• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 7

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
கீழே காஃபி ஷாப் வந்த நவீன் சத்ய ஸ்ரீயைத் தேட அவளோ அழுது கொண்டிருக்க, சஞ்சய் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

அவளை இப்படிப் பார்க்க நவீனிற்குமே மனம் பாரமானது. அவன் வந்து அவளருகில் அமர, அவளோ சட்டென எழுந்து சஞ்சயின் மறுபக்கம் போய் அமர்ந்து கொண்டாள். அவளது உதாசீனத்தால் நவீன் பெரிதும் அடிபட்டுப் போனான்.

சத்யாவோ "அண்ணா நீயும் இத்தனை நாளும் கேட்டுட்டு இருந்தல்ல என்ன நடந்துச்சுனு.. இப்போ சொல்லுறேன்.." என கேவலுடன் சொல்லியவளை மனம் தடதடக்க நவீன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை பக்கவாடாக அணைத்த சஞ்சய் "காம்டவுண் குட்டிமா..." என ஆறுதல் கூறியவனோ நவீனை முறைத்து வைக்க அவனோ மெல்லத் தலை குனிந்தான்.


ப்ளேஷ் பேக் ஸ்டார்ட்.. அப்படியே மேல பாருங்க கொசுவத்தி சுருள் சுத்துது...


சரியாக மூன்று வருடங்களுக்கு முன்.

ஆங்காங்கே சீனியர் மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை அழைத்து ரெக்கிங் என்ற பேரில் கலாய்த்துக் கொண்டிருக்க, அங்கே புத்தகத்தை அணைத்துப் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தாள் சத்ய ஸ்ரீ.

இப்படி இந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்க, அங்கே வாலில்லா இரண்டு குரங்குகள் தங்களது வகுப்பின் முன் நின்று கொண்டு சீனியர்ஸிடமிருந்து தப்பி வரும் தங்கள் வகுப்பு மாணவிகளுக்கு தனியே பாடம் எடுத்துக் கொண்டிருந்தனர். இவர்களும் சீனியர்ஸிடம் மாட்டி சின்னா பின்னமாகியது வேறு கிளைக் கதை..

அந்த நேரம் பார்த்து சரியாக சத்ய ஸ்ரீயும் தப்பித்தோம் பிழைத்தோம் என வகுப்பறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

அழகான இளம் ஊதா நிறத்தில் டாப்பும், அதற்கேற்ற வெள்ளை நிற டெனீமும் அணிந்திருந்தவள் துப்பட்டாவை கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தாள். ஃப்ரெஞ்ச் ஹெயார் ஸ்டைலிட்டிருந்தவளின் கற்றை முடி நெற்றியில் நடனமாட அதனை காதின் பின்பக்கம் செருகிக் கொண்டே வந்தவளை அனிச்சையாக திரும்பிப் பார்த்தான் ஆத்விக்.

நவநாகரீகப் பெண்கள் தன்னைச் சுற்றி வந்த போதிலும் மிதமான மேக்கப்பில் பளீரென்ற சிரிப்புடன் தேவதையென வந்து கொண்டிருந்தவள் அப்போதே ஆடவனின் மனதில் பச்சைக் குத்தி அமர்ந்து விட்டாள்.

இங்கே ஒருவன் கண்டதும் காதலில் சிக்குண்டது அறியாத நவீனும் வெட்டியாக அவனிடம் போய் கதையளந்து கொண்டிருந்தான்.

"டேய் மட்டி மடையா..." என ஆத்விக்கை உலுக்கவே சுயத்தையடைந்தவன் அப்போதும் நவீனை திரும்பிப் பார்த்தானில்லை.

அதில் கடுப்பாகி அவனைத் தாண்டி எட்டிப் பார்த்த நவீன் ஜெர்க்காகி விட்டான்.
"ஆத்விக் ஒரு பெண்ணைப் பார்க்கிறானா...? அதுவும் கண்சிமிட்டாம.." என்று நினைத்தவன் அதிர்ந்த வாக்கிலே யூ டேர்ன் போட்டு ஆத்விக்கின் பக்கம் திரும்பி அவனது கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்துப் பார்த்தான் ஆராய்ச்சியாய்.

அதில் கலைந்தவனாக ஆத்விக்கும் கடுப்பாகி "என்னடா டொங்கி..." என புருவத்தை உயர்த்த
இவனும் "அதை நான் கேட்கனும்டா பக்கி.." என்றவனிடம்
"என்னடா வேணும்...?" என்றான் ஆத்விக் கோபமாய்.

