தனதறைக்கு வந்தவனோ கழுத்திலிருந்த டையை உருவி விசிறி எறிந்தான், முகம் கோபத்தில் நரம்புகள் புடைத்து காணப்பட்டது, இப்போது அவனிருக்கும் கோபத்திற்கு அவனது முன்னிலையில் நித்திலா இருந்தால் அவள் கழுத்தை நெறித்தே கொன்றிருப்பான், அந்தளவிற்கு இப்போது அவனுள் வெறி,..
இவ்வளவு கோபம் எதனால் என்று கேட்டால் அவனுள் இருக்கும் பொறாமை குணத்தினால் தான், தன் நண்பனிடம் இன்னொருவன் வந்து நெருங்கி பழகினாலே பொறாமை கொள்பவன், பெற்ற தாய் தன்னை தாண்டி இன்னொரு பெண்ணின் மீது பாசம் வைப்பதை ஏற்றுக் கொள்வானா என்ன?
ஆம்... நித்திலாவின் மீது சித்ரா அக்கறை காட்டுவது அவனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை, ஆரம்பத்தில் அவனுக்கு பெரிதாக தெரியாத விஷயம் போக போக அவனுள் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, சித்ரா நித்திலாவை பற்றி பேசும் போது, ஏனென்றே தெரியாத கோபம் அவள் மீது எழுந்தது, நித்திலா பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க, சித்ராவிற்கோ பெரும் மகிழ்ச்சி, "நித்திலா ஸ்டேட் செக்கேண்ட் வந்திருக்கா ஆரவ், உன்னை விட அதிகமான மார்க்ஸ் எடுத்திருக்கா," என்று சித்ரா சாதாரணமாக கூறியது ஆரவ்வின் மனதில் நஞ்சை விதைக்க போதுமானதாக இருந்தது,...
ஆரவ் அப்போது தன் கல்லூரி படிப்பை முடித்து தொழிலில் கால் பதித்திருந்த சமயம், நன்கு மெச்சூரிட்டி இருக்கும் வயது தான் என்றாலும், அவன் ரத்தததிலேயே ஊறியிருக்கும் பொறாமை குணம் அவனது மெச்சூரிட்டியையெல்லாம் மென்று சாப்பிட்டு விட்டது....
"நித்திலா குணத்துல மட்டும் இல்ல, திறமையிலையும் ஃபர்ஸ்ட்ல இருக்கா, இந்த வயசிலேயே நிறைய பொறுப்பு அவளுக்கு" ஒவ்வொரு முறையும் சித்ரா அவளை புகழ புகழ இவன் மனது இறுகி போகும்,.... ஆரவ் படிப்பிலும், விளையாட்டிலும் மிகவும் கெட்டிக்காரன், ஒவ்வொரு முறையும் ஜெயித்து வந்து தாயின் பாராட்டை பெற்றுக் கொள்ளும் போது அவ்வளவு கர்வமாக இருக்கும், தாயின் பாராட்டை பெறுவதற்காகவே மேலும் அனைத்திலும் ஜெயித்து அவரின் முன்னிலையில் வந்து நிற்பான், தன்னை பாராட்டிய தாய், இப்போது இன்னொரு பெண்ணை பாராட்டுவது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை, இதில் அவர் அவனை விட அவள் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதாய் கூறியது அவன் தன்மானத்தை சீண்டி விட்டது போல் இருந்தது, அப்பாவியான நித்திலா மீது வெறுப்பு உண்டானது, இந்த காரணத்தினால் தான் அலுவலகத்தில் கொடுத்த வேலையை அவள் சரியாக செய்தாலும், அதில் ஏதாவது குறை சொல்லி அவளை நோகடிக்கிறான்..,
எட்டு வருடங்கள் அவளை வளர்த்து, படிக்கவும் வைத்தாயிற்று, இதற்கு மேல் திருமணமும் செய்து வைக்க வேண்டுமா எனும் ஆத்திரம் அவனுக்கு, சில நாட்களின் முன்பு நித்திலாவிற்கு மணம் முடித்து வைப்பதற்காக ஆரவ்விற்கு தெரிந்த ஒரு பையனை பற்றி அவனிடம் விசாரித்தார் சித்ரா, அவர் விசாரித்த வரையில் அந்த பையனின் குடும்பம் நல்லதாக தெரிந்தது, வசதிப்படைத்தவர்களும் கூட, இவர்கள் அளவிற்கு இல்லையென்றாலும் பணவசதியில் குறைவில்லாவர்கள் தான், அந்த பையனையும் தூரத்திலிருந்து பார்த்திருக்கிறார், அழகன் தான், நித்திலாவிற்கும் திருமண வயது நெருங்கி இருக்க, அவளுக்கு திருமணத்தையும் முடித்து வைத்து விட்டால் தன் கடமை முடிந்துவிடும் என்று நினைத்தார், மகனிடம் அந்த பையனை பற்றி விசாரித்தார், அவன் தெரியாது என்று கூறிவிட்டு சென்றிருந்தான், மகனுக்கு அந்த பையனை பற்றி தெரியும் என்பதை அவர் நன்கு அறிவார், எனவே மீண்டும் இன்று விசாரிக்க, அவனோ சலிப்போடும் கோபத்தோடும் பேசிய வார்தைகளிலேயே இவன் தனக்கான பதிலை தர மாட்டான் என்பதை அறிந்து, தானே விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டார், அதே சமயம் மகனின் பொறாமை குணத்தை பற்றியும் தெரியும், இப்போதெல்லாம் அவர் நித்திலாவை பற்றி அவனிடம் அதிகம் பேசுவதும் கிடையாது, இருப்பினும் ஏதாவது ஒரு விஷயத்தில் பேசும் சந்தர்ப்பம் அமைந்து விட தான் செய்கிறது இன்றைய நாளை போல,...
'இவன் எப்போது திருந்த போறானோ தெரியல,' என்று சலித்துக் கொண்டவரோ.. 'முதல்ல அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்' எனவும் நினைத்துக் கொண்டார்,... மகனுக்காக அவர் நித்திலாவை நட்டாந்தரையில் விட முடியாதல்லவா! எப்போது அவர் அவளை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டாரோ அப்போதே முடிவு செய்து விட்டாரே அவள் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்க்கும் தான் தான் பொருப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று, நித்திலாவிற்கு திருமணம் செய்து வைத்து அவளுக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுத்தால் தான் அவருக்கு நிம்மதி, அதற்கான முதற்கட்ட வேலைகளை தான் இப்போது பார்க்க தொடங்கி இருந்தார்,....
அடுத்த நாள்,
தன் சிஸ்டத்தின் முன்பு அமர்ந்து தனது வேலையை செய்து கொண்டிருந்தாள் நித்திலா, ஆதவ் தான் அவளுக்கு தலைக்கு மேல் வேலைகளை கொடுத்திருந்தான், தன் ஊழியர்கள் ஸ்ட்ரெஸ் ஆகும் அளவிற்கெல்லாம் அவன் வேலைகளை கொடுக்க மாட்டான், ஆனால் நித்திலாவிற்கு மட்டும் வேண்டுமென்றே வேலை சுமைகளை அதிகமாக கொடுப்பான், அவன் கேட்ட ப்ளூ பிரிண்ட் ட்ராயிங்கை கச்சிதமாக செய்து முடித்தவள், அவனிடம் சப்மிட் பண்ணுவதற்காக அவனறைக்கு சென்றாள்,...
வழக்கம் போல் அனுமதி கேட்டுவிட்டு அவனறைக்குள் நுழைந்தவள்,.. "சார்" என்று பணிவாக கூறிவிட்டு அவனிடம் அந்த ப்ளூபிரிண்டை நீட்ட, அவளிடமிருந்து வாங்கி கொண்டவன் அந்த ட்ராயிங்கை கண்டு மலைத்து தான் போனான், மிகவும் கச்சிதமாக இருந்தது, அவன் எப்படி எதிர்பார்த்ததானோ அப்படியே இருந்தது, ஆனால் அவளை பாராட்ட தான் அவனுக்கு மனது வராதே, பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை, மனம் நோகும்படி எதுவும் பேசாமல் இருக்கலாமே, எப்போதுடா அவள் தன் முன்னால் வருவாள், நோகடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பவன் அவளை சும்மாவா போக விடுவான்,...
அவள் கொடுத்த ப்ளூ ப்ரிண்ட்டை விசிறி அடித்தவன்,... "என்ன பண்ணிட்டு வந்திருக்க, எவ்வளவு மிஸ்டேக், எந்த வேலையையுமே உனக்கு ஒழுங்கா பண்ண முடியாதா" என்று கத்த தொடங்கி இருந்தான், தன் மூளையை கசக்கி, தன்னால் முடிந்த வரையில் மிகவும் மெனக்கெட்டு தான் அந்த வரைபடத்தை வரைந்து கொண்டு வந்திருந்தாள், அவளுக்கு தெரிந்த வரையில் அதில் குறை இருப்பதாய் தோன்றவில்லை, ஆனால் ஆரவ் இப்போதும் குறை சொல்லவும் அவள் மனம் மிகவும் அடிபட்டு போனது,...
