• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 21

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 21

அவனின் விலகலை சகித்துக் கொள்ள முடியாதவள் "என்னாச்சு VNA" என்று கேட்க "ஆர் யூ மேரிட்" என்றான் அவன். அவன் குரலில் அத்தனை கொந்தளிப்பு இருந்தது...


"எஸ்" என்று அவள் எந்தவித பதட்டமுமின்றி நிதானமாய் சொன்ன அடுத்த நிமிடம் அவள் கன்னத்தில் அவன் விரல் பதிந்தது...


"ஆர் யூ மேட்..." என்று அவன் இப்போது கத்த "எஸ்" என்றாள் அதற்கும் அசராது... மீண்டும் அவள் கன்னம் எரிந்தது...


இரு கன்னமும் அவன் அடித்ததில் பயங்கரமாக வலித்த போதும் அவள் கண்ணீர் விடாது அவனையேப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் கண்களில் அப்போதும் அவன் மீதான காதலும் தேடலுமே நிரம்பியிருந்தது.


"VNA" என்று அவள் அழைக்க அவன் கண்களின் சீற்றத்தில் அவள் சொல்ல வந்ததே மறந்து போனது... அவளையேப் பார்த்தவன் பட்டென்று திரும்பிக் கொண்டு வானை வெறித்தான்.

அவன் பார்வையில் தோல்வி... துரோகம் ஏமாற்றமென அத்தனையும் கலந்திருந்தது. அவ்வளவு அன்பினை அவன் மேல் கொட்டி அவனைப் பித்தாக்கியவள் அடுத்தவன் மனைவி என்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் அவன் திரும்ப "VNA ஒரு நிமிசம்" என்று அவன் தோளை சுஜாதா தொட வர அவனோ "ச்சீ" என்று சொல்லிவிட்டு விலகி கீழே சென்றுவிட்டான். அவன் நடையில் இருந்த தீவிரம் அவன் முகத்திலிருந்த சினம் அவளது காதல் நெஞ்சத்தினை பெரும் வேதனை கொள்ள வைத்தது...


அந்த ஒற்றை வார்த்தையில் அவள் உள்ளம் உலைபோல கொதிக்கத் தொடங்கிவிட்டது. சில நிமிடத்துக்கு முன் இந்த இடத்தில் தாங்கள் இருவரும் இருந்த நிலையை எண்ணியவள் அவன் அருகாமையை எண்ணித் துடித்தே போனாள்.


நின்று விளக்கம் கேட்பான் விளக்கிக் சொல்லலாமென அவள் எதிர்பார்த்திருக்க விலகி சென்றுவிட்டான் அவன்.


"VNA இப்போ உங்க மனசுல நான் எவ்வளவு கீழ்த்தனமான ஒரு பொண்ணா இருப்பேன்னு எனக்குத் தெரியும். ஏன் உடம்புக்கு அலையிறவன்னு கூட நீங்க நினைக்கலாம். நினைக்கலாமென்ன நினைச்சுருப்பீங்க. பட் அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. ஏன்னா உங்க இடத்துல நான் இருந்தா அதுமாதிரி தான் நான் நடந்திருப்பேன். ஆனா என்னை விட்டு விலகி போய்டலாம்னு மட்டும் கனவுல கூட நினைச்சுடாதீங்க. அது இப்போன்னு இல்லை எப்பவுமே நடக்காது..." என்றவளின் முகம் மாறியது... அந்த உறுதி அவன் மனதினை எப்படியும் மீண்டும் ஜெயித்துவிடுமா...?????


நீயெழுத்துச்
சூரியனா யெரிய
உன் வெம்மைதனை
யிவளும் - கடன் வாங்கி
பற்றி யெரிகிறாள்...


கடத்திய வெம்மையின் சூட்டில்
காதலது உருக
உருகிய உணர்வினை
வார்த்தெடுத் ததில்
உன் உருவமதை காண்கிறேன்...


பரிணாம வளர்ச்சி
உயிர்களுக்கு மட்டுந் தானா??? உணர்வுகளுக்கு கில்லையா யெனும் வினாவிற்கு விடையாய் - காதல் இருக்கும் அத்தனை உணர்வின் வடிவத்தினையு மேற்று
எழிலாய் ஏந்திழையிவள் முன்னிற்க
எடுத்துக் கொள்வதைத் தவிர
என்னிடம் வேறு மார்க்கமில்லை...!


விரல்கொண்டு உன்னெழுத்தை தழுவும்
நேரமெல்லாம் உனையே தழுவுமென்
கற்பனையை....!


ஒவ்வொரு இரவின் பிடியில் உன்னோடு கலந்து உன்னவளாய் மாறி உன்னோடு உறங்குமென் கனவினை...!


சோர்ந்திருக்குமென் உள்ளத்தினை சுடர்விட்டெறியும் உன் சுடரால்
சுட்டெரிக்க அதில் தேகங் கருக்காது மின்னுமிவள் அங்கமெனும் தங்கம் உருகி வழிவதை....!


