அத்தியாயம் 12
"நான் தனியா தூங்கி பழக்கம் இல்லையே!" கலா தூங்க சொல்லவும் ஹனிகா இவ்வாறு சொல்ல,
"எனக்கே வேற ஒன்னு வாயில வருது கலா... நீ என்னவோ பண்ணு" என்ற ஜெகதீசன் அதற்குமேல் அங்கு நடக்கும் ட்ராமாவை காணப் பிடிக்காமல் போய்விட,
"கழுத வயசாகுது... தனியா தூங்க முடியாதுன்ற.. உன் அப்பா வீட்ல என்ன பண்ணுவ?" அவருக்கும் கேட்டுவிட துடித்த நாவை கட்டுப்படுத்தி கலா இப்படி கேட்க,
"அங்கே நிறைய டெட்டி இருக்கு ஆன்ட்டி" என்ற பதிலில் தலையில் அடித்துக் கொண்டார்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல.. நானும் உன்கூட இருப்பேன்.. வா" - கலா.
"ம்மா! அப்பா நைட் எழுந்தா.. உங்களை தான் தண்ணீர் கொண்டு வா.. அது இதுனு தேடுவார். நீங்க போங்க.. திவி! நீ ஹனிகா கூட படுத்துக்கோ" கார்த்தி சொல்ல,
"உன்னையெல்லாம்..." என கலா கோபமாய் ஏதோ சொல்லவர,
"இல்லத்தை நானே இந்த பொண்ணோட படுத்துக்குறேன்" என்ற திவியையும் எங்கே போய் முட்டிக் கொள்வது என்பதை போல பார்த்தவர்
"உனக்கு போய் இவ்வளவு நேரம் சப்போர்ட் பண்ணினேனே" என அவளிடமே கூறியவர் "நாளைக்கு இவ சித்தப்பா வீட்டுக்கு இவளை பேக் பண்ணி அனுப்பிட்டு என்கிட்ட பேசு" என கார்த்தியிடமும் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.
"அது சித்தப்பா இல்ல ஆன்ட்டி மாமா" ஹனிகா திருத்த,
"எவனா இருந்தால் எனக்கு என்ன?" என கலா புலம்பியது நன்றாகவே மூவரின் காதிலும் விழுந்தது.
"சரி நீங்க போங்க" - கார்த்தி.
"கார்த்தி நீ தூங்க போறியா?" - ஹனிகா.
"எனக்கு ஒரு கால் வரணும்.. நீங்க போங்க.."
"இல்ல அதுவரை நான் கம்பெனி கொடுக்குறேன்" ஹனிகா சொல்லியதும் கார்த்திக்கு கொஞ்சம் நிறையவே எரிச்சல் வந்துவிட்டது. திரும்பி திவ்யாவின் முகத்தை பார்த்தான்.
இப்போது குழப்பம் ஏதும் அவள் முகத்தில் தெரியவில்லை. ஆனாலும் ஹனிகாவின் மேல் கொலைவெறி கோபத்தில் நிற்பதை நன்றாகவே புரிந்து கொண்டான்.
"திவி நல்லா பேசுவா ஹனிகா... அவ கூட பேசிட்டு இரு" என்றவன் திவ்யாவிடம் தலையசைத்து விடைபெறவும் மறக்கவில்லை.
அறையில் நடந்த அந்த நிகழ்விற்கு பின் இருவரும் மீண்டும் அதே அறையில் இன்றே சந்தித்து கொள்வதை நினைத்து மனம் லப்டப் என அடித்துக் கொண்ட நேரம் தான் ஹனிகா சொன்னதும் கார்த்தி போலவே யோசித்த திவ்யாவும் உடனே அவளுடன் தங்கிட சம்மதித்துவிட்டாள்.
"அப்புறம் உங்களுக்கு எந்த ஊரு? என்ன படிச்சிருக்கீங்க?" திவ்யாவே பேச ஆரம்பித்தாள்.
"கார்த்தி என்னை பத்தி சொல்லியிருப்பானே?"
"நாங்க ரெண்டு பேரும் எங்களைப் பத்தி தெரிஞ்சுக்கவே ஒரு வாரம் ஓடிடுச்சு.. அப்புறம் எப்படி வேண்டாம்...னு சொன்ன உங்களை ஞாபகம் வச்சு என்கிட்ட சொல்லுவார்?"
