• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 2

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
காலை விடிந்ததும் தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சத்யா.

கீழேயிருந்து அவளது அம்மா சந்தியாவோ "எவ்ளோ கத்து கத்துறேன் இவள் எழுந்துக்கிறாளா பாரு. இதுக்குத் தான் சொல்லுறது காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கனும்னு. அங்க மாமியார் கொடுமை தாங்க முடியாம சீக்கிரம் எழுந்திருப்பாள்ல.. ஆம்பள பையன் அவனே ஏர்லியா எழுந்து ஜாகிங் போய்ட்டான். இவ என்னடான்னா இன்னும் தூங்கிட்டு இருக்கா.. இவள வச்சு என்னதான் செய்றதுனு புரில.." என பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

அந்நேரம் பார்த்து அங்கே வந்த சத்யாவின் தந்தை தாமோதரன் "ஏன் என் பொண்ணுக்கு சேவ செய்றது உனக்கு கஷ்டமா இருக்கா என்ன..?" என்கவும் அவரை முறைத்த சந்தியா "வாங்க வாங்க..உங்கள தான் எதிர்பார்த்தேன். கரெக்ட் டைமுக்கு வந்துட்டீங்க.. உங்க பொண்ணுக்கு சேவை செய்றது ஒன்னும் எனக்கு கஷ்டமில்லை, இஷ்டம் தான். ஆனால் அவள எழுப்புறதுதாங்க கஷ்டமா இருக்கு..." என்றவாறு வராத கண்ணீரை முந்தானையால் துடைத்தார்.

அவரது நடிப்பில் வெளிவந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்த தாமோதரன் அவரை முறைத்து வைக்க சரியாக அப்போது தான் உள்ளே நுழைந்தான் சஞ்சய்.

தாய் அழுவதைப் பார்த்து பதறிக் கொண்டு அங்கே விரைந்தவன் "அம்மா என்னாச்சும்மா? ஏன் அழுறீங்க..?" என்றவனைப் பார்த்து "வந்துட்டான் பாசமலர் மாதிரி பாசமகன்..." என தாமோதரன் கூறினார்.

அவரை முறைத்த சஞ்சய் தாயின் தோளைச் சுற்றி கைபோட்டு அணைத்தவாறு மீண்டும் "என்னாச்சு மாம்...?" என வினவினான். அவனுக்கு தாய் கஷ்டப்பட்டால் தாங்க முடியாது. தாய் மீதான அவனின் பாசத்தில் பொறாமையில் வெந்து போவதென்னவோ தாமோதரன் தான்.

"அதை நானே சொல்லுறேன்டா. இதோ உங்கம்மாக்கு என் பொண்ணை எழுப்புறது கஷ்டமாம். அது தான் நீலிக் கண்ணீர் வடிக்கிறா.." என மனைவியை அறிந்தவராக அவர் சொல்ல சந்தியாவிற்கு பொசு பொசுவென கோபம் வந்து விட்டது. அவரது முகத்தைப் பார்த்தே அவரது கோபத்தை கணித்த தாமோதரனும் "நான் போய் என் பொண்ண எழுப்புறேன் பார்றா..." என்றவாறு தன் வயதை மீறியும் மாடியில் அவசர அவசரமாக ஏறியவர் ஏதோ நினைவு வந்தவராக திரும்பி சஞ்சயிடம் "ஆனால் ஒன்னு.. உங்க அம்மாக்கு டென்ஷன்லையும் ரைமிங் மட்டும் நல்லா வருதுடா.. இஷ்டம் கஷ்டம்..ஆஹாஹா.." என பெருமையாக கூறி விட்டு குடுகுடுவென ஓடியவரைப் பின் தொடர்ந்து சந்தியாவின் திட்டுக்களும் பறந்தன.

சஞ்சயோ தந்தையின் கூற்றில் சிரித்து விட்டு "இந்த கும்பகர்ணி இன்னும் எழுந்திருக்கலயாம்மா..?" என தலையில் அடித்துக் கொள்ள அவரோ உதட்டைப் பிதுக்கினார்.

"சரி சரி டாட் தான் போறாருல்ல.. அவள எழுப்பி விட்டிருவாரு.. நான் போய் குளிச்சிட்டு வரேன்..." என்றவன் தாயை செல்லம் கொஞ்சி விட்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டான்.

சந்தியாவும் பெருமூச்சுடன் சமையலறையை நோக்கி சென்று விட்டார்.

தன்னால் கீழே பூகம்பமே வெடிப்பது தெரியாமல் அங்கே சத்யா குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள்.

இங்கே சத்யாவின் அறைக்கு வந்த தாமோதரன் கண்டதோ தலையணையை காலுக்கு கொடுத்து விட்டு டெடியொன்றை கட்டிக் கொண்டு தூங்கும் மகளைத் தான்.

அவளருகில் சென்றவர் "குட் மார்னிங்டா குட்டிமா..." என புன்னகையுடன் மகளின் தலையை தடவி விட சலித்துக் கொண்டே பாதிக் கண்களைத் திறந்தவள் "இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் டாட்..." என கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபக்கம் தலையை வைத்து, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

"எழுந்திருமா.. ஆபிஸ் போகனும்ல. அண்ணன் ஆல்ரெடி ரெடியாகிட்டான்டா..." என அப்போதும் அமைதியாகவே கூறிய தந்தையின் பேச்சில் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்த சத்யா "குட் மார்னிங் ப்பா..." என்றவாறு கண்ணைக் கசக்கினாள்.

அவளை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த அவரும் "எழுந்திரிச்சு ரெடியாகி வாடா.. அப்பா கீழ வெயிட் பண்ணுறேன்..." என்றவாறு சென்றவரைப் பின்தொடர்ந்து எழுந்தவளும் குளித்து முடித்து விட்டு தயாராகி கீழே வந்தாள்.

கீழே சந்தியா உணவு பரிமாற தாமோதரனும் சஞ்சயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அழகான டாப்பும் டெனிமும் அணிந்து துப்பட்டாவை கழுத்தைச் சுற்றி போட்டிருந்தவளைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். ஃப்ரெஞ்ச் ஹெயார் ஸ்டைல் இவளின் சிறு வயதுப் பழக்கம். இப்படி முழுமை பெற்ற ஓவியமாய் கீழே படியிறங்கி வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து மூவரும் ஒன்றாக புன்னகைக்க அவளுக்குத் தான் வெட்கமாகிப் போனது.

அவர்களின் அருகில் வந்தவள் தொண்டையை செறுமியவாறு அமர அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவோ "இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கடி குட்டிமா..." என்கவும் மீண்டும் அவளது இதழ்களில் ஓர் வெட்கம் புன்னகை.

தாமோதரனோ "அவ என் பொண்ணுல.. அப்படித் தான் இருப்பா..." என பெருமை பீத்த "ஆமா இவரு பையன் ஐஸ்வர்யா ராய் பாரு.." என சந்தியாவே அவரை கலாய்த்திருந்தார்.

அதில் சத்யாவும் சஞ்சயும் வாய் விட்டு சிரிக்க அப்போதும் தாமோதரன் அடங்காமல் "நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் பேரழகன் தான்டி..." என மீசையை முறுக்கி விட்டார்.

இப்படியே தாயும் தந்தையும் மாறி மாறி சீண்டி சண்டை போட்டுக் கொண்டிருக்க பிள்ளைகளும் ரசித்துப் பார்த்திருந்தனர். திடீரென அம்பி, அந்நியன் அவதாரம் எடுத்தது போல சஞ்சையுடன் மல்லுக்குச் சென்று விட்டாள் சத்யா.

"டேய் தடியா..ஏன்டா டெய்லி என்னைய ஆபிஸ் வர சொல்லி டார்ச்சர் பண்ணுற..?" என்றாள் கோபமாய்.

"எனக்கு ஆபிஸ்ல டைம் பாஸ் இல்லை பாரு. அது தான்..." என்றான் சீரியஸாக.

அதில் கடுப்பானவள் அவனது தலையில் ஓங்கிக் கொட்ட தலையைத் தடவிக் கொண்டே "எதுக்குடி அடிச்சே ராட்சசி...?" என முறைத்து வைத்தான் சஞ்சய்.

"பின்ன நான் உனக்கென்ன டைம் பாஸ்ஸாடா...?" என அவளும் சீர "மறுபடி என்னத்துக்குடி கேட்ட.. உனக்கே தெரியும் நான் ஏன் உன்ன வர சொல்லுறேன்னு...?" என்றவாறு அவளை அழுத்தமாக பார்த்தான் அண்ணனானவன்.

தாமோதரனும் சந்தியாவும் தங்களது சண்டையிலிருந்து இப்போது தான் நனவுலகிற்கு வந்தனர் போலும்.

"என்னடா நடந்துச்சு ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க..?" என கேட்ட தந்தையிடம் பொய்க்கு மூக்கை உறிஞ்சிக் கொண்டு திரும்பிய சத்யா, நடிப்பில் சந்தியாவின் மகள் என்பதை நிரூபித்திருந்தாள்.

"பாருங்கப்பா.. டெய்லி என்னைய ஆபிஸ் வர சொல்லி தலையில் கொட்டாறான்... " என்றவளின் கதையைக் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த சஞ்சய்க்கு புரைக்கேறியது.

தாமோதரன் ஏதோ பேச வாயெடுக்க சஞ்சயோ இருமிக் கொண்டே தாயின் புறம் திரும்பி "அ..அம்மா அவ்வளவும் பொய்மா.. பிசாசு சும்மா கத அளந்து விடுறா..." என்றவனுக்கு சந்தியா தண்ணீரை புகட்டி விட அதனை முழுவதும் குடிக்க விடாமல் அந்த வீட்டு வாலில்லா குரங்கு அவன் மேல் குதித்திருந்தது.

"யாருடா பிசாசு..? நீ தான்டா டைனோசர். பாரு சாப்பிட்டு சாப்பிட்டு ட்ரக்கு மாதிரி இருக்க..." என மனசாட்சியே இல்லாமல் அந்த நல்லெலும்பை அடிக்கத் துரத்தினாள் சஞ்சயின் ராட்சசி.

அவனோ தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டு அவர் பின்னே ஒழிய சந்தியாவும் இந்த ராட்சசியிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்து "உன் நல்லதுக்கு தானடி அவன் ஆபிஸ் வர சொல்லுறான்..? என்றார்.

அவரை இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்தவளோ "எதே..என் நல்லதுக்கு வர சொல்லுறானா..? இந்த தடியன் எனக்கு நல்லது செய்றதுன்னா என்ன செஞ்சிருக்கனும் ? என் படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல கம்பனில வேலை வாங்கி தந்திருக்கனும். அத விட்டுட்டு ஒன்னுக்கும் உதவாத அவன் கம்பனில வேலை பார்க்க வைக்கிறதெல்லாம் சரி இல்லை சொல்லிபுட்டேன்..." என பக்கம் பக்கமாக வசனம் பேசியவளை கேட்டுக் கொண்டிருந்தவர்களின் காதில் புகை வராத குறை. பின்ன!? இந்தியாவிலே சூப்பர் டென் லீடிங் கம்பனிஸ்ல இரண்டாம் இடம் இவனது கம்பனியே.. அதையே உதவாத கம்பனினு சொல்லுற இவள தொடப்ப கட்டையால அடிக்கனுமா இல்லையா..? இருந்தும் இந்த அழகிய ராட்சசிக்கு அண்ணனாக வாக்குப்பட்ட ஒரே காரணத்துக்காக அவனும் சிரித்துக் கொண்டே அதே நேரம் அழுத்தமாக அவளுக்கு பதிலளித்திருந்தான்.

"அப்படி இல்லடா.. உன்னை இன்னொரு இடத்தில வேலைக்கு அனுப்பி வச்சிட்டு இங்க என்னால நிம்மதியா இருக்க முடியாது. அதுமட்டுமில்லாம அடுத்தவன் முன்னாடி இந்த சஞ்சய்யோட தங்கச்சி கைகட்டி நின்னு வேலை பார்க்குறத நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்..." என அமைதியாக நின்றிருந்தவளிடம் கூறி விட்டு அவளருகில் வந்து "சோ சாப்பிட்டு அவசரமா வந்து கார்ல ஏறு ஆபிஸ் போகனும்..." என அவளது கன்னத்தை தட்டி விட்டு சென்று விட்டான்.

சஞ்சயின் தெளிவான பேச்சில் என்றும் போல இன்றும் தாமோதரன் பெருமைபட்டுக் கொண்டார் என்றால் சந்தியாவோ மகளை மேலும் கீழும் பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

அண்ணன் தன் மேல் வைத்துள்ள பாசத்தில் அகம் மகிழ்ந்தவள் தந்தையிடம் கூறி விட்டு வெளியே வந்தாள்.

காரில் அமர்ந்து தங்கையின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவ்விடம் வந்த சத்யாவை நமட்டு சிரிப்புடன் பார்த்து வைத்தான் சஞ்சய்.

"இப்போ யாரோ நான் ஆபிஸ் வரமாட்டேன் கொடுமை செய்றாங்க பீலா பீலானு புகார் கொடுத்துட்டு இருந்தாங்களே..." என்றவனிடம் அகத்தை மறைத்து முறைத்துக் கொண்டே "ஹலோ மிஸ்டர் சஞ்சய் தாமோதரன் உங்கட சட்டர் பாக்ஸ கொஞ்சம் மூடுறீங்களா...? "என்றாள்.

"அப்படியே ஆகட்டும் மிஸ். சத்யா தாமோதரன்...வந்து ஏறினா நான் ஆபிஸ் போய்றுவேன்" என்றவனின் சேட்டையில் முறைக்க நினைத்து சிரித்து வைத்தவளின் மனதிலோ பல நினைவுகள் வந்து மோதின.

அவளது முக மாற்றத்தை சஞ்சயும் கவனிக்கவில்லை. பின் இருவருமாக ஆபிஸ் வந்து சேர்ந்திருந்தனர்.


...


தன் லெப்டாப்பில் மூழ்கி இருந்த ஆத்விக்கை தாய் ப்ரனீத்தாவின் தொலைபேசி அழைப்பு கலைத்திருந்தது.

நெற்றி யோசனையில் சுருங்க அதனை ஏற்று காதுக்கு கொடுத்தவன் "ஹலோ மாம் எனி ப்ராப்ளம்...?" என எடுத்த எடுப்பிலே கேட்டவனுக்கு சிரிப்பை பதிலளித்தவர் "ஒன்னுமில்லப்பா சும்மா தான் எடுத்தேன். நவீன் பையன வீட்டுக்கு வர சொல்லி கால் எடுத்தேன். அவன் ஆன்சர் பண்ணலப்பா. அது தான் உனக்கெடுத்தேன். சாப்பிட்டியா கண்ணா..?" என்றதும் அவன் கண்களில் சிரிப்பின் சாயல்...

"இன்னும் இல்லம்மா. அவன் பிஸியா இருந்ததால ஃபோன பார்த்திக்க மாட்டான்..." என்று சொல்லும் போதே உள்ளே நுழைந்திருந்தான் நவீன்.

"இதோ வந்துட்டான் உங்க பாசமலர்..." என்றவன் நவீனிடம் தொலைபேசியைத் தர, அதனை வாங்கிப் பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சியே..

மனதில் எழுந்த துள்ளலுடன் "ஹாய் ம்மா.. எப்படி இருக்கீங்க.. அப்பா எப்படி இருக்காரு...?" என்றவனிடம் மறுபக்கம் என்ன கூறப்பட்டதோ இவனும் "ஸாரிமா ஃபோன பார்க்கல நான்."

"ஓகேம்மா வந்துட்டா போச்சு.." என்றவன் சிறிது நேரம் பேசிவிட்டு ஆத்விக்கிடம் ஃபோனை தள்ளி விட்டவாறு அவனின் முன் உல்லாசமாக அமர்ந்து கொண்டான்.

"என்னடா சொன்னாங்க அம்மா...?" என்று வினவியவனிடம் "எனக்கும் எங்கம்மாக்கும் ஆயிரம் இருக்கும். அது ஏன் உனக்கு..?" என்று கூறியவன் ஆத்விக்கின் முறைப்பையும் பரிசாக வாங்கிக் கொண்டான்.

அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டு எழுந்த ஆத்விக்கோ பேன்டை சரி செய்ய நவீனின் மனதினுள் மணியடித்தது.

உடனே அலேட்டானவன் எழுந்து ஓட எத்தணிக்க அதற்குள் அவனை அமுக்கிப் பிடித்த ஆத்விக், அவனது சேர்ட் காலரை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு கேண்டின் நோக்கி சென்றான்.

இதனை எதிர்பாராத நவீனும் "டேய் மட்டி மடையா..விடுடா..ஏற்கனவே இந்த ஆபிஸ்ல எனக்கு நல்ல இமேஜ்..? இதுல நீ வேற படுத்தாதடா..." என அலறியவனின் குரல் அவனது செவியைத் தீண்டவே இல்லை.

இவை அனைத்தும் வழமையாக நடக்கும் கூத்து தானே என ஊழியர்கள் அனைவரும் கண்டும் காணாமல் சென்று விட்டனர்.


தொடரும்...


தீரா.
 
Last edited: