கண்ணீர் - 1
சென்னையின் புகழ்பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி அது, அன்று பட்டமளிப்பு விழா நடைபெறுவதால் கல்லூரியின் திறந்த வெளி கிரவுண்டில் மேடை அமைத்து, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற உயர்தீதிமன்ற நீதிபதி கருணாகரன் வருகை தந்திருந்தார், பட்டம் வாங்க போகும் மாணவமாணவிகள் கருப்பு கோட் அணிந்தபடி மிகவும் உற்சாகத்துடன் அமர்ந்திருந்தனர் மேடையின் முன்பு, அவர்களுள் ஒருத்தியாக அமர்ந்திருந்தாள் நம் நாயகி நித்திலா, திருத்தமான வட்ட முகம், ஐந்தரை அடி உயரமும் பார்ப்பவரை மறுபடியும் பார்க்க தூண்டும் அழகான வதனத்தில் எலுமிச்சை நிறத்தில் அழகோடு சேர்ந்த அறிவும், பொறுமையும் கொண்டவள் நம் நித்திலா, அவள் முகத்தில் தெரிந்த சந்தோசம் அளவில்லாததாய் இருந்தது, இந்த விழா நம் நாயகிக்கு மிகுந்த உணர்ச்சிகரமானதாக இருந்தது, நான்கு ஆண்டுகளாக கடுமையாய் உழைத்து, பல சவால்களை எதிர்கொண்டு இன்று அந்த முயற்சியின் பலனை பெரும் தருணம் அல்லவா இது, அவளது மனதில் பெருமை, மகிழ்ச்சி, நன்றி மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை போன்ற உணர்வுகள் கலந்திருந்தது...
வரவேற்புரை நிகழ்ந்த பின்னால் மாணவ மாணவியருக்கான பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியது, பின்புறத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது, மேடையின் இரு கரைகளில் ஒவ்வொரு துறையினரும் வரிசையாக நின்று காத்திருந்தார்கள், ஒவ்வொரு பெயரும் மைக்கில் அழைக்கப்பட்டது, ஒவ்வொருவர் மனதிலும் பதற்றம், மகிழ்ச்சி, ஒரு பெரிய பயணத்தின் நிறைவு,...
அந்த தருணத்தில்,...
"சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த மாணவி நித்திலா," என்று அழைக்கப்பட, அந்த நொடியில் நித்திலாவின் இதயம் சற்று துடித்து, அவள் உள்ளம் முழுவதும் ஒரு பனிமூட்டம் போல பதற்றமும் பெருமையும் ஒன்றாக விரிந்தது, அவளது கடந்த நான்கு ஆண்டுகள் கண்களில் ஓடியது, பரீட்சைகள், திட்டங்கள், லேட் நைட்கள், அழுகை, சிரிப்பு அவை எல்லாம் சேர்ந்து இன்று அவளை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தது,...
அவள் மெதுவாக மேடையை நெருங்கினாள், மேடையின் ஒரு பக்கத்திலிருந்த படிகட்டுகளில் ஏறி நடுவில் நின்றிருந்த முக்கிய விருந்தினரிடமிருந்து சான்றிதழை பெற்றுக் கொண்டாள், மரியாதையுடன் சற்று வணங்கி அவரிடமிருந்து பெற்றுக் கொண்டவளுக்கோ விழிகளில் விழிநீர், அவளது வாழ்க்கையின் வெற்றி ஒளிகதிர் இது...
அவளது வகுப்பிலேயே அவள் தான் நன்கு படிக்கும் மாணவி வேறு என்பதால் கல்லூரியின் மேலாளர் விருந்தினராக வந்திருந்தவரிடம் அவளது புகழை பற்றி கூற,
கேட்டவரோ நித்திலாவை பாராட்டி வாழ்த்தினார். நித்திலாவிற்க்கு பெருமையாக இருந்தது, அவளது எல்லை இல்லா மகிழ்ச்சி முகத்தில் தாண்டவமாடியது, அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கியவளை சில ஜோடி கண்கள் வெறுப்போடு பார்த்தது,...
அந்த கண்களுக்கு சொந்தமானவர்கள் வேறுயாருமில்லை அவளோடு ஒன்றாக படித்த சக மாணவிகள் தான், பணக்கார வீட்டு பெண்கள், அந்த கல்லூரியோ பணம் படைத்தவர்கள் படிக்கும் கல்லூரி தான், நித்திலா வசதியான வீட்டு பெண்ணா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை தான், தாய் தந்தையை இழந்து, சொந்தபந்தங்கள் யாரும் இல்லா அநாதை பெண் தான் அவள், அப்படிபட்டவள் இவ்வளவு பெரிய கல்லூரியில் படித்திருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் ஒரேயொரு நபர் தான், அவர் அவளுக்கு ரத்த சொந்தமும் இல்லை, உறவுமுறையும் இல்லை, ஆனால் அவள் இப்போது படித்து நல்லநிலையில் இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவர் ஒருவரே, அவர் யார் எவர் என்பதை பற்றி பிறகு பார்க்கலாம்,...
நித்திலா அழகிலும் திறமையிலும் எவ்வித குறையும் இல்லாதவள் தான் என்றாலும் பணத்தில் மிக மிக மட்டமான நிலையில் இருப்பவள், அவளது நிலையினை பற்றி அவளோடு படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தெரியும், அவளை பற்றி மட்டும் அல்ல, அந்த வகுப்பில் படிக்கும் அத்தனை மாணவர்களை பற்றியும் அறிந்து ஆராய்ந்து விடும் ஒரு கூட்டம், சற்று நேரத்திற்கு முன்பு நித்திலாவை வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்த அதே கூட்டம்....
அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பணத்தில் குறைவில்லாதவர்களாக இருந்தாலும் சிலருக்கு நல்ல மனமும் உண்டு, ஆனால் அந்த நால்வருக்கோ இறைவன் இதயத்திற்கு பதில் இரும்பை வைத்து படைத்தது போலிருக்கும் அவர்களது நடவடிக்கைகள், பணத்திமிருமில் ஆடுவார்கள், யாரையும் மதிக்கமாட்டார்கள், படிப்பிலும் சூட்டிகை இல்லாதவர்கள், ஆசிரியர்களிடம் தெனாவெட்டாக நடப்பார்கள், மொத்தத்தில் பூமிக்கு பாரமாய் இருப்பவர்கள், அவர்களுக்கு ஏனோ நித்திலாவை கண்டாலே பிடிக்காது, ஏன் என்று காரணம் கேட்டால் தெரியாது, அழகிலும் திறமையிலும் படிப்பிலும் முதன்மையாய் இருக்கும் நித்திலாவிற்கு ஏதாவதொரு வகையில் தொந்திரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், நித்திலாவிற்கு எதிர்த்து சண்டையிடும் அளவிற்கு தைரியம் இருந்தாலும் பொறுமையானவள் என்பதால் அவர்கள் செய்யும் தொல்லைகளை பொறுமையுடன் கடந்து விடுவாள்,...
ஆசிரியர்கள் அந்நால்வரையும் கண்டித்தும் பயனில்லை என்பதால் நித்திலா அவர்கள் செய்யும் அடாவடி தனத்தை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க இயலாமல் கல்லூரி வருவதை கூட நிறுத்தி இருந்தாள், அந்நால்வருக்கும் வெற்றிபெற்ற சந்தோசம், ஆனால் அவர்களின் முகத்தில் கரியை பூசும் விதமாய் நித்திலா அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள் தன் கார்டியனுடன், அவள் இப்படியொரு கல்லூரியில் படிக்கிறாள் என்றால் அது அவளது கார்டியனால் மட்டுமே, அவர் தான் சித்ராவதி, பலகோடி சொத்துக்களுக்கு அதிபதி, கணவரின் இறப்பிற்கு பிறகு அவர் தொழிலை இவர் கையிலெடுத்து தன் திறமையினாலும், ஆளுமையினாலும் சிங்கிலாக தொடங்கப்பட்ட கட்டுமான நிறுவனத்தை இன்று, தான் பிறந்து வளர்ந்த நாட்டில் மட்டும் இல்லாது வெளிநாட்டிலும் கிளைகள் பரப்பி, இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர், பெரிய பெரிய தொழிலதிபர்கள் கூட அவரிடம் பேச பயப்படுவார்கள், அப்படிபட்ட அயர்ன் லேடியிடம் நித்திலா மிகவும் சாதாரணமாக பேசியபடி அவரோடு நடந்து வந்தாள்,...
சித்ராவதியை பற்றி தெரியாதவர் எவரும் இலர், பணத்திமிரில் ஆடிக் கொண்டிருக்கும் அந்த நால்வருக்கும் கூட அவரை தெரிந்திருந்தது,.. "சித்ரா மேடம் கூட இவ சேர்ந்து வரா" தங்களுக்குள் கிசுகிசுத்தபடி அதிர்ச்சியாக பார்த்தனர், கல்லூரியின் முதல்வர் முதற்கொண்டு சித்ராவை பணிவாக மரியாதையுடன் வரவேற்றார், அதன் பிறகு தான் நித்திலா சித்ராவதியின் பொறுப்பில் இருப்பவள் என்பது தெரிய வந்தது, சித்ராவை பற்றி தெரியும் என்பதால் நித்திலாவை நெருங்க பயந்தனர் அந்நால்வரும்,...
இவையனைத்தும் தெரிந்து தானே சித்ராவதி அன்று நித்திலாவுடன் கல்லூரிக்கு வந்திருந்தார்,.. "இனி நான் காலேஜ் போகல" என்று சொன்னவளிடம், என்ன ஏதுவென்று விசாரித்தார் சித்ரா, நித்திலா முதலில் சொல்லாமல் மறைத்தாள், பிறகு அவரது கோபத்திற்கு பயந்து அனைத்தையும் கக்கி விட்டாள்...
"அசிங்க அசிங்கமா பேசுறாங்க, நான் காதுல வாங்காம இருக்க முயற்சி பண்ணாலும் என்னால முடியல, துப்பட்டாவை உருவி கேவலபடுத்துறாங்க," அழுதபடி சொன்னவளை அவர் அரவணைக்கவில்லை, பாசமாக இரு வார்த்தைகள் பேசவில்லை, ஆறுதலுக்காக கரத்தை பற்றவில்லை,... "கிளம்பு காலேஜ் போலாம்" என்று அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டார், யாரிடமும் எதுவும் பேசவில்லை, மிரட்டவில்லை, நித்திலாவை கல்லூரியில் விட்டுவிட்டு திரும்பி வந்து விட்டார் அவ்வளவு தான்,...
அவரது வருகையினால் மட்டுமே பயந்து தங்கள் கூட்டுக்குள் ஒளிந்து கொண்டனர் அந்த நான்கு மாணவிகளும், அந்த வருடம் சுமூகமாக முடிந்தது நித்திலாவிற்கும், ஆனால் அடுத்த வருடத்தில் மீண்டும் பிரட்சனை செய்ய ஆரம்பித்தனர், அதிகமாக இல்லை, அதனால் நித்திலா பொறுமையை கடைபிடித்தபடி தன்னுடைய அடுத்தடுத்த வருட படிப்பையும் நிறைவு செய்திருந்தாள், நித்திலாவை எதுவும் செய்ய முடியவில்லை எனும் கோபம் அப்பெண்களுக்கு இருந்து கொண்டே இருந்தது, ஆனால் சித்ராவின் மீதுள்ள பயத்தினால் அவர்கள் பல் பிடுங்கிய பாம்பாய் சுற்றிக் கொண்டிருந்தனர், படிப்பு முடிந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் அவர்களுக்கு இவள் மீதுள்ள வெறுப்பு போகவில்லை போலும், அதனால் தான் இன்னமும் அவளை முறைத்துக் கொண்டே நின்றிருந்தனர், நித்திலா யாருடைய முறைப்பையோ கடுப்பையோ உணரும் நிலையில் இல்லை, தான் ஆசைப்பட்ட தன் கனவு நிறைவேறி விட்ட சந்தோஷத்தில் அவள் திளைத்துக் கொண்டிருந்தாள்,...
தன் கையிலுள்ள சான்றிதழை ஆசையாக வருடிக் கொண்டிருந்தவளின் பார்வை அவளை நோக்கி வந்து கொண்டிருந்த சித்ராவின் மீது படிய, அவள் முகத்தில் பேரானந்தம், வேகமாக அவரை நோக்கி ஓடியவள் மூச்சிரைக்க அவரது முன்னிலையில் வந்து நின்றாள்,...
"ஓடி தான் வரணுமா? பாரு எப்படி மூச்சு வாங்குதுன்னு" பாசத்தை கூட கடினமாக தான் காட்டினார் சித்ராவதி,..
"அது ஒன்னும் பிரட்சனை இல்ல" என்றவளோ, தன் கையிலுள்ள சான்றிதழை அவரிடம் நீட்டினாள் ஆசையாக, வாங்கி பார்த்தவரின் இதழ்களிலும் புன்னகை,... "உன் ஆசை நிறைவேறிடுச்சு, இப்போ ஹேப்பி தானே" என்றார்,...
"என் ஆசை நிறைவேறல, நிறைவேத்தி கொடுத்திருக்கீங்க மேடம்" என்றவளின் விழிகள் நன்றியில் கலங்கி போனது....
"எமோஷனலுக்கு இடம் கொடுக்காத, அது உன்னை நிம்மதியா வாழ விடாது" என்றவரோ "இன்னொரு தடவை இப்படி அழறதை நான் பார்க்க கூடாது" என்றார் கண்டிபோடு,...
