• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் - 29

அங்கே அவர்களினெதிரே சுஜாதா நின்றிருந்தாள். அவள் முகத்தில் அந்த ப்ளாஸ்டர் எடுக்கப்பட்டு இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.

"ஏய் லூசு சுஜாதா என்ன பண்ணி வச்சுருக்க" என்று அவன் சொல்லியபடி அவளருகே வந்தான்.

"அங்கயே நில்லு அரவிந்த்"

"சுஜாதா ப்ளட் வருது.. ரொம்ப.."

"பரவாயில்லை நான் தாங்கிப்பேன் அரவிந்த்"

"அதெனக்குத் தெரியும். என்னால தான் தாங்க முடியலை.. ப்ளீஸ் எனக்காக. உன் அரவிந்த்காக" என்று சொன்னவனின் முகத்தில் இருந்த பாவத்தில் சுஜாதா தன்னை மறந்து அமைதியாய் நின்று விட்டாள்.


இவன் மருந்து போட்டு கட்டிவிட்டு "ஏன் சுஜாதா மா இப்படி பண்ணுற.. உன்னை நீயே ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிற டா" என்று அவன் பேச "புரியுது. ஆனா இப்படியே இரு.. அவன் கூடவே இருன்னு தான என் உயிர் உடல் எல்லாமே அடிச்சுக்குது டா" என்றாள் அவள்..

"பையித்தியம் மாதிரி உளராத.. நீயொரு டாக்டர். கொஞ்சமாவது பொறுப்போட நடந்துக்கோ" என்று கோபமாய் அரவிந்த் சொன்னதும் "இப்போ நான் லவ் பண்ணதால என்னோட பொறுப்பு என்ன கெட்டுப் போச்சு. அவனும் சரி நீயும் சரி மாத்தி மாத்தி ஏன் இதையே சொல்லுறீங்க. இந்த காதலால என்னோட வேலையை நான் என்னைக்காவது மிஸ் பண்ணியிருக்கேனா.. அதுல நான் பெர்பெக்ட்டா தான இருக்கேன்" என்றாள் பட்டென்று.


"நீ ரொம்ப பெர்பெக்ட் தான். எதையும் மிஸ் பண்ணலை. பட் நீ ரொம்ப மாறியிருக்க. இந்த மைண்ட் உன்னோட வேலைக்கு நல்லதே இல்லை. கூடவே உன்னோட ஹெல்த்துக்கும் நல்லதில்லை...அது உனக்குப் புரியவில்லையா இடியட். ஒழுங்கா உன்னோட இந்த பையித்தியக்காரத்தனத்தை விட்டுட்டு அந்த வாசுதேவனையும் விட்டுட்டு வேலையைப் பார்..." என்றான் அரவிந்த்.

அவனன்றி இவளில்லை
என்கிறேன்...
அவனை விட்டு
வேறு வேலையை பாரென்கிறாய்...!!!

சொல்லுமுனக்கு தெரியாதே
அவன் மேல் நான் கொண்ட பையித்தியத்தின் அளவு
தெரிந்தாலுமிதை புரிந்துகொள்ள உன்னால் இயலாது...!

நெற்றியில் பட்ட காயம் தான் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர என்னகத்தில் அழியாத காயமாய் இருப்பது உனக்குத்
தெரிய வாய்ப்பே இல்லை...!

அவன் நினைவினை
அனுதினமும் நிரப்பி நிரப்பி வழியுமெனது இதயம்
இத்தனை சுமை எங்கனம் தாங்குவேனென என்னை
கேட்டாலும் அதனைத் திட்டி திட்டியே
இன்னமும் அவனை நிரப்புகிறேன்...

சுமை தாங்காது வெடித்தாலும் பரவாயில்லை என்பதேயிவள் எண்ணம்..!
எல்லாமே அவனாகவே
என்னெதிரே இருக்க
எல்லாவற்றிலும் அவனையே நானுணர அவனன்றி அவனியையே ஈடாய் தந்தாலும் வேண்டாமெனக்கு...!

நித்தமும் நினைவில்
நீங்காது அவனோடு நானிருக்க
நிஜத்தில் விலகியதாய்
தோன்றினாலுங் கூட
அவன் பக்கமாகத்தானிருக்கிறான்...
காரணம் அவன் 'பக்கத்திலே' நானிருப்பதால்...!!!

அவனுக்கு காதலில்லை
நீ செய்வது காதலே இல்லையென
எவரேனும் சொன்னால்
காதலுக்கான விளக்கம் உங்கள் பார்வையில் தான் தவறாக இருக்கிறதென்று அர்த்தம்....!!!

அவனை அறிவதற்கு முன் அவனெழுத்தை அறிந்தேன்..! அவ்வெழுத்தெல்லாம் உயிர் கொண்டு உள்ளுக்குள் இறங்கையில்
அவனையே உணர்ந்தேன்...!

இப்போது,
அவன் பாதி
அவனெழுத்து மீதியென யென் தேகத்துனுள் சிறைபட்டிருக்கும்
உயிர் மாறியிருக்க
அதன் பரவசத்தில்
சிலிர்த்து சிறகடிக்கும்
இந்நிலையே காதல்...!!!

அவன் பதிலனுப்பிய செய்தியை
பத்தாயிரம் முறை படித்தும்
புதிதாய் படிக்குமு ணர்வில் படித்து கிறங்கி அதை பத்திரமாய் அகத்தினுள் சேமிக்கும் என்நிலையே காதல்...!!!

அவன் மீது கொண்ட மயக்கம்தனை அவனுக்கும் கடத்தி
அவனையே கடத்தி
அவனோடு இருக்க
நினைத்த மனதினை,
தேகத்தினை
ஆறுதல்படுத்திய இந்நிலையும் காதல்...!

என்னெழுத்தால்
என்ணெண்ணத்தால்
என் அன்பால்
என் காதலால்
அவனை என்னவனாய் மாற்றி
என் மடியில் தாலாட்ட
மடி முட்டும் கன்றாய்
ஏக்கத்தோடவன்
இருந்த நிலையும் காதல்...!!

இடையில் மீண்டும்
அவனிறுகி விலகியோட
விடாதென்னை அவனோடு இறுக்கும் முயற்சியில் இருக்குமிந் நிலையும் காதல்...!!!

உள்ளுக்குள் சென்ற
உணவனைத்தும் உயிர்சக்தியாய் உறிஞ்சப்படுவதைப் போல்
அவனெழுத்து
விழியில் நுழைந்து
உயிரையே உறிஞ்சி
அவனோடு சேர்த்துக் கொண்டு
ஜாலம் செய்ய
அவனும் வேண்டாம்
அவனெழுத்தும் வேண்டாமென தூக்கியெறிந்தாலும்
திரும்ப திரும்ப வந்து
காலைத் தழுவும் அலையாய்...
மார் கண்ட மழலையாய்
கவ்வியிழுக்கும் அவ்வெழுத்தில்
அவன் நினைவில்
தடுமாறாது தடம்மாறாது நிற்க நானென்ன அவனா???....

இருந்தும்,
இவள் எதிர்பார்ப்பெல்லாம்
அவன் இளகி
இவளோடு சேர்ந்தே
உருகுவான் என்பதே...!!?


"சுஜாதா நீ என்னதான் கவிதையா பேசுனாலும் சரி.. நீ பண்ணி வச்சுருக்க இந்த கிறுக்குவேலைக்கு அவன் சத்தியமா ஏத்துக்க மாட்டான்" அரவிந்த் காட்டமாய் உரைக்க "ஏத்துக்குவான்" என்றாள் இவள்.


"அரவிந்த் நீ பேசாம இரு.. சுஜாதா என்னதிது நீ எவ்வளவு மெச்சூர்ட். இந்த விசயத்துல மட்டும் ஏன்டி இப்படி இருக்க..." என்று அவள் கேட்க சுஜாதா திரும்பி போலீஸ்க்காரியினைப் பார்க்க "என்ன பார்க்குற... அவன் மயக்கத்துல இருந்தாலும் அவன் மனசுல நீ அரவிந்தோட வொய்ப்பா தான் இருக்க அப்படியிருக்கும் போது எப்படி வாசு உன்னை ஏத்துக்குவான்..." என்றாள்.

"அந்த நினைப்போடவே அவன் ஏத்துக்குவான்"

"முத்திப் போயிடுச்சு... நீ பேசாம கிளம்பு வாசு இங்க இருக்கட்டும்"

"அப்படி விட்டுட்டுப்போறதா இருந்தா நான் எப்பவோ விட்டுட்டுப் போயிருக்கணும்... அவனை கடத்திட்டு வந்து இவ்வளவு ஆனபிறகு விட்டுட்டு போனா அது என் உயிர் போறதுக்குச் சமம்..."

"இடியட் உனக்கு சொன்னா புரியாது. இதென்ன இப்படியே ஏத்துக்கணும் அப்படின்னு பையித்திக்காரத்தனமா அடம்பிடிக்குற. கொஞ்சமாவது அவனோட சூழ்நிலையை நினைச்சுப் பாரு... "

"அதை என்னை விட யாரும் நல்லாப் புரிஞ்சுருக்க மாட்டாங்க"

"தெரிஞ்சுமா நீ இப்படி நடந்துக்கிற சுஜாதா.. வேண்டாம்"

"இல்லை சுஜீ எனக்கு அவன் வேண்டும். நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். அவன் நான் இல்லைன்னா ரொம்ப பீல் பண்ணுவான் சுஜீ.. உனக்கது புரியாது.. "

என்ன சொன்னாலும் பதிலுக்கு பதில் சொல்லும் அவளருகே "சுஜாதா மா" என்றபடி அரவிந்த் வர "அரவிந்த் அவளை விடு அவ நாம சொன்னா கேக்க மாட்டா. நீதான சொன்ன வாசுவோட பிரசன்ஸ் அவனோட பேச்சு அவனோட காதல்தான் சமாதானப்படுத்தும்னு. அப்போ அவனே இவளை சரிபண்ணுவான் நீ விடு.." என்றாள் சு... தா

"ஏய் நீ என்ன சொல்லுறடி" என்று அரவிந்த் சு...தாவினை பார்க்க "அதான் விடுன்னு சொன்னேன்ல.. நீ பேசாம வா அரவிந்த்" என்று அவனை அழைத்துக் கொண்டு அவள் வெளியேறி விட சுஜாதா அங்கே வாசுவின் அறைக்குள் நுழைந்தாள்.


மயக்கத்தில் அவன் முகம் மிகவும் சோர்ந்திருக்க அதைக் கண்டவள் மெதுவாய் அவன் அருகில் அமர்ந்தாள்.

"சாரி VNA. உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திறேன்ல. என்ன பண்ண என்னால என் மனசுல இருக்குறதை மறைக்க முடியலையே... உனக்கு என்கிட்ட பேசவே பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை. ஆனா நீ என் எதிர்லயே இருந்தா அதுவே போதும்... அப்படின்னு நான் சொல்ல மாட்டேன் VNA. எனக்கு நீ வேணும் எப்படின்னா. என்னோட உயிராய் எனக்குள் உயிராய் நீ வேண்டும். உன்னோடு வாழுமந்த வாழ்க்கை கற்பனையில் நான் கண்டதினை போல அழகாய் இருக்க வேண்டும்.சிதறிக் கிடக்கும் நட்சத்திரமாய் சிதறி நிற்குமிவளை சிந்தாமல் சிதறாமல் நீயள்ளிக் கொள்ள வேண்டும்... இரவெல்லாம் உனையே உணர்ந்து நான் ரசிக்க வேண்டும். விடிந்தாலுங்கூட உனையே உடுத்திக் கொள்ள வேண்டும்... திகட்டத் திகட்ட... கூடவே திகட்டாத அளவிற்கு என்னை உனக்கும் உன்னை எனக்கும் தந்து நீ நானாய் நான் நாமாய் மாற வேண்டும்... உன்னுயிர் என் வயிற்றில் வளர உன்னோடு சேர்ந்து அதை ரசிக்க வேண்டும்... நான் கொண்ட ஏக்கமனைத்தையும் அம்மழலை முகங் கண்டே தீர்க்க வேண்டும். ஆணோ பெண்ணோ உன் அச்சில் பிறக்கும் அக்குழந்தை உன்னைப் போலவே இருக்க வேண்டும். உனக்குள் அது தாய்மை ஊற்றை உருவாக்க வேண்டும்...

இரவின் பிடியில்
இதழ்கள் நான்கும்
இடித்துக் கொள்ள
இதழ் நீரனைத்தும் இதமாய்
இருவரையும் நனைத்தே
இதழினுள் சென்றிட,
இதழ்கள் சண்டையிட்டே,
இன்னும் வேண்டுமென
இணையை கவ்விக் கொள்ள,
இது தருமின்பம் போதாதென,
இருநாவும்
இன்னுமின்னும்
இச்சிக்கு மின்னேரம்
இதுதான் காமமென
இவன் சொல்லித்தர...
இவளதை கற்றுத் தன்
இடையின் கீழுள்ள
இதழ்வெளி பிளந்து
இவளுக்குத் தேவையானதை
இறைஞ்சிக் கேட்டிட-
இவனோ
இமைக்க மறந்து,
இவளின் பிளவில்
இலகுவாய் இறங்கிட-அவளும்
இதழ்பிளந்து,
இவனை முழுதாய் முழுங்கிட...
இன்பம் இன்பமென
இரவே அலறித் தீர்ந்திட...
இருந்தும் இருவரிடத்தில் மட்டும்
இன்னுமந்த மயக்கம் தீரவேவில்லை..!!!


அந்த கற்பனையிலே அவள் மூழ்கி கிடக்க "சுஜாதா" என்ற அவன் குரல் சன்னமாய் அவள் காதினில் வந்து விழுந்தது.
"வாசு" என்று அவள் உயிருகும் குரலில் அழைக்க அந்த அழைப்பில் அவன் உடம்பில் திடீரென ஓர் மாற்றம்.

அம்மா என்று அவன் இதழ்கள் மென்மையாய் ஒலியெழும்பியது...

அவன் தேகம் நடுங்கத் தொடங்க அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்திறான் என்று அவளுக்குப் புரிந்தது.

அவள் கரம் கட்டுக்கடங்காது அவனைப் போல் ஆடிக் கொண்டிருந்த கேசத்தினுள் நுழைந்தது. ஆறுதலாய் அவன் முடியினுள் விரல் நுழைத்து வருடியது அவனுக்குள் ஓர் வித உணர்வினை பாய்ச்சியிருந்தது...


"சுஜாதா" என்று அவன் ஏக்கமாய் அழைக்க அவன் தலையினை தூக்கி மடியின் மீது வைத்துக் கொண்டாள். அவளின் வாசம் நாசியில் நுழைந்த மறுகணம் அவன் கரங்கள் அவளை வளைத்துக் கொண்டது.

அந்த இறுக்கத்தில் அவள் தாங்க மாட்டாமல் அவன் கன்னத்தின் மீதே தன் கன்னத்தினை வைத்துக் கொண்டாள்.

வெம்மையான அந்த ஸ்பரிசம் மயக்கத்தினையும் மீறி அவனுள் உணர்வூட்ட.. அவன் தயக்கமாய் இமை பிரிக்க அதைவிட தயக்கமாய் இதழ்பிரிக்க அதற்கு மேல் தாளாமல் அவள் அவன் இதழுக்குள் தன்னையே புதைத்துக் கொண்டாள்.

சற்றுமுன் அவள் கற்பனையில் நினைத்தவையெல்லாம் இப்போது நேரிலே...

அவன் மயக்கம் அதிலே கொஞ்சம் கொஞ்சமாய் கனவைப் போல் கலையத் தொடங்க மங்கலாய் தெரிந்த உருவம் இப்போது சற்று தெளிவாகிட...

குனிந்தபடி அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்ததால் அவள் மாங்கல்யம் அவன் மார்பில் உரச.... அதில் அதிர்ந்து முற்றிலும் தெளிந்தே விட்டான் வாசுதேவ நாராயண அநிருத்தன்...(VNA)
 
Top