கண்ணீர் - 09
மகனை அழுத்தமாக பார்த்தார் சித்ரா, அவர் மகனோ நித்திலாவை முறைத்தபடி நின்றிருந்தான்,.. "அவளை ஏன்டா முறைக்கிற," என்று மகனிடம் பாய்ந்தார்... "அப்படி என்னமா உங்களுக்கு இவ மேல அக்கறை, பெத்த பையனோட லைஃபை விட உங்களுக்கு இவ தான் முக்கியமா போயிட்டா இல்ல" என்று கேட்டான் ஆதங்கத்துடன்,...
"ஒரு தாய் என்னைக்கும் தன்னோட பிள்ளைக்கு அநியாயம் பண்ண நினைக்க மாட்டா, எப்படியும் நீ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க தானே வேணும், அது ஏன் நித்திலாவா இருக்க கூடாது" என்றார் சித்ரா,...
"இவ எனக்கு எந்த விதத்துலமா மேட்சிங்கா இருக்கா, நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கொஞ்சமாச்சும் எனக்கு ஈக்வலா இருக்கணும், ஆனா இவ கிட்ட என்ன இருக்கு, என் பக்கத்துல இவளால நிற்க முடியுமா, பிசினஸ் பார்ட்டிக்கு இவ கூட என்னால போக முடியுமா, போனாலும் நான் என்னன்னு சொல்லி இன்ட்ரோ கொடுக்கிறது, அவளுக்கு நல்லது பண்ணுறதா நினைச்சு என் வாழ்க்கையை நாசம் பண்ண பார்க்கிறீங்க" என்றான் அவன் ஆத்திரத்துடன்...
"நீ ஓவரா பேசுற ஆரவ்,... இவளுக்கு என்னடா குறைச்சல், பணம் இல்ல அவ்வளவு தான், மத்தபடி உன்னை விட அழகுலையும் படிப்புலையும் உயர்ந்தவ" அவன் கூறுவதை கேட்ட இயலாமல், அவனை தாழ்வாக கூறி அவன் கோபத்தை மேலும் அதிக படுத்தி விட்டிருக்க,
"இனாஃப் மாம், அவளை என் கூட கம்பேர் பண்ணாதீங்க" என்று குரலை உயர்த்தி சொன்னவனோ... நித்திலாவை நோக்கி,... "என்னடி பண்ணி வச்சிருக்க என் அம்மாவை, மந்திரம் போட்டு மயக்கி வச்சிருக்கியா" என்று அவளிடம் எகிறிக் கொண்டு போக, பாவம் அவளே பயத்தில் சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு நின்றிருந்தாள், அவன் கேட்ட கேள்வியில் மனதால் மேலும் நொறுங்கி போனாள்,...
"அவகிட்ட ஏன்டா போற, பேச்சு உனக்கும் எனக்கும் தான்" சித்ரா மகனை கடிய,.. "அவளுக்காக தானேமா என்னை தாழ்வா பேசறீங்க" என்றான் அவன் ஆற்றாமையுடன்,...
"என்னைக்கும் நீ தான் உயர்ந்தவன், என் பையன் தான் எனக்கு உயர்ந்தவன், நீ தான் தேவை இல்லாம பேசி என்னை கோப படுத்தற" என்று கூறி அவனை கொஞ்சம் சாந்தப்படுத்தியவர்,... "நித்திலாவை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?" என்றார் அழுத்தமாக,...
"முடியாது" அவன் சட்டென்று தன் முடிவை கூறி விட,... "ஓகே ஃபைன்,..." என்று சொன்னவரோ ஒரு முடிவுடன் அறையை நோக்கி வெளியேற முயல, ஆரவ்விற்கோ அவர் முகத்தில் தெரிந்த தீவிரத்தை கண்டு பதட்டம்,... "எங்க போறீங்க மாம்" என்று கேட்டபடி அவரது முன்னிலையில் வந்து வழிமறைத்து நின்றான்,...
"வந்திருக்கின்ற இத்தனை பேர் முன்னாடி அவமான பட எனக்கு விருப்பம் இல்லை ஆரவ், நான் ஏற்பாடு பண்ண கல்யாணம், நான் கூப்பிட்டு தான் பெரிய பெரிய ஆளுங்கள்லாம் வந்திருக்காங்க, அவங்க முன்னாடி நான் தலை குனிய விரும்பல, இதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும்" என்று சொன்னவரின் தொனி அவனை பயமுறுத்தியது,... தாய் திடமான பெண் என்பது தெரிந்தாலும், அவரின் உறுதியான வார்த்தைகள் அவனை பயமுறுத்தவும் தான் செய்தது,...
"உங்கக்கிட்டருந்து நான் இதை எதிர்பார்க்கல மாம்" என்றான் அடிபட்ட பார்வையில்,...
"தலை நிமிர்ந்து நடந்த எனக்கு, தலை குனிந்து நிற்க விருப்பமில்லை," என்றவாரே,.. கடைசி முறையாக "என்ன முடிவு எடுத்திருக்க" என்றார்,...
அவனிடமோ அமைதி,.. அவனுக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை என்பதை விட தாய் தான் முக்கியமாக பட்டது, அவருக்கு ஒன்றென்றால் அவன் வாழ்வதற்கே அர்த்தம் இல்லை என்ற எண்ணம் தான் அவனுக்கு, விழிகளை மூடி திறந்தவன், தன்னை அழுத்தமாக பார்த்து நின்றவரிடம்,.. "பண்ணித் தொலைக்கிறேன்" என்றான் இயலாமையுடன், சித்ராவின் மனதிலோ நிம்மதி,...
அடுத்த ஓரிரு நிமிடங்களில் பட்டு வேஷ்டி சட்டையில் மணமகனாய் மேடையில் அமர்ந்திருந்தான் ஆரவ் விஜயன், விருந்தாளிகள் அனைவருக்கும் ஆரவ்வை மணமகனாக கண்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது, தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர், ஐயர் பெண்ணை அழைத்து வர சொல்லவும், சித்ரா தான் நித்திலாவை அழைத்து வந்து அமர வைத்தார்,...
ஆரவ்வின் அருகில் அமர்ந்தவளுக்கு சிங்கத்தின் அருகில் அமர்ந்திருப்பது போல் அவ்வளவு நடுக்கம்,.. 'இந்த கல்யாணம் வேண்டாம் மேடம்,' என்று எவ்வளவோ முறை அவளும் சொல்லி பார்த்து விட்டாள், மகனின் பேச்சையையே கேட்காதவர் இவள் பேச்சையா கேட்கப் போகிறார், படபடக்கும் இதயத்துடன் ஆரவ்வின் அருகில் அமர்ந்திருந்தவளுக்கு எழுந்து ஓடி விடலாமா எனும் எண்ணம் கூட வந்தது,
அதற்குள் ஐயர் கெட்டி மேளம் முழங்கி மாங்கல்யத்தை ஆரவ்விடம் நீட்டியிருக்க, அவன் பார்வையை தாயிடம் சென்றது,... "வாங்கி கட்டு" என்றவாறு அவர் உதட்டசைக்க,... ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு, சிறிதும் விருப்பம் இல்லாமல் மாங்கல்யத்தை வாங்கி கொண்டவன், நித்திலாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக்கி இருந்தான்,...
அனைவரின் அர்ச்சதைகளும் இருவரின் மீது மழையாய் பொழிந்தது, சித்ரா மனதார வாழ்த்தி நிறைந்த மனதோடு அரச்சத்தை தூவினார், திருமணம் முடிந்த கணம் தான் அவரது மனதில் நிம்மதியை உணர முடிந்தது....
"பொண்ணுக்கு குங்குமம் வச்சு விடுங்கோ" தாலி கட்டியதே பெரிய விஷயம், புரோகிதர் குங்குமம் வைத்து விட சொல்லவும், அவரை அனலாய் முறைத்தவன், மனையிலிருந்து எழ முற்பட,... "ஆரவ்" என்ற தாயின் அழுத்தமாக வார்த்தையில், பற்களை கடித்துக் கொண்டு, எழும் வேலையை கைவிட்டான்....
அவன் முறைத்த முறைப்பில், புரோகிதர் சற்று பயந்து போயிருந்தவர், மீண்டும் குங்குமத்தை நீட்டலாமா எனும் யோசனையில் இருக்க, சித்ரா தான் முன்வந்து,... "குங்குமத்தை கொடுங்க சாமி" என்று சொன்ன பின்னர் தான், அவர் தயக்கத்தோடு அவனிடம் குங்குமத்தை நீட்டினார்,...
வேண்டா வெறுப்பாக குங்குமத்தை வைத்து விட்டவன்,... கோழி குஞ்சாய் பயந்து ஒடுங்கி போய் அமர்ந்திருந்த நித்திலாவின் மீது அனல் பார்வையை வீசினான்,..அவனது பார்வையே அவளை எரித்து சாம்பலாகி விடும் அளவிற்கு இருந்தது, அவன் பார்வையை தாங்க இயலாமல் மௌனமாய் தலை குனிந்து கொண்டவளுக்கு மூச்சு விடவே சிரமாக இருந்தது அவன் அருகாமையில்,...
"மத்த சடங்குகளையும் முடிச்சிடுங்க சாமி" சித்ராவின் வார்த்தையை தொடர்ந்து, புரோகிதரும் மந்திரம் ஓதி, மணமக்களை அக்னியை வலம் வர சொல்லி, சடங்கினை நிறைவு செய்ய வைத்திருந்தார், அவனோடு அக்னியை சுற்றி வந்த நேரம், நித்திலா தான் மிகவும் பாடுபட்டு போனாள்,
"பொண்ணோட கையை பிடிச்சுக்கோங்கோ" என்று ஐயர் கூறியதன் விளைவு, அவன் அவள் கையை பற்றுகிறேன் என்கிற பெயரில் உடைக்க பார்த்தான், அவள் வலியில் முகம் சுழித்ததை கவனித்த சித்ரா தான், மகனை அதட்டி, அவள் கரத்தை விடுவிக்க வைத்திருந்தார், இல்லையென்றால் அவள் கையை அவன் உடைத்திருப்பான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை,...