"சந்தோஷக் கண்ணீர் மேடம்" என்று கூறி அழகாக புன்னகைத்தவளோ, வேகமாக கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்,... "உன்னை ஆஃபிஸ்ல டிராப் பண்ணிடவா" என்று கேட்டபடி முன்னே நடந்தார் அவர்,.. "இல்ல பரவாயில்ல மேடம், இங்கே சாப்பிட்டு அப்புறம் நானே போயிக்கிறேன்" என்றவளை திரும்பி அழுத்தமாய் பார்த்தவர்,... "இங்கே வந்த வேலை முடிஞ்சதுல, பசிச்சா ஆஃபிஸ் கேன்டின்ல சாப்பிட்டு அப்புறம் வேலையை பாரு, இங்கே தான் சாப்பிடணும்னு உனக்கு யாரும் ஆர்டர் போடலையே??" என்று கூர் பார்வையில் வினவியவரிடம்,... 'இல்லை' என்று தலையசைத்தவள்,.. "ஆஃபிஸ்ல ட்ராப் பண்ணிடுங்க மேடம்" என்றவாறு அவருடனே புறப்பட்டாள்...
சித்ரா இப்படி தான், வேலை நேரத்தை விரயம் பண்ணுவது அவருக்கு பிடிக்காது, அவரது **** பிரான்ச்சில் தான் நித்திலா பணிபுரிகிறாள், தன் படிப்பிற்க்கு ஏற்ற வேலையில் இருக்கிறாள், கை நிறைய சம்பாதிக்கிறாள், நித்திலாவிற்க்கு தன் உழைப்பில் வரும் சம்பாத்தியத்தில் தன்னை கவனித்துக் கொள்வதில் அவ்வளவு கர்வம், கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக அவள் சித்ராவின் பொறுப்பில் தான் இருக்கிறாள், அவருடைய பணத்தில் தான் அவளுடைய அத்தனை தேவைகளும் பூர்த்தியானது, ஆனால் சமீப சில மாதங்களாக தன் ஊதியத்தில் வரும் தொகையில் தான் தன் தேவையை பூர்த்து செய்து கொள்கிறாள், சித்ராவின் பணத்தில் சாப்பிடுவதிலும், உடை உடுத்திக் கொள்வதிலும் அவளுக்கு அவமானம் இல்லை, இப்போதாவது அவருக்கு சுமை இல்லாமல் இருக்கிறோமே என்ற நிம்மதி அவளுக்கு, நித்திலாவிற்கு படிப்போடு சேர்த்து எட்டு வருடத்திற்கு குறை இல்லாத வசதியும் செய்து கொடுத்திருக்கிறார் சித்ரா, அந்த நன்றிகடன்களை எல்லாம் அவளால் அவ்வளவு சுலபமாக அடைத்து விட முடியாது, இனியாவது அவரை தொந்திரவு செய்யாமல் இருக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே, மேலும் தன் உயிருள்ளவரையும் அவருக்கு கடமைப்பட்டவளாகவே இருப்பாள்...
சித்ராவின் தோழியான சரஸ்வதியின் மகள் தான் நித்திலா, இருவரும் சிறுவயது நெருங்கிய தோழிகள், திருமணத்திற்க்கு பிறகும் அவர்களின் நட்பு கலங்கம் இல்லாமல் அழகாக நகர்ந்தது, சித்ராவதி வசதியானவர், சரஸ்வதி வசதி குறைந்தவர் என்பதெல்லாம் அவர்களது நட்பிற்கு இடையில் வராது, சரியாக நித்திலாவின் பதினைந்தாவது வயதில் அவரது தாய் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட, அநாதையாகி போனாள் நித்திலா, தன் தோழியின் இறப்பு சித்ராவிற்க்கு பேரிடியாக வந்து விழுந்தது, யாரும் இல்லாமல் அநாதரவாக நின்ற நித்திலாவை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார், அவளது ஆசை என்னவென்று கேட்டறிந்து இப்போது அவளது ஆசையையும் நிறைவேற்றி விட்டார், சித்ராவிற்கு நித்திலாவின் மீது அன்பு இருந்தாலும் அதனை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார், அவரை பொறுத்த வரையில் அதிகமான அன்பு கோழையாக்கி விடும் என்ற எண்ணம், அதனால் கண்டிபோடு தான் அவளிடம் நடந்து கொள்வார், அவளே சுயமாய் சம்பாதிக்கும் திறமையை வளர்த்து விட்டதோடு அவருடைய கடமை முடிந்து விட்டதாய் நினைத்து அவளை அத்தோடு தலை முழுகிடவும் நினைக்கவில்லை, அவளுக்கு திருமணம் செய்து வைத்து அவளுக்கென்று ஒரு குடும்பத்தையும் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார், அதற்கான முதற்கட்ட வேலையையும் பார்க்க ஆரம்பித்திருந்தார்,..
நடக்கப் போகும் திருமணத்தால் நித்திலாவின் வாழ்வு சந்தோஷத்தில் மலருமா? என்பதையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம் மக்களே....

Last edited: