• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 14

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 14

"அங்கே என்ன பார்வை" சித்ரா சென்ற வழியை தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது அழுத்தமாக கேள்வியில், அவனை மிரண்டு போய் பார்க்க, அவனோ அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்து விட்டு,... "செர்வ் பண்ணு" என்றான் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி,..

மூச்சை இழுத்து விட்டு தன்னை தானே தேற்றிக் கொண்டவள், கைகள் நடுங்க நடுங்க தான் அவனுக்கு பரிமாறி முடித்திருந்தாள், அவனும் அமைதியாக சாப்பிட்டானே தவிர, அவள் பயப்படுவது போல் எதுவும் செய்யவில்லை, வயிற்றை நிரப்பி விட்டு எழுந்து கை கழுவிக் கொண்டவன், அங்கிருந்து நகர, அவன் செல்வதை கண்ட பின்னர் தான் அவ்வளவு நேரமும் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டவள், சட்டென்று அவன் அவளை நோக்கி திரும்பவும் வந்த மூச்சு மீண்டும் தடைபட்ட உணர்வு தான் அவளுக்கு..

சில நொடிகள் அவளது முகத்தை ஆராய்வது போல பார்த்தவன்,
பின் குரலில் ஒரு கூர்மையான அழுத்தத்துடன், "என்னோட எல்லா வேலைகளையும் இனி நீ தான் கவனிச்சுகனும், புரியுதா" மிரட்டும் தோரணையில் சொல்ல, மிரண்டு விழித்தவளின் தலை சரி என்பதாய் அசைய அதன் பிறகு தான் அவன் சென்றான், அவன் போன பின்னர் தான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது....

அன்றைய நாள் ஒருவித பதட்டத்துடன் தான் கழிந்தது நித்திலாவிற்கு, ஆரவ்வின் இயல்பான நடவடிக்கை புயலுக்கு முன் அமைதி என்பது போல தான் தோன்றியது, 'என்ன செய்ய காத்திருக்கானோ' என்று திக் திக்கென்று தான் கடந்தது அவளது ஒவ்வொரு நிமிடங்களும்...

அடுத்த இரண்டு நாட்கள் அவள் பயந்தது போல் அவன் அவளை பெரிதாக எதுவும் செய்யவில்லை, அவன் சொன்னது போலவே வேலைகளைக் குறை சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக செய்து விடுவாள்...

காலை எட்டு மணிக்கு முன்பே, அவனுடைய சட்டையை அழகாக அயர்ன் செய்து வைத்து, அதோடு பளபளப்பாக இருக்கும் பிளேசரை ஹேங்கரில் தொங்கவிட்டு, டையை நீட்டாக மடித்து மேசையில் வைத்துவிடுவாள், வாட்ச், பெல்ட், சாக்ஸ், பளிச்சென்ற கறுப்பு ஷூ என எல்லாவற்றையும் சுத்தமாக தயார் செய்து வைப்பவள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து தான் செய்வாள்,...

மேலும் அவனுடைய
லேப்டாப் பேக், அதனுடன் கூடிய ஃபைல், அவன் பென், வாலட் என்று இவைகளை ஒரே இடத்தில் வரிசையாக வைத்து விட்டு, நிமிரும் போது தான் நிம்மதியான மூச்சு வெளிவரும், இந்த வேலை அவளுக்கு அவ்வளவு ஒன்றும் சிரமம் இல்லை, ஆனால் ஆரவிற்கு செய்வதினால் தான் அவள் மூச்சு சீராக இல்லாமல் முட்டிக் கொண்டே இருந்தது, தான் ஏதாவது குறை செய்து, அதனால் அவன் கோபம் கொண்டு விடுவானோ என்ற பயத்தில் அனைத்தையும் கவனத்துடன் தான் செய்தாள்...

ஆரவ்வோ, சின்ன புன்னகையோ எந்தத் தட்டிக்கேட்போ இல்லாமல், மௌனமாக எல்லாவற்றையும் அணிந்து கொண்டு கிளம்பிவிடுவான், நித்திலாவுக்கு அதில் ஒரு நிம்மதி என்றாலும் அவனின் அமைதியான நடை, குளிர்ந்த பார்வை இவைகள் எல்லாம் அவளுக்குள் எப்போதும் 'புயலுக்கு முன் இருக்கும் அமைதி' யாக இருக்குமோ என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தது....

