• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடல் - 8

MK6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
12
16
3
Tamil nadu
1000018040.jpg

கடல் தாண்டும் பறவை!

கடல் - 8

"தக்கன பிழைத்து வாழ்தல் -சவால்கள் உன்னை செதுக்குகையில் தேவையற்ற துகள்களை ஒதுக்கித் தள்ள மிஞ்சி இருப்பது ஆகச்சிறந்த நீ!"

உணவு மேஜையில் இருந்த முள் கரண்டியினை கையில் எடுத்து, "என்னை சீண்டிக் கொண்டே இருக்காதே தேவ்! என்னை என் வழியில் பயணப்பட விடு. நமக்குள் நடந்ததை நீயும் மறந்து விடு. நானும் மறந்து விடுகிறேன்", என்று சக்தி அருகில் இருப்பதால் மெதுவான அடிக்குரலில் தேவ்விடம் இணக்கமாய் பேசினாள் மயூரி.

" எதை மறக்கச் சொல்கிறாய் மிர்ச்சி? உன்னை மறக்க வேண்டுமா? உன்னை மறந்தாலும், உன் உதட்டை ஊறுகாய் போட்டதை எப்படி மறப்பேன் மிர்ச்சி? ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு ருசி. இதுவரை என் தயாரிப்புகளில் இல்லாத ருசி. நீ அவ்வளவு டேஸ்ட் மிர்ச்சி" என்று ராகமாய் இழுத்தான் தேவ்.

"என்ன?" என்று இடையில் புகுந்து கேட்டான் சக்தி.

" ஊறுகாய்... " என்று குரலில் போதை ஏற்றி, மயூரியின் உதட்டை பார்த்துக் கொண்டே கூறினான் தேவ்.

" எனக்கு ஊறுகாய் எல்லாம் பிடிக்காது. உனக்கு பிடிக்குமா மயிலு? " என்றான் சக்தி.

" பிடிக்காது" என்றாள் காட்டமாக.

" ஒரு ஊறுகாயே ஒரு ஊறுகாயை பிடிக்காது என்கிறதே! அடடே ஆச்சரியக் குறி!" என்றான் தேவ் நக்கலாக.

"சக்தி! நான் கிளம்புறேன்" என்றாள்.

" மிஸ்டர் சக்தி நான் இன்னும் தீர்ப்பை சொல்லவே இல்லையே" என்றான் தேவ்.

"சொல்லுங்க பாஸ்" என்றான் ஆர்வத்துடன்.

" உங்கள் மயிலம்மா கொடுத்த கடிகாரத்திற்கும் கைக்கும் தான் தொடர்பு. ஆனால் நீங்கள் கொடுத்த கப்பிற்கும், உதட்டிற்கும் தொடர்பு. கப்பும், லிப்பும் செம காமினேஷன்! சோ வெற்றி உங்களுக்குத்தான் சக்தி!" என்றான் தேவ்.

சக்தி ஆனந்தத்துடன் தேவ்வை கட்டியணைத்துக் கொண்டான்.


கோபம் வந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன், " உங்கள் மனைவி குழந்தைகளைக் கேட்டேன் என்று சொல்லுங்கள் தேவ் " என்றவள் அவனின் இல்லாத குடும்பத்தை அவனுக்கு நினைவூட்டி, அவனின் பதிலை எதிர்பாராமல் உணவகத்தில் இருந்து வெளியேறினாள்.

' முடிந்தவரை தேவ்வின் கண்ணில் படாமல் தப்பிப்பது நலம்' என்ற முடிவுக்கு வந்தாள்.

தான் மட்டும் அந்த முடிவுக்கு வந்தால் போதாது சம்பந்தப்பட்டவனும் அந்த முடிவுக்கு வரவேண்டும் என்பதை மறந்தே போனாள் அந்த பேதை.

அவள் நடந்து சென்ற பாதையில் பியூட்டி பார்லரைத் தாண்டி, காஸ்ட்யூம் செக்சன் இருந்தது. ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ என்று வரிசையாக பார்வையிட்டுக் கொண்டிருந்தவள், லிப்ஸ்டிக் ரகங்களைப் பார்த்ததும், தலையினை உலுக்கிக் கொண்டு நகரப் பார்த்தாள். லிப் என்றதும் கப்பென்று அவன் ஞாபகம் அப்பிக் கொள்கிறது. இந்த லிப்ஸ்டிக்கை பார்த்துக் கூட நான் பயப்பட வேண்டுமா? ஏன் பயப்பட வேண்டும் என்று நினைத்தவள், மெல்ல லாவண்டர் பிளேவர் லிப்ஸ்டிக்கை எடுத்து தன் உதட்டின் அருகே கொண்டு சென்றாள்.

