• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 02

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
சித்ரா நித்திலாவை அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் வேலை முடிந்ததென்று சென்று விட, நித்திலாவோ தன் மதிய சாப்பாட்டை கேட்டினில் முடித்துவிட்டு தன் கேபினுக்கு வந்தமர,.. "என்னப்பா,.. லேட்டா வர, சார் உன்னை கேட்டாரு" பக்கத்து கேபினில் வேலை செய்து கொண்டிருந்த கவிதா கூற,.. "அச்சோ,.. என்னப்பா சொல்ற," என்று பதறினாள் நித்திலா,... கவிதா நித்திலா இருவரும் பக்கத்து பக்கத்து டேபிள் என்பதால் கொஞ்சம் பேசிக் கொள்வார்கள், ஆனால் நெருக்கமானவர்களாக இன்னும் பழகவில்லை, சாப்டியா? கிளம்பிட்டியா? வந்துட்டியா? என்ற பேச்சு வார்த்தைகளோடு வேலைகளை பற்றியும் பேசிக் கொள்வார்கள் அவ்வளவே,...

"ஆமா'ப்பா,.. உன்னை அவர் கேபினுக்கு வர சொன்னாரு," கவிதா கூற,.. 'வந்து நிம்மதியா உட்கார கூட இல்லை' என்று தனக்குள் புலம்பிக் கொண்டவள்,... "சரி நான் பார்த்துட்டு வரேன்" என்றவாறு தன் எம்டியின் அறையை நோக்கி நடந்தாள்...

"ஆரவ் விஜயன் மேனேஜிங் டைரக்டர்" என்ற பெயர் பலகையை தாங்கிய கதவை.. "எஸ்கியூஸ் மீ சார்" என்று ஒற்றை விரலால் நாசுக்காக தட்டிவிட்டு காத்திருந்தாள் நித்திலா,...

"எஸ் கம்மின்" என்று கம்பீரமாக ஒலித்தக் குரல் கேட்டு கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றவளை,... "இது தான் நீ ஆஃபிஸ் வர நேரமா" என்று கணீர் குரலில் கேட்டு அவளை ஸ்தம்பிக்க வைத்திருந்தான் ஆரவ், நெடுநெடுவென்ற உயரத்தில், கட்டுடலுடன், ஹேண்ட்சம் மேனாக இருந்தவனுக்கு சித்ராவதியின் சாயல் லேசாக இருந்தது, ஆம் சித்ராவதியின் ஒற்றை வாரிசு தான் இந்த ஆரவ் விஜயன், அவனின் கீழ் தான் நித்திலா வேலை பார்க்கிறாள்,..

"ஸா.. ஸாரி சார், கிராஜியூஷன் ஃபங்சன்க்கு போயிருந்தேன், வர கொஞ்சம் டைமாகிடுச்சு" என்று பவ்யமாய் சொன்னவளை வெறித்தவன்... "இனி நோ எஸ்கியூஸ்" என்று கண்டிப்புடன் கூறிவிட்டு,.. "உன்கிட்ட நான் கொடுத்த வொர்க் என்னாச்சு" என்றான் கூர் பார்வையில்...

"ஆல்மோஸ்ட் முடிச்சுட்டேன் சார், இன்னும் ஹாஃபனவர்ல கம்ப்ளீட் பண்ணி உங்க கிட்ட சப்மிட் பண்ணிடுவேன்" என்று சொன்னவளை, கோபமாக ஏறிட்டவனோ,... "ஒரு ரிப்போர்ட் ரெடிபண்ண உனக்கு டூ டேஸ் தேவைப்படுதா?" என்று அழுத்தமாய் கேட்டவனோ "கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலிட்டியே இல்லாத எம்பிளாயை வேலைக்கு எடுத்து என் கழுத்தை அறுக்குறாங்க" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்ள அது நித்திலாவின் காதிற்கும் நன்றாகவே கேட்டது, முகம் சுருங்கி போனது,..