அன்றும் அப்படி தான் அவன் உடையை அயர்ன் செய்து கொண்டிருந்தாள் நித்திலா, அப்போது தான் ஜாக்கிங் முடித்து விட்டு அறைக்குள் நுழைந்தவனோ, அன்று சேலை கட்டிருந்த நித்திலாவை சில நிமிடங்கள் பார்வையால் அளவிட தொடங்கி விட்டான், அவள் வழக்கமாக சுடிதார் தான் அணிவாள், சித்ரா தான் நேற்று,.. 'உன்னோட பழைய ட்ரஸ்ஸை தூக்கி போட்டுட்டு இனி இதை உடுதிக்க நித்திலா, நீ இந்த சித்ராவதியோட மருமக, இனி அதுகேத்த மாதிரி கொஞ்சமாவது உன்னை மாத்திக்க' என்று கண்டிப்புடன் சொல்லி இருக்க, அவளும் அவர் வாங்கி கொடுத்த புடவையில் லேசான புடவை ஒன்றை எடுத்துஅணிந்திருந்தாள், முந்தானையை இடையில் சொருகி இருந்தவளின் வெண்ணிற இடை அப்பட்டமாக அவனது கண்ணிற்கு விருந்தாக அமைய, அவள் இடையில் பார்வை பதிந்த கணம் அவனிடமிருந்து சூடான மூச்சுக்காற்று ஒன்று வெளிவந்தது....

இரும்புக் கருவியின் வெப்பத்தில் சட்டையின் சுருக்கங்களைச் சீராக்கி கொண்டிருந்த நித்திலா, அறைக்குள் அவன் வந்ததையும் கவனிக்கவில்லை, மெல்ல அடியெடுத்து வந்து கொண்டிருந்ததையும் உணரவில்லை, மொத்தமாக திரும்பி நின்றதன் விளைவு அவனை பார்க்க தவறினாள், அவனோ அவள் கவனிக்காததை ஒரு வாய்ப்பாக கொண்டு, அவளருகில் வந்திருந்தவன், சற்றும் யோசிக்காமல் அவளது இடையில் கரம் வைக்க, அவன் தொடுதலில் மின்னல் பாய்ந்தது போல் உடல் நடுங்க திரும்பியவளுக்கு, அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்ததில் மூச்சு அடைத்து விட்ட உணர்வு தான்,..

அவள் விழிகள் அவனை மிரண்டு பார்க்க, அவன் விழிகளோ மோகத்தில் குவிந்து, உஷ்ண மூச்சுக்களை வெளியிட்டு கொண்டது, அவன் பார்வையும் அவள் முகத்தில் வந்து மோதிய சூடான மூச்சுக்காற்றும் அவளை உலுக்க, இதயம் ஜெட் வேகத்தில் துடித்தது, எந்த நொடியில் மூச்சு நின்று விடுமோ எனும் அளவிற்க்கு மூச்சு முட்ட நின்றவள், மெதுவாக விலகி செல்ல நினைக்க, அவனோ அவளை விடாமல் பின்னிடையில் கரம் விட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டான், அவளது இடுப்பைச் சுற்றி அவனது கரம் இறுகப் பதிந்தது,...

அவன் செயலில் மிரண்டவளோ,.. "ப்.. ப்ளீஸ் வி.. விட்டுடுங்க" நடுங்கிய குரலில் படபடக்கும் மனதுடன் கூற,.. "உஷ்" அவளது செவ்விதழ்களில் தன் விரலை வைத்தவனோ,,... "இது பேசுரதுக்கான டைம் இல்ல ஹனி" மயக்கும் குரலில் சொல்லிவிட்டு, அவளது பட்டு கன்னத்தினை விரல்கள் கொண்டு வருடிட, முகத்தை பின்னால் இழுத்து கொண்டவளோ,.. "தயவு செய்து என்னை விட்டுடுங்க" என்றாள், விழிகள் நீரை சுரக்க ஆரம்பித்திருந்தது, அவன் தாலி கட்டிய கணவனாக இருந்தாலும், இந்த நெருக்கம், அவனின் தொடுதல் இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை அவளுக்கு, மேலும் அவனது இந்த நெருக்கம் பயத்தில் அவள் உடலையும் ஆட்டம் காண வைத்தது,..

அவளது பயம், கண்ணீர், கெஞ்சல், நடுக்கம் இவைகள் அவன் மனதுக்குள் ஒரு சின்ன வெற்றிப் புன்னகையை தோற்றுவித்தது, அவளது பயம்தான் அவனுக்கு விருந்தாக வேண்டும், அவள் பயத்தில் மூச்சை சிதறச் சிதற எடுப்பதும், விழிகள் பதற்றத்தால் திசைமாறி அலைபாய்வதையும் கண்டு இன்னும் அதிகமாக அவளை தன்னோடு நெருக்கிக்கொள்ளத் தூண்டியது...

'இனிமேல் உன் வாழ்வின் ஒவ்வொரு மூச்சையும் நான் தான் கட்டுப்படுத்தப் போகிறேன்' உள்ளுக்குள் தன்னோடு உரைத்துக்கொண்டவன், அவள் அழுகையையும், பயத்தையும் உள்ளுக்குள் ரசித்தான், நித்திலா அவனை விட்டு விலக முற்படும்போதெல்லாம், அவன் இன்னும் நெருக்கிக் கொண்டான்,
அவளது அச்சம் அவனுக்கு ஒரு சுகமாகவும் அவளது நடுக்கம், அவனுக்கு ஒரு வெற்றியாகவும் தான் இருந்தது,...

'நீ ஒவ்வொரு நொடியும் என்னை பார்த்தாலே பயந்து நடுங்கணும்... இந்த வீட்டில் நிம்மதியா மூச்சு விட முடியாம துடிக்கணும், பயந்து நடுங்கி தளர்ந்துப் போய், கடைசில 'இங்க இருந்தா உயிரே போயிடும்'னு நினைச்சு, நீ தானாகவே இந்த வீட்டை விட்டு ஓடணும், அது தான்டி எனக்கு வேணும்' வன்மையாய் நினைத்துக் கொண்டவன், திடீரென்று என்ன நினைத்தானோ தெரியவில்லை, அவளை விட்டு மெல்ல விலகினான், அவன் விலகிய பின்னர் தான் நித்திலாவால் முழுமையாகவும் நிம்மதியாகவும் மூச்சு விட முடிந்தது....

அவனோ அதன் பிறகு எதுவும் தொந்திரவு கொடுக்காமல் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, நித்திலாவிற்கு சமநிலைக்கு வருவதற்கே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டது, தன்னுணர்வு பெற்றவள், ஒருவித நடுக்கத்துடனே அவன் வருவதற்குள் அந்த அறையை விட்டு சென்று விட வேண்டும் எனும் நோக்கில் வேலைகளை கடகடவென்று செய்ய ஆரம்பித்திருந்தாள்,...

இங்கு குளியலறைக்குள் நுழைந்து கொண்டவனோ, இரு கரங்களையும் சுவரில் ஊன்றியபடி ஷவரின் அடியில் தான் நின்றுருந்தான், அவளை கஷ்டபடுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்காக அவளை நெருங்கி வந்தவனுக்கு, அவளை நெருங்கி நின்ற நேரம் பல விதமான உணர்வுகள் அவனுக்குள் எழுந்தன,
அவளது நெருக்கம், அந்த சின்னத் தொடுதல்கள் அவனது உடலில் பட்டு, அவனது ஆண்மையை விழித்துக் கொள்ள செய்திருந்தது...

தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களினால் அவனுக்கு அதிர்ச்சியும் கோபமும், 'என்ன ஆச்சி எனக்கு, அவ அருகாமையில உருகி போறேனா நான், என்ன கண்ட்றாவி இது' கோபம் ஒருபக்கமும் குழப்பம் ஒரு பக்கமும் அவனுக்கு, இந்த காரணத்திற்காக தான் அவளை விட்டு விலகி வந்தது, அன்றும் அப்படி தான் தன்னை மறந்து அவளை முத்தமிட சென்றானே, இன்றும் அதே தான் நிகழ்ந்தது, 'நான் என்ன அந்தவுக்கு வீக்கானவனா, பிடிக்காத பொண்ணோட நெருக்கம் கூட என்னை இவ்வளவு உருக வைக்கிறதே' புரியாமல் குழம்பியவனோ, தான் அவ்வளவுக்கு ஒன்றும் பலவீனமானவன் இல்லை என்பதை உணர்ந்து தான் இருந்தான்,....

அவன் கல்லூரியில் அவனுக்கு ப்ரொபோஸ் செய்யாத பெண்களே இல்லை, பெண் தோழிகள் கூட இருந்திருக்கிறார்கள் தான், 'ஆரவ் செமயா பாடியை மெயிண்டெயின் பண்ணுறடா' என்று வெட்கமில்லாமல் அவனது கல் போல் இருக்கும் நெஞ்சை அந்த பெண்கள் தடவிப் பார்த்ததும் உண்டு, அப்போதெல்லாம் அவனுக்கு எந்தவித ஃபீலிங்ஸும் ஏற்பட்டதில்லை, 'அவுட்டிங் போலாமா' என்று கேட்டு பைக்கில் அவனை கட்டி அணைத்துகொண்டு வந்த பெண்களும் இருக்கிறார்கள், அந்த தருணத்தில் எல்லாம் உணர்வுகளே இல்லாதவன் போல தான் கல் போல இருப்பான், பெண்களின் அருகாமை, அவர்களின் நெருக்கம் அவனுக்கு ஒன்றும் புதிதில்லை, அவர்களின் மீது எந்த ஈர்ப்போ உணர்வு எழுந்ததே இல்லை,..

ஆனால் நித்திலாவின் அருகில் நின்ற நேரம் அவனது உடல் கல்லில் இருந்து தீப்பொறி பறப்பது போலக் கிளர்ந்தது, அவளின் மூச்சு அவனைத் தழுவியபோது, அவன் இருதயம் சிதறிப் போனது போலத் துடித்தது, 'அவ கிட்ட மட்டும் ஏன் உன் உடம்பு இவ்வளவு உருகி போகுது' என்ற கேள்விகள் அவன் உள்ளம் முழுவதையும் கலக்கியது, வெறுப்புடன் தொடங்கிய அணுகுமுறை, எதிர்பாராத ஈர்ப்பாய் மாறி அவனை உருக்குலைத்தது,...

நித்திலாவுக்கு மட்டும் தன் உள்ளமும் உடலும் தாங்க முடியாத சூட்டில் உருகிவிடுகிறது என்பதை உணர்ந்தபோது, அவன் இன்னும் தீவிரமாக தன் மீதே கோபப்பட ஆரம்பித்தான்...

பற்களை கடித்தபடி ஷவரின் கீழ் நின்றவனுக்கு, தன் மீது விழும் குளிர்ந்த நீர் கூட அவன் உடலுக்குள் எழுந்த அந்த தீப்பொறியை அடக்கவில்லை.. 'இது நான் இல்ல... நான் இப்படி இல்ல' சத்தமிட்டு சொன்னவனுக்கு தன் மீதே ஆத்திரம்,

கல்லூரி நாட்களில் எத்தனை பெண்கள் அவனை சுற்றி வலம் வந்தாலும், அவனது இதயம் அசைந்ததே இல்லை, தன்னுடைய மனமும் உடலும் மிகவும் உறுதியானது என்பதை பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது அந்த பெருமையே சிதறியிருப்பதை உணர்ந்து கோபம் மட்டுமே வந்தது,..
நித்திலா அருகில் வந்தாலே அவனுள் ஏதோ ஒரு புயல் எழுந்து உடலைச் சிதறடிக்கிறது, அவளைச் சிதைக்க நினைத்த மனமே, அவளைச் சேர விரும்பும் ஏக்கமாக மாறியது....

'ஏக்கமா? அவள் மீது எனக்கா?'
இப்படி ஒரு எண்ணம் வந்தவுடனே 'நோ!' என்று தன் உள்ளத்திலிருந்து கத்தினான், 'உடலை அவள் பக்கம் சாய விடக்கூடாது, அவளின் அருகாமையில் தான் பலவீனமடையக் கூடாது,
அவளிடம் பழி தீர்க்க வேண்டும் என்பதே தன் ஒரே முடிவு, ஒரே குறிக்கோள்' என்று தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவன்,
இதயம் என்ன சொன்னாலும், உடல் என்ன உணர்ந்தாலும், எல்லாவற்றையும் ஒதுக்கி, மனதை பாறை போல கட்டுப்படுத்திக் கொண்டு அவளை வதைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உறுதியாக எடுத்தான்,...
 
  • Wow
Reactions: shasri