ஹனிகாவின் குணம் தெரியாது தான் என்றாலும் இதுவரை அவளை அறியவில்லை என்றாலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நமது குணத்தை நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்.. இதுநாள் வரை திவ்யாவிற்கு அது தெரியாது தான்.. ஆனால் தனக்கென வரும்போது புரிந்து தெரிந்து கொள்வது தானே மனைவியின் இயல்பு.
ஹனிகாவின் கேள்வியே அவளின் எண்ண ஓட்டத்தை கூறவும் திவியும் அதற்கு ஏற்றது போலவே பதிலடி கொடுத்தாள்.
"ஓஹ்ஹ்!" என்றவளின் முகம் உடனே சுருங்கினாலும் சரிசெய்து "ஆனா கார்த்திக்கு நான்னா ரொம்ப புடிக்கும்.. அடிக்கடி வெளில கூட்டிட்டு போவான்.. யூ க்நொவ்? அவனுக்கு பேமஸ் ஹோட்டல் சீ ஃபுட்னா ரொம்ப புடிக்கும்.. டெய்லியுமே அங்கே சாப்பிடுவோம்"
திவியை மனம் நோக வைத்திட வேண்டும் என்பதே தன் கடமை என்பதாய் ஹனிகா ஒவ்வொன்றாய் சொல்ல,
"அப்டியா? மேபீ அது விளையாட்டுத் தனமா வீட்டு அருமை தெரியாமல் இருந்ததினால இருக்கும்.. இப்பல்லாம் வீட்டு சாப்பாடு தான் அவருக்கு ரொம்ப புடிக்கும்.. டெய்லியும் ஷார்ப் டைம் ஆபீஸ் வீடுனு தான் இருக்காரு... அப்படியே நாங்க ரெண்டு பேரும் வெளில போனாலும் ஜாலியா சுத்திட்டு சாப்பிட வீட்டுக்கு வந்திடுவோம்.. தனக்கே தனக்குன்னு ஒருத்தி வந்ததும் அவருக்கும் பொறுப்பு வந்துடுச்சினா பார்த்துக்கோங்களேன்"
எந்த பக்கம் சென்றாலும் வாயால் சிக்ஸர் அடிப்பவளிடம் பேசி அதற்குமேல் பொறாமையில் ஏறிய தயாராய் இல்லை ஹனிகா.
"சரி எனக்கு தூக்கம் வருது.. குட் நைட்" - ஹனிகா.
"அட என்னங்க.. நாங்க ஹனிமூன் போன கதையை உங்ககிட்ட சொல்லலாம்னு நினச்சேன்.. சரி நாளைக்கு மார்னிங் அதை பேசலாம்" கலாவின் மருமகள் என நிரூபித்த தருணத்தை தனக்குள் எண்ணி தானே தன்னை நினைத்து பெருமிதம் கொண்டு படுத்துக் கொண்டாள் திவ்யா.
தான் வந்த திட்டம் நிச்சயம் நிறைவேறாது என்பதை அந்த நொடியே புரிந்து கொண்டாள் ஹனிகா.
அர்ஜுன்! ஹனிகா சொன்னது போல அவன் கெட்டவன் தான். தந்தை சொத்தில் பாதியை ஏமாற்றி ஓடியவன் தான்.. ஆனாலும் திரும்பி கார்த்தியிடம் இவள் வர காரணமே அவனின் குணம் தான்.
கார்த்தி உடன் இருக்கும் போது தெரியாத ஒன்று.. அவனை விட்டு பிரிந்து அர்ஜுனுடன் பழகி அதுவும் அவன் பணத்துக்காக மட்டுமே பழகி அவனை அறிந்து பிரிந்த இவளுக்கு அடுத்து இவளிடம் வந்தவர்கள் எல்லாம் இவள் அழகை மட்டுமே ரசித்து வழிய வந்த போது தான் கார்த்தியின் குணமே இவளுக்கு புரிந்தது.
அது தானே ஆண்மையின் அழகு? அத்தோடு குணம் மட்டும் இப்போதும் அவள் பார்த்திடவில்லை.. கார்த்தியின் திறமையும் தான்.. இவனால் நினைத்தால் ஒரு கம்பெனியை திறம்பட நடத்தும் திறமையும் உள்ளதே! சீக்கிரமே அவன் இலக்கையும் அடைவான்.
இதெல்லாம் முன்பே தெரிந்தது தான் என்றாலும் உடனே ஒருவனை திருமணம் செய்து சொகுசாய் வாழலாம் என தந்தை சொல்லும் போது ஏன் இவன் பின்னே செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு இரண்டே மாதத்தில் காலம் பதில் சொல்லியிருக்க, திருமணம் ஆகி ஒரு வாரம் தானே ஆகிறது? எளிதாய் தன் பக்கம் அவனை திருப்பிடலாம் என நினைத்தவளுக்கு கார்த்தியின் குடும்பம் எப்படியானது என்பதை ஒரே நாளில் காட்டியிருந்தனர்.
அதை விடவும் கார்த்தியின் கண்ணில் திவ்யாவின் மேல் இருக்கும் அன்பை கண்டவளுக்கும் திவ்யாவின் செயல்கள் புரிந்தவளுக்கும் இருவரின் பார்வை செய்திகள் தவிர இப்போது வேறெதுவும் யாரும் சொல்ல தேவையே இல்லை.
கார்த்தி ஏதோ முடிவுடன் தான் இன்று இங்கே தங்க தன்னை சம்மதித்திருக்கிறான் என புரிந்தும் கொண்டாள்.
ஹனிகா இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க திவி தனக்கு தானே சிரித்துக் கொண்டிருந்தாள். இவள் எப்போது ஹனிமூன் சென்றாளாம்? அந்த கதையை போயும் போயும் இவளிடம் கூற என நினைத்து தான் சிரித்தாள்.
யாரையும் வருத்தி என்ன ஒருவருக்கு எதிராய் பேசிக் கூட பழக்கம் இல்லை இதுவரை. இன்று கார்த்தியுடன் அவள் சேர்ந்து சுற்றியதை வேண்டுமென்றே சொல்லியதும் அவன்மேல் சுத்தமாய் கோபம் இல்லை.
அவனின் காதலை இவளுக்கு வார்த்தையால் இல்லாமல் செய்கையால் உணர்த்தியதில் அவனிடம் துளியும் பொய் இல்லை. எனும்போது ஏன் இவள் சொல்வதை வைத்து தன்னவனிடம் சண்டையிட வேண்டும்.
ஆனாலும் அவனிடம் இது குறித்து பொய் கோபமாய் அவனிடம் பேசி அவன் பதிலை அறிய இப்போதே ஆர்வமாய் இருக்கிறாள்.
நினைத்தபடியே கண்மூட நினைக்கும் நேரம் மொபைலை ஒலி எழுப்ப எடுத்துப் பார்த்தாள். நான்கு செய்திகள் வந்திருந்ததில் இரண்டு அவளவனிடம் இருந்து தான்.
குட் நைட் என்றதோடு கண்களில் இதயம் சிரிக்கும் ஸ்மைலி ஒன்றும் KD என ஆங்கிலத்தில் ஒன்றுமாய் வந்தது.
கேடியா? என முதலில் முறைத்து மொபைலை பார்த்தவளுக்கு கார்த்தி திவ்யா என்ற முதல் எழுத்து சட்டென ஞாபகம் வர ஒரு வெட்கப்புன்னகையுடன் பதிலுக்கு அவன் அனுப்பியது போலவே இரவு வணக்கத்தை அனுப்பி வைத்தாள்.
அதை பார்த்த கார்த்தியும் சிரித்துக் கொண்டான். இவ்வளவு நாள் இல்லாமல் இன்று அவனுக்கு புதிதான நாள் தான். ஹனிகா வந்தது ஒரு வகையில் நல்லது என்றே அவனுக்கு தோன்றியது.. பேச்சிலேயே ஒருவரை ஒருவர் ரசித்து சிரித்து இருந்தாலும் இருவரின் மனமும் இன்று தான் தெளிவாய் உணர்ந்திருக்கிறார்கள்.
நினைத்தவன் புன்னகையுடன் கண்மூடி உறங்கச் சென்றான்.
