• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 19

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அடுத்த நாள் சத்ய ஸ்ரீயின் வீட்டிலிருந்து அழைப்பு வர குடும்பம் சகிதம் அனைவரும் அங்கே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே அமர்த்திக்காவின் குடும்பத்தினரும் அழைக்கப்பட, அவர்கள் அப்படியே அங்கே வருவதாக திட்டம்.

சத்யாவின் வீட்டில் அனைவருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தாமோதரனோ "அப்போ மூனு மணமக்கள் ஜோடிகளையும் ஒரே மேடைல உட்கார வச்சு ஜாம் ஜாம்னு கல்யாணத்தை பண்ணிறலாம்.." என்று விட்டு சிரிக்க மொத்தப் பேரும் கலகலவென சிரித்தனர். குழம்பிப் போய் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ ஆத்விக்கும் நவீனும் தான்.

ஆத்விக்கோ நவீனின் காதில் "டேய் ஒரு கப்பில் நானு..." என்கவும் நவீனோ "மத்தது நானும் அமர்த்தியும்.." என்று முழிந்து விட்டு பின் இருவரும் ஒன்றாக "அப்போ அந்த மூனாவது ஜோடி யாருடா..?" என்றனர் கோரஸாக.

அவர்களின் பின் நின்று இதனை கேட்டுக் கொண்டிருந்த சஞ்சய்க்கு சிரிப்பு பீறிட்டு வந்தாலும் அடக்கிக் கொண்டு நவீனை சுரண்ட அந்த சோடாபாட்டிலோ திரும்பிப் பார்க்காமல் "அட போமா.. நாங்களே கன்பியூஸ்ல இருக்குறோம். நீ வேற.." என்று கையைத் தட்டி விட்டான்.

அவர்களின் காதுப் பக்கம் குனிந்த சஞ்சய் "நீங்க தேடுற ஆளு நான் தான்..." என்றான் ஹஸ்கி வாய்சில்.

"வாட்..?" என சொல்லி வைத்ததைப் போல இருவரும் ஒன்றாகத் திரும்ப அவனோ இளித்து விட்டு "ஷாக்க குறைங்கடா மச்சான்ஸ்..." என்று நடந்ததை சொல்லி முடித்தான்.

அன்று அனிதாவைப் பார்த்ததிலிருந்து சஞ்சய்க்கு தவிப்பாய் இருந்தது. மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும் போல இருக்க அடுத்த நாள் காலை வரை தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன் அடுத்த நாள் செய்த முதலாவது வேலை அவளைப் பற்றிய தகவலை அறிந்து கொண்டது தான். அவளும் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்க தாய் சாருமதி இல்லத்தரசியாகவும் தந்தை சேதுராமன் டாக்டராகவும் கடமை புரிந்து வருகின்றார். அவளைப் பற்றி அறிந்த பின் தயக்கத்தை உடைத்தெரிந்த சஞ்சய், தந்தை தாமோதரனிடம் தன் காதலைப் பற்றிக் கூறி சேதுராமனிடம் விசாரிக்கச் சொன்னான். அவர்களும் விசாரித்து தனியே சந்தித்ததுப் பேசி ஓர் நல்ல முடிவுக்கு வந்து விட்டனர். அதன் பின்னர் சஞ்சய்யின் ஃபோடோவை அனிதாவிடம் கொடுக்க அவளுக்கோ பார்த்தவுடன் அவனைப் பிடித்து விட்டது. ஆக உடனே சம்மதம் சொல்லி விட்டாள். அதன் பின்னரே சஞ்சய்க்கு நிம்மதியானது. இந்த வரலாறை சஞ்சய் ஆத்விக் மற்றும் நவீனிடம் கூறி முடிக்க அவர்களோ அவனை ஓட்டித் தள்ளி விட்டனர். அன்றைய பொழுது அப்படியே கழிய அனைவரும் மீண்டும் தங்களது வீட்டிற்கு வந்து விட்டனர்.


...


அடுத்த நாள் அமர்த்திக்கா மட்டும் ஆத்விக்கின் இல்லத்திற்கு வந்திருந்தாள். சமயலறையில் ப்ரனீத்தா வேலை செய்து கொண்டிருக்க அவ்விடம் வந்த அமர்த்திக்கா "ஹாய் ஆன்டி.. ப்பாஹ் ஸ்மெல் சூப்பர்." என சமைத்த உணவை திறந்து பார்த்தாள்.

ப்ரனீத்தா சிரிக்க அவளோ "இனி எனக்கு கவலை இல்லை. செம்ம சாப்பாடு சாப்பிடலாம்..." என்றவாறு அவரைக் கட்டிக் கொண்டாள்.

"அதுக்கென்னமா சாப்பிட்டாப் போச்சு. என் மருமகளுங்களுக்கு இதைக் கூடவா செய்ய மாட்டேன்.." என கூறி சிரித்தவருக்கு ஒரு விடயம் நினைவு வர கலங்கியவராக "அம்மாடி கல்யாணமாகி இங்க தானே இருப்ப..? எதுக்கு கேட்குறன்டா, என்னால நவீன பிரிஞ்சு இருக்க முடியாதுடா. அவன் என் செல்லக் குழந்தை.." என்றார்.

ப்ரனீத்தாவின் பாசத்தை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டவள் தன்னவனை நினைத்து சாந்தமாகினாள். அவனிற்கு தாய் பாசத்தை வாரி வழங்க ப்ரனீத்தா இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியே..

பின் ப்ரனீத்தாவை பாசமாக தழுவியவள் "அத்தை இப்படி இன்னொரு தடவை கேட்டிங்க, மாமியார் கொடுமைபடுத்துறாங்கனு சொல்லிட்டு என் நவீன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போய்றுவேன்." என்று அதட்டினாள்.

