• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 08

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 08

சித்ரா மணமகனின் அறைக்குள் நுழைந்த போது, மணமகனின் தந்தை இடிந்து போய் இருக்கையில் அமர்ந்திருக்க, தாயார் கையிலிருந்த லெட்டரை கண்கள் கலங்க படித்துக் கொண்டிருந்தார், சித்ராவதிக்கு எதுவோ சரியில்லை என்பது புரிய,... "என்னாச்சு" என்றார் சன்ன குரலில்....

சித்ராவதியை எதிர்பார்க்காதவர்களுக்கு அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, இருவரும் தலை குனிந்து காணப்பட, சித்ராவதிக்கோ டென்ஷன் ஏறியது, "என்னாச்சுன்னு கேட்டேன்" சற்றே குரலை உயர்த்தி கேட்க,... "எ.. எங்க பையன் லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிபோயிட்டான்" கிஷோரின் தாயார் தழுதழுத்த குரலில் கூற, கேட்ட சித்ராவிற்கோ தூக்கி வாரிபோட்டது,.. "எ.. என்ன சொல்றீங்க" என்று கேட்டவரின் மனக்கண்ணில் நித்திலாவின் முகம் வந்து போக, அவருக்கோ வலியுடன் கூடிய ஆத்திரம், நித்திலாவிற்கு நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனும் ஆசையில் அவர் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்திருக்க, கடைசி நேரத்தில் மாப்பிளை ஓடி விட்டதாக கூறியதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை....

மாப்பிள்ளையின் பெற்றோரை உக்கிரமாக முறைத்தவரோ,... "உங்க பையனோட சம்மதத்தோட தானே எல்லா ஏற்பாடும் நடந்தது, அப்புறம் எப்படி??" என்று கேட்டவருக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை,...

"அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணான், அந்த விஷயம் எங்களுக்கும் தெரியும், ஆனா அந்த பொண்ணு ஏற்கனவே கல்யாணமாகி விதவையானவ, அதனால எங்களால அவளை மருமகளா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லி, அவனை எமோஷனலா பிளாக்மெயில் பண்ணி தான் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணோம், அவனும் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதிலிருந்து அமைதியா நாங்க சொல்றதுக்கெல்லாம் கட்டுபட்டு தான் போனான், அவன் மனசு மாறிடுச்சுன்னு நாங்க சந்தோசமா கல்யாணத்தை எதிர்பார்த்துட்டு இருந்த நேரத்துல அவன் இப்படி பண்ணிட்டு போவான்னு நாங்க எதிர்பார்க்கல, எங்களை மன்னிச்சிடுங்க" என்று கையெடுத்து கும்மிட்டு அழுதவரை பார்க்க வெறுப்பு தான் வந்தது சித்ராவிற்கு,...

"அங்கே அந்த பொண்ணு கல்யாணத்துக்காக தயாராகி உட்கார்ந்திருக்கா, மாப்பிளை ஓடிபோயிட்டானு தெரிஞ்சா அவ நிலமை என்னவாகும்" என்று ஆதங்கத்துடன் கேட்டவரோ,... "உங்களையும் சும்மா விட மாட்டேன், உங்க பையனையும் சும்மா விட மாட்டேன்" என்று ஆத்திரத்துடன் மிரட்டிவிட்டு அவ்வறையிலிருந்து வெளியேறியவருக்கு அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை...