" இல்ல மிர்ச்சி எனக்கு லாவண்டர் பிளேவர் பிடிக்காது. ஸ்ட்ராபெரி ட்ரை பண்ணு. ஸ்மெல்லே ஆள அசத்தி தூக்கிரும். ஸ்ட்ராபெரி ஊறுகாயோட டேஸ்ட்டே வேற லெவல் " என்றான் தேவ் பின்னிருந்து.

காதில் விழாதவள் போல், ஆணியே பிடுங்க வேண்டாம் என்பது போல் , லிப்ஸ்டிக்கை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தவளை விற்பனை பெண் தடுத்து நிறுத்தினாள்.

" மேடம் இந்த செயினை ட்ரை பண்ணி பாருங்க. உங்கள் மாடர்ன் டிரஸ்க்கு இந்த செயின் நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும்" என்றாள்.

"ஓகே " என்ற மயூரி விற்பனை பெண் பக்கம் திரும்பினாள்." மேடம் நீங்கள் கழுத்தில் போட்டிருக்கும் பழைய செயினை கழட்டி விட்டு இந்த புதிய செயினை ட்ரை பண்ணி பாருங்க. அப்போதான் இந்த செயின் உங்களுக்கு எப்படி பொருந்துகிறது என்று பார்க்க முடியும்" என்றாள்.

"நோ.." திடமாக வந்தது மயூரியின் வார்த்தைகள்.

" இந்த செயின் எனக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நான் கழட்ட மாட்டேன் " என்றாள் அழுத்தமாக.

"இட்ஸ் ஓகே மேம்" என்ற விற்பனை பெண்ணும் அதனை விட்டு விட்டாள்.


மயூரியின் பின்னால் இருந்த அந்த கள்ளன், அவள் உணரும் முன் அவள் கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி விட்டான்.


சட்டென்று கழுத்தில் உணர்ந்த குறுகுறுப்பில், அணிந்திருந்த செயின் பின்னே சென்று கொண்டிருப்பதை கண்டு, பின்புறம் திரும்பி, அங்கே தேவ்வை கண்டதும்,
"தேவ். விளையாடாதே அந்த செயினை என்னிடம் கொடுத்து விடு" என்றாள் அதிகாரமாக.

" முக்கியம் என்று நினைத்தேன். ஆனால் ரொம்ப முக்கியம் போல" என்றான் தேவ்.


செயினை அவள் கண் முன்னே நீட்டி ஆட்டம் காட்டினான் தேவ்.

தன்னுடைய அன்னையின் நினைவாய் வைத்திருந்த அந்த செயினைப் பெறுவதற்கு அவளும் முழு முயற்சி செய்தாள்.

அவனருகில் வந்தால் அவள் உதட்டினை நோக்கி முத்தமிடுவது போல் அதிவேகமாய் குனிந்தவனைக் கண்டு எரிச்சலுற்று பின்னோக்கி நகர்ந்தாள்.


ஒரு கட்டத்தில் செயினை தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்ட தேவ், எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான்.

ஓட்டமும் நடையுமாக தேவ்வை பின்தொடர்ந்தாள் மயூரி.

சக்தி சொன்ன அறிவுரைகள் எல்லாம் காதிற்குள் ரீங்காரமிட, தன் உஷ்ணத்தை, கோபத்தை, எரிச்சலை, ஆற்றாமையைக் குறைத்துக் கொண்டு, " ப்ளீஸ் தேவ்... " என்றாள் வேண்டா வெறுப்பாக.

தன் கம்பீர நடையுடன், கப்பலின் வெளிப்புறப் பகுதிக்கு வந்தான். அவனைப் பின் தொடர்ந்தே வந்தவள், அவன் முதுகுப்புறம் கடலினை நோக்கியிருக்க, கப்பலின் பக்கவாட்டுக் கம்பியில் சாய்ந்து நிற்பதைக் கண்டு நெஞ்சம் திடுக்கிட்டாள்.


அவன் அருகில் செல்லாமலேயே, "உன்னுடன் நான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை தேவ். எனக்கு அந்த செயினை கொடுத்து விடு" என்றாள் குரலில் நடுக்கம் கலந்து.

கடலினைப் பார்த்த அவளது பயம் குரலினில் அப்பட்டமாய் தெரிய, அதிதீரதேவனுக்கு கொண்டாட்டமாய் போனது. ஒருவரின் பலவீனத்தில் பலம் கண்டு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தான்.