மணமானவளுக்கென இருக்கும் வரையறை கடந்து....
கொள்கை கோட்பாடுகளை உன்னெழுத்தின் துணையாலுடைத்து...
உனையே மனம்தனில் சுமந்து
எனையே துகிலுரித்து நிற்பதை....
உன்னால் தடைபோட முடியுமா...???
முடியாது...!
முடியவே முடியாது...!!!


முயற்சிசெய்து செய்து தோற்று நிற்குமிவள் நீயும் தோற்றுவிடக் கூடாதென்ற காரணத்தால் சொல்லுகிறேன்...
என்னைத் தடுக்காதே...!
தடம்மாறி
பயணிக்குமென் பாதை
தடுமாறி நுழையு முன்னையும்
தடம்மாறச் செய்யும்...!


உன்னெழுத்தின்
தீண்டல் பட்டு
உருவான கருவி(காதலி)னை
உள்ளம் பத்திரமாய் வளர்த்துவர
வாடிய வயிறு கேட்கிறதென்னை
உன்னுயிர் எப்போது உள்ளே வளருமென்று????


உன் ஆண்மையின் அண்மையில் மெழுகாய் கரைந்து
உருகி வழியுமிந்த பெண்மையினுள் உன்னுயிர் நிரப்பி
துடிக்குமென் ஜீவனை சாந்தப்படுத்த நீ முயற்சி செய்....!


அதை விடுத்து,
இதென்ன அனர்த்தமென
சொல்லி விலக நீ நினைக்காதே
காரணம்,
இதுதான் காரணமென வரையறுத்து காதலிக்க என் காதலொன்றும்
சாதாரணவொன்றல்ல...!
வித்தியாசமாயெழுதுமிந்த வித்தியாசமானவனை காதலிக்கும்
வித்தியாசமான காதல்...!!!
விநோதமானதுங் கூட...!!!



--------------------------------------


மறுநாள் காலையில் போலீஸ் கிளம்பிக் கொண்டிருக்க அவள் முன் வந்து நின்றாள் நிவேதிதா.


"என்ன ரவுடி"


"நான் வீட்டுக்குப் போறேன் போலீஸ்"


"எதுக்கு ரவுடி"


"எல்லாரும் என்னைப் பத்தி கவலைப்படுவாங்க"


"உன்னைப் பத்தி கவலைப்பட அங்க யாரிருக்க ரவுடி..."


"அவர் போன் பண்ணிட்டே இருக்கார் போலீஸ். நான் கிளம்புறேன்"


"அவர்கிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க ரவுடி"


"இல்லை அது வந்து..."


"நான் என்ன சொன்னேன்னு மறந்துட்டயா என்ன? திரும்பி உங்க வீட்டுக்குப் போனா உனக்கு அந்த நினைப்புத்தான் வரும். கொஞ்சம் நீ பழையபடி மாறணும். அதுக்கப்பறம் தான் வீட்டுக்கு போக முடியும். அதுக்காக அந்நியன் மாதிரி ஆக்ட் பண்ணக் கூடாது.. புரிஞ்சதா?" என்று சொல்ல அவளோ தலையை ஆட்டியபடி "அது Multiple personality disorder...அதை எதுக்கு??? ஓ....ம்ம் புரியுது.." என்று அவள் சொல்ல

அவளோ அந்த வரியின் தாக்கத்தில் ஒரு நொடி மௌனித்து விட்டு "அப்பறம் ரவுடி என்னோட மொபைலை டேபிள் மேலயே வச்சுட்டேன் எடுத்துட்டு வர்றயா" என்று கேட்க அவளும் சென்று அவளது மொபைலை எடுத்தாள். அவள் விரல் பட்டு தொடுதிரை ஓர் உருவத்தினைக் காட்ட அவளோ "ஏய் போலீஸ்" என்று கத்தினாள்.


"என்ன ரவுடி"


"இது யார்??? போலீஸ்"


"ம்ம் என் லவ்வர்"


"சீரியஸ்லி..!!!"


"எஸ், நான் போய் பொய் சொல்லுவேனா அதுவும் என் பட்டு ரவுடி கிட்ட"


"இது எப்போயிருந்து என்கிட்ட நீ சொல்லவே இல்லை பாத்தியா"


"கொஞ்ச நாளாதான்"


"பேர் என்ன?" என்று அவள் வேகமாய் கேட்க அவளோ "வாசுதேவ நாராயண அநிருத்தன்" என்றாள்..


"போலீஸ்??? ரைட்டர் தானே???...காலேஜ்ல இருக்கும் போதே இவங்க ஸ்டோரிஸ் பத்தி தானே பேசுவ அவங்களா?... போட்டோ இப்போத்தான் பாக்குறேன் நல்லா இருக்காங்க... நீயும் அவங்களும் பெர்பெக்ட் மேட்ச்" என்று சொல்ல அவளோ சிரித்தபடி "உள்ளே என் ரூம்ல வாசுவோட புக்ஸ் எல்லாம் இருக்கும். நீ அதையெடுத்துப் படி... நீ ரொம்ப பெட்டரா பீல் பண்ணுவ" என்றாள்.


"சரி போலீஸ் நான் படிக்கிறேன்" என்று அவள் சொல்லவும் சு...தா அவளிடம் சொல்லிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள்.