அவனை மேலும் கீழும் பார்த்து வைத்த நவீன் "ஆங் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆத்விக்..ஆத்விக்னு ஒருத்தன் இவ்வளவு நேரமும் இங்க தான் நின்னிட்டு இருந்தான். திடீர்னு ஆளக் காணோம். அது தான் எங்க கவுந்து மல்லாக்கா கிடக்கானு தேடிட்டு இருக்கிறேன்..." என்றவன் சத்யாவின் காலடியை திரும்பிப் பார்க்க
இன்னும் புரியாதவனாய் எகிறிய ஆத்விக் "நாயே.. அப்போ நான் யாருடா..?" என மண்டையில் கொட்டினான்.

நவீனும் தலையைத் தடவிக் கொண்டே "ஓ மை காட்.. நீ யாருனு உனக்கே தெரியலயா..? வட் எ பிட்டி.." என உச்சுக் கொட்டியவன் அவனது காதருகே குனிந்து "என்ன மச்சி ப்ளேட்டா..? மொகத்துல டாலடிக்குது..." என கண்சிமிட்டி சிரித்ததன் பின்னர் தான், இவ்வளவு நேரமும் அவன் தன்னை கிண்டல் செய்வது புரிந்தது ஆத்விக்கிற்கும்.

புரிந்த நொடி இதோ இருவருக்குள்ளும் கை கலப்பாகி விட்டது. தூரத்திலிருந்தே இவர்களை கவனித்துக் கொண்டு வந்த சத்யா, இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்து எஸ் ஆகிவிடுவோம் என நினைத்து அவர்களைத் தாண்டி வேகமாக செல்ல "ஹேய் நில்லு..." என்ற நவீனின் சத்தத்தில் அப்படியே ஆணியடித்தது போல அசையாமல் நின்று விட்டாள்.

"என் ஆளையே கலாய்க்கப் போறியா..?" என்று தன் காதைக் கடித்த ஆத்விக்கை சட்டை செய்தவன் இவளின் புறம் திரும்பி "வட்ஸ் யுவர் நேம்...?" என்றான்.

அவளோ தப்பிக்க நினைத்து "அ..அதோ அங்க இப்..இப்போ தான் என் நேம் கேட்டவங்கள வ..வச்சி செஞ்சிட்டு வரேன்..." என கெத்தாக கூறினாலும் அவளது திக்கலை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

அதில் அவள் சுட்டிக் காட்டிய இடத்தை "யாருக்கிட்ட ஆங்..?" என்றவாறு திரும்பிப் பார்த்த நவீன் வாயைப் பிளந்தான். ஆம் அங்கே சில மாணவர்கள் இடுப்பையும் கையையும் பிடித்துக் கொண்டு நொண்டி நொண்டி போய்க் கொண்டிருந்தனர். அவர்களும் தங்களது சக வகும்பு மாணவர்கள் என்பதையறியாத நவீனுப் ஸ்லோமோஷனில் திரும்பி, கலங்கி கண்களை மறைத்தவனா "ம்ம்..?" என தலையை மேலும் கீழும் ஆட்டிக் கேட்க அவளும் தோள்களை உலுக்கி விட்டு ஆம் என தலையாட்டி வைத்தாள்.

"அம்மா தாயே.. ஆள விட்டுடு.. எனக்கே நாலு நஞ்சு போன எலும்பு தான் இருக்கு..." என்றவன் அவளைப் பார்த்து கும்பிடு போட, சத்யாவும் தாங்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவள் கூறுவது பொய்யென்று ஆத்விக்கிற்கும் தெரியும். ஏனென்றால் அந்த மாணவர்கள் சீனியர்சிடம் அடி வாங்கும் போது அவனும் அங்கே தான் இருந்தான். இருந்தும் நவீனை மாட்டி விட வேண்டும் என பேசாமல் நின்று கொண்டான் தன்னவளின் குறும்பை ரசித்தவனாக...

