• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 14

அவன் கேட்கிறானா என்ன என்ற கவலையே இல்லாமல் அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

பின் என்ன நினைத்தாளோ எழுந்து சென்று அவன் லேப்டாப்பின் அருகே வந்து அமர்ந்தாள்...


அவன் பாதியெழுதி வைத்திருக்க அதை வாசித்தவளுக்குள் அவனது எழுத்தின் வசீயம் செல்ல ஆரம்பித்தது. அதில் தன்னைத் தொலைத்தவள் அவன் எழுத்தினை எப்போதும் போல் மெச்சிக் கொண்டு அந்த கதையினை அவளது கைவண்ணத்தில் தொடர ஆரம்பித்தாள்.


அவள் எண்ணத்தில் அவன் இருக்கையில் எழுத்துக்கு பஞ்சமா வரப்போகிறது.. அதனால் எழுதினாள் எழுதினாள்.

அதுவும் அந்த போலீஸ்காரி சுஜாதாவின் நிமிர்வினைப் பற்றி எழுதுகையில் அவள் கண்கள் சட்டென்று அந்த சுவற்றில் இருந்த புகைப்படத்தினை பார்த்தது.

அந்த நிமிர்வு அந்த கம்பீரம் அவளுக்குள் சின்ன சிரிப்பினை வரவைக்க அவளை நினைத்தே இந்த சுஜாதாவின் குணநலன்களை பற்றி எழுதினாள்.... அப்படியே எழுத்தோடு சேர்ந்து அந்த கதையினுள் அவளும் மூழ்கிப் போய்விட்டாள்...


"வாசு வாசு" என்று சுஜாதா அலற காதில் இருந்த கைப்பேசியை உயர்த்திப் பிடித்தவன் பின் "என்ன சுஜீ" என்றான்...

"வாசு கொஞ்சம் வரமுடியுமா ப்ளீஸ்" என்று அவள் பேசுவதில் இருந்த பதட்டத்தினை அவதானித்தவன் "எங்க சுஜீ... ஏன் இவ்வளவு பதட்டமா பேசுற?" என்றான்.


"நான் லொக்கேஷன் ஷேர் பண்ணிருக்கேன். நீ வந்துடு ப்ளீஸ்" என்று அவள் சொல்லிவிட்டு கட் செய்யவும் அவனும் அந்த லொக்கேஷன் பார்த்துவிட்டு அந்த அத்துவானக்காட்டினுள்ளே நுழைந்தான்...


என்னதிது இப்படி ஓர் இடம்... இங்க எதுக்கு என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவனது மொபைல் அடித்தது.

"என்ன சுஜீ எங்க இருக்க" பேசியபடி பார்க்க அவள் அந்த இடத்தினுள் நுழைந்தாள்.

"சுஜாதா எதுக்கு இங்க வரச் சொன்ன" என்று அவன் அவளருகே சென்று கேட்க அவனைக் கட்டிக் கொண்டு ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள் அவள்.


அவள் அழுகையைக் கண்டதும் அவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. பொதுவாக சுஜாதா அழுவதே இல்லை. எப்போதாவது தவிர்க்க முடியாத சில நேரங்களில் அவள் கண்கள் மெலிதாய் கலங்க வேண்டுமானால் செய்யும்...

ஆனால் இப்படி கதறி அழுவதெல்லாம் அவள் அல்லவே.. எதுவோ நடந்திருக்கிறது என்று அவன் உள்மனம் சொல்லியது.

இருந்தும் அவளிடம் எதுவும் கேட்காது அவள் அழுகையை அடக்க என்ன செய்ய வேண்டுமோ அதைமட்டும் விடாது செய்து கொண்டிருந்தான் வாசு.


சற்று நேரத்தில் அவளே தெளிந்து சற்று தள்ளிச்சென்று அமர்ந்துவிட்டாள். இதுதான் அவளென்னும் தோற்றத்தினை அவள் ஏற்றுக் கொண்டதும் அவன் அவள் முன் சென்று நின்றான்.


"வாசு நீ கிளம்பு நான் இனி பார்த்துக் கொள்வேன்..." நிமிர்ந்து பார்த்தபடி அவள் உரைக்க "அதெனக்கு தெரியும் சுஜாதா. ஆனால் எதற்கிந்த திடீர் அழுகை" என்றான் இவன்.

"மனம் வலிக்கிறது வாசு"

"காரணம்"

"இந்த பெண்பிள்ளைகள் படும் பாடு"

"புரியவில்லை சுஜாதா..."

"இந்த கடவுளுக்கு ஏனிந்த கடுப்பென்று தெரியவில்லை. பெண்களுக்கு மட்டும் அடுக்கடுக்காக எத்தனை வலியும் வேதனையும்..."

"ஏய் ஜஸ்ட் ஸ்டாப்... ஆர் யூ மேட்... பெண்களைப் பத்தி தெளிவா பேசுற நீயே இப்படி பையித்தியக்காரத்தனமா பேசுனா மத்தவங்க எப்படி பேசுவாங்கன்னு யோசிச்சுப் பாரு..‌ எப்போ இருந்து கடவுள் கடுப்புன்னு பேச ஆரம்பிச்ச... உன்னோட பகுத்தறிவு எல்லாம் எங்க போச்சு... நீ சுஜாதா தானா" என்று அவன் கேட்க அவளிடத்தில் மௌனம்.


"மெச்சூர்டா யோசி... முதல்ல என்ன பிரச்சனை அதைச் சொல்லு" என்று வாசு மீண்டும் கேட்க "இன்னைக்கு ஒரு சின்னைப் பொண்ணை... ச்சே என்னால பார்க்கவே முடியலை வாசு. அந்த பொண்ணை நான்தான் தூக்கிட்டு போனேன். பட் இறந்துட்டா... அவளோட இரத்தம் புல்லா என்னோட கையில இருந்து ஒழுகுது. என்னால ஒன்னுமே பண்ண முடியலையே வாசு. அப்போ நான் போலீஸா இருந்து என்ன பிரயோஜனம். என்னால அவளைக் காப்பாத்த முடியலையே... அவளுக்கு ஜஸ்ட் ஏழு வயசுதான் இருக்கும்.. அவளைப் போய்... அப்படியென்ன அரிப்பு... ஒரு சின்ன குழந்தையை பார்த்தும் அந்த ஆண்குறி நீளுதுன்னா அதெதுக்கு இருந்துட்டு... வெட்டியெறிஞ்சாத்தான் என்ன???" என்று சொன்னவளின் முகத்தில் கொற்றவையின் கொந்தளிப்பே கொட்டியிருந்தது... அவன் அதற்கு பதில் சொல்லவில்லை மௌனமாகிவிட்டான்.


"என்ன நடக்குது இங்க???. இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்களா. காலையில என்னென்னா ஒரு பொண்ணை குழந்தையில்லை குழந்தையில்லைன்னு சொல்லி சொல்லியே சூசைட் பண்ணி சாக வச்சுருக்கானுங்க. இப்போ இப்படி ஒரு வேதனையான விசயம். அப்போ பொண்ணுங்கன்னா இது இரண்டு மட்டும்தானா... யார் இப்படி இந்த சமூகத்துக்கு சொல்லி வச்சது... சந்ததி, சுகம்னு இரண்டு வார்த்தைக்குள்ள ஒரு பொண்ணை எப்படி உங்களால அடக்க முடியுது. நாங்க அதுக்கு மட்டும் தானா??" என்று அவள் கத்த அந்த கதறல் அந்த அரவமற்ற இடத்தில் பெரும் எதிரொலியாய் பட்டு சிதறியது...
"பெண் என்பவள் சக்தி, பெண் என்பவள் கடவுள் அப்படின்னு சொல்லி நாங்க யாரும் கும்பிடச் சொல்லலை. ஆனா சக மனுசியா பார்க்கலாம் தானே... அவளுக்கான வழியை அடைச்சுட்டு நிக்காம சுதந்திரமா பறக்க விடலாம் தானே... வெறும் முலையும் யோனியும் சேர்ந்தது மட்டும்தான் ஒரு பெண்... இதுதான் அவளுக்கான உங்க definition. அப்போ அவள் தேகம் சுகம் தருவதற்தாக மட்டுமே செஞ்சதா என்ன???.. அப்படி சொல்லி அவளைச் சிதைக்கும் அத்தனை பேரின் அங்கங்களை எல்லாம் வெட்டி கழுகுக்கு போட வேண்டும். இவனுங்க எல்லாம் பூமிக்குப் பாரமா உயிரோட எதுக்கு இருக்கணும்..." என்று சீற்றத்துடன் பேசியவள் அமைதியாகிவிட்டாள்.


"அது யார் உனக்குத் தெரியுமா?" என்று வாசு கேட்க "ம்ம் தெரியும்... அந்த கேடுகெட்ட புடுங்கிக்கு என்ன மரியாதை செய்யணுமோ அதை செஞ்சுட்டு வந்துருக்கேன்" என்று அவள் கண்கள் சிவக்க சொன்னதும் அவனோ "கொண்ணுட்டயா" என்றான் வேகமாய்.


"ஆமா.. ஆனாலும் மனசு ஆறலை. அவனை இன்னும் வச்சு வச்சு கொஞ்ச கொஞ்சமாய் சித்ரவதை பண்ணி சாகடிச்சுருக்கணும். ஆனா என்னால முடியலை. இரண்டு மிதிதான் அங்க மிதிச்சேன்.. அதுக்கே செத்துட்டான்" என்று அவள் ஆங்காரத்துடன் சொல்ல அவனோ "இப்படி நீ தண்டனை குடுக்க ஆரம்பிச்சா தப்பு குறையும் சுஜாதா.."என்றான்.


"ஆனாலும் அந்த தப்பை என்னால தடுக்க முடியலையே அதுதான் ரணமா உள்ள வலிக்குது வாசு. ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடி தகவல் வந்திருந்தா நான் அவனை அங்கயே எரிச்சுட்டு அந்த பொண்ணை பத்திரமா கூட்டிட்டு வந்திருப்பேன். இப்போ அந்த பொண்ணு அநியாயமா இறந்ததை... ச்சே.. இது மாதிரி எத்தனை விசயம்...." என்றவள் சட்டென்று கண்களின் ஓரம் துளிர்த்த அந்த நீரை சுண்டியிழுத்துவிட்டு "விடமாட்டேன் இனி யாராவது இந்த மாதிரி நினைக்கட்டும்.. அந்த மூளையை வெளியே குதறி எடுத்துப் போட்டுடுறேன்" என்று சொன்னவளை அவன் அணைத்துக் கொண்டான்...


"உன்னை மாதிரி ஒவ்வொரு பொண்ணையும் மாத்து சுஜாதா. எல்லாரும் உன்னைப் பார்த்து சுஜாதா மாதிரி நான் இருக்கணும்னு நினைக்கணும். அதுதான் இந்த பிரச்சனைக்கான முற்றுப்புள்ளியா இருக்கும்" என்று அவன் சொல்லவும் அவளோ "வாசு என்னோட எனர்ஜி எல்லாம் வடிஞ்சு ஒரு மாதிரியான எழவே முடியாத நிலையில இருக்கேன். என்னை எழுந்து நிற்க வை.. ப்ளீஸ்" என்று சொல்ல அவனோ அவள் முகத்தினைத் தாங்கிக் கொண்டான்.


"சுஜாதா நீ எப்பவும் ஸ்ட்ராங் தான். நான் இப்போ இல்லைன்னாலும் கூட நீ சமாளிச்சுருப்ப... ஆனாலும் கலங்கி நிக்குற உன்னோட கண்ணை பார்க்க எனக்கு சக்தியில்லை" என்றவன் அவனுக்குள் இருந்த சக்தியெல்லாவற்றையும் அவளுக்குக் கடத்தத் தொடங்கினான் இதழ் வழியே.


அவனிடமிருந்து பலம் பெற்று அவள் பலவீனமதை வெளியேற்றிக் கொண்டிருந்தாள். நீண்டநேரம் தனக்குள்ளே புதைத்து வைத்திருந்த இதழ்களை அவன் விடுதலை செய்ய அவளோ அவன் மார்பின் மீதே தன்னை சாய்த்துக் கொண்டாள்.


"சுஜாதா எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்தென்ன செய்ய வேண்டும் என்று மட்டும் பார். மாற்றம் விரைவில் வரும். அதற்கான வேலையை நாம் பார்க்கலாம்... இப்போது வா" என்று அவன் சொல்லவும் அவள் முன்னால் நடக்கத் தொடங்கினாள்...


அவளையேப் பார்த்தபடி வாசு 'என்ன பெண்ணிவள்... அழும் பெண்களுக்கு மத்தியில் ஆர்ப்பரிக்கும் அருவியாய் கொட்டுகிறாள்... தீமைகளை சகித்து வாழ்வோர் மத்தியில் அதனை சகிக்காது சடுதியில் சுட்டுத் தள்ளுகிறாள்... நெஞ்சம் பொறுக்குதில்லையே என்று கதறிய பாரதி கண்ட புதுமைப் பெண்தான் இவள்' என்றே நினைக்க அவனெண்ணம் முழுவதும் அவளைச் சுற்றிச் சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது...

-----------------

இவ்வாறு எழுதி முடித்தவள் VNA எப்படியோ எழுதி முடிச்சுருக்கேன். வந்து நீங்களே ஒருதடவைப் பார்த்துக்கோங்க என்று கொஞ்சம் சத்தமாய் சொல்லிக் கொண்டாள்...

அவள் சொல்லிய அந்நேரம் அங்கே மயக்கத்தில் இருந்தவன் ஐ லவ் யூ.... லவ் யூ.... சு...ஜா......சு...தா என உளறிக் கொண்டிருந்தான்....

அவன் காதலைச் சொல்லியது அவனது கற்பனைக் காதலியிடமா??
காக்கிச் சட்டை போட்ட கதையின் நாயகியிடமா??
கடத்தி வைத்திருக்கும் பையித்தியக்காரியிடமா???
 
Top