கண்ணீர் - 04
சித்ராவின் முன்பு தான் நின்றிருந்தாள் நித்திலா, தலை குனிந்தபடி நின்றிருந்தவளை அழுத்தமாக பார்த்தவரோ,..."சோ இனிமே அங்கே வேலை பார்க்க மாட்ட?" என்று கேள்வியாய் நிறுத்த.. நிமிர்ந்தவளோ தயக்கமாக அவரை ஏறிட்டு பார்த்து.... "அங்கே வேலை செய்ய ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு மேம், அதனால தான்" என்று அவள் இழுக்க.... "உன்னோட ஸ்ட்ரெஸ்ஸுக்கு காரணம் ஆரவ்வா?" அவர் சரியாக கணித்து வினவ, ஆச்சரியத்துடன் விழிகளை விரித்தவளுக்கோ ஆம் என்று சொல்ல தயக்கம், அவர் மகனை பற்றி அவரிடமே குறை சொல்வது அவளுக்கு சரியாக படவில்லை,...
அவள் வாய் திறந்து சொல்லவில்லை என்றால் என்ன? அவளது விழிகளே சொல்லி விட்டதே, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவர்... "இனிமே நீ அந்த பிரான்ச்சுக்கு போக வேண்டாம், ***** பிரான்ச்க்கு வா, அங்கே உனக்கு எந்த பிரட்சனையும் வராது" என்று கூறிட... "உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கிறேனா மேடம்" சங்கடமாக கேட்டாள் நித்திலா, அவர் அவளுக்கு வேறொரு கிளையில் வேலை கொடுப்பது நெகிழ்வாக இருந்தாலும், அவரை மிகவும் சங்கட படுத்துகிறோமோ என்று கவலையாகவும் இருந்தது...
"இதுல சிரமம் கொடுக்க என்ன இருக்கு, அதிகம் யோசிக்காத, வேலையில மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு ம்ம்" என்று கூற, அவளும் தலையசைத்துக் கொண்டாள்...
"அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயமும் சொல்லணும்" என்று சொன்னவரை என்னவென்பது போல் பார்த்தவள்,... "உனக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு, சோ" என்று நிறுத்தி அவர் அவள் முகத்தை பார்க்க, அவளுக்கும் புரிந்து விட்டது,... 'திருமணமா?' என்று கொஞ்சம் அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது, அவள் தன் திருமணத்தை பற்றியெல்லாம் யோசித்து கூட பார்க்கவில்லையே, அதனால் கொஞ்சம் தவித்து தான் போனாள்,...
"இப்போ எதுக்கு டென்ஷனாகுற நித்திலா, நாளைக்கே ஒன்னும் நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறதில்லை" அவளது முகபாவனையை கண்டு அவர் அதட்ட... "இல்ல மேடம் அது" என்று திணறியவளோ,... "நீங்க எது பண்ணாலும் எனக்கு ஓகே தான்" என்று தன் சம்மதத்தையும் கூறி இருந்தாள்,...
சித்ராவிற்கும் அவளது பதிலில் சற்று நிம்மதி, இருப்பினும் அவள் திருமணத்தை எண்ணி பயப்படுகிறாள் என்பதை அறிந்து கொண்டவர், அவள் கரத்தை பற்றிக் கொண்டு... "நீ எதுக்கும் பயப்பட வேண்டாம், உன் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை தான் உனக்கு அமைச்சு தருவேன், உனக்கு மனசுல ஏதாவது உறுத்தல் இருந்தாலும் தயங்காம என்கிட்ட சொல்லிடு ம்ம்" என்று அக்கறையாக கூறிட, அவள் இதழ்களிலோ புன்னகை, சித்ரா அவளிடம் பல சமயம் கண்டிப்பை காட்டி இருந்தாலும் அவரின் அன்பை உணராதவள் அல்ல அவள், தாய் தந்தையை இழந்து நிற்பவளுக்கு சித்ராவின் அன்பு பொக்கிஷமாய் தான் தெரிந்தது, தன்னை வளர்த்து, படிப்பும் வேலையும் தந்ததோடு நிறுத்தி விடாமல், தனக்கு திருமணமும் நடத்தி வைக்க ஆசை படும் அவரின் அன்பையும் அக்கறையையும் எண்ணி மெச்சிக் கொண்டாள், அவரிடம் பேசிவிட்டு
அவரின் நினைவுகளை சுமந்தபடி தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள், அவள் தாய் தந்தையோடு வளர்ந்த வீட்டில் தான் இப்போது அவள் வசிக்கிறாள், பதினெட்டு வயது வரை அவள் ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தாள் சித்ராவின் கண்காணிப்போடு, அப்போது அவள் சிறுபெண்ணல்லவா! தனியாக வீட்டில் இருக்க முடியாது என்ற காரணத்தினால் ஹாஸ்டல் தான் அவளுக்கு பாதுகாப்பு என்று அவளை ஹாஸ்டலிலேயே சேர்த்து விட்டார், சித்ரா தனக்கு மகன் இல்லையென்றால் கண்டிப்பாக தன்னுடன் தன் வீட்டிலேயே அவளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பார், வயது பையன் இருக்கும் வீட்டில் அவளை தங்க வைப்பது அவருக்கு சரியாக படவில்லை, அதையும் தாண்டி தன் மகனுக்கு பொஸஸிவ்னஸ் அதிகம் என்பதை அறிந்தவர், அவளை வீட்டில் தங்க வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை,...
தன் பதினெட்டு வயது வரை நித்திலா ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தாள், அவள் கல்லூரி படிப்பின் போது தான் தன் வீட்டிற்கு வந்தாள், சித்ராவிற்கு தான் அவளை வீட்டில் தனியே விடுவதில் தயக்கம்,.. "ஹாஸ்டல்ல இருக்க உனக்கு என்ன பிரட்சனை நித்திலா, தனியா எப்படி நீ வீட்ல இருப்ப" என்றார்...
"என் அம்மா அப்பாவோட வாழ்ந்த வீட்ல இருக்க தான் நான் ஆசை படுறேன் மேடம், இவ்வளவு நாள் நான் சின்ன பொண்ணா இருந்தேன், இப்போ தான் மெச்சூரிட்டி வந்துடுச்சே, அதெல்லாம் நான் தனியா இருந்துப்பேன் மேடம்" என்று துணிச்சலாக பேசியவளிடம் அவரால் மேற்கொண்டு என்ன சொல்லி தடுக்க இயலும், அவள் வீடு அமைந்திருப்பதும் நல்ல ஏரியாவில், பக்கத்து பக்கத்தில் வரிசையாக பல வீடுகள் இருக்கும், அவளுக்கு அங்கு எவ்வித பிரட்சனையும் வராது என்பதை அறிந்தவரும் அவளது விருப்பத்திற்கே விட்டுவிட்டார், நித்திலா அவளே தான் சமைத்து சாப்பிடுவாள், அவளது வேலைகள் அனைத்தையும் அவள் தான் பார்த்துக் கொள்வாள், தம் வேலைகளை தாமே பார்த்துக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லையே,...
தாய் தந்தை தன்னுடன் இருக்கிறதாய் நினைத்துக் கொள்வாள், தனியாக இருப்பதற்க்கு அவளுக்கு பயமும் இல்லை, அக்கம் பக்கத்து வீட்டினர்களும் அவளிடம் அன்பாக பழகுவார்கள், அவ்வபோது அவர்கள் வீட்டில் செய்த சமையலை இவளுக்கும் கொண்டு வந்து கொடுப்பார்கள், எல்லாம் ஒரு பாசத்தில் தான், இப்போது வரை நித்திலாவிற்கு எந்தவித சிரமமும் இருந்ததில்லை, அவளுக்கு சிரமம் இல்லாமல் தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொடுக்கிறார் சித்ரா, தன் தோழியின் மகளை கரை சேர்த்து விட்டால் அவரும் நிம்மதியாக இருந்து விடுவார், அவர் மகனுக்கும் வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லவா! அவன் திருமணத்தில் நாட்டமில்லாமல் இருந்தாலும், நித்திலாவின் திருமணத்திற்கு பிறகு தன் மகனுக்கும் நல்ல வரனை தேடி மணமுடித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் தான் இருக்கிறார், அவர் ஒரு திட்டத்தை வைத்திருக்க, விதியோ தன் சதித்திட்டத்தை அரங்கேற்ற சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிந்தது, அந்த சதியில் சிக்கித் தவிக்க போறது யாரோ!!!
நாட்கள் கடந்தது, நித்திலாவும் புது கம்பெனியில் தன் வேலையை எவ்வித பிரட்சனையுமின்றி செய்து கொண்டிருந்தாள், அவள் வேலை செய்யும் கம்பெனி முழுக்க முழுக்க சித்ராவின் கண்காணிப்பில் இயங்குவதால் ஆரவ் அங்கு வருவது அரிது தான், மீட்டிங் என்றால் வருவான் அவ்வளவே, அதனால் நித்திலாவும் அவனை பார்த்து வாரங்களை கடந்தது, இந்நிலையில் நித்திலாவிற்கு அதே மாப்பிள்ளையை திருமணம் முடிக்க முடிவு செய்திருந்தார் சித்ரா, நித்திலாவிற்கு வரவிருக்கும் மாமனார் மாமியார் அவளை மகள் ஸ்தானத்தில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு, மாப்பிளை கிஷோரின் தாய் தந்தை மிகவும் அன்பானவர்கள் என்பது அவர்களோடு பேசிய முதல் சந்திப்பிலேயே தெரிந்து விட்டது சித்ராவிற்கு, அவர்களுக்கு இரு மகன்கள் மட்டுமே, மூத்தவன் தான் கிஷோர், அந்த வீட்டில் நாத்தனாரின் தொல்லையும் அவளுக்கு இருக்காது என்று நினைத்துக் கொண்டார் சித்ரா,...
நித்திலாவை பற்றி அவர்களிடம் கூறினார், அவர்களுக்கும் நித்திலாவின் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்து விட, உடனே சம்மதித்து விட்டனர், அவர்கள் பணவசதியில் குறைவில்லாதவர்கள் என்பதால் வரதட்சணை எதிர்பார்க்கவில்லை, குணமான பெண்ணாக இருந்தால் போதும் என்பதே அவர்களின் எண்ணம், சித்ராவின் குணம் மற்றும் வசதியை பற்றி அறிந்து வைத்திருந்தவர்கள் அவரது கண்காணிப்பில் வளர்ந்த நித்திலாவை முழுமனதாகவே தங்கள் மருமகளாக்கி கொள்ள சம்மதித்து விட்டனர்.....
"உங்க பையன்கிட்ட நித்திலா ஃபோட்டோவை காட்டுங்க, அவருக்கும் பிடிக்கணும்ல" என்ற சித்ராவிடம்,.. "எங்க பையன் நாங்க கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான், அப்படிப்பட்ட தங்கமான பிள்ளை, பொண்ணு போட்டோவையும் நிச்சயமா காட்டுறோம், அவனுக்கும் நித்திலாவை நிச்சயம் பிடிக்கும்" என்று நம்பிக்கையோடு சொன்னவர்களைப் பார்த்து புன்னகைத்தாலும், மாப்பிள்ளைக்கும் நித்திலாவை பிடித்திருக்கின்றது என்ற பதில் அவருக்கு தேவையாக இருந்தது,...
எனவே,... "பையன் கிட்டயும் கேட்டுட்டு சொல்லுங்க" என்று தன்மையாக கேட்டுக் கொள்ள, அவர்களும் புன்னகையோடு தலையசைத்துக் கொண்டனர், அதே போல் அடுத்த நாள் அவர்களும் தங்கள் மகனுக்கு பெண்ணை பிடித்திருப்பதாக அவரிடம் தகவல் கூறி இருந்தனர், சித்ராவிற்கு நிம்மதி என்றாலும், திருமணத்திற்கு முன்பு நித்திலாவையும் கிஷோரையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார், திருமணத்திற்கு முன்னதாகவே புரிந்து கொண்டு மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறது இருவருக்கும் நல்லது என்று நினைத்தார்,....
அவர் கிஷோரை பற்றி விசாரித்த வரையில் நல்லவிதமான தகவல் தான் வந்து சேர்ந்தது, இருப்பினும் ஏனோ மனதில் சிறு உறுத்தல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது, ஏன் என்று தெரியவில்லை, அது தன் மனபிரம்மையாக இருக்கலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார், அதற்கடுத்த நாட்களில் கிஷோரின் தாய் தந்தையோடு நித்திலாவை சந்திக்க வைத்தார் சித்ரா, தன் வருங்கால மாமனார் மாமியாரின் அன்பை எண்ணி அவளும் சற்று ஆச்சரியப்பட்டு தான் போனாள், மிகவும் கனிவாக பேசினார்கள், முதல் சந்திப்பிலேயே அவர்களை அவளுக்கு மிகவும் பிடித்தும் போனது, அவரது மகனை பற்றி நிறைய கூறினார்கள், அவனிடம் போனில் பேச வைத்தார்கள், இவள் தயங்கி தயங்கி பேசுவது போல தான் அவனும் தயங்கி தயங்கி பேசினான், முதல் முறை கட்டிக்க போபரிடம் பேச பெண்களுக்கு மட்டும் தான் கூச்சம் ஏற்பட வேண்டும் என்றில்லையே, ஆண்களுக்கும் கூச்சம் எழுவது இயல்பு தானே, கிஷோரின் தயக்கமான உரையாடல்கள் நித்திலாவிற்க்கு அப்படி தான் நினைக்க வைத்தது, எனவே அவள் சித்ராவிடம் அதை பற்றியெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை, ஆனால் இந்த இடத்தில் அவள் பெரிதாக நினைக்காத இவ்விஷயத்தினால் வரும் நாட்களில், தான் மிகப்பெரிய இக்கட்டுக்கு தள்ளப்படுவோம் என்பதை அவள் நினைத்திருக்க மாட்டாள், நினைத்திருந்தால் சித்ராவிடம் சொல்லி இருப்பாளோ என்னவோ! அப்படி நடந்திருந்தால் அவளது எதிர்காலமும் வேறு மாதிரி மாற்றியமைக்கப்பட்டிருக்கும், விதி யாரை விட்டது....

Last edited: