• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 05

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 05

கிஷோர் நித்திலாவின் திருமண தேதியும் குறிக்கப்பட்டது, பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், நலங்கு என்று எந்தவித சம்பிரதாயமும் வைத்துக் கொள்ளவில்லை, நேரடியாக திருமணத்தையே முடிவு செய்து விட்டனர், சித்ராவும் சரி கிஷோரின் குடும்பமும் சரி பெரிதாக சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் பார்ப்பவர்கள் கிடையாது,

எனவே அவர்கள் மற்ற சடங்கை தவிர்த்துவிட்டு திருமணத்தை பெரிய அளவில் வைத்துக் கொள்ளலாம் என்று பேசி முடிவெடுத்து விட்டனர், திருமண தேதி முடிவு பண்ணும் போது மட்டும் அனைவரும் கோயிலில் கூடி பேச்சு வார்த்தை நடத்தினர், கிஷோரும் வந்திருந்தான், நித்திலாவும் வந்திருந்தாள் அழகாக பட்டுடுத்தி, இருவரும் பார்த்தார்கள், கடமைக்கு புன்னகைத்துக் கொண்டார்கள், ஆனால் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை,

'எங்க மகன் கொஞ்சம் இல்ல நிறையவே கூச்ச சுபாவம் உள்ளவன்' என்று கிஷோரின் பெற்றோர்கள் கூறி இருந்தமையால் சித்ராவும் ஒன்றும் நினைத்துக் கொள்ளவில்லை, ஆனால் அவனோடு பேசினார், அவன் செய்யும் பிஸ்னஸை பற்றி கேட்டார், அவரின் மகன் ஆரவ்வை அவனுக்கு தெரிந்திருந்தது, எனவே அவனை பற்றியும் பேசினார், அவனோடு பேசிய வரையில் குறை சொல்லும் அளவிற்கு ஒன்றும் தெரியவில்லை, முதலில் பேச தயங்கினான் பிறகு இயல்பாகி விட்டான்,

அன்று கிஷோரிடம் பேசிய பிறகு சித்ராவிற்கு நிம்மதியாக இருந்தது, அந்த நிம்மதியுடன் திருமண தேதியும் குறிக்கப்பட்டது,...

இரு மாதங்களில் திருமணம், சித்ரா நித்திலாவிற்க்கு தேவையான நகை, புடவைகளை எடுக்கும் வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்திருந்தார், பத்திரிக்கை அச்சிடும் வேலைகள் மற்றும் மண்டபம் புக் செய்யும் வேலைகளை மாப்பிளை வீட்டினர்கள் பார்த்துக் கொள்வதாக கூறி இருக்க, இவர் பெண்ணுக்கு தேவையான உடமைகளை எடுப்பதில் பிஸியானார்,

கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளை முடித்து விட்டால் தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழ் வைக்க நேரம் நிறைய கிடைக்கும் என்று எண்ணினார், அவர் நடத்தி வைக்க போகும் திருமணம் அல்லவா, தன் தொழில் வட்டாரத்திலுள்ளவர்களையும் நட்பு வட்டாரத்திலுள்ளவர்களையும் அழைக்கும் முடிவில் தான் இருந்தார், அவரை பொறுத்த வரையில் நித்திலா வேறு ஆரவ் வேறு என்று பிரித்துப் பார்க்கவில்லை, எப்போது நித்திலா அவர் பொறுப்பிற்கு வந்தாளோ அப்போதே அவளை தன் மகளாக தான் நினைத்து அனைத்தும் செய்தார், தோழியின் மீதுள்ள பாசம் அவர் போன பின்னால் அவரது மகளின் மீதும் முளைவிடத் தொடங்கி இருந்தது,

தோழி உயிரோடு இருக்கும் போது நித்திலாவோடு அதிக ஒட்டுதல் இல்லை, பார்த்தால் அவளது படிப்பை பற்றி விசாரிப்பார், அவளை பற்றி விசாரிப்பார் அவ்வளவே, தோழி போன பின்னால் தான் நித்திலாவின் மீது புதிதாக அன்பு முளைக்க ஆரம்பித்தது,...

திருமண வேலைகள் ஒரு பக்கம் நடக்க, நித்திலாவோ தான் உண்டு தன் வேலை உண்டு என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள், சித்ராவும் அவளை தொந்திரவு செய்யவில்லை, அவளுக்கு பிடித்த நிறத்தில் அவரே அவளுக்கான புடவைகளை எடுத்தார், நகை வாங்க செல்லும் போது மட்டும் அழைத்துப் போனார், நித்திலா தான் மிகவும் சங்கடத்திற்குள்ளாகினாள், "இதெல்லாம் வேண்டாம் மேடம்" என்று வாய்விட்டும் கூறி விட்டாள்,...

"உன் அம்மா வாங்கி கொடுத்தாலும் இப்படி தான் சொல்லுவியா நித்திலா, பேசாம இரு" என்று அதட்டிவிட்டு அவள் அளவுக்கான நகைகளை தேர்ந்தெடுத்தார்,

நித்திலா ஆர்வம் காட்டாததால் அவர் தான் அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்தார் புகுந்த வீட்டில் அவளை குறை சொல்லி விட கூடாதென்று, தலையிலிருந்து கால் வரை அணியும் அனைத்து நகைகளையும் வாங்கினார், கிட்டத்தட்ட நாற்பது பவுனில் வாங்கினார், அவருக்கு தான் பணத்தில் குறைவில்லையே அதனால் பணத்தை பற்றி யோசிக்காமல் அவளுக்கு பொறுத்தமான நகைகளை வாங்கி குவிக்க, நித்திலா தான் விழி பிதுங்கி போய்விட்டாள்,...

"இவ்வளவு எதுக்கு மேடம், ப்ளீஸ் வேண்டாம்" என்று கெஞ்சலோடு சொன்னவள், அவர் முறைத்த முறைப்பில் அமைதியாகி விட்டாள், அவர் தனக்காக இவ்வளவு வாங்குவதை கண்டு அவளது விழிகளும் கலங்கி போனது,... "பப்ளிக் ப்ளேஸ்ல எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க, பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க" என்று அதற்கும் அவளுக்கு திட்டு விழுந்தது,...

அனைத்தையும் வாங்கி கொண்டு அவளை வீட்டில் இறக்கி விட்டு தன் வீட்டிற்கே நகைகளை கொண்டு வந்து விட்டார், இவ்வளவு நகைகளை அவள் வைத்திருப்பது அவளுக்கும் பாதுகாப்பு இல்லை நகைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை கருதி திருமணம் வரை அவளுடைய நகைகளை அவரே வைத்துக் கொள்ள முடிவெடுத்து விட்டார்,...

ஆரவ்விற்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை, அவனுக்கு பணம் ஒரு விஷயமும் இல்லை, ஆனால் நித்திலாவிற்கு வாங்கி கொடுப்பதை தான் அவனால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை,

அன்று அவள் அலுவலகத்திலிருந்து திமிராக வெளியேறிய பிறகு அவளை சந்திக்க சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை, அவள் தன் அம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளையில் வேலை பார்க்கும் விஷயமும் அவனுக்கு தெரிந்தே இருந்தது, அவன் வேலையில் பிஸியாக இருப்பதால் அவனுக்கு அவளை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை,

'என் கையில் மாட்டாமளா போயிடுவா' என்று அவள் எப்போது தன்னிடம் மாட்டுவாள் எனும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான், அவன் எதிர்பார்த்த நேரமும் வந்தது,....

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை நாள், நித்திலாவை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார் சித்ரா, அவளுக்கு வாங்கியிருந்த புடவைகளை காட்டவே அழைத்திருந்தார், அது மட்டுமில்லாமல் புடவைக்கு ஏற்ற மேட்சிங் பிளவுஸும் தைத்து வந்துவிட்டது, அதனை அலுவலகத்தில் வைத்து அவளுக்கு கொடுக்க இயலாதே, அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க தான் அவளை வீட்டிற்கே வர சொல்லி இருந்தார்,

நித்திலா இத்தனை வருடங்களில் இரண்டு அல்லது மூன்று தடவை தான் அவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறாள், ஏனோ அவர் வீட்டிற்கு செல்லவே அவளுக்கு தயக்கம் பிறந்து விடும், அவள் போன நேரம் ஒரு முறை மட்டும் ஆரவ் இருந்தான், இவளை ஏதோ விரோதியை பார்ப்பது போல் பார்த்து விட்டு சென்றான்,

அவனது பார்வையே, தான் அங்கு செல்வது அவனுக்கு பிடிக்கவில்லை என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது அவளுக்கு, எனவே சித்ரா ஏதாவது ஒருவிஷயத்திற்காக அழைத்தாலும், நாசுக்காக மறுத்து விடுவாள், இப்போதும் அவள்... "ஆஃபிஸ்ல வாங்கிக்கிறேன் மேடம்" என்று தான் கூறினாள், ஆனால் சித்ரா கேட்கவில்லை,... "ஆபீஸ்ல வச்சு எப்படி ஃபிட்ஆன் பண்ணி பார்க்க முடியும், வந்துட்டு போ" என்று கண்டிப்புடன் அழைத்திருக்க அவளுக்கும் மறுக்க முடியாத நிலை,...

தயக்கத்தோடு அவர் வீட்டின் முன்னிலையில் நின்றாள், கேட்டின் வெளியே நின்றவளுக்கு வீட்டின் உயரம் மலைக்க வைத்தது, இரண்டு மூன்று முறை வந்திருந்தாலும் அவள் வரும் ஒவ்வொரு முறையும் அவ்வீடு அவளை மலைக்க தான் வைத்து விடுகிறது, பணத்தில் குறைவில்லாதவர்களின் வீடு மாளிகையாய் வீற்றிருந்தது,...

"உள்ளே போங்கமா" பணிவாக கூறினார் காவலாளி, வெகு நேரம் உள்ளே நுழையாமல் யோசனையுடன் நின்றிருந்தவளை குழப்பமாக பார்த்து விட்டு, அவர் வாய்விட்டே கூறி இருக்க, அவளும் மென்புன்னகையை வீசிவிட்டு கேட்டை தாண்டி உள்ளே நடந்தாள், நித்திலாவை பற்றி காவலாளிக்கும் தெரிந்திருந்ததால் அவளிடம் கனிவாக தான் நடந்து கொள்வார்,...

வீட்டை நெருங்க கால் கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது, சுற்றியுள்ள மரம் செடிகளை ரசிக்க தோன்றாது தயக்கமான மனநிலையுடனே வீட்டை நோக்கி நடந்தாள்,

அன்றைய நாளுக்கு பிறகு ஆரவ்வை அவள் சந்திக்கவில்லை, இன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருப்பானோ எனும் பதட்டம் தான் அவளை இன்று இவ்வளவு தூரம் தயங்க வைத்தது, அன்று அவனை மீறி வந்ததால் நிச்சயம் கோபமாக தான் இருப்பான் என்பதையும் அறிந்தே இருந்தாள், சித்ரா உடன் இருந்தால் அவன் அவளிடம் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டான் என்றாலும், வீட்டினுள் செல்வதற்கே மனம் நெருட தான் செய்தது....

மனதை திடப்படுத்திக் கொண்டு வாசல் படிக்கட்டுகளில் ஏறியவள், மூச்சை இழுத்து விட்டபடி,... "மேடம்" என்று அழைத்தாள் அனுமதி கோரியவாறு,...

போன முறை இப்படி வாசலில் நின்று அனுமதி கேட்டபோது சித்ரா கடிந்து கொண்டார்,.. "பர்மிஷன் கேட்கணும்னு அவசியம் இல்லை, நீ தாராளமா உள்ளே வரலாம்" அன்று அவர் கூறி இருந்தாலும், அவளால் தயக்கமின்றி உள்ளே நுழைய முடியவில்லை, ஏதோவொன்று தடுத்தது, அதனால் தான் அனுமதி கேட்டு நின்றாள்,...

"யாருமா" என்று கேட்டபடி வந்தார் அவ்வீட்டில் சமையல் வேலை பார்ப்பவர்,.. நித்திலாவை அவருக்கும் தெரியும் என்பதால், வாசலில் நின்றிருந்தவளை "உள்ளே வாமா" என்று அழைத்தார்,... மென் புன்னகையுடன் உள்ளே வந்தவள்,... "சித்ரா மேடம் வர சொல்லி இருந்தாங்கண்ணா" என்று தகவலாக கூறினாள்,...

"அம்மா சொல்லிட்டு தான் போனாங்க நீ வருவன்னு, சின்ன வேலை விஷயமா வெளியே போயிருக்காங்க, இப்போ வந்துடுவாங்க, நீ வந்தா உட்கார சொன்னாங்க" என்று அவர் கூறிட,... 'வெளியே போயிருக்காங்களா?' என்று மனதில் நினைத்தவளோ,... "எப்போ வருவாங்கண்ணா, நான் வேணும்னா போயிட்டு அப்புறம் வரட்டுமா" என்றாள்..

"இல்லமா,... உன்னை இருக்க சொல்லிட்டு தான் போனாங்க, கொஞ்ச நேரத்துல வந்துடுவதா சொன்னாங்க, நீ வந்து இரு, அப்புறம் அம்மா கோப பட போறாங்க" என்று கூற,.. "ம்ம்" என்று வேறு வழியின்றி தலையசைத்தவளோ முற்றத்தில் வந்து நின்று கொண்டாள்,...

"குடிக்க ஏதாவது கொண்டு வரேன், நீ உட்காருமா" என்று பணிவுடன் சொன்னவரிடம்,... "இல்லண்ணா அதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்தவளோ,... அங்கிருந்த சோபாவில் அமர தோன்றாது அவ்விடத்தில் மெதுவாக நடந்தபடி உலாவ, சமையல்காரர் கணேஷனும் உள்ளே வேலை இருப்பதாக கூறி சென்று விட்டார்,...

நிமிடங்கள் கடந்தது, சித்ரா வந்தபாடில்லை, அவளுக்கு தான் நேரம் சென்று வந்திருக்கலாமோ என்று தோன்றியது, அந்த நேரம் கையில் மாதுளை ஜூஸுடன் வந்த கணேஷனோ,... "இதை தம்பி கிட்ட கொடுத்துடுரியாமா" என்றார் பணிவோடு,..

அவர் தம்பி என்று யாரை சொல்கிறார் என்பது புரியாதவள் இல்லையே அவள், அவள் விழிகள் இரண்டும் பெரிதாய் விரிந்தது, தான் போகும் வரைக்கும் அவனை பார்த்து விட கூடாது என்ற பதட்டத்தில் இருப்பவளிடம், சொன்னாரு," கணேஷன் கூறவும், அவள் விழிகளோ அதிர்ச்சியில் பெரிதாக விரிந்து கொண்டது,..
 
  • Like
Reactions: shasri