மீதி இருந்த இரண்டு செய்திகள் யார் என திறந்து பார்த்தாள் திவ்யா. புகழிடம் இருந்து தான்.
"அம்மாகிட்ட எப்ப பேசுவ திவி?" என ஒன்றும் "முடிந்தால் நாளைக்கே வா" என ஒன்றும் அனுப்பி இருந்தான்.
காலையில் அவன் வந்து போனதே மறந்துவிட்டாள் இவள். நாளை மாலை கார்த்தியுடன் வீட்டிற்கு சென்று வர முடிவெடுத்து உறங்கச் சென்றாள் கார்த்தி நினைப்புடன்.
அடுத்தநாள் காலையில் திவ்யா கண் விழித்த போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் ஹனிகா.
எழுந்து தன் அறைக்கு வரும்போது குளித்து கிளம்பி வெளியே செல்ல தயாராய் இருந்தான் கார்த்தி.
"அதுக்குள்ள எங்கே கிளம்பிட்டீங்க? மணி ஆறு தானே ஆகுது?"
"ஹனிகா எழுந்துட்டாளா?" அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் பதிலுக்கு அவன் கேள்வியே கேட்க,
"மேடம் தூங்குறாங்க.. வேணா எழுப்பி விடவா?" என்றாள்
"இன்னும் என்ன பொறாமை உனக்கு?" முகம் பார்க்காமல் கூறியவன் கேள்வியில் நேற்று கொடுத்தது போதாதா என்ற கேள்வியும் இருக்க திவ்யா ஆஃப்.
"அவ எழுந்துக்குறதுக்கு முன்னாடி கிளம்பணும்னு தான் சீக்கிரம் எழுந்தேன்.. அவங்க அப்பா இங்கே தான் இருக்காங்க... அவங்ககிட்ட பேசி பார்க்கிறேன்.. அப்படி இல்லைனா அவங்க மாமா நம்பர் வாங்கிட்டு வர்றேன்... ஹனிகா எழுந்துட்டா கூடவே வந்து ஏதாச்சும் கோல்மால் பண்ணுவா" அவன் திட்டத்தை கூற,
"அப்ப தெரிஞ்சே ஏன் இடம் கொடுக்கணும்... இப்படி அவஸ்தை படனும்?" அவளும் கேட்க,
"உனக்கு தெரியல திவி... ஹனிகா இப்ப சும்மா என்னை தேடி வர்ல... அதுக்காக அம்மா சொன்ன மாதிரியே இங்கே தங்கவிடவும் முடியாது.. அவளை எனக்கு நல்லா தெரியும்.. இன்னைக்கு இருந்து அவளுக்கு சேஃபான பிளேஸ் வேணும் அவ்வளவு தான்.. நேத்து அவ பேசினதுல பாவமா இருந்துச்சு.. சோ அம்மாகிட்ட பேசி ஸ்டே பண்ண வச்சாச்சு.. டெய்லி எல்லாம் இப்படி என் வைஃப்க்கு விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாதே!" சீரியஸாய் ஆரம்பித்தவன் சிரிப்புடன் முடிக்க,
"ஹ்ம்ம் பேச்செல்லாம் ஓகே தான்.. ஆனா... ஹோட்டல் சீ ஃபுட்னா சார்க்கு ரொம்ப புடிக்குமாமே! என்கிட்டயும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்" கிண்டல் போலவே அவளின் ஆதங்கத்தை சொல்ல அவனின் பதிலில் ஆச்சர்யம் தான் அடைந்தாள்.
திவ்யா ஹனிகாவிடம் கூறிய அதே பதில் கொஞ்சம் திருத்தமாக.. "அப்ப வீட்டு சாப்பாட்டோட அருமை தெரிலேயே! இனி சாப்பிட்டா மட்டும் கேளு" என்றவன் தலைவாரிய சீப்பினால் அவளின் தலையில் செல்லமாய் தட்டிவிட்டு கிளம்பி விட்டான்.
ஆக மொத்தம் மாலை புகழ் விஷயமாய் தன் அம்மா வீட்டிற்கு போக வேண்டிய விஷயத்தை மறந்து மீண்டும் வானில் பறந்து அறையில் ஸ்டச்யூவானாள் கார்த்தியின் திவி.
காதல் தொடரும்..