• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
எதுவும் நடவாதது போல வகுப்பிற்குள் நுழைந்தான் வருண்.

"ஹேய் சத்யா என்ன தேடிட்டு இருக்கிற..? எனிதிங் ராங்..? ஏன் கண் கலங்கி இருக்கு..?" என்றான் மனதில் வஞ்சனையுடன்.

கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள் "ஐ லாஸ் மை டயரி..." என்கவும்
"ஹும் ஒரு டயரிக்காகவா அழுற..?" எனக் கேட்டான் அவனும்.

"அது வெறும் டயரி இல்லை. ஆத்விக் எனக்குத் தந்த ஃபெஸ்ட் கிஃப்ட்..." என்றாள் கரகரத்த குரலுடன். அதில் வருணின் முகம் இறுகி பின் "ஏய் அதுல ஆத்விக் ட பிக்சர் இருக்குமா..?" என்றான் அதே நடிப்புடன்.

சத்யாவும் அவனின் சூழ்ச்சி அறியாது கண்களை துடைத்து விட்டு "ஆ..ஆமா.. நீ பார்த்தியா அதை..?" என்றாள் முகம் விகசிக்க.

அவனும் நல்லவன் போல "யா.. நான் ப்ரின்சிபல் ரூம் போய்கிட்டு இருக்கும் போது கீழே கிடந்துச்சு. எடுத்து பார்த்தேன் உள்ள ஆத்விக்ட ஃபொடோ இருக்கவும் அவன்டனு நெனச்சி அவனைத் தான் தேடிட்டு இருந்தேன் கொடுக்கிறதுக்கு.." என்றதும் அவனை அவசரமாக தடுத்தவள் "நல்லவேளை நீ அதை அவன்ட கொடுக்கல.. நான் அதை தொலைச்சிட்டேனு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நெனச்சிருப்பான்." என்றவளுக்கு இறுதியில் குரல் கம்மி ஒலித்தது.

வருணும் வெற்றிப் புன்னகையுடன் "ஓகே. நீ கெண்டின் கிட்ட வெயிட் பண்ணு நான் கொண்டு வந்து தரேன்... " என்றவன், சரியென தலையாட்டி விட்டுச் சென்றவளை கொடூரமாக பார்த்து வைத்தான்.

இவளும் கொஞ்ச நேரத்தில் கேண்டின் செல்வதைப் பார்த்த ஆத்விக்கிற்கு முதல் தடவை நம்பிக்கை ஆட்டம் கண்டது. இருந்தும் உண்மை அறியாமல் சந்தேகம் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவனுக்கு மனதினுள்ளோ "போவோமா..வேண்டாமா.." என்றிருந்தது. கடைசியில் ஓர் முடிவுடன் அவளைப் பின் தொடர்ந்தான்.

இவனும் செல்வதைப் பார்த்த வருண், டயரியுடன் கேண்டின் பின் வாசலினால் உள்ளே நுழைந்திருந்தான்.

ஆத்விக்கிற்கு இப்போதும் அவளில் நம்பிக்கையிருக்கிறது. இருந்தும் அப்படி என்னதான் நடக்கிறது என்பதையறிய நாடியவனுக்கோ காத்திருந்தது அதிர்ச்சி...

..

உள்ளே வருணிற்காக காத்திருந்தவளுக்கு அவனு கையில் வைத்திருந்த டயரியைப் பார்த்த பின்னர் தான் மூச்சே சீராக வந்தது.

அவன் டயரியைத் தந்தவுடன் தன்னுடன் சேர்த்து அதனை அணைத்துக் கொண்டவள் "தெங்ஸ்.. தெங்க் யூ சோ மச் வருண்.." என்றது மட்டுமல்லாமல் டயரியில் இருந்த ஆத்விக்கின் புகைப்படத்திற்கு முத்தமொன்றை வைத்தவள் "ஐ லவ் யூ..." என்றாள் மனத் துள்ளலுடன்.

சரியாக அந்நேரம் பார்த்து உள்ளே எட்டுக்களை எடுத்து வைத்த ஆத்விக்கின் பாதம் அப்படியே அந்தரத்தில் நின்றது தன் காதுகளைச் சீண்டிச் சென்ற தன்னவளின் குரலில்.

தன் காதில் விழுந்த பேச்சில் ஸ்தம்பித்து நின்றான் ஆத்விக், நம்ப முடியாத அதிர்ச்சியில்.

இவள் இவ்வாறு தன்னையறியாமல் செய்த செயலில் வருணிற்கு கோபத்தில் நரம்புகள் புடைத்தாலும், மறுபுறம் தான் நினைத்ததை விட வேலை சுலபமாக முடிந்ததில் திருப்தியடைந்தான். ஆம் ஆத்விக்கின் அதிர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் வருண். அவனது முகமே அவனது மனதை வெளிப்படுத்த வன்மப் புன்னகையுடன் இங்கே தன்னவனை காதலாய் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவிடம் "தங்ஸ் ஃபோர் எக்செப்டிங் மை லவ்..." என்றவன் அவளைக் கூட பார்க்காமல் விறுவிறுவென சென்று விட்டான். இல்லை இல்லை மறைவாக நின்று கொண்டான்.

இவனது பேச்சில் அதிர்ந்து குழம்பி நிற்பது சத்யாவின் முறையாகியது. பின் தன்னவன் தந்த பரிசு மீண்டதில் திருப்தியான புன்னகையுடன் வெளியேறி இருந்தாள்.

அவளை கண்ணில் அனல் கக்க எதிர் கொண்டதோ ஆத்விக் என்பவன். இவளின் சிரிப்பிற்கு தான் தான் காரணம் என்பதையறியாத ஆத்விக்கும் அவளை தவறாக புரிந்து கொண்டது தான் அவர்களின் பிரிவிற்கு காரணமாகியது.

சத்யாவும் நிமிர்ந்து பார்க்க, எதிர்பாராத நேரத்தில் கிடைத்த தன்னவனின் தரிசனத்தில் வெட்கப்பட்டு தலை குனிய, சந்தேகம் கொண்டவனின் பார்வையில் அதுவும் தவறாகிப் போனது தான் விந்தை.

இருந்தும் நக்கல் புன்னகையுடன் அவளருகில் வந்தவன் "போன வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா..?" என்றான் ஒரு மாதிரி குரலில்.

அவளிற்கு இருந்த மனநிலையில் அவனது குரல் மாற்றம் கூட முதலில் கருத்திற் படவில்லை. ம்ம் என குனிந்திருந்தவாக்கிலே தலையை ஆட்டி வைத்தாள். ஆத்விக்கிற்கோ பற்றிக் கொண்டு வந்தது. பற்களை நறநறுத்தவன் தொடர்ந்து பேச்சை வளர்க்கலானான்.

"அப்பறம் உங்க லவ்வர் என்ன சொன்னான்..ஆங்..?" என்றதும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் "வட் டிட் யூ சே...? என்றிருந்தாள் குழம்பியவளாய்.

"ஏன் அவனுக்கு கொடுத்த கிஸ்ல உலகம் மறந்து போச்சா என்ன..?" என்றான் உதட்டை வளைத்து.

அவளுக்கோ சட்டென கண்கள் கலங்கி விட"என்ன பேசுற ஆத்விக்..? எனக்கு ஒன்னும் புரியல" என்றாள்.

"புரியாது தான். உன்ன மாதிரி ஏமாத்துறவங்களுக்கு நாங்க பேசுறதெல்லாம் புரியாதுடி..." என்றான் முதல் தடவை அவளைப் பார்த்து.

அவளும் விடாமல் "நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்க ஆத்விக்..." என்றவாறு ஓரெட்டு முன்னே வைத்து சென்றவளை விட்டு அவன் இரண்டடி தூரப் போனான்.