இவளோ கண்ணீர் வரும் மட்டும் சிரித்து விட்டு "என்ன பயந்துட்டியா நண்பா...?" என்று கேட்ட பின்னர் தான் அவள் தன்னை ஏமாற்றப் பயம்காட்டியது புரிய, பற்களை நறநறுத்தவன் "பொய்யா சொன்ன..?" என இடுப்பில் கை குற்றிக் கேட்க அவனது தோரணை அவளுக்கு இன்னும் சிரிப்பை வரவழைத்தது. நவீன் முறைப்பதில் வாயை மூடிக்கொண்டு சிரித்தாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவளும் ஆம் என மண்டையை ஆட்ட நவீனோ நங்கென்று அவளது தலையில் கொட்டி வைத்தான். அவளுக்கு அது உண்மையாகவே வலிக்கவும் சிரிப்பை கைவிட்டு விட்டு "வலிக்குதுடா.." என முகத்தை சுளித்தவளைப் பார்த்து நவீனிற்கு பாவமாகிப் போய் விட்டது. ஆனால் கடுப்பானது என்னவோ ஆத்விக் தான்.

மெதுவாக நவீனின் காதினோரம் குனிந்தவன் "தனிய மாட்டுவல்ல அப்போ இருக்கு உனக்கு.." என்றவனின் பற்கள் கடிபடுவது அவனுக்குத் தெளிவாக கேட்டது. அதில் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியில் இளித்து வைத்தவனை கொலைவெறியுடன் பார்த்து நின்றான் ஆத்விக்.

பின் சத்யாவின் பக்கம் திரும்பி அவளது தலையை பாசமாக தடவி விட அவளுக்கு அப்படியே உருகிற்று..

கலக்கம் மறந்து சிரித்தவளாக "ஃப்ரெண்ட்ஸ்..." என கை குலுக்க அவளது நட்பை அவன் விரும்பியே ஏற்றுக் கொண்டான்.

முதல் சந்திப்பிலே அவர்களுக்குள் அப்படியொரு நெருக்கம் உருவானது.

அரப்படித்த நவீனோ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் "சரி ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம் உனக்கு கட்டாயம் ட்ரீட் இருக்கு. பட் செலவு உன்னது..." என்றதும் சத்யாவும் வெகுளியாய் சிரித்து விட்டு "ஓகே டன். வாங்க கெளம்பலாம்..." என கெண்டீன் தேடி நடையைக் கட்டினாள்.

நவீன் ஆத்விக்கின் புறம் திரும்பி "எப்படி..?" என காலரைத் தூக்கி விட, அவனை கேவலமாக பார்த்து வைத்தவன் "த்தூ" என்கவும் சொரனையே இல்லாமல் நவீனும் "எடத்த டேட்டி பண்ணாதடா மச்சி..." என்றான்.

தலையில் அடித்துக் கொண்ட ஆத்விக் முன்னே செல்லும் தன் மனதை கொள்ளை கொண்டவளின் பின்னே ஆசையாகவே நடந்து போனான்.

இப்படியே மூவரும் கேண்டினில் சாப்பாட்டை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, ஆத்விக்கை கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே சத்யாவும் "என்னடா உன் ஃப்ரெண்ட் பேசமாட்டாரோ..? சைலன்டா இருக்காரு..." என நவீனிடம் கேட்டாள்.

தன் பெயர் அடிபட்டதில் ஆத்விக்கிற்கு புறைக்கேற அவன் இருமவும், சத்யாவே தண்ணீரை எடுத்து நீட்டி இருந்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே நீரை அவன் பருகிக் கொண்டிருக்க சத்யாவும் அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் நவீனின் புறம் தன் பார்வையைத் திருப்பிக் கொள்ள, உதட்டுக்குள் சிரித்து வைத்தான் ஆத்விக்.

அதற்குள் நவீன் தன் சாட்டர் பாக்ஸை திறந்து விட்டான்.
"அது ஒன்னுமில்லை பேபி. அவன் உன்னைய லவ்வ்வ்..." என்று சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து போய் அவனது வாயை பொத்தி விட்டான் ஆத்விக்.

சத்யாவிற்கு அவன் சொல்ல வந்தது புரிபட, மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. அவளது கண்களில் சிரிப்பின் சாயல். இருந்தும் "வாங்க க்ளாஸ் போவோம்.." என அவர்கள் சண்டை பிடிப்பதற்குள் அழைத்துச் சென்றிருந்தாள்.

அவளிற்கும் ஆத்விக்கைப் பார்த்த உடனே பிடித்து விட்டது. அவனது நிமிர்ந்த தோற்றம், கலையான முகம், கம்பீரமான சாயல் என்பன அவனை அவள் பக்கம் ஈர்த்திருந்தது. இருந்தும் தானாக பேச பெண் மனம் இடம் கொடுக்கவில்லை.

அவள் முன்னே நடக்க பின்னே வந்தவர்கள் அதோ தொடங்கி விட்டனர் தங்களது சண்டையை..

"டேய் காட்டெருமை.. உன்னைய இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்..இடியட்..." என்ற ஆத்விக், நவீனின் முதுகிலே நான்கு போட,
அவனும் நெளிந்து கொண்டே "டேய் தடியா..! முடியலடா. விட்டு விட்டு அடிடா. முதுகெலும்பு உடைஞ்சிற போகுது.." என்றவன் எட்டாத முதுகை எட்டி எட்டி தடவிக் கொண்டிருக்க, ஆத்விக் விடுவதாக இல்லை.

"சாவுடா இடியட். அறிவில்லை உனக்கு. இன்னைக்குத் தான் பார்த்தோம். அதுக்குள்ள நான்சென்ஸ் மாதிரி லவ் கிவ்வுனா என்னடா நெனப்பா என்ன பத்தி..?" என்றவன் எட்டி உதைய
"டேய் நாயே.. படக்கூடாத இடத்துல பட்டுட போகுதுடா.. வேற என்ன நெனைப்பா? நீ ஒரு காய்ந்து போன கபோதினு நினைப்பா..." என்றவன் இடியொன்றை அடியாக வாங்கிக் கொண்டான்.

"இந்த இந்த வாய்க் கொழுப்புக்காக தான் அவன் அவன்ட கையால அடி வாங்கி சாவுற நீ..." என்ற ஆத்விக் இடிப்பில் எட்டி உதைய, அப்படியே போய் கீழே விழுந்த நவீன் "அம்மா வலிக்குதுடா சனியனே.." என இடுப்பை பிடித்துக் கொண்டு கத்த, அதற்கும் இரங்கினானில்லை ஆத்விக்.

அவனோ அவள் முன் இவன் தன்னை அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தான்.

"வலிக்கட்டும். அதுக்குத் தானே அடிக்கிறேன்.. சாவுடா இடியட்.." என விழுந்து கிடந்தவனின் மண்டையில் நங்கென கொட்டியவன் "இப்படித் தானே என் பேபிக்கு அப்போ தலைல கொட்டி வச்ச..." என்றானே பார்க்க, கண்களில் பூச்சி பறக்க அவனை பரிதாபமாக பார்த்து வைத்தான் நவீன்.

"பாக்குறதப் பாரு பஞ்சப் பரதேசி மாதிரி..." என்று விடாமல் மீண்டும் அடிக்க முன்னேறியவனை நவீனின் கதறல் தடுத்திருந்தது.

"அம்மா தாயிங்களா யாராச்சும் இந்த காண்டாமிருகத்திடமிருந்து என்னைக் காப்பாத்துங்க. புண்ணியமாப் போகும்..." என்றவன் கையை நீட்டிக் கொண்டு கெஞ்ச, ஆத்விக்கிற்குமே இவனது நடிப்பில் சிரிப்பு வந்து விட்டது. இருந்தும் வெளியே விறைப்பாக நின்று கொண்டான்.

அவனது முகத்தைப் பார்த்த நவீன் "கல் நெஞ்சக்காரன்.." என முணுமுணுத்தவாறு அமர்ந்திருக்க, சத்தம் பெரிதாக கேட்கவும் திரும்பிய சத்யா அவனிருந்த நிலை கண்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

நல்லவேளையாக அங்கே வேறு மாணவர்கள் யாரும் இருக்கவில்லை. இவர்களின் பேச்சு முன்னே சென்று கொண்டிருந்த சத்ய ஸ்ரீக்கு நன்றாகவே கேட்டது. ஒரு வித சுவாரஸ்யத்துடன் அதனைக் கேட்டுக் கொண்டே நடந்து போனவளது உதடுகளில் ஓர் நிறைவான நிரந்தரப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அதில் அவனது வாயாலே தன் காதலை கேட்டவள் இன்னும் வானுக்கும் பூமிக்கும் மனதில் குதித்தாள் என்றால் மிகா..

சொல்லி அனுபவிக்கும் காதலை விட..
சொல்லாமல் அனுபவிக்கும் காதல் சுகமானது..


"எல்லாம் உன்னால தான் பேபி. இரு வரேன்.." என்றவன் கையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டே அவளைத் துரத்தினான்.

இவர்களின் கூத்தைப் பார்த்து இப்போது சிரிப்பது ஆத்விக்கின் முறையானது.


தொடரும்...


தீரா.
 
  • Love
Reactions: Durka Janani