அவர் வளர்த்த பெண் நித்திலா, அவளை இப்படியொரு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டதை எண்ணி மனதால் புழுங்கி போனார், இன்னும் நன்றாக விசாரித்திருக்க வேண்டுமோ என்று தன் மீதே கோபம் கொண்டார், என்ன செய்வதென்று தெரியாமல் ஒதுக்கு புறமாக இருந்த படிக்கட்டுகளில் இடிந்து போய் அமர்ந்திருக்க,.. அந்த நேரம் அவரை தேடி வந்த அவரின் மேனேஜர்,... "மேடம் முகூர்த்த்துக்கு டைமாச்சுன்னு ஐயர் மாப்பிள்ளையை அழைச்சிட்டு வர சொல்லிட்டு இருக்கார்," என்று கூறியவர், அவரது நிலையை கண்டு எதுவோ சரியில்லை என்பதையும் புரிந்து கொண்டார்,... "என்னாச்சு மேடம்" என்று விசாரித்தார்,.. திருமண வேலைகளை மேனேஜரை வைத்து சித்ரா கவனித்துக் கொண்டதால் அவர் அக்கறையாக விசாரித்தார்,...

"மாப்பிளை ஓடி போயிட்டான்" உணர்வில்லா குரலில் சொன்னவரின் வார்த்தையை கேட்டு மேனேஜருக்கும் அதிர்ச்சி தான்,.. "இப்போ என்ன பண்ணுறது மேடம், கல்யாணத்துக்கு அவ்வளவு பேர் வந்திருக்காங்க, கல்யாணம் நின்னு போனா???" என்று கேட்டவருக்கு, தன் முதலாளியம்மா ஏற்பாடு செய்த திருமணம் நின்று போய் விட்டதே என்ற ஆதங்கமும் வருத்தமும்,..

சித்ரா ஆழமாக யோசித்தார், இந்த திருமணம் நடக்காவிட்டால் நித்திலா வாழ்க்கை ஒரு பக்கம் கேள்விக்குறியாகும், இன்னொரு பக்கம் வந்திருக்கின்ற விருந்தாளிகளின் முன்னால் அவர் தலை குனிய வேண்டிய நிலையும் ஏற்படும், அவர் இது வரைக்கும் எதற்கும் தலை குனிந்து நின்றதில்லை, எனவே இந்த சிட்சுவேஷனை எப்படியாவது சரியாக கையாள வேண்டும் என்று யோசித்தார், ஆழமாக யோசித்தவருக்கு ஒரு யோசனை வரவே, போனை எடுத்து மகனுக்கு அழைத்தவர், அவனை உடனே மண்டபத்திற்க்கு வரும்படி பணித்து விட்டு, மேனேஜரிடன் புரோகிதரை சமாளிக்க அனுப்பி விட்டு, நித்திலாவின் அறை நோக்கி நடந்தார்,...

சில நிமிடங்களுக்கு பின்,...

மணமகள் அறையில் நித்திலாவோடு, சித்ராவும் அவர் மகன் ஆரவ்வும் எதிரெதிர் திசையில் நின்றுகொண்டிருந்தனர், நித்திலா கலக்கத்தோடு சித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தாள், காரணம் சற்று நேரத்திற்கு முன் அவர் சொன்ன விஷயம் அப்படி,...

ஆம்,... நித்திலாவின் அறைக்கு வந்த சித்ரா,... "நீ ஆரவ்வை கல்யாணம் பண்ணிக்கோ நித்திலா" என்று அலுங்காமல் குலுங்காமல் அவள் தலையில் குண்டை தூக்கி போட்டிருக்க, அதிர்ச்சியில் இருக்கையிலிருந்து விழாத குறையாக எழுந்திருந்தாள் அவள்,...

"எ.. என்ன சொல்றீங்க மேடம்" என்று கேட்டவளுக்கோ, உடலே ஆட்டம் கண்டது, ஆரவ்வை திருமணம் செய்யணுமா? திடீரென்று இவருக்கு என்னவானது என்பது புரியாத நிலை,.. சித்ராவோ கிஷோர் ஓடி போனதை அவளிடம் சொன்னவர்,.. "நீ அவன்கிட்ட பேசவே இல்லையா நித்திலா," சற்று காட்டமாகவே வினவ,.. "அவர் ஃபோன் பண்ணல மேடம், நானா எப்படி அவருக்கு கால் பண்ணுறது, அதான் நானும் பேசல, அன்னைக்கே இதை பத்தி உங்ககிட்ட சொல்ல நினைச்சேன், ஆனா நீங்க கிளம்பிட்டீங்க, அப்புறம் இது பெரிய விஷயமா தோணாததால நானும் விட்டுட்டேன்" என்று சொன்னவளுக்கோ, கிஷோர் திருமணம் பிடிக்காமல் ஓடி போய்விட்டான் என்பதை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்...

சித்ராவிற்கு நித்திலாவின் அஜாக்கிரதை தனத்தை எண்ணி கோபம் வந்தாலும், இப்போது கோபம் கொண்டு பயனில்லை என்பதை புரிந்து, பல்லை கடித்துக் கொண்டு இருந்து விட்டார், அதன் பிறகு அவர் அவளிடம் எதுவும் பேசவில்லை, அவளும் எதுவும் பேச முயற்சிக்கவில்லை, அவள் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இல்லையா இது, கிஷோர் ஓடிபோனது அவள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது...

அடுத்த ஓரிரு நிமிடங்களில் அவ்வறையினுள் நுழைந்திருந்தான் ஆரவ் விஜயன், அவனை கண்டதும் நித்திலாவிற்கோ படபடப்பு, சற்று நேரத்திற்கு முன்பு சித்ரா கேட்டது நியாபகம் வர, அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது, சித்ரா கூறியதை கேட்டு முதலில் அதிர்ந்தவள், பிறகு கிஷோர் ஓடி போய்விட்டான் என்பதை கேள்வி பட்டதும் சித்ரா கூறியதை மறந்து, கிஷோரின் செயலை எண்ணி கலங்கி போய் நின்றாள், ஆரவ் வந்த பிறகு தான் சித்ரா கூறியது நினைவில் வந்தது, இதயம் எக்குதப்பாக எகிறி குதிக்க ஆரம்பித்திருந்தது,...

தாய் மண்டபத்திற்க்கு உடனே வருமாறு அழைக்கவும், முடியாது என்று தான் மறுத்தான், ஆனால் சித்ராவோ சற்று அதிகாரத்துடன் அவனை அழைத்திருக்க, அவனும் சலிப்புடன் கிளம்பி வந்திருந்தான், அவன் நடப்பை இன்னும் அறிந்திருக்கவில்லை, அறைக்குள் நுழைந்தவனின் பார்வையில் முதலில் பட்டது திருமண கோலத்தில் அழகு பதுமையென நின்றிருந்த நித்திலா தான், அவள் அழகு அவனை ஈர்த்தது, அருகில் தாய் நின்றிருப்தையும் மறந்து அவளை பார்த்தவன்,... "நித்திலாவை நீ கல்யாணம் பண்ணிக்கோ ஆரவ்" என்ற தாயின் சொல் கேட்டு அவன் விழிகள் அவரிடம் வந்து நிலைத்தது, நெற்றி சுருங்கியது,.. 'இவர் இப்போது என்ன சொன்னார்' என்ற சந்தேகம் வேறு முளைக்க,... "மாம்.. இப்போ என்ன சொன்னீங்க??" என்றான்,...

"உன்னை நித்திலாவை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்" அவர் கூறியதை கேட்டு அவனுக்கோ சிரிப்பு தான் வந்தது, 'நான் இவளை கல்யாணம் பண்ணிக்கணுமா, மாம் எதுக்காக என்கிட்ட விளையாடுறாங்க' என்று எண்ணியவனோ,... "பிராங்க் எதுவும் பண்ணுறீங்களா மாம், பட் உங்களுக்கு அதெல்லாம் பழக்கமில்லையே" என்று கோணல் புன்னகையுடன் கேட்டவனை அழுத்தமாக பார்த்தவர்.... "ஐம் சீரியஸ் ஆரவ், நித்திலாவை நீ கல்யாணம் பண்ணிக்கோ" என்று உறுதியாக கூறியவரை, புரியாது பார்த்தவன்,... "திடீர்னு என்னாச்சு மாம் உங்களுக்கு, நான் எதுக்காக அவளை கல்யாணம் பண்ணனும், புரிஞ்சு தான் பேசறீங்களா? அண்ட் இவ கட்டிக்க போறவன் எங்கே??" என்றான் கேள்வியோடு,...

"அவன் ஓடிபோயிட்டான்" என்று சித்ரா கூற, அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், சட்டென்று நடப்பையும் புரிந்து கொண்டான், தாயை அழுத்தமாக பார்த்தவன்,... "சோ,.. அவன் போயிட்டனால இவளை என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றீங்க ரைட்??" என்றான்,.. 'ஆம்' என்று தலையசைத்தார் சித்ரா,..

அவனுக்கோ ஆத்திரம்,... எவளோ ஒருத்திக்காக தாய் தன் வாழ்க்கையை பணயம் வைக்க நினைப்பது அவனுக்கு கோபத்தை தான் உண்டுபண்ணியது, தன் விருப்பம் அவருக்கு முக்கியமாக படவில்லையா? அதுவும் எனக்கு பிடிக்காதவளை நான் வெறுக்கும் இவளை போய் திருமணம் செய்ய சொல்கிறார் என்று கோபம் தலைக்கேறியது,....

"இட்ஸ் நாட் ஃபேர் மாம், நான் கிளம்புறேன்" தாயிடம் தன் கோபத்தை காட்ட விரும்பாது, அங்கிருந்து கிளம்பி முற்ப்பட்டவனின் கரம் பற்றி நிறுத்தியவர்,.. "இன்னைக்கு இந்த கல்யாணம் நடந்தே ஆகணும் ஆரவ்" என்றார் உறுதியாக,...

"அதுக்காக நான் என் லைஃபை அழிச்சிக்க முடியாது மாம்," அவன் சற்று காட்டமாகவே கூறிட,... "உன் லைஃப் ஏன்டா அழியுது, பைத்தியம் மாதிரி பேசாத, நித்திலாவை கல்யாணம் பண்ணிக்கோ" என்று தன் இயல்பை மீறி கெஞ்சிட... "அவளுக்காக என்கிட்ட நீங்க கெஞ்சுறீங்களா மாம்" ஆதங்கத்துடன் கேட்டவன்,... "இங்கே எவ்வளவோ ஆம்பிளைங்க இருக்காங்க தானே, அவனுங்க ஒருத்தனை பிடிச்சு இவளுக்கு கட்டி வைங்க, என்னை ஆளை விடுங்க" என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு கதவை நோக்கி நடந்தவன்,.. "என் பேச்சை மீறி போறல்லடா, இதோட உன் அம்மாவை மறந்துடு, இன்னையோட நான் செத்துட்டேன்னு நினைச்சுக்கோ" என்று எமோஷனலாய் அவர் அவனை தாக்க, அது நன்றாகவே அவனிடம் வேலை செய்தது, தாயின் வார்த்தையில் கலங்கி போய் திரும்பியவனுக்கோ மேலும் ஆத்திரம், இத்தனைக்கும் காரணமான சித்ராவின் பின்னால் நின்றிருந்த நித்திலாவை வன்மையாக முறைத்தான், அவளோ இயலாமையில் நின்றிருந்தாள், சித்ராவை எதிர்த்தும் அவளால் பேச முடியாதே, ஆரவ்வை திருமணம் செய்வதற்கு பதில் தான் சாவதே மேல் என்ற எண்ணம் தான் அவளுக்கு, ஆனால் அவளால் சாக கூட முடியாதே, தான் தற்கொலை செய்து கொண்டால் கூட அது சித்ராவை தான் பாதிக்கும் என்று செய்வதறியா நிலையில் நின்றிருந்தவளுக்கு ஆரவ்வின் பார்வை வேறு உடலை சில்லிட வைக்க, பரிதாபமான நிலையில் சுவரோடு சுவராக போய் ஒட்டி நின்றுக்கொண்டாள்,...
 
  • Sad
Reactions: shasri