"கரெக்ட்டா ரெடிபண்ணி கொண்டு வா" என்றவாறு நன்றாக திட்டி விட்டு அவளை வெளியே அனுப்பி இருந்தான், நித்திலாவிற்கோ அழுகை வருவது போல் இருந்தது, அடக்கிக் கொண்டே முதலிலிருந்து வரைபடத்தை வரைய ஆரம்பித்தாள், சில மணி நேரங்கள் எடுத்துக்கொண்டது, வேலை முடிந்ததும் அனைத்தும் சரியாக தான் இருக்கிறதா என்று கவிதாவிடமும் கேட்டாள், அவளும் பார்த்து விட்டு குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை தைரியமாக போ என்று கூறி இருக்க, மீண்டும் ஆரவ்வின் அறைக்குள் நுழைந்திருந்தவள், அவனிடம் வரைபடத்தை நீட்ட, வாங்கி பார்வையிட்டவனோ, அதனை கிழிக்க போக, நித்திலா தான் பதறி போய் விட்டாள்,..
அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்து கொண்டு வந்திருக்கிறாள், அதனை அவன் தன் கண் முன்னாலேயே கிழிக்க போவதை அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை,... சட்டென்று அவன் கையிலிருந்து அதனை பறித்துக் கொண்டவள்,... "நீங்க வேணும்னே பண்ணுற மாதிரி இருக்கு சார்" என்று தன் மனதில் பட்டதை நேரடியாகவே கேட்டு விட்டாள்,...
அவளை உறுத்து விழித்தவனோ... "என்கிட்டருந்து அதை பிடுங்குறதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும், அண்ட் என்னை எதிர்த்து கேள்வி கேட்கிறியா?" என்று சிங்கமென உருமினான்,...
அவனது குரலும், பார்வையும் அவளை பயப்பட வைத்தாலும், தன் உழைப்பை அவன் குப்பையாக நினைப்பதை ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை, இவனிடம் வேலை செய்வதே வேஸ்ட் என்று நினைத்தாள், அவனை நேர்பார்வையுடன் நோக்கியவள் "நான் வேலையை ரிசைன் பண்ணுறேன்" என்று தைரியமாக கூறி விட்டாள், அவளுக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை, எவ்வளவு தான் மெனக்கெட்டு பார்த்து பார்த்து அவன் கொடுத்த வேலைகளை செய்து வந்தாலும், அவன் குறை மட்டுமே சொன்னால் எப்படி அவளால் மேற்கொண்டு அவனிடம் வேலை செய்ய இயலும், சித்ராவிடம் இதை பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள், இவனிடம் வேலையை விட்டு போவதாக கூறி இருக்க, அவன் இதழ்களிலோ ஏளன புன்னகை,...
அந்த புன்னகை அவள் இதயத்தை சென்று தாக்கியது என்னவோ உண்மை தான், அவன் தாயின் தயவால் தான் எட்டு வருடங்கள் குறை இல்லாமல் வளர்ந்திருக்கிறாள், படிப்பும் அவர் கொடுத்தது, வேலையும் கூட அவர் கொடுத்தது, அவள் இப்போது அணிந்திருக்கும் உடை கூட அவன் தாய் வாங்கி கொடுத்த உடை தான், இல்லை என்று சொல்ல மாட்டாள், ஆனால் அதற்காக இவனிடம் தரம் தாழ்ந்து போவது அவளுக்கு பிடிக்கவில்லை, அவனது ஏளன புன்னகையும் இளக்காரமான பார்வையும் அவளை சங்கடத்திற்குள்ளாக்கினாலும், அவனுக்கு கீழ் வேலை செய்ய அவள் மனம் ஒப்பவில்லை, எனவே,... "நான் மேடம் கிட்ட பேசிக்கிறேன்" என்று கூறிவிட்டு திரும்பி போக முனைந்தவள்,... "நீ உன்னோட மேடம்'க்கு கீழ வேலை பார்க்கல, எனக்கு கீழ தான் வேலை பார்க்கிற, சோ போறதா இருந்தா என்னை ஃபேஸ் பண்ணிட்டு போ" அவனது அழுத்தமான குரலில், போகாமல் நின்றவள், விழிகளை மூடி திறந்து தன்னை நிதானித்தபடி அவனை நோக்கி திரும்பியவள்,... "இங்கே நான் வேலைக்கு சேர்ந்ததுக்கு ரீசன் மேடம் தான், சோ உங்களை ஃபேஸ் பண்ணனும்னு எனக்கு அவசியம் இல்லை" என்று முகத்தில் அடித்தார் போல் கூறியவள், அடுத்த கணம் கதவை திறந்துக் கொண்டு வெளியேறி இருக்க, ஆரவ்விற்க்கோ அவள் தன் வார்த்தையை மீறி சென்றதில் கோபம் எரிமலையாய் வெடித்தது, அவள் மீது வன்மம் கூடியது,.. 'ஒன்னும் இல்லாத வெத்து வேட்டு, எங்க காசுல வளர்ந்த பிச்சைகாரிக்கு இவ்வளவு திமிரா? பார்த்துக்கிறேன்டி, என்கிட்ட மாட்டாமலா போவ' என்று நினைத்துக் கொண்டவனோ, அவள் ஏதோ பரம எதிரியை போன்று அவளை பழிவாங்க திட்டமிட்டான்,...

Last edited: