென்ற அவனது வார்த்தைகளை நம்ப முடியாத திகைப்பு அவளுள். சஞ்சய் வரவும் சட்டென மறுபக்கம் திரும்பிக் கொண்ட ஆத்விக் கண்ணீரை துடைத்து விட்டான்.

வந்த சஞ்சய் ஆத்விக்கின் கலங்கிய விழிகளைப் பார்த்து குழம்பியவனாக சத்யாவின் கையைப் பற்ற அப்போது தான் அவள் திடுக்கிட்டு இவ்வுலகிற்கு வந்திருந்தாள்.

"ஹேய் வட் ஹெப்பன்ட்...?" என தங்கையின் நடுக்கமுணர்ந்து அவன் கேட்க, அவளோ மழங்க மழங்க விழித்துப் பார்த்தாள். ஆத்விக்கிற்கு அவளது செய்கையில் சிரிப்புத் தான் வந்தது.

இருவரையும் மாறி மாறி பார்த்த சஞ்சய் சத்யாவை அழைக்க அவளும் மறுபேச்சின்றி ஆத்விக்கை நிமிர்ந்து பார்க்க திராணியற்று அப்படியே சென்று விட்டாள்.

ஆத்விக்கோ போகும் தன் உயிரானவளையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

..


காரில் சென்று கொண்டிருந்த சத்யா நடந்தவைகளை மீட்டுப் பார்க்க சட்டென கண்களை கரித்துக் கொண்டு வந்தது. சந்தோஷத்தில் கண்ணீருடன் இதழ் பிரித்து சிரித்தவளை திரும்பிப் பார்த்த சஞ்சய்க்கு மனதிலிருந்த பாரம் நீங்கிய உணர்வு.

வீட்டுக்கு வந்தும் பேசாமல் சிரித்துக் கொண்டு போகும் தங்கையை பாசமாக தழுவிய சஞ்சய்க்கு அழைப்பு வந்தது.

எடுத்து காதில் வைத்தவன் குதூகலத்துடன் "ஹேய் என்னாச்சு...?" என்றான் ஆர்வமாய்.

அந்தப் பக்கம் ஆத்விக் நடந்தைவைகளை கூறி முடிக்க சிரித்துக் கொண்ட சஞ்சய் "அது தான் ராட்சசிட முகம் பிரகாசமா இருந்துச்சோ...??" என்று கிண்டலடித்தான்.

இப்போது ஆத்விக் "என்ன மச்சான் சொல்ற.. உண்மையாவா..?" என்றான்.

"ஆமான்டா.. அப்போ கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுல டும் டும் மேள சத்தம் கேட்கும் போலயே.." என்றான் வெட்கமே இல்லாமல்..ஹா..ஹா

சந்தோசம் தாங்கமுடியாமல் ஆத்விக் இந்தப் பக்கம் பேசப் பேச மறு பக்கம் பதிலில்லை. ஃபோனை காதிலிருந்து எடுத்துப் பார்க்க அங்கே இன்னும் சஞ்சய் லய்னில் தான் இருந்தான். திடீரென மின் வெட்டினாற் போன்று அவனுக்கொன்று க்ளிக்காக நக்கலுடன் "டேய் மச்சான்..." என்று போட்ட சத்தத்தில் சஞ்சயோ "ஹாங்.. எ..என்ன சொல்லிட்டு இருந்த ஆத்விக்.." என்று திருதிருத்தான்.

ஆத்விக்கும் அவனை சீண்ட நினைத்து "என்ன பகல் கனவா..? ஆமா இவ்வளவு நேரமும் என்ன யோசிச்சிட்டு இருந்த, உன் ஆள் எந்த வாண்டு கூட போல் (ball) அடிச்சிட்டு இருக்கான்னா...ஹா..ஹா" என்று சிரிக்கவும்

"எந்த ஆ..ஆள்.. எந்த போ..ல்.. மொதல்ல நீ ஃபோன வச்சிட்டுப் போய் உன் வேலையப் பாரு.. வந்துட்டான்.." என்று அவசரமாக கட் பண்ணி விட்டு பெரு மூச்சை விட்டுக் கொண்டான். பின் ஆத்விக் சொன்னது போல அனிதாவை நினைகையில் சிரிப்பானது அவனுக்கு.

அடுத்த கணம் அவனுக்கு மெசேஜ் நோடிபிகேஷன் வரவும் உள்ளே சென்று பார்க்க, ஆத்விக் தான் "தனிய நின்னு பல்லகாட்டிட்டு நிற்காத மச்சான். பார்க்குறவங்க லூசுனு நெனக்க போறாங்க..." என்றவனின் செய்தியில் சஞ்சயின் இதழ் இன்னும் சிரிப்பில் விரிந்தது. இருந்தும் கெத்தை விடாமல் "நீயும் இப்படிதான் பல்ல காட்டிட்டு நின்னுட்டு இருந்த போல.." என்று பதில் கேள்வி கேட்டு வைக்க அதற்கு வெட்கப்படும் எமோஜியை அவன் அனுப்பி வைக்க, சஞ்சய்யோ தலையிலடித்துக் கொண்டு சென்று விட்டான்.

..

இங்கே ஆத்விக்கிற்காக காத்திருந்த நவீனிடமும் நடந்தவைகளைக் கூற அவன் அவனை கிண்டல் செய்து ஓட்டித் தள்ளியது வேறு கிளைக் கதை.

"உனக்கு எப்படியோ ரூட் க்ளியர் ஆகிட்டு. பாக்கி நான் தான் இருக்கேன். நம்ம எப்ப ஒன்னப் பார்த்து, அது செட்டாகி, கல்யாணய் பண்ணி, கொழந்தை குட்டிங்கள பெத்துக்கிறது..." என ஏங்கியவனைப் பார்த்து "வயிரெறிஞ்சு செத்துறாத நாயே.." என்றான் ஆத்விக் கோபமாய்.

"ம்கும் செத்துட்டாலும்" என நொடித்துக் கொண்ட நவீனின் நிலை ஆத்விக்கிற்கு சிரிப்பையே தந்தது.

அவனை விடுத்து மாடியில் ஏறப் போனவன் யோசித்துக் கொண்டு நின்ற நவீனிடம் "உனக்கு இன்னும் வயசு பத்தல சொங்கி.. இன்னும் பத்து வருஷத்துக்கு வெயிட் பண்ணிட்டு இரு." என்றவனை எரிக்கும் பார்வையுடன் எதிர் கொண்ட நவீன் "ஏன் உன் புள்ள வந்து என்னைய தாத்தானு கூப்பிடவா.." என்றான்.

அதற்கு ஆத்விக் போகிற போக்கில் "இந்த வாய்க்கொழுப்பால தான் இன்னும் நீ கன்னி கழியாம இருக்க" என்றவனை நோக்கி தட்டொன்றை எறிந்து விட்ட நவீன் வாய்க்குள்ளே திட்டிக் கொண்டு இடத்தை காலி செய்தான்.


தொடரும்...


தீரா.
 
  • Love
Reactions: Durka Janani