அது அவளுக்கு வலித்ததென்றால் அடுத்து அவனது பேச்சில் உயிருடன் மரித்தாள். "ஏய் ச்சீ தள்ளிப் போ. இனி ஒரெட்டு முன்னால வச்ச என்னை நீ மனுஷனா பார்க்க மாட்ட.." என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் உதாசீனம் காதல் கொண்டவளின் மனதை தீயாய் சுட்டது.

அவளது கண்ணீருடனான விழிகளைப் பார்த்துக் கொண்டே "உன்னைய எவ்ளோ லவ் பண்ணினேன் தெரியுமாடி. எங்க அம்மாக்கு அடுத்தபடியா இங்க..இங்க வச்சிருந்தேன்டி.." என்றான் தன் இதயத்தை சுட்டிக் காட்டி. "எல்லாத்தையும் சிதைச்சிட்டடி...கடைசில என் காதலையும் தொலைக்க வச்சிட்ட.." என்றான். எவ்வளவு முயன்றும் கடைசியில் அவனுக்குமே கண்கள் கலங்கி விட்டன. வெகுவாக தன் உணர்வுகளை மறைக்கப் போராடினான் ஆத்விக்.

அவனை அப்படிப் பார்க்க சகிக்காதவளாய் "அதில்ல ஆத்விக். நீ ஏதோ தப்.." என்பதற்குள் இடைப்புகுந்த ஆத்விக் "ஏய் வாய மூடு. அதெப்படிடி ஒருத்தன லவ் பண்ணுற மாதிரியே பாத்துட்டு அவனை அழைய விட்டு, மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டு இன்னொருத்தன் கிடைச்ச உடனே அப்படியே போய்றீங்க..? ஒருத்தன்ட உணர்வ தூண்டி விட்டு வேடிக்கை பார்க்குறதுல அவ்ளோ இஷ்டமாடி..." என இன்னும் என்னவெல்லாம் பேசினானோ தெரியவில்லை அதனை கேட்க முடியாமல் தன் காதுகளை இறுக மூடியவளுக்கு கண்கள் அதன் பாட்டில் கண்ணீரை சொரிந்தன.

"ப்ளீஸ் ஆத்விக் இப்படிலாம் பேசாத.. வலிக்குது..." என்றாள்.

"இப்படி நடிச்சு தான்டி கவுத்த என்னையும். அப்படி என் கிட்ட இல்லாதது அந்த வருண் கிட்ட என்னடி இருக்கு..?" என்றான் நாக்கிலே நரம்பில்லாமல்.

"போதும் நிறுத்து. இதுக்கு மேல என்னைய சாவடிக்காத. நான் அவன அண்ணனா தான் நெனச்சுப் பழகினேன்.." என்றாள் முகம் சிவக்க அழுகையுடன்.

அப்படியே அவனைப் பார்த்தவள் "உன்னைய தான் நான் லவ் பண்ணுறேன். உன்க்கிட்ட எப்படியெல்லாம் என் லவ்வ சொல்லனும்னு நெனச்சு வச்சிருந்தேன். ச்சே இப்படி ஒரு நிலைமைல சொல்ல வச்சிட்டியே..." என்றவள் வாயை பொத்திக் கொண்டு அழுதாள்.

அவனும் தன் காதல் தோற்றதில் அரக்கனாக மாறி இருந்தான் போலும். வார்த்தைகளாலே அவளுக்கு வலிகளை கொடுத்திருந்தான்.
"வெல்.. சூப்பரா நடிக்கிற. எந்த ஊர்லடி அண்ணன லவ் பண்ணுறேனு ப்ரொபோஸ் பண்ணுவாங்க..? என்னை நீ லவ் பண்ணல. லவ் பண்ணுற மாதிரி நடிச்சிருக்க. செம்மயா ப்ளே பண்ணி இருக்க. யாரு உன் புதுக் காதலன் சொல்லித் தந்தானோ...?" என்றவனின் பார்வையில் நொருங்கினாள் பாவை.

"நானும் உன்னைய லவ் பண்ணுனன்டி. என் உயிரா உன்னை நெனச்சிட்டு இருந்தேன். என் லவ்வ சொல்ல ஒவ்வொரு தடவையும் வந்து பயத்தில அப்படியே போய்ருவேன். பிகாஸ் இருக்கிற உன் ஃப்ரெண்ட்ஸிப் கட் ஆகிறுமோனு பயம்... ஆனால் நீ,
ச்சீ எப்படிடி மாட்டின அப்பறமும் அழகா நடிக்கிற? உன்னைய லவ் பண்ணுன பாவத்துக்கு இப்போ அசிங்கப்படுறேன். பட் சத்தியமா சொல்றேன். உன்னைய நான் நெனச்ச மனசால இனி எவளையும் நினைக்க மாட்டேன்.." என்றவன் கன்னம் தொட்ட தன் கண்ணீரை துடைத்து விட்டு "ஆனால் நீ இன்னும் என்னைய லவ் பண்ணுறேனு பொய் சொல்லுற. ஏன் நான் ஏதாச்சும் உங்க லவ்க்கு எதிரா செய்திருவேனா..? நான் எதுவும் செய்ய மாட்டேன். நீ எவன் கூடயோ எப்படியோ இருந்துட்டுப் போ. ஐ டோன்ட் கெயார். இனி என் லய்ஃப் உன் முகத்த நான் பார்த்திற கூடாது..." என்றவனுக்கு பார்வையாலே எரிக்கும் சக்கி இருந்தால் இந்நேரம் அவளை எரித்து சாம்பலாக்கி இருப்பான்.

அவளுக்கு அழுகை நின்றபாடில்லை. நெஞ்சம் காந்தியது.. தான் மனதார நேசித்தவனின் புரிந்துணர்வில்லாத சந்தேகப் பார்வையில் உயிருடன் செத்துக் கொண்டிருந்தாள்.

போனவன் அதே வேகத்தில் திரும்பி வந்து "ஹலோ..! எனக்குத் தான் உண்மையா இருக்கல நீ. நவீனுக்காச்சும் உண்மையா இருப்பல்ல..?" என்றவனை அதிர்ந்து பார்த்திருந்தாள் சத்யா.

"அதுக்கில்ல. அவன் ஒரு குழந்தை மாதிரி. எல்லாரையும் சட்டுன்னு நம்பிருவான். உன் கூட அவன் தூய நட்போட பழகுறான். அதையும் உன் புத்தியால கேவலப்படுத்திராத.." என்றவன் சென்று விட்டான்.

இனியும் தாங்க மாட்டாது ஓர் ஒதுக்குப் புறமாக சென்று தன்னாலான மட்டும் கதறினாள் சத்யா. அவளின் மனமோ ஊமையாக கதறியது.
"என்னைய பார்த்தா இப்படி பேசிட்டு போற. சத்தியமா தாங்க முடியல ஆத்விக். உயிரோட என்னைய கொன்னுட்ட. என்னைய சந்தேகப்பட்டுடல்ல. இனி நான் என்ன செய்வேன். நான் சொல்ல வரதக் கூட நீ காது கொடுத்து கேட்கலல. நான் நம்பிக்கைய தரலல உனக்கு?? என்றழுதாள் காதல் கொண்டவனின் சந்தேகப் பார்வையை தாங்க மாட்டாது.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வருண் இளித்துக் கொண்டே அவ்விடம் விட்டகழ்ந்தான்.

நடந்த எதுவும் தெரியாத நவீன் ஆத்விக்கை தேடி அலைந்து விட்டு திரும்ப, தூரத்தில் ஆத்விக் வந்து கொண்டிருந்தான்.

அவனோ தன் காதல் தொலைந்து போனதை எண்ணி கலங்கி வந்து கொண்டிருக்க, அவனது மனக்கண்ணிலோ அழுது வீங்கிய முகத்துடன் நின்றிருந்த அவனவள் விம்பமே..

ஆத்விக் கொஞ்சம் நிதானித்து அவள் பேசியவைகளை கேட்டிருக்கலாம். அவளது திக்கல் இல்லாத தெளிவான பேச்சே அவனுக்கு அனைத்தையும் கூறி இருக்கும். அங்கே அவசரக்காரனுக்கு மூளை மரத்திருந்தது என்பது நிதர்சனம்.

அவனை எதிர் கொண்ட நவீன் "டேய் மச்சி எங்கடா போன. உன்ன எங்கயெல்லாம் தேடினேன்.." என்றவாறு தலையில் அடித்துக் கொண்டவனே அதனைக் கண்டிருந்தான்.

"டேய் ஆத்விக்.. என்னடா கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. அழுதியா?" என்றவன் அவனது தோளைத் தொட விரக்தியாய் சிரித்த ஆத்விக் அவனை அணைத்துக் கொண்டு அனைத்தையும் கடகடவென சொல்லி முடித்தான்.

நவீனிற்கும் அதிர்ச்சி தான். அவன் தன் செவியால் கேட்டதையல்லா கூறுகிறான். உண்மை தானே..!? நண்பனின் கசங்கிய முகம் அனைத்தையும் அவனுக்கு உண்மையென அடித்துக் கூற உடல் இறுகியது நவீனிற்கு. சத்யாவிடம் நாலு நறுக்கென கேட்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. கேட்டிருக்கலாமோ அவன்..!?
அப்போதே உண்மை தெரிந்திருக்குமோ..!?

இருந்த கலவரத்தில் ஆத்விக் கூறிய வருண் என்ற பெயர் நவீனின் செவிகளைத் தீண்டாதது விதியானது இங்கே..
பின் நண்பனே முதலில் கருத்திற்பட அவனை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.

..

காலேஜிலிருந்து வீடு வந்தவளுக்கு வாழ்வே இருண்ட மாதிரி இருந்தது. அந்த நடு ஜாமத்திலும் ஃபோனையே வெறித்துக் கொண்டிருந்தாள் சத்ய ஸ்ரீ. ஏனென்றால் அன்றிரவு தான் ஆத்விக் தன்னிடம் பேச வேண்டும் என சொல்லி விட்டுச் சென்றிருந்தான். இதோ நிரந்தரமாக அவளை விட்டு விலகியிருந்தான் வடுக்களை கொடுத்தவனாக...

இவ்வாறே இவர்களின் கல்லூரி வாழ்க்கையும் முடிந்திருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தாங்க முடியாமல் சத்ய ஸ்ரீ எத்தனையோ தடவை ஆத்விக்கை சந்திக்க முயன்று விட்டாள். ஆனால் அவன் தான், அவளைப் பார்ப்பதே தீது என விரட்டி விட்டிருந்தான். சரி நவீனிடம் சரி அனைத்தையும் கூறி புரிய வைக்கலாம் என்றிருக்க நண்பன் பார்த்த அந்நியப் பார்வையில் சுக்கு நூறாக உடைந்து தான் போனாள் அவளும். அவனது வெறுத்த பார்வையில் உதடு துடிக்க வேதனையை தன்னுள் அடக்கிக் கொண்டவள் தனிமையிலே தன் இறுதி கல்லூரியாண்டை கழித்திருக்க, அன்றிலிருந்து அவர்களது முகத்தைக் கூட அவள் பார்த்திருக்கவில்லை. அவர்களும் அப்படியே...

இதோ இன்று உண்மையை கூறி, அன்றிருந்ததை விட பல மடங்கு வேதனையுடன் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் காரிகை. வார்த்தைகள் கூட இனி தொண்டையை விட்டு வர மாட்டேன் என்றிருந்தது.


தொடரும்...


தீரா.
 

Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
132
நல்லா இருந்தது. பாவம் சத்யா..
 
Top