• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 16

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 16

"எங்கே டா போய்ட்டு வர்ற?" எப்போதும் கேட்காத கேள்வி தந்தையிடம் இருந்து வர, ஒரு நொடி யோசித்தான் புகழ்.


"என்னங்க.." சுகுணா ஏதோ சொல்ல வர,


"உன் போன்க்கு என்னாச்சு? ட்ரை பண்ணிட்டே இருந்தேன்" மீண்டும் சந்தேகமாய் பார்ப்பவரை திருட்டு முழியுடன் பார்த்தான் புகழ்.


"தெரியலயே பா.. நெட்ஒர்க் இல்லையோ என்னவோ" கொஞ்சம் மெல்லமாய் அவன் சொல்ல,


"ஆபீஸ்ல நெட்ஒர்க் ப்ரோப்லேம் இல்லையே? அப்ப ஆபீஸ் போலயா நீ?" சண்முகம் இன்னும் ஆராய்ச்சி பார்வையோடு கேட்க,


"அங்கே தான் போய்ட்டு இருந்தேன் பா.. திவி வந்திருக்குறதா போன் பண்ணினா.. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" மூச்சு வாங்கிப் பேசிய புகழ் வீட்டிற்குள் கண்களால் தங்கையை தேட,


"கார்த்தி கூட வெளில போயிருக்கா" என்றார் புன்னகையை மறைத்து அன்னை.


'ரொம்ப முக்கியம்.. வந்த வேலையை பார்க்காமல் ஊர் சுத்த கூட்டிட்டு போயாச்சா!..' மனதில் கார்த்தியை திட்டியவன்,


"சரிப்பா நான் ஆபீஸ் கிளம்புறேன்.. நீங்க வரிங்களா?" என்று கேட்க,


"அதான் மணி ஆச்சே! சாப்பிட்டு போகலாம். திவி இப்ப வந்திடுவா" என்ற அன்னை சமையலறைக்கு செல்ல, தந்தை பார்வையை தாங்க முடியாமல் அறைக்குள் சென்றுவிட்டான் புகழ்.


இந்த பார்வை இதுவரை புகழ் பார்த்ததே இல்லை. வீட்டில் எதையும் மறைக்காதவன். நண்பர்களுடன் வெட்டியாய் ஊர் சுற்றும் போதும் தான்.. அதனாலேயே இது போல தந்தை முன் பயமாய் நின்றதில்லை. இப்போதும் பயம் தான் மறைக்கும் ஒன்றிற்காக மட்டும் தான்.


"ம்மா! புகழ் வந்தாச்சா?" திவ்யா கேட்டபடி வர, அவள் பின்னேயே வீட்டிற்குள் நுழைந்தான் கார்த்தி.


"வந்துட்டேன் திவி.. ரூம்ல இருக்கான்.. முதல்ல சாப்பிடுங்க அப்புறமா பேசலாம்.. உங்க அப்பா வேற இன்னைக்குன்னு பார்த்து அவனையும் அந்த பொன்னையும் ரோட்ல பாத்துருக்காரு.. அவருக்கு பயந்துட்டு ரூம் உள்ள ஒளிஞ்சுட்டு இருக்கான்" அன்னை சொல்ல,


"இந்த காதல் ஒரு மனுஷனை எப்படி எல்லாம் மாத்துது இல்லம்மா?" தற்செயலாய் அண்ணனை கலாய்த்து சிரித்தபடி சொன்ன திவ்யா அதே சிரிப்புடன் திரும்ப அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் கார்த்தி.


அவன் பார்வையின் வித்யாசம் இவளுக்கும் புரிந்து போனதோ?


"என்ன?" கண்களை உயர்த்தி கார்த்தி கேட்க,


"உங்களுக்கு கூட மேட்ச் ஆகுது இந்த கொஸ்டின்" என்றாள் கண் சிமிட்டி. அதையும் விழி எடுக்காமல் பார்த்து வைப்பவனை அதற்கு மேல் பார்க்க முடியாமல் அன்னையுடன் சமைத்ததை டேபிளில் எடுத்து வைக்க செல்ல, சண்முகம் வெளிவந்தார்.


நல விசாரிப்புடன் கார்த்தியும் சண்முகமும் சாப்பிட அமர, திவ்யா அண்ணன் அறைக்கு சென்றாள்.


"புகழ் சாப்பிட வா" அறைக்கு வெளியே நின்று அவள் குரல் கொடுக்க, கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தவன் "சொல்லிட்டியா?" என்றான்.


"இன்னும் இல்ல... முதல்ல சாப்பிடலாம் வா"


"ப்ச்! சாப்பிடவா உன்னை வர சொன்னேன்? அப்பா பார்வையே சரி இல்ல.."


"அதெல்லாம் ரோட்ல ஒரு பொண்ணோட நின்னு பேசும்போது யோசிச்சிருக்கணும் மிஸ்டர் புகழ்.. கையும் காலுமா மாட்டினதும் இப்படி ஓடி ஒளியக் கூடாது"


"ஓஹ் காட்! அப்பா பாத்துட்டாரா? ஷிட்! படிச்சு படிச்சு சொன்னேன்.. சகி தான் கேட்கல.. அச்சோஓஓ... அப்பா என்ன நினைச்சுருப்பாங்க..." புலம்பித் தள்ளினான்.


"நீ இப்படி புலம்புறது எனக்கு சிரிப்பா வருது புகழ்.. பொண்ணுங்க தான் இப்படி எல்லாம் பயப்படுவாங்க.. நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? உனக்கு புடிக்காததை எப்படி வீட்ல செய்வாங்க?" அவள் கேட்க, முறைத்தான் புகழ்.


"நீ ஏன் சொல்ல மாட்ட? நீ என்ன சொன்னாலும் லவ் பன்றேன்னு சொல்லவே எனக்கு தைரியம் இல்ல.. இதுல சகி பேமிலி பத்தி சொன்னா என்ன செய்வாங்களோ போ"


"தேவை இல்லாத பயம்... உன்னை மாதிரி எல்லாம் அப்பா சீன் போட மாட்டாங்க.. அண்ட் நீ நினைக்குற மாதிரி கூட அப்பா நினைக்க மாட்டாங்க"


"இப்ப என்ன சொல்ல வர்ற. வீட்ல பேசுன்னு சொன்னா நீ ஊர் சுத்துறது சாப்பிடறதுன்னு இருக்குற.. உன்னை வச்சுட்டு..."


"சரி சரி பேசுறேன்.. ஆனா பதிலுக்கு எனக்கு நீ என்ன செய்வ?"


"அடியேய்! பதிலுக்கு பதில் கேட்குற நேரமா இது? உனக்கு என்ன வேணுமோ எல்லாம் செய்யுறேன்.. முதல்ல பேசி சக்ஸஸ் பண்ணு"


"பேச்சு மாற மாட்டியே?"


"மாட்டேன் போடி.. முதல்ல ஆரம்பிச்சு வை.. நான் வர்றேன்" என்றவன் முகம் கழுவி பதட்டத்தை மறைத்து வந்து அமர்ந்தான் அனைவர் முன்பும்.


இப்போதும் கார்த்தியை பார்த்து சிரித்து மட்டுமே வைத்தான். கார்த்தியும் தான்.


"உப்பு வேணுமா புகழ்?" திவ்யா கேட்க, அதற்கே அவனுக்கு புரையேறியது.


அவன் பயத்தையும் திவ்யாவின் விளையாட்டையும் எளிதாய் கண்டு கொண்ட இருவர் கார்த்தியும் சுகுணாவுமே!


திவ்யாவை யாரும் அறியாமல் முறைத்த சுகுணா குறிப்பாய் கார்த்தி பார்க்காத நேரமாய் கிள்ளியும் வைத்து சென்றார்.


"புகழ்க்கு பொண்ணு பார்க்குறிங்களா மாமா?" கார்த்தி சாப்பிட்டாவாறே சாதாரணமாய் கேட்டு வைக்க, வாயில் வைத்த உணவு தொண்டைக்குள் இறங்காமல் அப்படாயே நின்றது புகழுக்கு.


திவ்யாவும் சுகுணாவும் கூட கார்த்தி ஆரம்பித்து வைப்பான் என எதிர்பார்க்காததால் சிறு அதிர்ச்சியுடனும் சரி ஆரம்பிக்கட்டும் எனவும் பார்த்து நின்றனர்.


"ஆமா ப்பா! நேத்து தான் ஒரு பொண்ணு போட்டோ வந்துச்சு... நல்ல இடமும் கூட.. பண்லாம்னு யோசிச்சுட்டு இருக்கோம்" காலையில் பார்த்ததை நினைத்தவாறே சண்முகம் சொல்ல,


"ஓஹ் பார்த்தாச்சா? நான் கூட ஒரு இடம் சொல்லலாம் நினச்சேன் மாமா" என்றான் மீண்டும் சாதாரணமாய் மட்டும்.


இப்போது மூவருமே புரியாமல் தான் பார்த்து நின்றனர். என்ன சொல்ல வருகிறான் இவன் என திவ்யா பார்த்து நிற்க, திவ்யாவே பரவாயில்லை இவன் என்ன சொதப்பல் செய்ய போகிறானோ என பார்த்து அமர்ந்திருந்தான் புகழ். நிச்சயம் கார்த்தி ஆரம்பிப்பது அவனுக்கு உடன்பாடில்லை.


"இதுல என்ன இருக்கு பா.. பொண்ணு பார்க்குறதுனா இப்படி தெரிஞ்சவங்க எல்லாம் சொல்றது தானே! பொண்ணு யாரு? பேமிலி எப்படி?" மற்றதை மறந்து தன் பெண்ணின் கணவன் தன் மகனுக்கு பெண் பார்த்த சந்தோஷத்தில் மூழ்கி விவரம் கேட்டார் சண்முகம்.


"மாமா... பொண்ணு நல்ல பொண்ணு தான்.. ஆனா பேமிலி பாக்ரௌண்ட் பெருசா சொல்ல முடியாது" இதை சொல்லும்போது கார்த்தியே தயங்கி தயங்கி கூறவும், சண்முகமும் உடனே முக மாற்றத்தை காட்டிவிட்டார்.


அவரின் யோசனையில் இப்போது புகழ் மட்டுமே! கார்த்தி சொல்வதில் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் நிச்சயம் புகழ் பிரச்சனை செய்வானே? இதனால் இருவருக்கும் சண்டை வந்திடக் கூடாதே என்ற எண்ணம் அவருடையது.


அடுத்த நொடி சுகுணா தான் பேச்சை ஆரம்பித்தது. "பொண்ணும் அவங்க குடும்பமும் நல்ல மாதிரியா இருந்தா போதாதா பா... பாக்ரௌண்ட் என்ன பெரிய பாக்ரௌண்ட்? நம்ம குடும்பதுக்குள்ள வந்துட்டா எல்லாம் ஒன்னு தானே?" அவர் சொல்ல, பெரிய மூச்சொன்று வெளிவந்தது புகழிடம் இருந்து.


தந்தை அமைதியாய் இருக்கவுமே மூச்சைப் பிடித்தபடி அமர்ந்தவனுக்கு தாயின் பேச்சு தான் மீண்டும் மூச்சையே கொடுத்தது.


"நீங்க என்ன மாமா சொல்றிங்க?" சுகுணாவை பார்த்து சிரித்த கார்த்தி சண்முகத்திடம் திரும்பிக் கேட்க,


"சரி தான் பா.. நீங்களே இவ்வளவு தூரம் சொல்லும்போது நல்ல பேமிலியா தான் இருக்கும்.. ஆமா பொண்ணு யாரு.. உங்க சொந்தமா?" சண்முகம் கேட்க, திக்திக் நிமிடம் தான் புகழுக்கு.


"ப்பா! அதை விடுங்க.. முதல்ல புகழ்கிட்ட எப்படி பார்க்கணும்னு கேளுங்க.. அவனும் ஏதாவது கற்பனை பண்ணி வச்சிருந்தா?" திவ்யா சொல்ல, அவனை திரும்பிப் பார்த்தார் சண்முகம்.


'இதுக்கா உன்னை வர சொன்னேன்?' என்ற பார்வையை திவியிடம் கொடுத்தவன் மீண்டும் சாப்பாட்டில் குனிந்து கொண்டான்.


"புகழுக்கு தெரிஞ்ச பொண்ணு தான் மாமா.. அவங்க பிரண்ட் தான். என்கூட தான் ஒர்க் பன்றாங்க.. பேரு...." என்றவன் திவியை பார்த்தவாறே கூறினான்.


"பிரியசகி.. அம்மா மட்டும் தான்.. பாக்ரௌண்ட் இல்ல தான் ஆனா நல்ல பேமிலி.. அப்புறம் உங்க இஷ்டம்" என்றவன் சாப்பிட்டு எழுந்து கொள்ள,


"உனக்கு தெரிஞ்ச பொண்ணா?" புகழை நேராய் கேட்டார் சண்முகம்.


ஒன்றும் ஒன்றும் மூன்று என்கின்ற கணக்கு புரிவது போலத் தான் சில மணி நேரங்களுக்கு முன் கார்த்தி ஆபீஸ் அருகில் பெண்ணுடன் புகழைக் கண்டார். இப்போது கார்த்தி சொல்வதை வைத்து பார்த்தால் அந்த பெண் தான் இந்த பெண் போலவே?


எதில் வியப்பைக் காட்ட? புகழுக்கு தெரிந்த பெண் என்பதிலா இல்லை ஒரு பெண்ணை இவனுக்கு தெரியும் என்பதிலா?


"அப்பா... அது... சகி... பிரியசகி... நான்..."


"ஏன்டா இப்படி திக்கி திணறுற? புடிச்சிருக்கு.. பண்ணி வையுங்கன்னு கேட்டா வேண்டாம்னா சொல்ல போறோம்? உன் தொல்லை தாங்காமல் தான் ஜட்ஜ் வீட்டு பொண்ணு டாக்டர் வீட்டு பொண்ணுனு அழைஞ்சுட்டு இருந்தோம்.." சுகுணா சொல்ல, குனிந்தபடியே இருந்தான் புகழ்.


"ஓஹ்! அப்ப எல்லாருக்கும் தெரியும்.. நான் தான் லேட்... அப்படித்தானே?" சண்முகம் கேட்க,


"ம்ம்க்குக்கும்! ரொம்ப வித்யாசம் எல்லாம் இல்ல... எனக்கு பத்து மணிக்கு தெரியும் உங்களுக்கு ரெண்டு மணிக்கு தெரியும்.. இந்தா நிக்குறாளே இவளுக்கு நேத்து தெரியும்.. அவ்வளவு தான் வித்யாசம்.. அவனுக்கு மட்டும் தான் ரொம்ப... மாசமா தெரியும்.. இல்லடா" அன்னை கிண்டல் செய்ய, அவரின் சம்மதமும் புரிய குனிந்தவன் சிரித்துக் கொண்டான்.


"ஹ்ம்ம்! என்ன புகழ் போதுமா? வேற எதாவது ஹெல்ப் வேணுமா?" திவ்யாவும் கிண்டலில் இறங்க, அவளை முறைத்தவன் மெதுவாய் திரும்பி அப்பாவைப் பார்த்தான்.


"எல்லாம் சரி தான்.. ஆனா அந்த பொண்ணை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே!" அவர் சொல்ல,


"எந்த பொண்ணை?" இவருக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியை முகத்தில் தாங்கி புகழ் கேட்க,


"ம்ம் அதான் என்னை அனாதையா விட்டுட்டு மரத்தடியில டூயட் பாடினியே... அந்த பொண்ணு தான்" என்ற போது புகழ் முகத்தை பார்க்க வேண்டுமே!


'வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா டி' சகியை அப்போதும் மனதில் செல்லமாய் மட்டுமே மனதில் திட்டிக் கொண்டான்.


எல்லாம் பேசி நிம்மதியாய் எழ, தன் கணவனை காண ஆசையாய் அறைக்குள் நுழைந்தாள் திவ்யா.


காதல் தொடரும்..