அத்தியாயம் 28
சு...தா பேசியதும் அரவிந்த் அவனது மொபைலில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தான். முதலிரண்டு தடவை அழைப்பு நிராகரிக்கப்பட இருந்தும் மனம் தளராது அவன் முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவன் அழைப்பு எதிர்ப்பக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட அவன் பேசினான்.
அவன் முகத்தில் சின்னதாய் புன்னகை... சின்னதாய் கோபம்... சின்னதாய் தவிப்பு... சின்னதாய் பதட்டமென எல்லாமே இருக்க முகத்தில் இருந்து வியர்வை அந்த அறையின் மெல்லியதான குளிரையும் மீறி வெளி வந்து கொண்டிருந்தது.
பேசி முடித்து வைத்தவன் ஷ்ப்பா கஷ்டம் டா என்று தன் முகத்தினை துடைத்துக் கொண்டான்.
அன்று மதியமே ஆபிஸில் இருந்து அவசர அவசரமாக சு...தா செல்ல அதை விஜய் தூரத்தில் இருந்தபடியே பார்த்துவிட்டான்.
இருந்தும் அவன் இதில் தலையிட வில்லை. காரணம் அவள் மீதிருந்த அந்த மரியாதை.. அது கெடும் அளவிற்கான காரியத்தினை அவள் ஒருபோதும் செய்ய மாட்டாளென அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
வண்டியினை எடுத்துக் கொண்டு அவள் விரைந்தாள் அந்த சாலையில். மனம் முழுவதும் வாசுதேவனைக் குறித்த சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது. விரைவாக சென்ற காரணத்தினால் அந்த வீடும் வந்துவிட்டது.
வண்டியிலிருந்து இறங்கியவள் வேகமாய் அந்த வீட்டின் கதவினைத் திறந்து உள்ளே நுழைந்தாள். அவள் கண்கள் அந்த வீட்டினையே நன்றாக அலச சாப்பாட்டு மேசையில் கவிழ்ந்தபடி இருந்த வாசுதேவ் தென்பட்டான்.
உடனே பதறியவள் "வாசு" என்றழைத்தபடி அவனை நெருங்கினாள். அவன் முகத்தினை நிமிர்த்தி அவள் கன்னத்தினை தட்ட அவன் தலையோ மயக்கத்தில் ஆடியது. தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தும் அவனால் மயக்கத்தில் இருந்து வெளிவர இயலவில்லை.
"வாசு வாசு இங்கபாருங்க" என்று அவள் அவனைத் தட்ட அவள் தொடுகையிலும் குரலிலும் அவன் மெதுவாய் "சுஜாதா... என்னைத் தொடாதே... நீ அடுத்தவன் மனைவி அந்த அரவிந்த் மனைவி" என்றான் முணங்கலாய்..
அரவிந்தின் மனைவி என்ற சொல்லில் அவள் தேகம் யூனிபார்ம் போல் விரைப்பாய் இறுக அவள் நெற்றி சுருங்கியது.
"என்ன சொல்லுறீங்க வாசு..." என்று அவள் கேட்க "ஆமா நீ அரவிந்த்க்கு தான் சொந்தம்.. என்னால இந்த காதலை முழுமனசோட ஏத்துக்க முடியலை.. ஐ யம் சாரி சுஜாதா... ஐ லவ் யூ... பட் ஐ காண்ட்.." என்றவனின் தேகம் நடுங்கியது அவளுக்குத் தெரிந்தது.
அவன் நிலையினை உணர்ந்தவள் அவனைத் தூக்கிக் கொண்டாள்.
அந்த வீட்டினை விட்டு வெளியேறி அவள் வண்டியில் அவனைப் படுக்கவைத்துவிட்டு வண்டியினை எடுத்தாள்...
தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றவள் அவனை படுக்கையில் கிடத்திவிட்டு அவன் முகத்தில் இருந்த வியர்வையினை துடைத்து விட்டு மின்விசிறியினை போட்டு விட்டாள். அந்த காற்றில் அவன் நெற்றி முடி எழிலாய் ஆட அதில் ஒரு கணம் மயங்கியவள் தலையினை உதறிவிட்டு அந்த அறையினை பூட்டிவிட்டு வெளியே வந்தாள்.
அந்த அறையின் வெளியே இருந்த சோபாவில் அமர்ந்தவள் முகம் வேதனையினை பிரதிபலித்தது. என்ன செய்வது என்று அவளுக்கு புரியவே இல்லை. நேரம் வேகமாய் நகர எங்க இந்த அரவிந்த் இடியட் இன்னும் வரவே இல்லையே என்று அவள் வாசலை நோக்கி வர அதற்குள் அவன் வண்டி வாசலின் முன் நின்றது.
"என்ன போலீஸ் மேடம் தூக்கிட்டயா..."
"ம்ம்.. ஆனா மயக்கத்துல இருக்கான் டா... சீக்கிரம் போய் பாரு"
அவன் அவனைச் சோதித்துவிட்டு "ஹெவி டோஸ் மா... கண் முழிச்சு தெளிவா சிந்திக்க கொஞ்ச நேரம் ஆகும்... அடிக்கடி மருந்து குடுத்ததால இப்போ பாடி கண்டிசன் கூட வீக் தான் மா.. இரண்டு மூனு நாள் புல் ரெஸ்ட் இருந்தா எல்லாமே நார்மல் ஆகிடும். அதுவரைக்கும் ஜாக்கிரதையா பார்த்துக்கணும்" என்று அவன் சொல்ல அவளோ சோர்ந்து போய் அமர்ந்தாள்.
"ஏய் என்னாச்சு சிங்கப் பெண்ணே"
"நந்திங் அரவிந்த்"
"எல்லாமே சரியாகிடும் டா.. கவலைப்படாதே"
"கவலைப்படலை.. ஆனா இது நான் சுத்தமா எதிர்பார்க்கலை டா..."
"ம்ம் புரியுது... அண்ட் இன்னொரு விசயம் இருக்கு... மேலிடம் எப்படியும் கோபமா இருக்கும்... என்ன செய்யன்னு புரியலை.." என்று அவன் பேசிக் கொண்டிருக்கையிலே அவன் முணங்குவது இருவருக்கும் தெளிவாக கேட்டது...
இருவரும் உள்ளே சென்று பார்க்க அவன் சொன்னது "நீ அரவிந்த்தோட மனைவி.. அரவிந்த்... அரவிந்த்... மனைவி" என்பதைத்தான்...
"ஏய் என்னடி இது... என்ன நடக்குது..." என்று பலத்த அதிர்ச்சியுடன் அரவிந்த் கேட்க "ம்ம்...உன் மூஞ்சி.. வந்து என்கிட்ட கேளு.. ஆளைப் பாரு நானும் உன்னை மாதிரிதான் டா புரியாம நின்னுட்டு இருக்கேன்... " என்றாள் அவள் கடுப்பில்.
"அரவிந்த் வொய்ப்புன்னு இவன் யாரை சொல்லுறான்..." என்று அவன் குழப்பமாய் கேட்க அவன் குழப்பத்தினைத் தீர்க்கும் பொருட்டு அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்.
"சுஜாதா... உன்னளவுக்கு என்னால் காதலிக்க முடியுமா என்றெனக்குத் தெரியாது... ஆயினும் நானும் காதலித்தேன். நான் உருவாக்கிய கற்பனை சுஜாதாவினை விட உன்னை காதலித்தேன்... எழுத்தும் அவளும் மட்டுமே என்னுலகமாயிருக்க அதனுள் புதிதாய் நீயும் வந்தாய்... நிழலினை துரத்திவிட்டு அவ்விடத்தில் நீ வந்து நின்றாய்... உன் உணர்வுகள் புரிந்தும் என் மனநிலை தெரிந்ததால் ஏற்றுக் கொள்ளவே நான் நிறைய போராட வேண்டியிருந்தது.
இறுக்கமாய் நானிருக்கும் நேரமெல்லாம் உன் இதயச்சூட்டினை என் வசமளித்து எனை இளக்க நீ செய்த முயற்சியினை பெருங் கஷ்டப்பட்டே நான் முறியடித்தேன். ஆயினுங் கூட அசால்ட்டாக மறுபடியும் மறுபடியும் நீ என்னை இளக்கி உருக வைத்தாய்..
கற்பாறையாய் இருந்த என்னுள் சின்னதாய் கசிந்துருக்கும் ஈரமாய் நனைத்து நனைத்து சிலிர்க்க வைத்தாய். உன் காதலையெல்லாம் என் காலடியில் கொட்டி கொட்டி எனை கடவுளாய் உணர வைத்து நீ காட்டும் அன்புக்கு நான் தகுதியானவன் தானா என்று நினைக்க வைத்து.... இல்லை, தகுதியானவன் இல்லை என்று விலகவும் வைத்தாய்...
இப்படி புத்தியோடும், மனதோடும், உன்னோடும் நான் பட்ட இம்சைகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாது சுஜாதா... எனக்குத் தெரியும் காதலின் வலிபற்றி, அதன் ஆழம் பற்றி. காரணம் காதலினை அனுபவித்தே ஒவ்வொரு எழுத்தினையும் நான் எழுதியிருக்கிறேன். ஆனால் உன் காதல் எனக்கு முழுதும் புதிது...
எது காதல்...
இது,
இதுதான்,
இல்லை அது,..
அதுதான்,
உருவங்கொண்டது,
உருவமற்றது,
அதீத அன்பு,
அக்கறை,
அளவில்லாத ஈடுபாடு,
நேசம்,
இவன் மேல்கொண்ட பாசம்,
பக்தி,
காமம்..... எதுதான் காதலென்ற என் கேள்விக்கு உன்னிடம் இத்தனை பதில்கள்... ஆச்சர்யம்தான் எனக்கு... கேட்டால் என் காதலினை எந்த சட்டத்திற்குள்ளும் அடக்க முடியாதென பேசுவாய்...!
என்னெழுத்தின் ஈர்ப்பில் என்னோடு ஒட்டியதாய் சொன்னாய்... இருந்தும் இப்போதிவன் மனம் உன்னோடு ஒட்டிக்கொண்டே வர மாட்டேடென அடம் பிடிக்கிறதே இதற்கென்ன சொல்லப் போகிறாய்...!!!
தாய் மடி விட்டகன்று தனியாய் இருந்தவனை முதன்முதலாய் மடிதாங்கி தாரமாய் மாறுமுன்னே தாயாகினாய்..
அந்த கணத்தில் அன்னையின் வடிவம்தனை அத்தனை ஆண்டுகள் கழித்து உன் வதனத்தில் கண்டேன்...
அன்னையின் பாசத்தினையும் எனக்களித்து என்னை தாங்கி என் வேதனை தீர்த்து... கடைசியில்... அந்தவொரு நிமிடம் என் வாழ்வில் வந்திருக்கவே கூடாதென்று நினைக்குமளவுக்கு எல்லாம் நடந்தேறி விட்டது...
உன் கழுத்தில் மாங்கல்யத்தினை கண்ட மாத்திரத்திலே மனதளவில் என் காதல் மரித்துப் போன ஒன்றாய் மாறிவிட்டது... அவ்வளவுதானா என்ற ஏமாற்றம்.. வலி... யாரோ உயிரோடு என் இதயம் தனை வெளியே பிய்த்தெறிந்தது போல் ஓர் உணர்வு.. உன்னிடம் கேட்டால் சாதாரணமாக ஆமாம் என்று சொல்கிறாய்... என்னால் தாங்க முடியவில்லை சுஜாதா.
சற்று முன் நான் உறவாடிய இடம் அதில் உரிமையாய் அந்த தாலி ஆக்ரமித்திருக்க என்னால்.... என்னால்... எப்படி அங்கே உரிமை கோர முடியும்... தோற்றுப் போய் திரும்பிவிட்டேன்...
இது தவறென புத்தி தயங்காமல் என்னை இடித்துரைக்க மனமோ அவளில்லாது உனக்கு வாழ்வில்லை என அடித்துச் சொல்ல புத்தியா, மனமா... என்று புரியாது, என்ன செய்ய, ஏது செய்ய என்று அறியாது உன்னிடம் கூட வன்முறையில் இறங்கிவிட்டேன்.
என் கோபம் கண்டு நீயே விலகி விடுவாய் என்று நினைத்தால் நீ அப்போதும் கூட வலியைக் காட்டாது வழி விட்டகலாது நிற்கிறாய். அதுசரி நீ பெண்ணல்லவா... உன்னிடம் அந்த வலிமை இல்லாதிருந்தால் தான் ஆச்சர்யம்...!!!
ஆனால், இதை ஏற்றுக்கொள்ள திடமில்லாது நான் தான் திண்டாடித் துடிக்கிறேன் சுஜாதா.. அரவிந்த் போட்டோவைப் பாசமாய் நீ பார்த்த அந்த பார்வையில் என் மனம் வலித்தது. அந்த வலியினை உன் போல் தாங்கிக்க எனக்கும் சொல்லித் தருகிறாயா...
இதென்ன இவன் மாறி மாறி பேசுகிறான் என்று எண்ணாதே... காதல் கொண்ட மனமல்லவா.. அது அப்படித்தான் உளரும்... எது எப்படியோ உன்னிடம் எனக்கெந்த உரிமையும் இல்லை. அதெனக்கு நன்றாகவே புரிகிறது...
அந்த தாலி என்னை எட்டியே நிற்கும் படி எப்போதும் நினைவுறுத்துகிறது... அதையும் மீறி என்னால் உன்னோடு.....ம்ஹூம் முடியாது முடியவே முடியாது...சாரி சுஜாதா... நீ அடுத்தவன் மனைவி... அந்த அரவிந்தின் மனைவி" என்று மயக்கத்திலே பேசிக் கொண்டிருந்த வாசுவின் மூடியிருந்த விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்தது...
இதைக் கேட்டதும் அரவிந்த் "அய்யோ தலை சுத்துது...." என்று தலையைப் பிடிக்க "இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா நான் சுத்த வைக்கவா அரவிந்த்" என்ற சத்தத்தில் இருவரும் அங்கே ஒருசேர திரும்பிப் பார்த்தனர்....