• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 06

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 06

"எ.. என்னது என்கிட்ட கொடுத்து விட சொன்னாரா?" அதிர்ச்சியுடன் கேட்டவளோ... 'நான் இங்க வந்தது அவருக்கு எப்படி தெரியும்' என்று குழம்பியவாறு விரிந்த விழிகளுடன் வீட்டை நோட்டமிட்டாள், அவன் இருக்கும் அறிகுறியே தெரியவில்லை, எனவே மேலும் குழம்பினாள்..

"அடுப்புல காய் வச்சிருக்கேன்மா, கருகிட போகுது, சீக்கிரம் வாங்கிக்கோ" என்று ஜூஸ் கிளாஸ் வைக்கப்பட்ட ட்ரேயை நீட்ட,... "இ.. இல்லனா,... நான் ஸ்டவ்ல இருக்குறத கவனிச்சிக்கிறேன், நீங்களே கொடுத்துட்டு வாங்க" என்றவள் விறுவிறுவென்று சமையல் கட்டை நோக்கி நடந்து விட்டாள், தெரிந்தே சிங்கத்தின் குகைக்குள் நுழைய அவள் பைத்தியக்காரியா என்ன??

அவள் வேகமாக சமயலறை பக்கம் சென்று விடவும், கணேஷனால் எதுவும் பண்ண இயலவில்லை, அவரே ஆரவிற்கு ஜூஸை கொண்டு சென்றார்...

நித்திலா வந்தது தனதறையின் பால்கனியில் நின்றிருந்த ஆரவ்வின் கண்ணில் பட, அவனுக்கோ ஆத்திரம், ஏற்கனவே அவளை அவனுக்கு பிடிக்காது, அவள் வேறு மேலும் அவனை சொறிந்து விட்டு சென்றிருக்க, அவளை குதறும் ஆத்திரத்தில் இருந்தவனுக்கு, அவளை இன்று ஏதாவது செய்ய வேண்டும் எனும் முனைப்பு, அதனால் தான் இன்டர்காம் மூலம் கணேஷிடம் அவளிடம் ஜூஸை கொடுத்து விட சொன்னான்,

அவள் வருவாள் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தவனுக்கு கணேஷின் வருகை ஏமாற்றத்தை கொடுக்க, அவள் மீதிருந்த கோபத்தில் கணேஷிடம் பாய தொடங்கி விட்டான்,.. "உங்களை நான் கொண்டு வர சொன்னேனா, ஒழுங்கா அவளை கொண்டு வர சொல்லுங்க, இல்லைனா நடக்கிறதே வேற" என்று காட்டு கத்தல் கத்தியிருக்க, கணேஷனும் அவனது கோபத்தை கண்டு சற்று பயந்து தான் போட்டுவிட்டார்,...

வேகமாக சமையலறைக்கு சென்றவர், கடாயில் கிடந்த காயை வதக்கி கொண்டிருந்த நித்திலாவிடம்,... "ஜூஸை நீ தான் கொண்டு போவியாம்மா, தம்பி கோபப்படுறாரு" என்றவாறு அவள் கையில் அவர் ட்ரேயை திணிக்க, நித்திலா தான் தவித்து போனாள், அவள் முகமே வெளிறி விட்டது,...

"என்னமா.... உனக்கும் தம்பிக்கும் ஏதாவது பிரட்சனையா" அவள் இவ்வளவு தயங்குவதை கண்டு அவர் சந்தேகமாக வினவ,.. அவளோ அலுவலகத்தில் நடந்ததை சொல்ல விரும்பாமல்,... "அதெல்லாம் இல்லண்ணா, நானே கொண்டு கொடுக்கிறேன்" என்றவாறு அங்கிருந்து நகர்ந்தாள்,...

கணேசனுக்கு ஆரவ்வின் இன்றைய நடவடிக்கை வித்தியாசமாக தோன்றினாலும் அவர் அதையெல்லாம் ஆழமாக யோசிக்க விரும்பவில்லை, நமக்கெதற்கு வம்பு நம் வேலையை பார்த்துக் கொண்டு இருந்து விடலாம் என்று தனது வேலையில் மட்டும் கவனமானார்...

முதல் மாடியில் இருந்தது ஆரவ்வின் அறை, கணேஷனும் ஆரவ்வின் அறை தான் மாடியில் முதலில் இருக்கும் என்று கூறி அனுப்பி இருக்க, படிகட்டுகளில் ஏறி வந்தவளுக்கு அவன் அறைக்கு செல்ல கால்கள் வர மறுத்தது,..

'இப்போ எதுக்கு நித்தி இவ்வளவு தயங்குற, நீ என்ன தப்பு பண்ண, அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா, போய் தான் பாரேன், அப்படி என்ன பிளான்ல இருக்கானு பார்ப்போம்' என்று மனசாட்சி அவளுக்கு தைரியம் கூற, விழிகளை மூடி திறந்து, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள், அவனறையை நோக்கி நடந்தாள்,...

அறையின் கதவு சாத்தியிருக்க,.. கதவை தட்டியவள்... "கம்மின்" என்ற ஆரவ்வின் குரலில், விழிகளை மூடி திறந்து கொண்டு, கதவில் கை வைத்து அழுத்தி திறந்தவள்,.. "அட.. மிஸ் நித்திலா பிரபாகரன் நீங்க எப்படி இங்க" என்று கேலி குரலில் கேட்ட ஆரவ்வை வெறித்து பார்த்தாள், தான் வந்தது ஏதோ அவனுக்கு இப்போது தான் தெரிவது போல் அவன் பேசும் தோரணை அவளுக்கு எரிச்சலாக இருந்தாலும், அவள் சட்டை செய்யாதது போல்,... "ஜூஸ் கொண்டு வந்திருக்கேன் சார்" என்றாள்,...

"ம்ம்.. அங்கே வை" அவன் விழிகளால் டீபாயை காட்ட, அதில் வைத்து விட்டு, தன் வேலை முடிந்ததென்று திரும்பி போக முனைந்தவள்,... "ஆபிஸ்ல வேலை பார்த்து கிடைக்கிற சம்பளம் பத்தலனு என் வீட்டுக்கு வேலைகாரியா வந்துட்ட போல" அவனது இளக்கார பேச்சில் அவள் மனம் வருந்தவில்லை, அவன் இப்படி பேசவில்லை என்றால் தானே ஆச்சரியம் என்று நினைத்துக்கொண்டு,... "இல்ல சார்,.. மேடம் கூப்பிட்டாங்க அதான் வந்தேன்" என்றாள் நிதானமாக,...

"ம்ம்.. உன் மேடத்தை தான் ரொம்ப மயக்கி வச்சிருக்கியே, உன் விஷயத்துல என்னோட அம்மா ஏன் இவ்வளவு அப்பாவியா இருக்காங்கன்னு தான் தெரியல" என்று சலித்தபடி சொன்னவனை ஆழ்ந்து பார்த்தவளுக்கு அவன் மீது கோபம் எழுந்தாலும், அதனை காட்டும் நிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்து, மௌனமாக நகர முற்பட்டவள்,... "மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு போல, அவனையும் இப்போதுல இருந்தே மயக்க ஆரம்பிச்சிருப்ப இல்ல" என்றான் ஒரு மாதிரி புன்னகையில்,..

போக முனைந்தவளுக்கு கால்கள் நகர மறுத்தது, விழிகளை மூடியபடி நின்று விட்டாள், தான் அவனை என்ன செய்தோமென்று தன் மீது இவ்வளவு விஷத்தை கக்குகிறான் என்று கோபத்தையும் தாண்டிய வலி அவளுக்கு, அவன் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் கண்டிப்பாக பக்க பதிலடி கொடுத்திருப்பாள், ஆனால் சித்ராவின் மகனான இவனை எதிர்த்து பேசவும் வார்த்தை வர மறுத்தது....

ஆகவே,... நிதானமாக திரும்பி அவன் முகம் பார்த்தவள்,... "ஏன் சார்,.. எதுக்காக என் மேல இவ்வளவு வெறுப்பு, நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்" என்றாள்,... அவனிடம் பேசி இன்றோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட எண்ணி, பொறுமையாக தான் அவனிடம் கேட்டாள்,...

அவனுக்கோ முகமெல்லாம் சிவந்து போனது, அவளை அவனுக்கு சிறிதும் பிடிக்காதே, அவள் நடிப்புக்காரி, நடித்து தான் தன் அம்மாவை அவள் கைக்குள் போட்டு வைத்திருக்கிறாள் என்றல்லவா நினைத்து வைத்திருக்கிறான், எனவே அவள் தன்மையாக கேட்கும் கேள்வி கூட வெறுப்பை தான் உண்டாக்கியது, 'நல்லவ வேஷம் போடுகிறாள், அம்மா நம்புவது போல் நானும் நம்ப நான் என்ன மடையனா' உள்ளுக்குள் பொறுமிக் கொண்டவன்,... "இப்படி பேசி தான் என் அம்மாவை உன் வலையில விழ வச்சுருக்க இல்ல" என்றான் வன்மமாய்...

அவளுக்கோ சலிப்பாக இருந்தது, இவனிடம் பேசுவதே வேஸ்ட் என்பது புரிய, திரும்பி நடக்க போனவள்,.. "ஏய் பேசிக்கிட்டு இருக்கேன்லடி" கதவின் அருகில் அவள் நெருங்கிய சமயம், கதவை அடித்து சாற்றி இருந்தான், அவ்வளவு வேகமாக எப்படி வந்தானென்று தெரியவில்லை, கொஞ்சம் விட்டிருந்தால் அவன் சாத்திய வேகத்தில் அவள் நெற்றி பிளந்திருக்கும்....

பதட்டத்தில் நெஞ்சில் கை வைத்தவளுக்கோ, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது..."எதுக்காக இப்படி பண்ணுறீங்க சார்" என்றாள் ஆற்றாமையுடன்,....

"எதுக்குடி நீ என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்ச, அன்னைக்கு திமிரா பேசின போதே கழுத்தை நெறிச்சு கொன்னுருப்பேன், கொலை கேஸ்ல நான் ஜெயிலுக்க்கு போகணுமேங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விட்டேன், அதுக்காக உன்னை எப்போதுமே சும்மா விடுவேன்னு நினைச்சுடாத, உன்னை உரு தெரியாம அழிக்கிற அளவுக்கு என்கிட்ட பவர் இருக்கு" என்று உறுமியவனை வெற்று பார்வை பார்த்தவள் வாய் திறந்து எதுவும் பேசவில்லை,

காதில் வாங்குபவனிடம் பேசி புரிய வைக்கலாம், காரணமே இல்லாமல் வேண்டுமெண்றே கோபம் கொள்பவனிடம் என்ன பேசுவது, அவன் குணம் இது தான் போல என்று நினைத்து வாயை பசை போட்டு ஒட்டியது போல் மூடிக்கொண்டாள்...

அவனுக்கோ அவள் தன்னை வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்ததில் மேலும் ஆத்திரம் உண்டானது,... "என்னடி முறைக்கிறியா" என்று எகிறினான்...

"உங்களுக்கு என்னை பார்த்தா முறைக்கிற மாதிரியா தெரியுது, தேவை இல்லாம என் மேல கோப படுறீங்க சார், தயவு செய்து என்னை போக விடுங்க" என்று இறங்கி போய் பேசினாள், அவளுக்கு அவனறையில் அவனோடு தனியாக இருப்பது சரியாக படவில்லை, முதலில் அங்கிருந்து கிளம்பி விட நினைத்தவள், தான் இறங்கி போய் பேசினால் தான் அவன் தன்னை போக விடுவான் என்று நினைத்து கேட்டிட,...

அவனோ,... "உன்னை போக விடுறதுக்கா வர வழைச்சேன்" என்று விஷமமாக கூறி,... "அன்னைக்கு என்னை எதிர்த்து பேசிட்டு போன உனக்கு தண்டனை கொடுக்க வேண்டாம்" என்றான்,...

அவளுக்கோ அவன் கூறிய தோரணையில் உடலில் குளிர் பரவியது, எச்சில் விழுங்க அவனை பார்த்தவள்... "ப்ளீஸ் சார், நா.. நான் அன்னைக்கு தெரியாம அப்படி நடந்துகிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க" தான் மன்னிப்பு கேட்டாளவது தன்னை விட்டுவிட மாட்டானா எனும் நப்பாசையில் அவள் கெஞ்சிட, அவனோ அதெல்லாம் காதில் விழாதது போன்று,...

"இன்னும் இருபது நாள்ல உனக்கு மேரேஜ்ல" என்று கேட்டபடி அடியெடுத்து வைத்து அவளை நெருங்கி வர.... அவன் கால்கள் தன்னை நெருங்குவதை கண்டு, பதட்டத்தில் அவளது கால்களும் தன்னிச்சையாக பின்னோக்கி நகர்ந்தது,...

"ப்ளீஸ் சார், என்னை போக விடுங்க, நீங்க பண்ணுறது சரி இல்லை" என்று பயத்தையும் தாண்டி அவள் கெஞ்சலில் இறங்க,... "இப்போ என்ன அவசரம்,.. கல்யாணத்துக்கு முன்னாடி சின்ன ரிகர்சல் பார்க்கலாம், அப்புறம் கிளம்பு" என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தவளோ, அதற்கு மேல் வழியில்லாமல் சுவரில் மோதி நின்றிட, ஓரிரு அடியில் அவன் தன்னை நெருங்கி விடுவான் என்பதை உணர்ந்து, வேகமாக ஓட முனைந்தவள், அவனது கை சிறையில் போக முடியாமல் தவித்து நின்றாள் ஒடுங்கிய கோழி குஞ்சை போல....

அவள் ஓட முயல்வதை அறிந்து சட்டென்று நெருங்கி வந்து சுவரில் கரங்களை ஊன்றி அவளை சிறை செய்தவனோ,,... அவளை பார்த்து வன்மமாக சிரிக்க, உடல் வியர்க்க, விழிகள் கலங்க நின்றிருந்தவள்,... "இன்னும் ரெண்டு வாரத்துல எனக்கு கல்யாணம் சார், இப்படி நடந்துகிறது உங்களுக்கே நல்லா இருக்கா" என்றாள், கலங்கிய கண்களிலிருந்தும் கண்ணீரும் கோடாய் வடிந்தது...

அவன் அவளது கண்ணீரையெல்லாம் கிஞ்சித்தும் மதிக்கவில்லை,... "உனக்கு ஹெல்ப் தான் பண்ண நினைக்கிறேன், ஃபர்ஸ்ட் நைட் பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டாமா" என்று கேட்டு அவள் மணிக்கட்டை பற்ற,... அவனது வார்த்தையிலும் அவன் தொடுதலிலும் உடல் கூசி போனவள், "ப்ளீஸ் வேண்டாம்" கெஞ்சலுடன் விழிகளை மூடிக் கொள்ள... அந்த இரக்கம் இல்லாதவனோ.... அவள் மீது குரூர பார்வையை வீசியவாறு, அவளை மனதளவில் மிகவும் காயப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்திற்காக மட்டுமே, அவள் கன்னங்களை தன் கரங்கள் கொண்டு தாங்கியபடி, அவள் இதழ்களை நெருங்கினான்...
 
  • Angry
Reactions: shasri