• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் சிந்தும் தெய்வங்கள்!

Usharani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 10, 2021
7
1
3
Salem
பத்து மாதம் தவமிருந்து!

பாசமழையைக் கொட்டித் தீர்த்து!

வறுமையும், பசியையும் தெரியாது வளர்த்து!

பட்டப்படிப்பு படிக்க வைத்து!

நல்லதொரு வாழ்வைத் தேடி அமைத்து!

உன் விருப்பமே எங்கள்
விருப்பமாய் தேர்வு செய்து!

எங்கள் வலியை மறந்து,

உனக்காக வாழ்ந்த எங்களை!

பாரமென்று எண்ணி முதியோர் இல்லத்தில் அடைத்தாயே!

கண்ணீரின் வெள்ளத்தில் நாங்கள் நனைய!

ஒவ்வொரு கைப்பிடி சோறு உண்ணும் போதும்,

எம்பிள்ளை பசியாறியதோ இல்லையோ என்றெண்ணி!

தவியாய் தவிக்கிறதே பிள்ளையைப் பெற்ற மனம்!

கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் பணம் வேண்டாம்!

கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேசவும்,

கடைசிக் கால இறுதிப்பயணத்திலும்,

எங்களருகில் நீ இருந்தால்
அதுவே போதும்!