தனது பேன்ட் பாக்கெட்டிற்குள் இருந்த அவளது செயினை எடுத்து வலது கை சுட்டு விரலில் மாட்டிக் கொண்டு சுழற்றினான். கடல் காற்றை கிழித்துக்கொண்டு அந்த செயினும் விர்... விர்... என்ற சத்தத்துடன் சுழன்றது அதிவேகமாய்.

" நிச்சயம் உனக்கு இந்த செயின் வேண்டுமா மிர்ச்சி? " என்றான்.

தன் அன்னையே தன் முன் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் போல் எண்ணிப் பார்த்தவள், அன்று தன்னால் காப்பாற்ற முடியாமல் போன, தன் அன்னையைக் காக்கும் எண்ணத்துடன்,
"ஆ... மா.... ம்... நிச்சயமாய்!" என்றாள் திடமாக்கிக் கொண்ட குரலில்.


வலது கையில் இருந்த செயினை கடலினை நோக்கி நீட்டி, "ஆனால் இதை நான் இப்பொழுது இந்த கடலினில் போடப் போகிறேன். மேலிருந்து கீழே விழுவதைப் பார்க்க மிகவும் ஆனந்தமாய் இருக்கும் " என்றான் அவளை கூர்மையாய் பார்த்துக் கொண்டே.

'தன் அன்னை தன்னை விட்டு, கப்பலில் இருந்து குதித்த போது, கம்பிகளில் மாட்டி அறுபட்ட அந்த செயின், தன்னை தனியே விட்டுவிட்டு, மீண்டும் தன் அன்னையைத் தேடி கடலுக்குள் செல்லப் போகிறதா?' நினைவுகள் சூறாவளியாய் அவளுக்குள் சுழற்றி அடிக்க, ரத்தம் உறைய ஆரம்பித்து, கண்கள் சொருகும் நிலைக்குச் சென்றது.

தன் எதிரில் நின்றவளின் மாற்றத்தை புருவங்கள் இடுங்கிப் பார்த்தவன், அடுத்த நொடி, " அப்போ உனக்கு இது வேண்டாமா மிர்ச்சி? " அவள் முன்னே தன் கையில் இருந்த செயினை இடவலமாக ஆட்டினான்.


ஆசையும் நிராசையும் கலந்து அந்த செயினைப் பார்த்தவள், தயக்கத்துடன் தன் கையினை நீட்டி அந்த செயினைப் கைப்பற்ற நினைத்தாள்.

"ஹான்... சுலபமாய் கிடைத்திடும் எந்த பொருளுக்கும் மதிப்பில்லை. என் முத்தத்தைப் போல!" என்று அவளைப் பார்த்துக் கொண்டு சோகமாகச் சொன்னான்.


தன்னில் உள்ள துணிவை எல்லாம் ஒன்று திரட்டி அவனை தீர்க்கமாய் பார்த்தாள்.

" உனக்கு என்ன வேண்டும் தேவ்? " நீ கேட்பது உனக்கு கிடைக்கும் என்பதைப் போல் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் அழுத்தம் கொடுத்து கூறினாள்.

"இது டீல்! அன்றைக்கு ஏதோ சொன்னியே, ஹான்... உன் நம்பிக்கையை பெறுவது சவாலான விஷயம் என்று. உன் நம்பிக்கையை வென்றால் தான், உன் பெண்மையை வெல்ல முடியும். என் ஆண்மைக்கு சவால் விட்ட உன் பெண்மை என்னிடம் மண்டியிட வேண்டும். டீல் அவ்வளவுதான் வெரி சிம்பிள்" என்றான் இலகுவாக.

திக்குத் தெரியாத காட்டில், பற்றி எரியும் நெருப்பிடையில் தாகத்திற்காக நீர் தேடி நின்றவளின் முன், உன் பெண்மையை மண்டியிடச் செய்தால் தான் உன் உயிரின் தாகம் தீர்ப்பேன் என்றவனுக்கு பதிலளிக்காமல் உடல் இறுகி நின்றாள்.

" அப்பொழுது இதை நான் தூக்கி வீசி எறிந்து விடலாமா? " என்று கையில் உள்ள அவளது பொருளின் மதிப்பையும், கடல் பற்றிய அவளின் பயத்தையும் அறிந்து கொண்டவன் அவளின் உணர்வுகளோடு விளையாட ஆரம்பித்தான்.

'அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீதான்!' என்றவளின் மனக்குரல் அவளுக்கு துணிச்சல் தர, தலையினை நிமிர்த்தி தேவ்வின் கண்களை தயங்காமல் எதிர்கொண்டாள்.

"மிர்ச்சி, டார்வின்னின் தக்கன பிழைக்கும் என்ற தத்துவத்தில் வலிமை என்பது உடல் சார்ந்ததோ அல்லது மூளை சார்ந்ததோ இல்லை. எது மாறும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த உயிரினமே இந்த உலகில் வாழத் தகுந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது. உன் மாற்றத்தை இங்கிருந்து துவங்கு" என்றவனின் விரல் அவனின் உதட்டை தடவி அவளுக்கு சமிக்கை செய்தது.

அவளின் பாதங்களில் வியர்வைத் துளிகள் பிசுபிசுக்க, அவனை நோக்கி மெல்ல நடந்தாள்.

அவன் அருகில் வந்ததும் அவன் கண்களையும், அவன் கைகளில் இருந்த அந்த செயினையும், அவனுக்குப் பின்னால் இருந்த அந்த நீலக்கடலையும் மாறி மாறி பார்த்தாள்.


காதின் ஓரம் வடிந்த வியர்வைத் துளிகளை தன் இரு கரம் கொண்டு பின்னே துடைத்து விட்டு, கால் பெருவிரல்களை நிலத்தில் ஊன்றி, தன்னை உயர்த்தி அவன் முகம் நோக்கி நிமிர்ந்தாள்.

கிரீடம் மேல் பதித்த பொடி வைர கற்கள் போல், அவளின் உதட்டின் மேல் பள்ளத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகள், தேவ்வின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது.

தன் முன்னே ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக நிற்க வைத்து இருக்கிறோம் என்பதையும், அவளின் உணர்வுகளோடு தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும், அவளின் மனதோடு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களையும் கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல், அவள் முத்தமிடுவதற்கு ஏற்றார் போல் தன் உதடுகளைக் குவித்துக் கொடுத்தான்.

"தேவ்..."

" என் மனைவி, குழந்தைகளை கேட்டேன் என்று சொன்னாயே! இல்லாதவர்களை நான் எங்கு போய் தேடுவது. மனைவிக்கு வாய்ப்பில்லை. நீ சரி என்று சொன்னால் குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்து விடலாம்.

சீக்கிரம் மிர்ச்சி! நம்மைச் சுற்றி கடல் தண்ணீர் இருந்தாலும் தாகம் தீர்க்காது, எத்தனை, எத்தனையோ பெண்களை நான் கடந்து வந்திருந்தாலும், உன்னை போல் என் கண்களின் ஆழத்தில் இறங்கியவர் யாரும் கிடையாது.


நீ என்னுடைய ஸ்பெஷல் 'மிர்ச்சி கா ஆச்சார்' " என்றவன் தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான் சடுதியில்.

"தேவ்... இப்படி வேண்டாம் தேவ். உன்னை உனக்காகவே புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். நான் இப்படி செய்தால் உன்னை முற்றிலும் வெறுத்து விடுவேன் தேவ்" என்றவளின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.

" இரிடேட் பண்ணாத மிர்ச்சி. நீ தப்பும் தவறுமாக ஆரம்பித்தால் கூட போதும். எல்லாவற்றையும் நான் சரி செய்து விடுவேன்"

கண்களின் ஓரத்தில் நீர் துளிர்க்க, அவன் உதடருகே சென்றவள், "என்னை புரிந்து கொள்ள ஒரே ஒரு தடவை முயற்சி செய் தேவ்" என்றாள்.

" பேச்சை திசை திருப்பாதே! நான் உன்னை புரிந்து கொண்ட அளவு போதும். உன்னுடைய தேவை என்னிடம். என்னுடைய தேவை உன்னிடம். எனக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. சீக்கிரம் மிர்ச்சி" என்று அவசரப்படுத்தினான்.

"ஒரு முறை, ஒரே ஒரு முறை என் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய் தேவ்" என்றாள் மன்றாடும் குரலில்.

"ச்சை..." என்று ஆத்திரப்பட்டவன் அவள் தோள்களைப் பிடித்து தள்ளினான் ஆத்திரத்துடன்.

தடுமாற்றத்துடன் தள்ளாடியவள் கப்பலின் பக்கவாட்டுக் கம்பிகளில் மோதி, நெற்றியில் அடிபட்டு, குருதி வடிய, தோள்களால் கம்பியை உராய்ந்து கொண்டே தரையில் மடங்கி அமர்ந்தாள்.

நீர் பெருகிய விழிகளுடன் கடலினைப் பார்த்தவளுக்கு, நெஞ்சம் அடைத்துக் கொண்டு வந்தது.

"அம்மா.... மா..." என்று அந்தக் கடலினைப் பார்த்து கதறி வெடித்து அழுதாள்.


கடல் பொங்கும்...



1000018040.jpg
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️தேவ் செய்யுறது ரெம்ப ஓவர் தான் மயூவின் உணர்வுகளோடு விளையாடுறானே 😡😡😡😡😡