"நேத்து ஈவ்னிங் தான் சார் கொடுத்தீங்க," இரண்டு நாட்கள் ஆகிவிட்டது என்று கூறியதை அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை, நேற்று அலுவலகம் முடியும் தருவாயில் தான் அந்த வேலையை அவளுக்கு கொடுத்தான், நேற்று பாதி வேலையை முடித்து விட்டு மீதியை நாளை வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து மிகவும் களைப்பாக இருந்த காரணத்தினால் வீட்டிற்கு கிளம்பி விட்டாள், இன்னும் பாதி வேலை கூட இருக்கவில்லை ஆல்மோஸ்ட் முடித்து விட்டாள், இப்போது ஒரு அரை மணி நேரம் கொடுத்தால் கூட அந்த ரிப்போர்ட்டை அவனிடம் சப்மிட் பண்ணியிருப்பாள், காலையில் வேறு ஃபங்சன் போய்விட்டு இப்போது தானே அலுவலகத்தில் வந்து நுழைக்கிறாள், அதற்குள் அவன் அவளை இத்தனை பெரிதாக குறை சொல்வது அவளுக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் மெல்லமாக அவனுக்கு கூறினாள்,..

அவனோ அவளை முறைக்க தான் செய்தான்,... "ஒரு ரிப்போர்ட்டை ரெடிபண்ண ஒன்னார் போதும்" என்றான் கடினமான குரலில்,...

"இனி சரியா பண்ணிடுறேன் சார்" அவளுக்கு அவனிடம் இறங்கி போகவேண்டிய கட்டாயம், அவனை எதிர்த்தும் பேச முடியாதே, ஏனோ அவனுக்கு, தான் இங்கு வேலைக்கு வந்ததே பிடிக்கவில்லை என்று அடிக்கடி தோன்றும், அவனுடைய பிஹேவியரெல்லாம் அப்படி தான் சொல்லும், ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து திட்டிக் கொண்டே இருப்பான், அவள் வேலையை சரியாக செய்தால் கூட அவன் பார்வை அவளை கடினத்துடன் தான் நோக்கும், 'என்னிடம் மட்டும் தான் இப்படி இருக்கிறாரா? அல்லது எல்லோரிடமும் இப்படி தான் நடந்து கொள்கிறாரா?' என்ற சந்தேகம் அவளுக்கு, மௌனமாக கவனித்தாள், அவளிடம் மட்டும் தான் கடினமான பார்வையும் வார்த்தைகளும் வெளிப்படுகிறது, மற்றவர்களிடம் மென்மையாக தான் பேசுகிறான், கவிதாவிடமும் விசாரித்தாள்,... "சார் நல்லவிதமா தான் பேசுவார், கோபம் வந்தா மட்டும் அவர் முன்னாடி நிற்க முடியாது, நாம வேலையிலையோ மற்ற விஷயங்களிலோ தவறு செய்யாமல் நல்ல முறையில் நடந்து கொண்டால், சாரோட கோபத்திற்கு ஆளாக மாட்டோம்" என்று அழகாக விளக்கம் தந்தாள்,...

நித்திலாவிற்கோ தான் எதற்காக இங்கு வேலை பார்க்க வேண்டும் எனும் எண்ணம் முளைக்க ஆரம்பித்தது, அவள் வேலையில் எந்தவித தவறும் செய்யவில்லையே, இருப்பினும் அவன் தன்னிடம் கடினமாக தானே பேசுகிறான், நான் அவனை என்ன செய்தேன் என்று என்னிடம் மட்டும் இப்படியொரு முகத்தை காட்டுகிறான் என்று மிகவும் தவித்து போனாள்,..

அவன் சித்ராவின் மகன் என்பதையும் அறிவாள், அவர் தான் அவளுக்கு வேலையும் கொடுத்தார், எனவே அவரிடமே அவர் மகனை பற்றி குறை சொல்லவும் தயக்கம், 'எனக்கு இந்த வேலை வேண்டாம்' என்று சொல்லவும் நெருடல், 'உனக்கு ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் என்னிடம் மறைக்காமல் சொல்லு' என்று சித்ரா அவளிடம் சொல்லி இருந்தாலும், சும்மா சும்மா அவரை போய் தொந்திரவு செய்வது அவளுக்கு சரியாகவும் படவில்லை,.. 'பார்த்துக் கொள்ளலாம்' என்று மனதை திடப்படுத்திக் கொண்டு தன் வேலையை பார்க்க அமர்ந்து விட்டாள்,..

ஆரவ் கேட்ட ரிப்போர்டை அரை மணி நேரத்திற்குள்ளாகவே தயார் செய்து அவனிடம் கொண்டு போய் கொடுத்தாள்,.. இப்போதும் முகத்தில் கடினத்தை காட்டி பெற்றுக் கொண்டவன், அடுத்த வேலையை கொடுத்து விட்டு,.. "நான் சொன்ன டைம்குள்ள இந்த வொர்க் முடிஞ்சிருக்கனும்" என்று அதிகார தோரணையில் சொல்ல, தலையசைத்துக் கொண்டவள், பெருமூச்சுடன் வெளியேறி இருந்தாள்,...

"என்ன நித்தி டல்லா இருக்க? சார் எதுவும் சொன்னாரா" என்றாள் கவிதா,... "அவர் எதுவும் சொல்லலைனா தான் ஆச்சரியம்" சலிப்புடன் சொல்லிக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தவளிடம்,... "ஏன் இப்படி சொல்ற," என்றாள்,...

"அவருக்கு நான் இங்கே வேலைக்கு வந்தது பிடிக்கல, முதல்ல இங்கிருந்து கிளம்பனும், கடுப்பா இருக்கு" என்று எரிச்சலுடன் சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவள்,.. "நீ மட்டும் தான் சாரை பத்தி குறை சொல்ற, என்னமோ போ, அவருக்கு உன் மேல என்ன கோபமோ தெரியல" என்று புலம்பிக் கொண்டு தன் வேலையை அவள் கவனிக்க, நித்திலாவும் சலிப்புடன் தன் வேலையில் மூழ்கினாள்,...

*********************

"ஆரவ்" தாயின் அழைப்பில் அறையை நோக்கி நடந்துக் கொண்டிருந்தவனின் நடை ஸ்விட்ச் போட்டது போல் நின்றது, அலுவலகத்திலிருந்து வந்திருந்தவனோ டையை தளர்த்தியபடி சோபாவில் அமர்ந்திருந்த தாயை கண்டும் காணாமலும் ஏற போனவன், அவர் தன்னை அழைக்கவும் விழிகளை மூடி திறந்தபடி "எஸ் மாம்" என்று தலையை மட்டும் திருப்பி கேட்க... சித்ராவோ "நான் கேட்ட விஷயம் என்னாச்சு" என்றார்,...

அவன் முகத்திலோ சலிப்பு,.. "எனக்கு தெரியாதுன்னு அப்போவே சொல்லிட்டேனேமா" சலிப்பை காட்டாது அமைதியான குரலில் தான் சொன்னான், தாய் மீது அவ்வளவு மரியாதை அவனுக்கு, பாசமும் அதிகம், தந்தையை சிறு வயதிலேயே இழந்து விட்டதால் தந்தையின் பாசத்தையும் கண்டிப்பையும் தாயின் மூலம் உணர்ந்தவன் அல்லவா! சித்ராவிற்க்கும் தன் ஒற்றை பிள்ளையின் மீது அலாதி பிரியம், அவர் கண்டிபானவர் என்றாலும் அன்பையும் வாரி வழங்கி இருந்தார் மகனின் மீது, அவனுக்கு பிடித்த படிப்பை படிக்க வைத்தார், அவர் மகனும் அவர்கள் தொழில் சம்பந்தமான படிப்பை தான் தேர்ந்தெடுத்தான், தாயிடமிருக்கும் அதே அறிவும் ஆளுமையும் அவனுடனும் ஒட்டியே பிறந்திருந்தது, அவன் தாய் வளர்த்து விட்ட தொழிலை இப்போது அவன் தான் மேலும் மேலும் உயர வளர்த்துக் கொண்டிருக்கிறான், தாயிடமிருக்கும் நல்ல குணநலங்களோடு சேர்ந்து பொறாமை குணமும் தூக்கலாக இருக்கும் அவனிடம்,...