உள்ளே நுழைந்ததுமே அவளை கமிஷ்னர் அழைக்க அவளும் அங்கே சென்றாள்.


"ஒரு முக்கியமான கேஸ்... அதை நீதான் ஹேண்டில் பண்ணனும்"


"சொல்லுங்க சார்..."


"ஒரு விஐபி மிஸ்ஸிங். இன்னும் யாருக்கும் தெரியாது. அதுக்குள்ள நாம கண்டுபிடிச்சுடணும்" என்று கமிஷ்னர் சொல்லவும் "சரிங்க சார் நான் பாத்துக்கிறேன்" என்றாள் அவள்.


"அவர் ஒரு பேமஸ் ரைட்டர். இப்போ அவரோட ப்ரண்ட் தான் சீக்ரெட்டா கம்ப்ளையிண்ட் பண்ணியிருக்கார். அவர் எப்பவும் ஸ்டோரி எழுத வேற வேற ப்ளேஸ்க்குத்தான் போவாராம்... இந்த தடவை போனவர்கிட்ட இருந்து எந்தவித இன்பர்மசேனும் வரவே இல்லையில்லையாம்" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் "எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்றவாறு உள்ளே நுழைந்தான் விஜய்.


இருவரையும் பார்த்து சல்யூட் அடித்தவன் "சார் கூப்பிட்டீங்களாமே" என்றான்.


"எஸ் விஜய்.. மிஸ்ஸிங் கேஸ். மேடத்துக்கு நீங்க ஹெல்ப்பா இருங்க இந்த கேஸ்ல" என்று சொல்ல அவனும் "ஷ்யூர் சார்" என்க அவளோ "அந்த ரைட்டர் நேம் என்ன சார்" என்றாள்.

அவள் மனதில் ஒரு பதில் இருக்க அதையே அவரும் சொல்லுவாரோ என்ற எதிர்பார்ப்பால் அவள் புருவம் சுருங்கி பார்த்திருக்க "வாசுதேவ நாராயண அநிருத்தன்" என்று அவள் எதிர்பார்த்த அந்த பெயரையே அவரும் சொல்லிவிட்டார்.

அதைக் கேட்டவள் பட்டென்று "என்ன" என்றபடி கத்த அவளின் அதிர்ச்சி கலந்த முகத்தினைப் பார்த்ததும் விஜய்க்கே முதலில் ஒன்றும் புரியவில்லை...


"மேம்" என்று அவன் முழிக்க "சாரி" என்று அமர்ந்த அவள் முகம் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டது.

அதைக் கண்ட கமிஷ்னர்
"எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி.. ஏற்கனவே உனக்கு வாசுதேவனைப் பத்தி தெரியுமா?" என்று கேட்க அவளோ "ம்ம் அவரோட புக்ஸ் நான் படிச்சுருக்கேன் சார்" என்றாள்..


"ஓகே ஓகே இப்போதைக்கு அவர் எங்கன்னு நாம சீக்கிரமே கண்டுபிடிக்கணும்..." என்று சொல்லவும் "ஓகே சார்" என்று சொன்னவள் வேகமாய் தன்னிடத்திற்கு வந்தாள்...


அவளையேப் பார்த்தபடி பின்னாலே வந்த விஜய் "மேம்" என்று பலமுறை அழைத்தும் அவளிடமிருந்து பதில் வரவில்லை...


"மேம்" என்று இம்முறை அவன் சத்தமாக அழைக்க அவள் "வாசு இதென்ன புதுப் பிரச்சனை. அதுதான் உங்க ஸ்டோரியில எழுத்துக்களோட உணர்வுகள் எல்லாம் வேற மாதிரி வருதா? இதுக்கெல்லாம் யார் காரணம். இத்தனை நாள் இதைக் கூட நான் தெரிஞ்சுக்காம போய்ட்டேனே" என்று புலம்ப அது தெளிவாகவே அவனுக்கு கேட்டது.


உடனே அவன் "மேம்" என்று மீண்டும் அவளை அழைக்க அவள் அதன்பின்னரே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.


"என்னாச்சு மேம்"


"நந்திங் விஜய் நீங்க கிளம்புங்க" என்றவள் போனை எடுத்துக் கொள்ள அந்த நொடியில் அவள் போனில் இருந்த அந்த புகைப்படம் அவன் கண்ணில் பட்டுத் தொலைத்து அவனை மிகவும் யோசிக்க வைத்தது...


இவன்தானே வாசுதேவ நாராயண அநிருத்தன். இவன் போட்டோவை மேம் ஏன் வச்சுருக்காங்க?... இந்த மேடம் நடந்துக்கிறது வித்தியாசமா இருக்கே. ஒருவேளை இவன் காணாமப் போனதுக்கும் இவங்களுக்கும்... ச்சே ச்சே அப்படி இருக்காது. ஒருவேளை அப்படியும் இருக்குமா??? என்றவனின் முகம் பலவித யோசனையை தத்தெடுத்திருந்தது.

இனி என்னெல்லாம் நடக்கப் போகிறதோ...