அவரின் முகம் தெளியாததைப் பார்த்து "நானே தனிய வளர்ந்த பொண்ணு. எனக்குனு இப்போ தான் நவீனோட ஃபேமிலினு நீங்கயெல்லாம் கிடைச்சிருக்கீங்க. இந்த ஹெவன்ன விட்டுட்டு எப்டித்த போவேன்..!?" என்றவாறு முகத்தை சுருக்கியவளுக்கு "என் செல்லம்.." என நெற்றியில் முத்தம் வைத்தவர் சத்தோஷ மிகுதியில் நவீனை அழைத்தார்.

"நவீன் கண்ணா எங்கடா இருக்க? சீக்கிரம் வா" என்றார். அவரது சத்தத்தில் என்னானதோ என்று ஓடி வந்த நவீன் "அம்மா என்னாச்சு..?" என்றவன் அருகில் நின்ற தன்னவளையும் கவனிக்கத் தவறவில்லை.

அவனது உச்சியில் முத்தமிட்ட தாயோ "அன்னைக்கு ஒரு கன்டிஷன் போட்டல்ல..?" என்கவும் "எந்தக் கன்டிஷன்?" என்றான் குழம்பியவனாய் அவனும்.

"ப்ச் அது தான்ப்பா. உன் பொண்டாட்டி உன்னைய தனிக் குடித்தனம் போக அழைச்சா, அவள் விருப்பப்படினு சொன்னியே.." என எடுத்துக் கொடுத்தார்.

அவன் அப்படிச் சொல்லக் காரணமும் இருந்தது. இங்கே இவர்களுக்கு இடைஞ்சலாக அவன் இருக்க விரும்பவில்லை. இதில் இனி இங்கே தங்க வேண்டும் என ப்ரனீத்தா அன்று ஒற்றைப் பிடியில் நிற்க ஒரு மனதாகவே அவன் சம்மதித்தான். அதில் கூறிய இந்த கன்டிஷனுக்குக் காரணம், தான் என்ன சொன்னாலும் ப்ரனீத்தா கேட்க மாட்டார். ஆக, வர இருக்கின்ற மருமகளை சாட்டுக்கு இழுத்தவன் அவள் தனிக் குடித்தனம் அழைத்தால் சென்று விடுவேன் என சொல்லி விட்டான்.

இன்னைக்கு ஓகே, ஆனால் ஆத்விக்கின் மனைவி குழந்தை சொந்தம் என வரும் போது தான் இருப்பது இடைஞ்சலோ என்று தோன்றவே அப்படி சொல்லி இருந்தான். ஆனால் இன்று நடப்பவையோ வேறு மாதிரியல்லவா இருக்கிறது.

ப்ரனீத்தாவோ தொடர்ந்தவராக "அந்த கன்டிஷனுக்கு நம்ம அமர்த்திக்கா ஒத்துக்கிட்டாப்பா. இனி இங்க தான் இருக்கப் போறியாம்..." என்றார் சிறு குழந்தையாய்.

நவீனோ அமர்த்திக்காவிடம் "ம்ம்..?" என்று தலையாட்டிக் கேட்க அவளோ சந்தோஷமாக தலையாட்டி வைத்தாள். நவீனிற்கோ அத்தனை சந்தோஷம். உண்மையாகவே ப்ரனீத்தாவை பிரிய அவனுக்கு மனசேயில்லை.

...

அன்றே இவர்களுக்கு வரும் மாதம் திருமணம் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

...


அனைத்து சொந்தங்களுக்கும் திருமண அழைப்பு விடுவிக்கப்பட, அந்த மண்டபமே அன்று விழாக் கோலம் எடுக்கப்பட்டது. ஆத்விக்கிற்கும் நவீனிற்கும் ஒரே நாளில் திருமணம் நிச்சயிக்கப்பட, சஞ்சய்க்கோ அதற்கு அடுத்த நாள் என்றிருந்தது. அங்கே தம்பதியினர்களின் பெற்றோர்களுக்கு நிற்கக் கூட நேரம் இருக்கவில்லை. அடுத்த அடுத்த நாள் என்று மூன்று தம்பதியினர்களுக்கும் திருமணம் இனிதென நடந்து முடிய, அனைவருக்கும் நிம்மதியானது.

கிடைக்காது என தொலைத்த காதல் மீண்டும் கை கூடி திருமணம் வரை வந்து விட்டது. விதி வலியது.


முற்றும்.


தீரா.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
149
43
Theni
மிகவும் அருமையான கதை மா
அவசரத்தில் எடுக்கும் முடிவுகளும் அதனால் ஏற்படும் அவஸ்தைகளும் இப்போதைய தலைமுறையினருக்கு புரிவதில்லை.
சத்யா மிகவும் பாவம்
ஆத்விக்கை இன்னும் வச்சு செய்திருக்க வேண்டும்
இந்த கதைக்கு ஒரு எபிலாக் கொடுங்கம்மா
 
  • Love
Reactions: Dheera

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
மிகவும் அருமையான கதை மா
அவசரத்தில் எடுக்கும் முடிவுகளும் அதனால் ஏற்படும் அவஸ்தைகளும் இப்போதைய தலைமுறையினருக்கு புரிவதில்லை.
சத்யா மிகவும் பாவம்
ஆத்விக்கை இன்னும் வச்சு செய்திருக்க வேண்டும்
இந்த கதைக்கு ஒரு எபிலாக் கொடுங்கம்மா
Kodukathan ipo vandhan..tnx sago