கண்ணீர் -10
அறைக்குள் நுழைந்த சித்ராவிற்கு அவ்வறையும் கந்தரி கோலமாய் இருப்பதை கண்டு சலிப்பு தான் ஏற்பட்டது, படுக்கையில் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்த மகனின் அருகில் சென்றவர்,... "உனக்கு ஏன்டா இவ்வளவு கோபம்" என்றார்,..
தலையை உயர்த்தி அவரை அடிபட்ட பார்வை பார்த்தவன்,... "ஏன்னு உங்களுக்கு புரியலையா மாம்" என்றான்.....
"புரியுதுப்பா, ஆனா நித்திலா" அவர் கூற வரவும்,... "ப்ளீஸ் மாம், அவளை பத்தி பேசாதீங்க, எல்லாத்துக்கும் காரணமே அவ தான்" என்றான் ஆத்திரத்துடன்,...
"அப்படி சொல்லாதடா, அவ பாவம், அவ என்ன பண்ணா, இதுக்கு நான் மட்டும் தான் காரணம், எனக்கு உன்னோட சிட்சுவேஷன் புரியுது, திடீர்னு உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னது தப்பு தான், பட் அந்த நிமிஷம் எனக்கு இதை தவிர வேறு என்ன பண்ணுறதுன்னு தெரியல," என்றார் வருத்தத்துடன்,...
"நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னால இதை ஏத்துக்க முடியல, அவளை பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு தான் வரும், இதுல அவ எனக்கு பொண்டாட்டியா, ச்சீ நான்சன்ஸா இருக்கு மாம்," என்று முகம் சுழித்து கூறியவனை ஆழ்ந்து பார்த்தவர்,... "உனக்கு இப்போ அவளை பிடிக்காம இருக்கலாம், பட் போக போக பிடிக்கும்டா, நித்திலா ரொம்ப நல்ல பொண்ணு, அவ கிட்ட நீ பழக ஆரம்பிச்சாலே அவ அன்புக்கு அட்டிக்ட் ஆகிடுவ" என்று சொன்ன தாயை வெற்று பார்வை பார்த்தவன்,... "தயவு பண்ணி கிளம்புங்கமா" என்றான்,
அவர் அவளை பற்றி பேச பேச அவனுக்கு ஆத்திரம் தான் வந்தது, தன்னையும் மீறி தாயை எதுவும் பேசி விடுவோமோ எனும் பயத்தில் அவன் கிளம்ப சொல்லிட, சித்ராவோ,.. "சரி நான் போறேன், நீ நிறைய டைம் எடுத்துக்கோ, என் பையன் புத்திசாலி தனமா முடிவெடுப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு," என்று அவன் கரத்தில் அழுத்தம் கொடுத்து விட்டு அவர் எழுந்து சென்று விட, ஆரவ்வோ பின்னால் சாய்ந்து அப்படியே விட்டத்தை பார்த்தபடி படுக்கையில் படுத்துக் கொண்டான், உள்ளே தகதகவென்று தனலாய் எரிந்து கொண்டிருந்தது, சித்ரா என்ன தான் சமாதானம் கூறினாலும் அவனால் சட்டென்று நடந்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை, தன் வாழ்க்கையே தன் கையை விட்டு போன உணர்வு, வெளியே சென்றால் பல கேள்விகள் அவனை வந்து தாக்கும், அவனுடைய நண்பர்களுக்கு இவ்விஷயம் தெரிய வந்தால் என்னவாகும், கண்டிப்பாக இதனை பற்றி கேட்டு தோண்டி துருவுவார்கள் என்பது தெரியும், அவர்களிடம் எப்படி என்ன சொல்லி சமாளிப்பது என்ற கவலையும் பெரிதாக இருந்தது, விழிகளை மூடிக் கொண்டவனுக்கு நித்திலாவின் முகம் மனக்கண்ணில் தோன்ற,... 'உன்னை சும்மா விட மாட்டேன்டி' என்று பொறுமிக் கொண்டான்,..
'எனக்கு நீ பொண்டாட்டியா? உன்னை எப்படி இங்கிருந்து ஓட ஓட விரட்டுறேன்னு மட்டும் பாருடி' என்று சூளுரைத்துக் கொண்டவனோ, அவளை எப்படியெல்லாம் வதைக்கலாம் எனும் திட்டத்தை போட ஆரம்பித்தான், இது தெரியாத பெண்ணவளோ, சித்ரா தனக்கு ஒதுக்கி கொடுத்த அறையில், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஜன்னலின் வெளியே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள், இனி தன்னுடைய வாழ்க்கை எப்படி நகர போகிறது என்பதை பற்றிய பயம் அவளுக்கு கிலியை உண்டு பண்ணியது, அலுவலகத்திலேயே அவளை அப்படி ஆட்டி படைத்தவன், இப்போது சும்மா விட மாட்டான் என்றே தோன்றியது, விழிகளை மூடி தாய் தந்தையை நினைத்துக் கொண்டவள்,.. 'என் கூடவே இருக்கப்பா இருங்கமா' என்று சிறு குழந்தை போல் பிதற்றிக் கொண்டாள்,...
மகனிடம் பேசிவிட்டு நித்திலாவை தான் காண வந்தார் நித்திலா, அவளாலும் நடந்ததை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதும் அவருக்கு புரிந்தே இருந்தது, இலக்கின்றி வெளியே வேடிக்கை பார்த்திருந்தவளின் தோளை தொட்டார் சித்ரா, யாரோ எவரோ என்ற பதட்டத்தில் சட்டென்று திரும்பியவளுக்கு சித்ராவை கண்ட பின்னால் தான் நிம்மதி வந்தது,...
"எதுக்கு டென்ஷனாகுற நித்திலா, இங்கே உனக்கு எந்த பிரட்சனையும் இருக்காது" அவள் பயம் அறிந்து ஆறுதலாக கூறினார் சித்ரா,... "டென்ஷன்லாம் எதுவும் இல்ல மேடம்" சமாளிப்பாக சொன்னவளோ, தயக்கத்துடன் அவரை ஏறிட்டு, "எதுக்காக மேடம் இப்படி பண்ணீங்க" என்றாள்,...
"ஏன்னு உனக்கு தெரியாதா" என்று கேட்டவரோ, அவ்வறையிலிருந்த கபோர்டின் அருகில் சென்று அதனை திறக்க,.. "எதுக்காக மேடம் என் மேல உங்களுக்கு இவ்வளவு பாசமும் அக்கறையும்" என்று கேட்டவளுக்கு தன்னையும் மீறி அழுகை வெளிவந்திருக்க, கப்போர்டிலிருந்த ஒரு புடவையை கையில் எடுத்துக் கொண்டு, அவளருகில் வந்தவரோ,...
"இப்போ எதுக்கு ஓவர் எமோசனல் ஆகுற நித்திலா, கண்ணை தொட முதல்ல" சற்று அதட்டலுடன் கூறியவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கன்னத்தை துடைத்துக் கொண்டாள்... "இப்போ இந்த புடவையை சேஞ்ச் பண்ணிக்கோ," என்றவாறு அவள் கையில் புடவையை ஒப்படைத்தவர் "உன் வீட்லருந்து உன் ட்ரஸ்ஸை எடுத்து வர சொல்லி இருக்கேன் வந்திடும்" என்ற தகவலையும் கூறினார்...
"இனிமே நான் இங்கே தான் இருக்கணுமா மேடம்" அபத்தமான கேள்வி தான் என்றாலும் அவளால் இக்கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை, தன்னை இங்கிருந்து அனுப்பி விட மாட்டாரா எனும் நப்பாசையும் வேறு,...
"என்ன கேள்வி இது, நீ இங்கே தான் இருந்தாகனும், இந்த வீட்டு மருமக இல்லையா நீ, இனி தான் பொறுப்பாவும் நடந்துகனும்" என்றார் கனிவுடன்,...
"உங்க வீட்டு மருமகளா இருக்க எனக்கு என்ன தகுதி இருக்கு மேடம், எதுக்காக இப்படி பண்ணீங்க, நான் போயிடுறேன் மேடம், என்னை அனுப்பி வச்சிடுங்க" என்று கண்ணீருடன் கூறியவளை, அழுத்தமாய் பார்த்தவரோ,... "நீ இப்படி பேசுரது இதுவே கடைசி முறையா இருக்கட்டும் நித்திலா," என்று காட்டமான குரலில் கூறிட, அவர் குரலில் திடுக்கிட்டு விழிகளை விரித்தவளோ... "எ.. என்னை மன்னிச்சிடுங்க மேடம்" என்றாள்,.. அவளுக்கு அவரை எதிர்த்து பேச துளியும் விருப்பம் இல்லை, அதே சமயம் தான் அவர்களுக்கு இடையூறாக இருப்பதிலும் விருப்பம் இல்லை, அவர் மகனுக்கும் என்னை பிடிக்காது எனும் போது, தான் எதற்காக தேவை இல்லாமல் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வாய் விட்டே கூறி இருந்தாள்,..
"புடவையை மாத்திட்டு சாப்பிட வா," என்று கூறி வெளியே சென்ற சித்ராவிற்கு அவளது மனநிலை புரிந்தாலும், எதுவும் பேசி அவளை சமாதான படுத்த முயலவில்லை, அவரே அதிக மனஉளைச்சலில் இருக்கிறார், அவரை தேற்றுவதற்க்கே ஒரு ஆள் தேவை படும் போது, அவரும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே திரிய முடியும்,...
இவை அனைத்திற்கும் காரணமான கிஷோரின் மீது கொலை வெறியே உண்டானது, அவன் மட்டும் அப்படியொரு செயலை செய்யாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரட்சனைகளும் வந்திருக்காதே, அட்லீஸ்ட் தன்னிடமாவது அவன் இதை பற்றி கூறி இருக்கலாம் என்ற கோபம் அவருக்கு, அவன் மீதிருந்த கோபம் அவனை பெற்றவர்களின் மீதும் இருந்தது, அவர்களுக்கும் தெரிந்து தானே இருக்கிறது அவன் ஒரு பெண்ணை காதலிக்கும் விஷயம், முன்கூட்டியே அதனை பற்றி தெரிய படுத்தாமல் இன்று என்னை இப்படியொரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்களே என்று ஆத்திரமாக இருந்தது,...
இங்கு நித்திலா, தான் அணிந்திருந்த அணிகலன்களையும், பட்டு புடவையும் கலைந்தவள் அங்கிருந்த டவலை எடுத்துக் கொண்டு குளிலறைக்குள் நுழைந்து கொண்டாள், மனதோடு சேர்த்து உடலும் அழுப்பாக இருக்க, குளித்து வந்தவள், சித்ரா கொடுத்த புடவையை உடலில் சுற்றிக் கொண்டாள்,...
சேலை கட்டி முடித்தவளுக்கு, அறையை விட்டு வெளியே செல்லவே அவ்வளவு தயக்கம், சித்ரா இயல்பாக பேசினாலும் அவர் மனதில் உள்ள வேதனைகளையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது, தன்னை வளர்த்து, படிக்க வைத்து, வேலையும் கொடுத்தவருக்கு இப்போது சுமையாய் வந்து சேர்ந்திருப்பது நெஞ்சை அறுத்தது, இதிலிருந்து எப்படி வெளிவருவது என்பதை பற்றி அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு போனால் கூட அது சித்ராவிற்க்கு தான் பிராட்சனையை கொண்டு வரும் என்பது புரிந்ததினால் அவள் அந்த எண்ணத்தையும் கைவிட்டிருந்தாள்,....
இப்போது என்ன செய்ய வேண்டும், ஒன்றும் புரியாமல் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவள், அறையின் கதவு தட்டப்பட்டதில் யாராக இருக்கும் என்ற பதட்டத்துடன் சில நொடிகள் சிலையாய் நின்று விட்டாள் நெஞ்சில் கரம் வைத்துக் கொண்டு,...
ஆரவ்வின் கோபம் எவ்வளவு மூர்க்கமானது என்பதை வீடு கிடந்த கோலத்திலேயே அறிந்து கொண்டவளுக்கு, இப்போது அவன் தான் வந்து விட்டானோ எனும் பயம், அவளை அதிக நேரம் பயமுறுத்தாமல்,.. "சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்மா" கணேசனின் குரல் வெளியிலிருந்து வரவும் தான் அவளுக்கு மூச்சே சீராக வந்தது, சென்று கதவை திறந்தவள், கணேஷன் கொடுத்த சாப்பாட்டை கையில் வாங்கியபடி,.. "மேடம் சாப்பிட்டாங்களாண்ணா" என்றாள்,...
"ஆமா'ம்மா சாப்பிட்டாங்க" என்றவரோ அவளிடம் பொய் தான் சொல்லி இருந்தார், நித்திலாவிற்கு சாப்பாடு கொடுக்க சொன்ன சித்ராவிற்கு அவள் தான் சாப்பிட்டதாக விசாரிப்பாள் என்பது நன்கு தெரிந்திருந்தது, அதனால் கணேஷனிடம் அவள் கேட்டால் தான் சாப்பிட்டு விட்டதாக கூற சொல்லி தான் அனுப்பி இருந்தார், இப்போது சித்ரா இருக்கும் மனநிலைக்கு அவருக்கு உணவு எப்படி இறங்கும், அவர் மகனும் வேறல்லவா சாப்பிடாமல் கிடக்கிறான், அவனை சாப்பிட அழைத்தாலும் வர மாட்டான் என்பதும் தெரியும், அதனால் அவனை அழைக்கவும் இல்லை, அவருக்கும் சாப்பிடும் மனநிலை இல்லாததால் தனதறையில் வந்து படுத்து விட்டார், கொஞ்ச நாள் ஆரவ்வை தொந்திரவு செய்ய வேண்டாம் எனவும் நினைத்திருந்தார், அவன் அவன் இஷ்டப்படி இருக்கட்டும், பசித்தால் சாப்பிடுவான், எவ்வளவு கோபம் இருந்தாலும் பசியை அவனால் தாங்க இயலாது என்பதையும் அவர் நன்கு அறிவார், எனவே அவனை அவன் வழிக்கே விட்டுவிட்டார், தூங்கினால் மனம் கொஞ்சம் லேசாகும் என்று தோன்றியது, அதனால் கண்கள் மூடி படுத்தவர், மிகவும் பிரதாயணப்பட்டு தான் தூக்கத்தை தழுவினார்,...