• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 20

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 20

அவள் தேகம் இறுகி நெகிழ்ந்ததை அறிந்ததும் அவன் வயிற்றில் இருந்து முகத்தினை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
அவள் முகமோ எந்தவித மாறுதலும் இல்லாது தாய்மையின் உணர்வோடு அவனுக்கான காதலுடன் இருக்க அவன் இப்போது புரியாது விழித்தான்.

"வாசு தூங்கு" என்று அவள் தலையினை வருட அவனோ "சுஜா நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனே... இல்லை தப்பு பண்ணுறேனா" என்றான் அவன் பாவமாய்.


"வாசு என்னதிது சின்னப்பையன் மாதிரி. என் வாசு போய் தப்பு பண்ணுவானா..." என்றவளின் குரலில் எக்கச்சக்க பாசமே விரவியிருந்தது.


"இல்லை நான் கட்டிப்பிடிச்சதும் சட்டுன்னு நீ ஒரு மாதிரியா ஆன. அது அது எனக்கு என்னவோ போல இருந்தது" என்று அவன் இன்னமும் சிறுபிள்ளையாய் விழிக்க "அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க தூங்குங்க" என்றாள் அவள்.


"இல்லை சுஜாதா ஏதோ இருக்கு.." என்று அவன் ஏக்கமாய் கேட்க இல்லையென்பதைப் போல அவள் தலையசைக்க அவன் அவள் மடியில் இருந்து எழுந்தே விட்டான்.


"என்ன VNA" என்று அவள் கேட்க அவன் அங்கிருந்து வெளியேறிவிட்டான்.


நடுநிசி தாண்டிய அவ்வேளையில் அந்த வான்வெளி நீண்டு கருத்திருக்க சற்றுமுன் இருந்த இதத்தினை தொலைத்துவிட்டு உறுதியாய் அவன் நின்று கொண்டிருந்தான்.

அவனுக்கு சுஜாதாவின் அந்த போக்கு வித்தியாசமாகவே பட்டது. இதை அவனால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. அந்த தருணத்தில் உண்மையிலே அவன் தாய்மடி தேடும் கன்றாய் தவித்துத்தான் போயிருந்தான்.


"VNA ஏற்கனவே பீவர்.. இதுல இந்த பனியில ஏன் நின்னுட்டு இருக்கீங்க" என்றபடி அவள் அவன் தோளைத் தொட அவனோ தோளை உதறிவிட்டு "என்னைத் தொடாத சுஜாதா" என்றான் வேகமாய்.

"எதுக்கு"

"எதுவும் எனக்கு வேண்டாம். நான் இதுக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துட்டு போயிடுறேன். எனக்குலாம் அதுதான் சரி..." என்றவன் உரைக்க அவளிடம் தென்பட்டது நீண்டவொரு அமைதி...

பின் அதைக் கிழித்து அவளே "இது... இதுதான் VNA நீங்க... இதுக்குத்தான் அந்த ஒரு நொடி நான் இறுகி நின்னேன். ஏன்னா கொஞ்ச நேரம் கழிச்சு இந்த நெருக்கம் இப்படி மாறும்னு எனக்கு நல்லாவே தெரியும். அது சட்டுன்னு ஞாபகம் வந்ததாலதான் நான் அப்படி ஆகிட்டேன். அம்மாவோட அன்பு உங்களுக்கு கிடைக்கலைன்னு எனக்குத் தெரியும். அதனால நான் உங்களுக்கு அம்மாவா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அம்மாவா மட்டும் இருக்க ஆசைப்படலை.. என்னோட காதல் எப்பவும் உங்களுக்கு மட்டும் தான். அது உங்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் தரும்... தலைவலியோடு நீங்க இருக்கும் போது என்னால உங்களை விட்டு தள்ளியிருக்க முடியலை. அதனால தான் பக்கத்துல வந்தேன். அப்போ நீங்க என் முகத்துல உங்க அம்மா முகத்தைப் பார்த்தீங்களே... அது எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது. என் மடியில நீங்க இருக்கும் போது நீங்க என்னோட குழந்தை மாதிரியே தான் இருந்தீங்க. இவனொன்னும் பெரிய எழுத்தாளர்லாம் கிடையாது. என்னோட முதல் பையன்னு ரொம்ப கர்வமா இருந்தது... அந்த நேரத்துல நீங்க ரொம்ப எமோசனலா மாறுனீங்க... அது உங்களோட பலவீனம்னு எனக்கு புரிஞ்சது... அதை என்னால யூஸ் பண்ணிக்க முடியலை... ஏன்னா உங்க மூளை உங்களை வித்தியாசமா டியூன் பண்ணும். நாளைக்கே இவ யார்னோ தெரியாது இவகூட சேராதன்னு சொன்னா அதையும் சரின்னு கேப்பீங்க. ஆனா என்னோட நிலைமை??????? ஏற்கனவே முழுப்பையித்தியமாய் திரியும் நான் அடுத்து இல்லாதே போய்விடுவேன்... உங்கள் வாயால் காதலில்லை என கேட்பதற்கு காலனின் பிடியில் சிக்கி..." என்பதற்குள் அவள் கண்களில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்துவிட்டது...


