• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 18

'வாசு நீ என்ன பண்ணுறன்னு உனக்கு புரியுதா இல்லையா.. இது சரியா வராதுன்னு நான் சொல்லுறேன்ல நீ கேக்க மாட்ட... அம்மா மாதிரி பாத்துக்குறா.. ரொம்ப லவ் பண்ணுறான்னு நீ உன் மனசை மாத்தாத. இத்தனை நாள் வரைக்கும் எப்படி இருந்தயோ அப்படியே இரு அதுதான் சேஃப்' என்று அவன் புத்தி பலவிதமாய் எடுத்துரைக்க அவனோ அதைக் கேட்காமல் படுத்திருக்க அவன் காதுகளில் வாசு என்ற குரல் வந்து விழுந்தது.

அதிலிருந்த ஏக்கம் ப்ளஸ் துக்கம் அவனை வெகுவாய் அசைத்துப் பார்க்க சட்டென்று "சுஜாதா" என அலறினான்.


"என்னை மறந்துருப்பன்னு நினைச்சேன். பரவாயில்லையே நீ இன்னும் ஞாபகம் வச்சுருக்க வாசு" என்று சொல்ல அந்த குரலில் வலிதான் நிரம்பியிருந்தது.

இப்படியோர் சூழ்நிலையை அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லையென்பதை அவன் முகம் இருண்டு போய் அவளுக்குக் காட்டிக் கொடுத்தது....


"உன்னோட உலகம் நானும் எழுத்தும் தான்னு அடிக்கடி சொல்லுவ. இப்போ அந்த உலகத்துல இருந்து என்னை வெளிய தூக்கி வீசிட்ட ரொம்ப ஈசியா. இதை உன்னால எப்படி செய்ய முடிந்தது. ப்ச் அப்போ உருவமில்லா என்காதலுக்கு அவ்வளவுதான் மதிப்பு. அதனால தான் என்னை விட்டு உன்னெதிரே உருகி உருகி ஒருத்தி வந்து நிற்கவும் அவளைக் காதல் செய்ய கிளம்பிட்ட. அப்படியெனில் நான் யார் வாசு??
எப்போது பார்த்தாலும் சுஜா சுஜீ என உருகித் தவிக்கும் உன் உளறல் இனி அவளுக்கு மட்டுமே சொந்தமாகும். உன் தீண்டலும் உன் ஸ்பரிசமும் அவளையே உணர்வின் பிடியில் சிக்க வைக்கும்... உன் மனது அவள் வசமாகும். அப்படியெனில் நான்??????" என கரைந்து அவள் கேட்க


"சுஜாதா" என்று இவன் பேசத் தொடங்கும் முன் "வேண்டாம் வாசு. நிழலாய் இருக்குமிவளின் கண்ணீர் உன்னைத் தாக்க வேண்டாம். நீ நிஜத்தினை ஏற்றுக் கொண்டு நிம்மதியாயிரு. அதுவே எனக்குப் போதும். அவளைப் போல் கவிதை சொல்லி காதலிக்குமளவிற்கு எனக்கு அறிவில்லை. ஆனால் உன்மேல் அதிகளவு அன்பிருக்கிறது. அதனாலே நான் விலகி போய்விடுகிறேன். இனி நீயே அழைத்தாலும் நான் வரமாட்டேன்" என்று சொன்னவள் மாயமாய் மறைந்துவிட்டாள்.

அவள் குரல் அதன்பின் அவனுக்கு எட்டவில்லை.
ஏதொவொரு வலிநிறைந்த ரணம் இன்னதென்று வரையறுக்க இயலாத உணர்வு அவன் உள்ளத்தினை வந்து கவ்விக் கொள்ள தொண்டை அடைத்தது.

அழவும் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்த அவன் நிலை எவர்க்கும் வரக்கூடாது. அவனால் அவள் இல்லாத இந்நிலையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நிஜமாய் உயிராய் என்னெதிரே இருப்பவளை ஏற்றுக் கொள்வது கற்பனை உலகில் இருப்பவளுக்கு செய்கின்ற துரோகமாகவே இப்போது அவன் எண்ணினான்.


வாசு ஸ்டெடியா இரு... நீ இந்த மாதிராயான எமோசன்ல விழுந்து தொலைக்காதே... எப்போதும் தெளிவாய் இரு... என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்... (அம்மாடி கனவுல வர்ற காதலியே.... இப்போத்தான் அவன் கொஞ்சம் கொஞ்சமா இவளை பார்த்து அவமேல காதல் அப்படின்னு கன்பார்ம் பண்ணுற நிலைமைக்கு வந்தான். அதுக்குள்ள இப்படி வந்து சதி பண்ணிட்டயே... இது மட்டும் அவளுக்குத் தெரிஞ்சது... நீ செத்த... பார்த்து சூதானமா இருந்துக்கோ அவ்வளவுதான் சொல்ல முடியும்....)