திருமணம் இனிதாய் நிறைவு பெற்றிருக்க, இதற்காகவே காத்திருந்தது போன்று சித்ராவிற்கு நன்கு பழக்கப்பட்ட விருந்தாளிகள் மேடையேறி வந்து,... "என்ன சித்ரா மேடம் உங்க பையன் தான் மாப்பிளைனு சொல்லவே இல்லை" என்ற கேள்வியை வைக்க,.... "சர்பிரைஸ்னு வச்சுக்கோங்க" என்பதோடு முடித்துக் கொண்டார் சித்ரா,...
"பட் இன்விடேசன்ல மாப்பிளை நேம் வேற எதுவோ போட்டு இருந்ததே" என்று இன்னொரு நபர் வினவ,... "அதை பத்தி அப்புறம் சொல்றேன், இப்போ வந்த வேலையை மட்டும் பாருங்க மிசஸ் பார்கவி" என்று அவர் முகத்திற்கு நேராகவே கூறி இருக்க... அந்த பெண்மணியும் வழிந்து புன்னகைத்து விட்டு, மணமக்கள்களுக்கு வாழ்த்திவிட்டு சாப்பிட சென்றார்,...
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து, உணவருந்த சென்றது, ஆரவ்விற்கு தான் அங்கு இருக்கவே இயலவில்லை,... "ஐம் லீவிங்" என்றவாறு விறுவிறுவென்று மேடையிலிருந்து இறங்கி சென்று விட்டான், அவன் இத்தனை நேரம் இருந்ததே பெரிய விஷயம் என்று நினைத்த சித்ரா,... நித்திலாவை அறைக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு, முக்கியமானவர்களை வழி அனுப்பி வைக்க சென்றிருந்தார்,...
தனியாக அறையில் அமர்ந்திருந்த நித்திலாவோ பிரம்மை பிடித்தது போல தான் காணப்பட்டாள், இதற்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படி நகர போகிறது? நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது, நெஞ்சமெல்லாம் படபடத்தது, முக்கால் மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்ட படபடப்பு இன்னமும் குறைந்த பாடில்லை, இதயம் வலிப்பது போல் உணர்ந்தாள், விழிகளை மூடி நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவளுக்கு, கழுத்திலிருந்த தாலி கையில் தட்டுப்பட குனிந்து அதனை பார்த்தாள், அழுகை தான் வந்தது, தப்பிக்க முடியாத ஏதோவொரு இடத்தில் மாட்டிக் கொண்ட உணர்வு, கழுத்திலிருந்த தாலி பாரமாக இருப்பது போல் தோன்றியது, விழிகளை மூடி மௌனமாக கண்ணீர் வடித்தாள், அந்த நேரம் வந்தார் சித்ராவதி...
கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவள் அவர் வருகையை கண்டதும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள், அவரோ,... "நாம கிளம்பலாம் நித்திலா" என்று கூறி அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றார், இருவரும் காரில் ஏறிக் கொண்டனர், சித்ரா அவரின் வீட்டிற்கு தான் தன்னை அழைத்து செல்கிறார் என்பது புரிந்தது நித்திலாவிற்க்கு,.. 'நான் உங்க வீட்டுக்கு வரல' என்று சொல்லவும் அவளுக்கு தயக்கம், சொன்னாலும் அவர் கேட்க போவதில்லை என்பதும் தெரியும், பொம்மை போல் அமர்ந்திருந்தாள், சற்று நிமிடத்தில் வீடும் வந்து சேர்ந்தது,
சித்ரா காரிலிருந்து இறங்கி கொண்டார், நித்திலாவிற்கு இறங்குவதற்கு கால்கள் அசைய மறுத்தது, அவள் பக்க கதவை திறந்து விட்டபடி "இறங்கு" என்றார் சித்ரா, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு இறங்கியவளை, வீட்டினுள் அழைத்துக் சென்ற சித்ராவிற்கு, வீட்டின் ஹால் இருந்த நிலை கண்டு பெருமூச்சு வெளிப்பட, நித்திலாவிற்க்கோ பயம் உடலை கவ்வியது,...
ஹாலிலிருந்த பொருட்கள் அனைத்தும் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது, இது யாருடைய வேலை என்பது புரியாத தத்தி இல்லையே இருவரும், வீடு இருக்கும் கோலமே அவன் எத்தகைய கோபத்தில் இருக்கிறான் என்பதை பறைசாற்றியது அவர்களுக்கு, சித்ராவிற்க்கு மகனின் கோபம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை, எனவே நித்திலாவை ஓரறையில் விட்டுவிட்டு, வீட்டை வேலையாட்களிடம் சுத்தம் செய்ய சொல்லிவிட்டு, மகனின் அறை நோக்கி நடந்தார்,....