இதென்ன இந்த வார்த்தையை சொல்லுகிறாளென்று அவனுக்குள் நடுக்கம் வந்துவிட்டது... ஆனாலும் தான் அவளிடம் நடந்துக் கொண்ட முறைதான் அவளை இந்த மாதிரி பேசவைக்கிறது என்று அவனுக்கே அப்போதுதான் புரிந்தது.

நிச்சயமாய் சற்று நேரம் கழித்து அவன் மூளை அப்படித்தான் சொல்லியிருக்கும் என்பதில் அவனுக்குமே சந்தேகமில்லை. அவன் மனம் ஏற்றாலும் பலவிசயங்ளில் அவன் மூளை அவனை எட்டவே இருக்கச் சொல்லியே கட்டளை இடும்...

கண்டிப்பாய் அது சுஜாதாவினை விட்டு விலகென்று சொல்லும்.... ஆனால் அதற்காக இனி இவளை விட்டு விலகுவதென்பது சாத்தியமில்லையே...

எந்தகணத்தில் அன்னையின் அன்பினை அவளது (மு)அகம்தனில் கண்டானோ அப்போதே அவனையே அவளுக்குத் தந்துவிட அவன் முடிவு செய்துவிட்டான்.

ஆனால் அவளை இதற்கு முன் பேசியதெல்லாம் இவ்வேளையில் வந்து நின்று தடையாய் மாறுமென அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவள் விழிநீரை காண காண இன்னும் தான் அமைதியாய் நின்றிருப்பது வீணென அவனுக்கு புரிந்துபோனது. அதனால் அவளை நெருங்கி நின்றவன் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு கண்ணீரை அடக்கப் போராடிக் கொண்டிருந்தவளை தோள் தொட்டுத் திருப்பி அவள் முகத்தினை தாங்கி விழிகளோடு தன் விழிகளை உறவாட விட்டான்.


கூடவே "இந்த கண்கள் இப்போ உன்கிட்ட என்ன சொல்லுதோ அது அத்தனையும் உண்மை சுஜாதா.. எப்படியோ இருந்தவனை இப்படி மாற்றிவிட்டு புலம்பவும் வைத்துவிட்டாய். இனி நீயின்றி எனக்கென்று தனியாய் எதுவுமில்லை. நான் ஏங்குன அன்பு எனக்கு அப்போ கிடைக்கலை. ஆனா அது எல்லாம் மொத்தமா உன் மூலமா கிடைக்கும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனாலும் என்னால சட்டுன்னு எனக்குன்னு இருந்த கோட்பாடுகளை விட்டு வெளிய வரமுடியலை. என்ன செய்ய அப்படியே வாழ்ந்து பழகிட்டேன். ஆனா நீ என்னை டோட்டலா மாத்திட்ட. என்னை எமோசனலா உருக வச்சுட்ட. இதை எப்படி சொல்லுறது என்னோட அன்பை எப்படி வெளிப்படுத்துறதுன்னே... எனக்கு....." என்றவனின் இதழ்கள் மொத்தமும் சட்டென்று அவளது இதழ்களுக்குள் புதைந்து போனது...


மருந்தின் தாக்கமில்லாது
மயங்கி நிற்குமிவனினை
மங்கையிவள் தன்வசப்படுத்தி
தன்னோடு கலக்க அழைக்கிறாள்
இதழ்வழியே...

அவ்வழைப்பு
இம்மாயவனுக்கு புரிந்ததால்
அவளது வேலையினை அவனேற்று
அவளுக்கு அதீத
மயக்கத்தினையள்ளியே தருகிறான்...

அவள் இதழீரம் தருமந்த
மயக்கத்தில் கட்டுண்டு
அவன் விழி சொக்கி கிறங்கி
தடுமாறி நிற்க
ஆதாரமாய் அவளிடை
அவன் கைகளுக்குள் சிக்கிக் கொள்ள சின்னாபின்னமானது இடை மட்டுமல்ல இடைவெளியும் தான்...

இத்தனைநாளாய் இறுகி விலகியோடியவன்
அவளை விட்டுவிடாது இறுக்கி தன்னோடு அழுந்தப் புதைத்துக் கொண்டான்...

இறுக்கம்தரும் வலியின் அவஸ்தையொருபுறமிருக்க
இதழினையே இழுத்துக் கொள்ள நினைக்குமிவனின் இம்சை இன்னொரு புறமிருக்க
இந்த தருணத்திற்காய் காத்திருத்தவளின் விழியில் நீர் கசிந்தது...
முதன்முறையாய்
அதீத காதலால்
காதல் தந்த மோகத்தால்
மோகம் தரும் மயக்கத்தால்....
அது தருமின்ப வலியால்...
வலிதருமந்த சுகத்தால்....


மிகவும் வலித்ததால் வேறுவழியின்றி இதழ்கள் தற்காலிகமாக தன் இணையை பிரிய அவனோ "லவ் யூ சுஜாதா..." என்றான் மென்மையான குரலில்...


"இன்னொரு தடவை சொல்லுங்க" என்றவளின் குரல் நடுக்கத்துடன் வெளிவந்தது.

"ஐ லவ் யூ சுஜாதா"

"உங்க ஸ்டைல்ல சொல்லுங்க..." என்று அவள் எதிர்பார்ப்போடு வினவ "எப்படி" என்றான் அவன்...

"எழுத்தாளருக்கு இதுகூட புரியாதா???"

"ஓ... ஆனால் என்னை விட நீதான் நல்லா எழுதுற"

"நான் கேட்டதை செய்ங்க VNA. சும்மா பேசிட்டே இருக்காம" என்றவளைப் பார்த்தவன்

"பெண்ணெனும்
பேசுந்தெய்வத்தை-
இன்பமாய் நினைத்திடாது
இறைவியாய்
வணங்குமென்னுள்-
இத்தனைச் சூட்டை
எப்படி நிரப்பினாய்??

இரும்பென இருந்தயென்
இதயத்தை-வெறும்
இலவம் பஞ்சென
ஏனடி பரப்பினாய்???

தாய்மடி சாய்ந்திடாயென்
பின்னந்தலை-இன்றுன்
உள்ளங்கைத் தழுவலில்
பித்தாகிட- முழுவதும்
முகமது புதைகையில் - இன்றுன்
மென்மையிரண்டு மென்
சொத்தாகிட-உன்னில்
உறிஞ்சிடும்
உமிழ்நீ ரனைத்துமே- எந்தன்
உயிர்வரை பாய்ந்துநல்
வித்தாகிட-இதை
எதுகைமோனையோடு
சொல்லில் நான்
வடித்திடவா?? - இல்லை
என் ஆண்மையெனும்
உளிகொண்டு
உனை செதுக்கிடவா
???" என்று அவன் சொல்ல அந்த தமிழெழுத்துக்களில் கலந்திருந்த காதலிலும் காமத்திலும் அவளுக்குள்ளும் பிரவாகம் பொங்கி வழிய ஆரம்பித்து விட்டது...

இவனெழுத்தின் மாயத்தில் அவள் மயங்கித் திரிவது எப்போதும் நடக்குமொன்று தான். இன்றோ அவன் எழுத்தின் தாக்கம் அவள் பெண்மையினையே நேரடியாகத் தாக்க அந்த அதிரடியில் அவள் திண்டாடித்தான் போய்விட்டாள்...


அவளது தேகம் தடுமாறி உணர்வினை அடக்க இயலாது திணறுவதைக் கண்டவன் "என்னாச்சு" என்றான்.


அவள் அவனது கேள்விக்கு பதில் சொல்லாது சட்டென்று அவன் காலடியில் வீழ்ந்து விட்டாள்.

அவனும் சட்டென்று பதறி அமர்ந்துவிட "VNA இதை என்னால தாங்கவே முடியலை. இதை சொன்னா என்னை எப்படி நினைப்பீங்களோன்னு எனக்கு கவலையெல்லாம் இல்லை. எனக்கு நீங்க வேண்டும் VNA... உங்களோட எழுத்து என்னை எப்படி மாய உலகத்துக்கு கூட்டிட்டு போகுதோ அதே மாதிரி நீங்களும் உங்களோட மாயத்தினை என்னிடம் காட்டி என்னை மயக்கி வேறொரு உலகத்திற்கு கூட்டிச் சொல்லவேண்டும்... அதில் இருவரும் ஒருவராய் மாறி திரிய வேண்டும்... என்ன பெண்ணிவள் இப்படியா நாணமில்லாது அவள் ஆசையை சொல்லுவாள் என்று என்கிட்ட கேட்காதீங்க. ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் ஆசையுண்டு.. அது தனக்குப் பிடித்தவனிடம்... தன்னையே தர வேண்டுமென நினைப்பவனிடம் மட்டுமே தன்னை வெளிப்படுத்தும். அந்த நேரத்தில் அதற்கு நால்வகை குணங்கெள வரைமுறைகள் எதுவுமில்லை... ப்ளீஸ் VNA எனக்கு நீங்க வேண்டும்... உங்களோட எழுத்துகள் இப்போது என்னுள் நுழைந்து என் பெண்மையை தட்டியெழுப்பியதைப் போல் நீங்களும் எனக்குள் நுழைந்து என்னை உன்னவளாய்... உனக்கானவளாயாக்கிக் கொள்ளுங்கள் VNA... இதுக்குமேலயும் என்னால தாங்க முடியாது.... என்றவள் அவனோடு ஒட்டிக் கொண்டாள்..


VNA....VNA என்று அவள் மென்குரலில் பிதற்றிக் கொண்டிருக்க "எங்கயிருந்துதான் பிடிச்சயோ இந்த VNAவை.... பட் ரொம்ப நல்லா இருக்கு... ஐ லவ் இட்... என்று அவன் அவள் செவியினுள் அவளைப் போலவே பேசிவிட்டு காதினை கடித்துவிட.. அவளோ அவன் சேஷ்டைகளின் பாரம் தாங்காது நெளிந்துக் கொண்டிருந்தாள்...


அவன் மீண்டும் "ரொம்ப குளிருது" என்று காதோடு சொல்ல அவளோ சட்டென்று மயக்கத்திலிருந்து விடுபட்டு "அதான் அப்பவே சொன்னேன் நீங்கதான் கேக்கலை. வாங்க உள்ள போகலாம்... காச்சல் வந்துடும்" என்று அன்னையாய் மாறி அரவணைக்க அவன் விழியின் ஓரத்தில் கண்ணீரின் பளபளப்பு தெரிந்தது...


உருகியோடும் தேகத்தின் உணர்வினை நொடியில் தடைசெய்து என் உடல்நலனின் அக்கறை கொள்ளுமிவளின் பாசத்திற்கிணையாய் எதைக்கொடுத்தாலும் ம்ஹூம் என்னையேக் கொடுத்தாலும் போதாது... இனி இவளை விட்டுக் கொடுக்க மாட்டேன்... விட்டு விடவும் மாட்டேனென தனக்குள்ளயே நினைத்துக் கொண்டு "இல்லை இங்கயே இருக்கலாம்.. நீ மட்டும் அவ்வளவு தூரம் தள்ளியிருக்காத... கிட்டயேயிரு. அப்போத்தான் குளிராது" என்று சொன்னவனை ஏற இறங்க பார்த்தவள்... இடைவெளியில்லாத தங்களின் நிலையைப் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டாள். அது அவ்வேளையின் ஏகாந்தத்தினை இன்னுமின்னும் அதிகப்படுத்தியது...


அவளையுணர அவனுக்கும்
அவனையுணர அவளுக்கும் தடைகளாய் இருந்தவைகளெல்லாம்
தயக்கமின்றி தகர்த்தப்பட நிலவின் ஒளிமட்டுமே அங்கே நிரம்பியிருந்தது...


அவன் விரல்கள் அவள் தேகத்தினையே காகிதமாக்கி காமமெனும் மைஊற்றி எழுதிக் கொண்டிருக்க அந்த பெண்மையிலிருந்த மையெல்லாம் அம்'மை'யோடு கலந்து கலந்து வழிந்து கொண்டிருந்தது...


மயக்கம், மயக்கத்தின் உளறல், முணங்கலென அவ்விடமே வித்தியாசமாயிருக்க.... முன்னேறிக் கொண்டிருந்த அவன் மார்பில் ஏதோவொன்று அழுத்த...

விரலால் அதை நகர்த்த அவன் முற்படும் போதே அதன் வடிவத்தில் தீச்சுட்டார் போல் விலகி பதறியெழுந்தான் அவன்...

எதற்காக இந்த பதட்டம்???? மறுபடியம் விலகி நிற்க போவதற்கான முன்னோட்டமா...