சுஜாதா வேண்டாம் என்னை விட்டு செல்லாதே. நீயில்லாமல் எனக்கு எதுவும் கிடையாது. ஏதோ காய்ச்சல் வேகத்தில் புத்தி பிசகி இப்படி நடந்துக்கொண்டேன். இனி இப்படி நடக்காது என்று அவன் பிதற்றினானென நாம் நினைப்போமேயானால் அது நம் தவறு... அவன் யார் வாசுதேவ நாராயண அநிருத்தன். இந்த மாதிரியான பையித்தியக்காரத்தனங்கள் அற்ற ஒருவன். அவனுக்கு வலித்தது. ஆயினும் அவள் தன்னை விட்டு விலகி செல்ல மாட்டாள் என்று அவனுக்கு நிச்சயமாக தெரிந்ததால் காய்ச்சலின் வெம்மையில் இளகியவன் இப்போது இறுகியே நின்றான் முன்பிருந்ததை போல் ம்ஹூம் அதைவிட அதிக இறுக்கமாய்... இனி மீண்டும் இளகுவானா என்பது சந்தேகம் தான்....


இதுயெதையும் அறியாது சுஜாதா அவன் கண்ணில் ஏற்பட்ட மாற்றத்தால் மயங்கி சுற்றிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் அவன் தன்னை முழுதாய் ஏற்றுக் கொள்வான் என்று அவள் நினைத்தபடி அவனை நினைத்து எப்போதும் போல் உளறிக் கொண்டிருந்தாள்...


எவனோ ஒருவன்
என்னவனாய் மாறுவானோ
இவ்வினாவே வஞ்சியிவள் நெஞ்சம்தனில் தொக்கி நிற்கிறது...!

அவன் வதனம் கண்டபின்
ஆடியில்கூட
அவனே தெரிகிறான்
அழகாய்....!
அழகின் மொத்தவுருவாய்...!
எனக்குப் பதிலாய்....!!!


சிரிக்கும் அவன் விழிகள் - கூடவே விரியும் அவன் இதழ்கள் -கூடுதலாய்
சிந்தனையில் சுருங்கும் நெற்றியென கொள்ளையழகாய் அவன்
என்னெதிரே நிற்க
தொலைந்து போய்விடுவேனெ
தெரிந்தும் அவனை தொல்லை செய்கிறேன் நான்....!


இவன் மீது கொண்ட காதல்
இவனையுருக்கி என்னோடு இணைப்பதற்கு பதிலாய்
எனையுருக்கி இல்லாமல் செய்யவே முயற்சி செய்கிறது....!


அதுசரி,
அவனிடம் என்னாலே நெருங்க முடியவில்லையெனும் போது
பாவம்
காதல் அதென்ன செய்யும்.....!!!!


நெருங்குவேன் VNA.. எத்தனை தடை வந்தாலும்... ஏன் நீயே தடையாய் இருந்தாலும் அதனை தகர்த்தெறிந்து உனக்குள் நான் வருவேன்... நானே வருவேன்... அப்போது என்னை வெளியேற்ற இயலாது... நிச்சயமாக நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்கு இப்போதிருந்தே உன்னைத் தயார் படுத்திக் கொள். இதையெல்லாம் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு புரியுமா என்று என்னிடம் கேட்டால் அதைப் பற்றி எனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். ஏனெனில் என் காதல் அவர்களைக் கேட்டுக் கொண்டு வந்ததில்லை. ஏன் அது என்னைக் கூடக் கேட்டுக் கொண்டு என்னிடம் வரவில்லை. அப்படியிருக்கையில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி எண்ணி மனதினை மறைத்து வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை. மறைத்து மறைத்து வாழ இதுவொன்றும் தவறான விசயமுமில்லை. இதை கர்வமாய் நான் சொல்லுவேன்... காரணம் இக்கர்வத்தினைத்தான் இந்தக் காதல் எனக்கு கணக்கில்லாமல் வாரிக் கொடுத்திருக்கிறது... என்றவளின் முகம் அவ்வளவு விகசித்திருந்தது. அதில் முழுக்க முழுக்க காதல் மட்டுமே நிரம்பியிருந்தது.


அதே கர்வத்துடன் அவன் என்ன செய்கிறானென அவள் சென்று பார்க்க அவனோ லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான்.

"VNA என்னதிது. காய்ச்சல் இன்னும் சரியாகலை. அதுக்குள்ள...." என்பதற்குள் "ஷ்ஷ் சுஜாதா நான் என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நீ எனக்கு ஆர்டர் போடாத.. ப்ளீஸ் இங்க இருந்து கிளம்பு" என்று அவன் கடுமையாக சொல்லவும்... அவளோ "அவ்வளவுதானா VNA" என்றாள் வலி நிரம்பிய குரலில்..

அடுத்து அவன் "சுஜாதா" என அழைத்து பேச முற்பட அவள் அங்கே இருக்கவில்லை.

இப்போது வாசுதேவனின் மனம் தான் ஒரு நிலையில் இல்லாது ஆடத் தொடங்கிவிட்டது.


அவள் சென்ற சிறிது நேரத்தில் அத்தனையும் உடைந்து நொறுங்கும் சத்தம் கேட்டது... அவன் அதையும் கேட்டு அமைதியாக இருந்தான். ஆனால் அப்படியே இருந்துவிடவும் முடியவில்லை அவனால்.

அதனால் எழுந்து அவளறைக்குச் செல்ல கதவு இறுக்கமாக பூட்டியிருந்தது...

"சுஜாதா கதவைத் திற" என்று கதவினைத் தட்டியபடி அவன் பேச "என் முன்னாடி நிக்காதீங்க VNA. அப்பறம் உங்களை ஹர்ட் பண்ணுற மாதிரி நான் பேசிடுவேன்" என்றாள் அவள்.


"சுஜாதா நீ என்ன வேணும்னாலும் பேசு நான் ஹர்ட் ஆக மாட்டேன்..." என்று அவன் தன்மையாய் பேச "சாரி நான் தப்பா சொல்லிட்டேன்... நீங்க போய் ஹர்ட் ஆவீங்களா... அந்த பீலிங்க்ஸ் எல்லாம் ஹார்ட் இருக்குறவங்களுக்குத்தான். உங்களுக்குத்தான் அது இல்லையே.... போங்க VNA. இவ்வளவு தூரம் சொல்லியும் உங்களுக்கு என்னோட காதலும் நானும் தேவையில்லைன்னு ஒதுக்கியே வைக்குறீங்க.. கொஞ்சம் இப்போத்தான் மனசு மாறுன மாதிரி இருந்தது. சட்டுன்னு பழைய மாதிரி மாறிட்டீங்க... என்ன ரீசன்னு தெரியலை. பட் கொஞ்ச நேரம் என்னை விடுங்க.... நான் நார்மல் ஆனபின்னாடி நானே வந்து பேசுவேன்...." என்று சொல்ல அவனும் விலகி வந்துவிட்டான்...


உறங்காமல் அவன் அடுத்து போட வேண்டிய அத்தியாயத்தினை எழுதிக் கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தமும் கூடவே வெளியே கார் எடுக்கும் சத்தமும் கேட்டது...

என்னவென்று அவன் வெளியே வந்து பார்க்க கதவு பூட்டிதான் இருந்தது.


"இந்த நைட் நேரத்துல இவ எங்க போறா.. ஏதாவது தப்பா... ச்சே ச்சே அவ அந்தமாதிரி யோசிக்குறவ இல்லை. அவளுக்கு உயிரோட வேல்யூ நல்லாவே தெரியும். மைண்ட் ரிலாக்ஸ் ஆனதும் அவளே வருவா..." என்றவன் அந்த பூட்டியிருந்த வாசற்கதவின் அருகே வந்து நின்றான். அது அவனைப் போலவே வெகு இறுக்கமாக இருந்தது.


அதை திறக்கும் வழியறியாது அவளிடமிருந்து தப்பும் மார்க்கமறியாது அங்கயே அமர்ந்தான் அவன்...

-------------------------------

மொபைலையே பார்த்தபடி அமர்ந்திருந்த சு...தாவின் மடியில் அவளின் ரவுடி உறங்கிக் கொண்டிருக்க அவளது விழிகள் மொபைலிலே தனது மொத்த கவனத்தினையும் பதித்திருந்தது.
அவ்வளவு தீவிரமாய் எதைப் படிக்கப் போகிறாள். எப்போதும் போல் வாசுதேவ நாராயண அநிருத்தனின் எழுத்துக்களைத்தான்...

ஆனால் அந்த எழுத்துக்கள் அவளை கதையின் உள்ளே இழுத்துச் செல்லாது... வேறொரு உணர்வினை நோக்கி இழுத்துச் சென்றது.

வாசு நான் சர்வ நிச்சயமா சொல்லுவேன். இதை நீங்க எழுதலை. அப்படின்னா அந்த பர்ஸ்ட் எபியில இருந்த கடைசி வரிகளையும் இதையும் எழுதுனவங்க ஒரே ஆள் தான். யாரா இருக்கும்... அவங்களை எழுதவிட்டு ஏன் வாசு அமைதியா இருக்கணும். வாசுவுக்கு என்ன பிரச்சனை.... கண்டுபிடிக்கிறேன் என்றவள் தனக்குள்ளயே சூளுரைத்துக் கொண்டாள்.



கண்டுபிடிப்பாளா????
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
மூணு சுஜாதா வா 😲😲😲😲😲😲
கற்பனை சுஜா, கடத்தின சுஜா, போலீஸ் சுஜா 😧😧😧😧😧
 
Top