அத்தியாயம் 14
"கார்த்தி! நான் ஒருத்தி இருக்கேன்.. என்னை என்னனு கூட கேட்க மாட்டியா?"
தன்னை கண்டுகொள்ளாமல் அவர்கள் குடும்பத்தை பற்றியே பேசிக் கொண்டிருந்தது கோபத்தையே கொடுத்தது ஹனிகாவிற்கு.
"உன்னால தான் இன்னைக்கு நான் ஆபீஸ் லேட் பண்ணிட்டு இருக்கேன் ஹனிகா.. உன் அப்பாவை போய் பார்த்தேன்.."
உனக்காக சென்றேன் என்று சொல்லாமல் உன்னால் சென்றேன் என்ற கார்த்தி, தன்னை எந்த அளவுக்கு தள்ளி வைக்கிறான் என புரியாமல் இல்லை ஹனிகாவிற்கு.
அதுவும் ஹனி என்பவன் கொஞ்சமும் யோசிக்காமல் ஹனிகா என முழுபெயர் சொல்வதில் மொத்தமும் அவன் எண்ணம் புரிந்து போனது.
"நான் உன்னை போக சொல்லலையே!" அவனைப் போலவே அவளும் பதில் கூற, இங்கே கலாவிற்குள் கொதித்துக் கொண்டு வந்தது.
"நீ சொல்லி தான் நான் போகணும்னா... என்கிட்ட கேட்காமல் நீயும் என் வீட்டுக்கு நேத்து வந்திருக்க கூடாது ஹனிகா" கைகளைக் கழுவிக் கொண்டே கார்த்தி சொல்ல,
'உன்னை பெத்த அப்போ எவ்வளோ சந்தோசமா இருந்தேனோ அதே அளவுக்கு இன்னைக்கு சந்தோஷத்தை கொடுத்துட்ட... நீயும் திவியும் நூறு வருஷம் நல்லா இருங்க டா' மனதார மனதுக்குள் வாழ்த்திய கலா அதை முகத்திலும் காட்டி நிற்க அவமானமாய் போனது ஹனிகாவிற்கு.
மீண்டும் அவளை கண்டு கொள்ளாமல் பேச்சை தொடர்ந்தார் கலா.
"ஈவ்னிங் ஆபீஸ்லேர்ந்து வரும்போது திவியை கூட்டிட்டு வந்துடு டா.. அவ இல்லாமல் வீடே வெறிச்சோடி இருக்கு" கலா மகனுக்கு சாப்பாடு வைத்துக் கொண்டே சொல்ல,
"ஏன் கோஸ்ஸிப் பேச ஆள் இல்லையா?" என்று மென்நகை சிந்தியவனை பார்த்து கோபம், பொறாமை, ஆற்றாமை எல்லாம் சேர்ந்து எரிச்சலானது ஹனிகாவிற்கு.
"அப்பா என்ன சொன்னாங்க?" மெதுவாய் அவள் கேட்க,
"நீயா போனா ஏத்துக்குறதா சொன்னாங்க" என்றான் அவளை பாராமல்..
"நான் ஏன் போகணும்? என்னால எல்லாம் அவரு கூட போக முடியாது.. ஏமாளி! சுத்த ஏமாளி! ஒருத்தன்கிட்ட ஏமாந்து மொத்த சொத்தையும் இழந்துட்டு நிக்கிறாரு"
கலாவிற்கு இப்போது சுர்ரென்று ஏறியது..
"ஏண்டிம்மா! அவன் ஏமாத்தினதுக்கு உன் அப்பா என்ன செய்வாரு? அப்படி பார்த்தால் அவன் பேச்சை கேட்டு தானே அன்னைக்கு நீயும் சேர்ந்து இவனை அந்த பேச்சு பேசி அனுப்பின? அதுக்காக இவனும் நேத்து உனக்கு அடைக்கலம் தரலைனா எங்கே போயிருப்பியாம்?"
கோபமாய் கேட்க தான் நினைத்தார்.. ஆனாலும் இவள் யார் எனக்கு.. நான் இவளிடம் கோபப்பட்டு தன் கோபத்தின் மரியாதையை கெடுத்துக் கொள்வதா என்றே அமைதியாய் கேட்டார்.
இதுவே அங்கே திவி இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு.. இருவரும் சேர்த்து சும்மா சிரித்தே வெறுப்பேற்றி இருக்கலாம் என்றும் கலா நினைக்காமல் இல்லை.
"ம்மா! என்ன நீங்க? இப்ப அதெல்லாம் தேவையா?" கார்த்தி கேட்க,
"ஏன்டா நியாயம்னு ஒன்னு இருக்கு இல்ல.. இவ்வளவுக்கும் சொந்த அப்பாவை சொத்து இல்லனு விட்டு வந்திருக்கா.. இதே மாதிரி மட்டும் உன் அப்பா யாரையாச்சும் கூட்டிட்டு வந்திருந்தாரு... ஓட ஓட ரெண்டு பேரையும் விரட்டி இருப்பேன்.. என் நேரம்! ஒரு அப்பாவி புள்ளைய உனக்கு கட்டி வச்சுருக்கேன்.. அப்ப நான்தானே கேட்கணும்.. இப்பவும் என்னை நம்பி தான் அவ அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா.. அதை புரிஞ்சுக்க.." கலா சொல்ல,
"ப்ச்! இப்ப என்ன? உங்களுக்கு இந்த வீட்டைவிட்டு நான் போகணும் அப்படிதானே? போறேன்.. எங்கேயோ போறேன்.. எப்படியோ போறேன்.. உன்னை நம்பி தான் வந்தேன்.. என்னை இப்படி அவமானப்படுத்தி அனுப்புவன்னு நினைக்கவே இல்லை கார்த்தி.. நேத்து வந்தவளுக்காக நீ இவ்வளவு பேசுவன்னும் நான் நினைக்கல.."
அம்மா பேசியது என்னவோ அதிகம் தான் அதற்கு ஏன் இவள் திவியை இழுக்கிறாள் என்று தோன்ற கூடவே அவள் பேசும் விதமும் சுத்தமாய் பிடிக்கவில்லை.
"இதோ பாரு ஹனிகா! நீ எங்கேயும் போக தேவையில்லை.. " கார்த்தி சொல்லவும்
'அடப்பாவி என்ன சொல்றான்?' என கலா நினைக்க, "வாவ்" என ஹனிகா கூறிய அடுத்த நிமிடம்
"உன் மாமா நம்பர் உன் அப்பாகிட்ட வாங்கி பேசிட்டேன்.. அவரு பையனை பார்க்க வந்திருக்காராம்.. அண்ட் அவரே வந்து உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு.. சோ ரெடியா இரு" என்றவன் எழுந்து கொள்ள,
"அட அட அட! என் மகன் என்னை இன்னைக்கு ரொம்ப பெருமைப்பட வைக்குறானே! திவி போகாம இருந்திருந்தால்.. பாரு டி என் மகனைனு நல்லா நாலு கொட்டு கொட்டியிருக்கலாம்..." பேசிக் கொண்டே அவர் சென்றுவிட,
"கார்த்தி! நான்... நான்... நான்.. எங்கேயும் போகல.. நான் இங்கேயே இருக்கேனே.." வந்த காரணத்தை சொல்லிவிட்டாள்.
"இங்கேயேன்னா? எத்தனை நாள்?" அவனும் கேட்க,
"எப்போதும்.. முன்னாடி எப்படி இருந்தோமோ அப்படியே!" அவள் சொல்ல சத்தம் வராமல் சிரித்தான் அவன்.
"அம்மா சொன்னது சரி தான் ஹனிகா.. அன்னைக்கு நீ அவ்வளவு பேர் முன்னாடி பேசும் போது அமைதியா வந்தேன் பார்த்தியா... அப்ப தான் உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.. அதுனால நான் தெளிஞ்சு வந்துட்டேன்.. சொல்லிக் காட்ட வேண்டாம்னு தான் அம்மாகிட்ட சொன்னேனே தவிர நானும் எதையும் மறக்கல.. அண்ட் திவி நேத்து வந்தவ தான்.. பட் ஷீ இஸ் மை வைஃப்.. என்கூட எப்பவும் இருக்க போறவ.. என் மனசுலயும் இனி எப்பவும் இருக்க போறவ.. ஹ்ம்ம் இன்னும் தெளிவா உனக்கு சொல்லனும்னா உன்னை லவ் பண்ணின அப்ப கூட நான் அந்த ஃபீலை உணரல.. பட் இந்த ஒரு வாரத்துல எனக்கு நிறைய லவ் ஃபீல் கொடுத்திருக்கா திவி.. அதை புரிய வைக்க தான் நீ வந்திருக்க போல"
அவன் தான் புரிந்து கொண்டு தனக்குள் இருக்கும் உணர்வை சொல்லிக்கொண்டு இருக்க இதை எதிர்பார்க்கவில்லை என்பதை போல நின்றாள் ஹனிகா.
"ம்மா!" என்று அவன் அழைக்கவும் உள்ளிருந்து வந்தார் கலா.
"சொல்லு டா.."
"இன்னைக்கு ஆபீஸ் போல மா.. நான் திவி வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஈவ்னிங் அவளோட வந்துடுறேன்"
ஹனிகாவுடன் பேசியதினாலோ என்னவோ திவ்யாவின் நியாபகம் அதிகமாய் வந்திட அவளை பார்த்திடவும் தூண்டிட உடனே முடிவு செய்துவிட்டான்.
"இது கூட சரி தான்" கலா கூறியவர் யோசனையாய் ஹனிகாவை பார்க்கவும்
"மதியதுக்குள்ள அவங்க மாமா வந்திடுவாங்க.. நீங்க பார்த்து அனுப்பி வையுங்க" என்றவன் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பிவிட்டான்.
"அப்படி என்ன திவி அவசரம்? ஆபீஸ் முடிஞ்சதும் அவரோட வந்திருக்கலாம்ல? உன் அத்தை எப்படி தனியா உன்னை விட்டாங்க?" சுகுணா கேட்க,
"ப்ச்! அப்படி தான் நினச்சேன் மா.. அப்புறம் ஒரு முக்கியமான வேலையா அவங்க வெளில போய்ட்டாங்க.. அதான் நான் அத்தைகிட்ட கேட்டு வந்துட்டேன்" என்றாள் திவ்யா.
"அதான் டி கேட்குறேன்.. நேத்து தானே போனீங்க? அப்புறம் என்ன அவ்வளவு அவசரம்?" என்றார் மீண்டும்..
"அதில்ல மா.. புகழுக்கு எதாவது பொண்ணு பார்த்திங்களா?" - திவ்யா.
"ஆமா டி உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.. இங்கே பாரு" என்று ஒரு கவரை எடுத்து வந்து நீட்ட, பிரிக்காமல் அப்படியே வைத்திருந்தாள் திவ்யா.
"பிரிச்சு பாரு திவி.. நல்ல பேமிலி.. பொண்ணு அழகா இருக்கா.. பெரிய இடம் தான்.. புகழும் கண்டிப்பா இப்படி இடத்தை தான் விரும்புவான்..ஜோடிப் பொருத்தமும் நல்லா பொருந்தும்" அவர் சொல்லிக் கொண்டு இருக்க,
"புகழுக்கு புடிச்சிருக்கான்னு கேட்டீங்களா ம்மா?"
"நீ வேற.. நேத்து நைட்டே பார்க்க சொல்லி அவன் முன்னாடி வச்சிருந்தேன்.. இப்பவும் பார்க்க மாட்டேன்னு போறான்.. அவன் பண்ற அலம்பல் தான் தெரியுமே! உனக்கே தாம்தூம்னு குதிச்சான்.. அதுனால தான் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி ஜட்ஜ் வீட்டு பொண்ணுனு சொன்னேன்.. அப்பவும் கண்டுக்காமலே போறான்.. இவனை பெத்தேன்னு தான் பேரு.. என்ன நினைக்குறானே தெரியல"
"ஏன்மா புலம்புறீங்க? வேற யாரையாவது லவ் பண்றியான்னு கேட்க வேண்டியது தானே?"
"யாரு இவனா? பண்ணிட போறான்.. அப்படியே பண்ணினாலும் இவன் போடுற கண்டிஷனுக்கு பொண்ணுங்க எல்லாம் இவன்கிட்ட கூட வராது" சுகுணா சொல்லவும் சிரித்துவிட்டாள் திவ்யா..
"ம்மா! அதெல்லாம் புகழை புரிஞ்சுக்கவும் பொண்ணு இருக்கு.. உன் பையனும் லவ் பன்றான்.. பெருமைபட்டுக்கோங்க.." சிரிப்புடன் திவ்யா சொல்ல, நம்ப முடியாமல் பார்த்தார் அன்னை.
"நிஜமா தான் மா.. அவனே நேத்து என் வீட்டுக்கு வந்து என்கிட்ட சொல்லி உங்ககிட்ட பேச சொன்னான்?"
"ஏன் அவன் சொல்ல மாட்டானாமா? லவ் பண்ண தெரியுது.. வீட்டுல சொல்ல தெரியலையாக்கும்.. ஆனாலும் இவன் ரொம்ப தான் டி பிகு பன்றான்.. ஆமா பொண்ணு யாரு?"
"அங்கே தான் மா ட்விஸ்ட்டே! பொண்ணு யாருன்னு சொன்னா நீங்க நம்பவே மாட்டிங்க.. அதுனால தான் அவன் உங்ககிட்ட சொல்ல கூச்சப்பட்டு என்னை தேடி வந்திருக்கான்"
"என்ன டி சொல்ற? அவ்ளோ பெரிய இடமா? அப்டினா நம்மை மதிப்பாங்களோ என்னவோ" அவர் புலம்பலை மீண்டும் தொடர,
"ம்மா! அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவங்க பேரு பிரியசகி.. கார்த்திகூட தான் ஒர்க் பண்றங்களாம்.. அம்மா மட்டும் தான் போல" என்றவள் கார்த்தி கூறியதையும் சொல்ல மயக்கம் வராத குறைதான் அவருக்கு..
"திவி நீ சொல்றதெல்லாம் நம்புற மாதிரியே இல்ல.. என்ன ஒழுங்கு பார்ப்பான்.. நான் அன்னைக்கு கூட கவனிச்சேன் மாப்பிள்ளைகிட்ட சரியாவே பேசல.. இவன் எப்படி? என்னனு சொல்லி அந்த பொண்ணை ஏமாத்தினானோ?" மகனை அன்னையே திட்ட சிரித்துக் கொண்டே இருந்தாள் திவ்யா.
காலிங் பெல் சத்தம் கேட்கவும் "யாருன்னு பாரு திவி" என்று சொல்ல, அன்னை கூறியதை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவள் அதே நினைவில் சிரிப்புடன் கதவை திறக்க, அந்த பக்கம் நின்றவன் முகத்திலும் புன்னகை தான்.
"கார்த்தி..?" கேள்வியாய் அவள் பார்க்க,
என்ன என்று அவன் கண்களை உயர்த்தவும் உள்ளே அழைத்து வந்தாள்.
"நீங்க ஆபீஸ் போலயா? எதிர்பார்க்கவே இல்லை" என்றவள் ஹனிகா என்ன ஆனாள் எனவும் நினைத்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே வந்திருக்கவும் சுகுணாவும் வரவேற்க புன்னகைத்து அமர்ந்தான்.
"பின்னாடியே வர சொல்லிட்டு தான் வந்தியா டி?" என்றவர் காபி போட செல்ல, மீண்டும் அவனிடம் கேட்டாள்.
"என்னங்க? ஆபீஸ் போலையா? இல்ல அத்தை பார்த்துட்டு வர சொன்னாங்களா?"
"நானா வருவேன்னு தோணலயா உனக்கு? நான் தான் லீவ் போட்டேன்.. பார்க்கணும் தோணிச்சு வந்தேன்" இப்படி வெளிப்படையாய் பேசுபவனும் இல்லை என்பதால் அவள் விழிவிரித்து பார்க்க, அதில் இன்னும் புன்னகை அதிகமாகியது அவனுக்கு.
காதல் தொடரும்..