சிறு வயதில் அவனது நண்பன் இன்னொரு பையனுடன் சேர்ந்து விளையாடினால் அவ்வளவு கோபம் வரும், என் நண்பன் என்னிடம் மட்டும் தான் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு, சிறு வயதில் ஆரம்பித்த இந்த குணம் இன்றைய நாள் வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, நண்பனின் மீதே இப்படியென்றால் அவன் தாய் மீது எந்தளவிற்கு இருக்கும்???

மகனின் பதில் அவருக்கு போதுமானதாக இல்லை,... "என்னடா இப்படி சொல்லிட்ட, உனக்கு தெரிஞ்ச பையன் தானே அவன்" என்று கேட்டபடி மகனின் அருகில் வந்திருந்தார் சித்ரா,...

"தெரிஞ்ச பையன் தான், பட் அவன் கேரக்டரை பத்தி தெரிஞ்சிக்கிற அளவுக்கு டீப் க்ளோஸ் இல்ல, ஜஸ்ட் பார்த்தா ஹாய் ஹெலோ சொல்லிப்போம் அவ்வளவு தான்" என்றான்...

சித்ராவின் முகம் யோசனையுடன் சுருங்கியது, அதனை கண்ட ஆரவ்வோ சலிப்பாக தலையசைத்துக் கொண்டு,.. "எனக்கு டையர்ட்டா இருக்கு நான் ரூம் போகட்டுமா" என்றான்,....

"சரி நீ போ,.. நான் வேற யார்கிட்டையாச்சும் விசாரிச்சுக்கிறேன்" என்று கூறி திரும்பி நடந்தரை வெறித்தவன்,... "ரொம்ப விசாரிக்கணும்னு அவசியம் என்ன வந்ததும்மா, வசதியான குடும்பம், முடிச்சு விட வேண்டியது தானே" கடுப்பை முகத்தில் காட்டாமல் கூறினாலும், அவனது வார்தையிலேயே அவனது கடுப்பு தெரிந்தது...

அதனை உணர்ந்து மகனை ஏறிட்டவரோ,... "இப்படி பேசாத ஆரவ்," என்று அதட்டல் குரலில் கூறினார்,...

"நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்" அவன் வாக்குவாதத்தில் ஈடுபட... "நம்மள நம்பி இருக்குற பொண்ணுக்கு நாம தான் நல்ல லைஃப் அமைச்சு கொடுக்கணும்" என்றார் அழுத்தமாக,..

"வளர்த்து படிக்க வச்சிருக்கீங்க, இப்போ நம்ம கம்பெனில வேலையும் கொடுத்தாச்சு, கல்யாணத்தை கூட நீங்க தான் பண்ணி வைக்கணுமா" என்றான் அவனும் அழுத்தமாக,...

"ஆமாடா,.. அவளை ஒரு நல்ல குடும்பத்துக்குள்ள சேர்த்து விட்டா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும், இதனால உனக்கு என்ன ப்ராப்ளம், அவ உன்னை என்னடா பண்ணா, எதுக்காக அவ மேல உனக்கு கோபம்" என்றார்,...

"கோபமும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல, சீக்கிரம் அவளுக்கு கல்யாணத்தை பண்ணி அனுப்பி வைங்க, தயவு செய்து கல்யாணத்துக்கு அப்புறமும் அவளை பத்தின புராணத்தை ஆரம்பிக்காதீங்க, இத்தோடு அவளை தலை முழுகிடுங்க" என்று சொன்னவனோ விறுவிறுவென்று தனதறையை நோக்கி நடந்து விட, சித்ராவோ போகும் மகனின் முதுகை வெறித்தவர், நீண்ட மூச்சை இழுத்துவிட்டபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்,...
 
Last edited:
  • Love
Reactions: shasri