கண்ணீர் - 15
அன்றைய காலை உணவை தனது தாயோடு தான் அமர்ந்து உண்டான் ஆரவ், நித்திலா அவர்களுக்கு பரிமாறினாள், மனதில் உறுதியான முடிவை எடுத்தாலும், அவள் அருகில் வந்து தட்டில் உணவை வைக்கும் ஒவ்வொரு தடவையும், அவனது மார்பு சூடாகி, மூச்சு தானாகவே உஷ்ணமாய் வெளியேறியது, அவள் விரல்களின் மென்மையான அசைவுகளும், முகத்தில் தெரிந்த சாந்தமான அமைதியும் அவளிலிருந்து பார்வையை விலக விடாமல் செய்தது அவனுக்கு....
தட்டில் சாப்பாடு இருந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் அவனது விழிகள் அடிக்கடி அவள் மீது தான் படிந்தது, அவளுக்கோ அவன் பார்வை உள்ளத்தைச் சுருட்டும் விதத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது, ஏற்கனவே அறையில் அவன் நடந்து கொண்ட விதமே அவளை அதீத பதட்டத்தில் ஆழ்த்தியிருந்தது, இப்போது அவனின் இந்த பார்வையும் வேறு அவளை மேலும் அதிகமாக சிக்கவைத்து மூச்சை அடைத்தது....
மகனிடம் எதை பற்றியோ கேட்க வந்த சித்ரா, மகனின் பார்வை நித்திலாவின் மீது அடிக்கடி படிவதை கண்டு அவருக்கு என்ன நினைப்பதென்றே தெரியவில்லை, இவ்வளவு சீக்கிரம் மகன் இப்படி மாறுவான் என்றும் நினைக்கவேவில்லை, இதில் அவருக்கு சந்தோஷம் தான் என்றாலும், இது இப்படியே நீடித்தால் அதை விட பெரிய நிம்மதியும் சந்தோஷமும் தனக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டார், மகனுக்கு நித்திலா செய்யும் பணிவிடைகளையும் அவர் அறிவார், அந்தச் சிறிய அக்கறைகள், அவள் அவனுக்கு தினமும் செய்யும் சின்னச் சின்ன உதவிகள் தான், இருவருக்கும் இடையில் வார்த்தைகள் தேவையில்லாத ஒரு பாலம் போல் அமைந்திருக்கும் என்று எண்ணினார், இவையே நாளடைவில் அவர்கள் பேசிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளவும் உதவும் என்ற யோசனையில் தான் அமைதியாக விட்டுவிட்டார்,...
நித்திலாவும் சிறு பெண் அல்லவே, படித்த புத்திசாலி பெண், அவளுக்கு எப்போதும் தான் சப்போர்ட்டாக இருந்து, இருவருக்கும் இடையில் வந்து நந்தி போல் நின்றால் அவர்களால் ஒன்று சேர முடியாமலேயே போய் விடும் என்ற எண்ணத்தில் தான், மகனின் விருப்பத்தின் பெயரில் விட்டு விட்டு, வேடிக்கை மட்டும் பார்க்க தொடங்கி விட்டார்,...
ஆரவ்விடம் ஏதோ கேட்க வந்தவர், எதுவும் கேட்காமல், சாப்பாடு முடிந்ததும் அமைதியாக எழுந்து சென்று விட, அறை முழுவதும் சற்று வெறுமையாய் மாறியது, அங்கே அவர்கள் இருவரும் மட்டுமே தனித்துப் போனார்கள்....
சித்ரா சென்றதும், கரங்களை ஒன்றோடு ஒன்று பிசைந்தபடி நின்றிருந்த நித்திலா, மெதுவாக நழுவி வெளியேற முயன்றாள், அந்த நொடியில்தான் அவனது குரல் சுவரைத் தாக்கியது போல ஒலித்தது..
"எங்கே போற?" அவனின் அந்த வார்த்தைகள் அவளைப் பாதியில் நிறுத்தியது, பதட்டம் கலந்த சுவாசத்துடன் மெதுவாக திரும்பியவள், அவன் பார்வையை சந்திக்க தைரியமின்றி தலை கவிழ்ந்து நின்றிட, அவனோ... "கம் டூ மீ" என்றான், மெல்லிய அதே சமயம் கட்டளையாய் ஒலிக்கும் அவன் அழைப்பில் அவளின் உள்ளம் முழுவதும் நடுக்கமடைந்தது, ஓடிச் சென்று விடு என்று ஒரு பக்கம் மனம் கத்தினாலும், அவனது கண்களில் உருவான சக்தி, அவளை தனது விருப்பமின்றி முன்னே நகர்த்தியது,...
அவள் மெதுவாக அவனை நோக்கி செல்ல, அவளை பார்த்துக் கொண்டே இருந்தவனிடமிருந்து எந்தவித வார்த்தைகளும் வெளிவரவில்லை,
அந்த அமைதி கூட அவளது இதயத்துடிப்பை இரட்டிப்பாக்கியது...
நிமிராத தலையுடன், கரங்களை இன்னுமே பதட்டமாக ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தவளுக்கு
"எனக்கு தெரியாம ஓட பார்க்கிறக்கிரியா" என்றவனின் கண்ணீரென்ற குரல், அவளது உள்ளத்தைக் கலங்கச் செய்ய,.. "இ இல்ல... உள்ளே வேலை" என்று திக்கி திணறி ஏதோ சொல்ல வந்தவள், திடீரென அவனது கை நீண்டு, அவளது மணிக்கட்டை இறுகப்பற்றிக் கொள்ளவும், அவனது இந்த எதிர்பாராத வலிமையில் துடித்தவளின் கண்கள் பரிதவித்து உயர்ந்தது,..
"இனி இப்படி பண்ணாத" அவன் பற்களுக்குகிடையில் வந்த குரல் கட்டளையாக மட்டுமல்லாமல்
அவளின் உள்ளத்தையே ஆட்கொண்டது போல் இருந்தது,..
அவளது மெலிந்த கரம் அவனது பிடியில் மாட்டி சிக்கிக் கொண்டிருந்தது, விடுதலை பெற போராடினாலும், அவன் விரல்கள் விடாமல் வலுப்படுத்திக்கொண்டே இருந்தது, அவனது பிடியின் வலிமையில் இருந்தது வெறும் கோபம் மட்டும் இல்லை, அதனுடன் சேர்ந்து உரிமையின் தீவும், கவர்ச்சியின் தணியாத சுவையும் இருந்தது....
அவன் பற்றியிருந்த பற்றுதல், திடீரென்று மென்மையாக மாறிட, தயக்கமாக நிமிர்ந்து அவனை பார்த்தவளுக்கு அவன் பார்வை அச்சு அச்சாக தன் மீது நிலை குத்தி இருப்பதை கண்டு மேலும் பதட்டம் உண்டானது, அவன் முன்னால் அவள் பதட்டத்துடன் நிற்க, ஆரவ்வின் கண்களோ அமைதியை மறந்திருந்தன, அவளது அச்சத்தைக் கண்டு ரசிப்பது போலவும்,
அவளை இழுத்து அணைக்க வேண்டுமென மனம் ஏங்குவது போலவும் பிரகாசித்தது...
'எனக்கு இப்போதே இவ வேணும் முழுசா' என அவனது உள்ளம் முணுமுணுத்தது, அவளை தொடும் போது அவன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீ சற்று அடங்கிவிடுவது போலவும்,
ஆனால் தொட்டால் மீண்டும் அவளை விட்டுவிட முடியாது என்ற உணர்வும் அவனை சிக்கவைத்திருந்தது....
தன் விரல்களை இறுக்கிக் கொண்டிருப்பளை கவனித்தவனுக்கு அந்தச் சிறு அசைவு கூட அவனது இதயத்தில் ஓர் அலையைக் கிளப்பியது, அவளது நெருக்கம் அவனை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளியது,..
நாற்காலியில் சாய்ந்திருந்தவன், மெதுவாக எழுந்து, அவளுக்கு சிறு அடி இடைவெளியில் நிற்க,
அந்தச் சற்றே அருகாமையில் கூட முழு உலகமே நெருங்கிவிட்டது போல் உணர்ந்தான், அவனின் மூச்சின் சூடு அவளது கன்னத்தை வருடி கொண்டிருந்தது, அவனது பிடியில் சிக்கிக்கொண்டு நின்றவள், தப்பித்து செல்ல முடியாமல் தான் நின்றாள்,...
அவள் உதடுகள் நடுக்கத்தில் சற்று திறந்தன, அந்த நொடியில் அவன் உள்ளத்தில் எரிந்த உணர்ச்சி, வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்க்கு வலிமையாய் மாறியது,
அவளை இன்னும் ஆழமாக தனது பக்கம் இழுத்தவனின் விழிகள், இப்போது அவளது செவ்விதழ்களில் மொய்த்தன...
அந்த தேன் ஊரும் இதழ்கள் தான் அவனது தாகத்தைத் தீர்க்கும் ஒரே மருந்தாகத் தோன்றியது, 'இப்போதே அதனை சுவைக்க வேண்டும், இந்த நொடியிலேயே அவளை முழுவதுமாய் எனது உலகுக்குள் இழுக்க வேண்டும்' என்ற ஆர்வத்தின் தீ அவனது பார்வையில் வெளிப்பட்டது....
அவளுக்கோ அவனது நெருக்கத்தில் மூச்சு சீர்குலைந்தது, அவன் அருகாமையின் சூட்டில் உருகிக் கொண்டிருந்தாள், அவனை பிடித்து தள்ளி விட்டு செல்லும் தைரியமும் அவளுக்கு கொஞ்சமும் இல்லை,...
அவனோ உள்ளம் முழுதும் எரிந்த மோகத்தீயை அடக்க இயலாமல்
அவளது மூச்சில் கலந்துவிடத் துடித்தவன், மெல்ல அவள் செவ்விதழ்களை நோக்கி குனிந்தான், வெறும் சில அங்குல தூரமே மீதமிருந்த அந்த நொடியில்,.
சற்று தொலைவில் எழுந்த சத்தம் அவனை திடீரென விழித்துக் கொள்ள வைத்திருந்தது,
அவன் முகத்தில் ஒரு சின்ன குழப்பம், ஒருவித போராட்டத்தின் நிழல் தென்பட்டது, இன்னும் ஒரு வினாடி தாமதித்தாலும் அவன் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்பதனை உணர்ந்து, அவளை விட்டு விலகி எதுவும் சொல்லாமல் விறுவிறுவென்று சென்று விட்டான்..
அவன் சென்ற பின்னர் தான், அவள் நெஞ்சுக்குள் தேங்கி போயிருந்த மூச்சு ஒரே நேரத்தில் வெளிப்பட்டது,
அவள் கரங்களை மார்பில் சற்றே அழுத்தியவாறு, நிம்மதியாக ஓர் ஆழ்ந்த மூச்சை விட்டாள், அவனை விட்டு விலகிய அந்தச் சில நொடிகள், தன் உயிரையே மீண்டும் பெற்றது போல உணர்ந்தாள்,..
ஆனால் உள்ளுக்குள் இன்னும் அவனது நெருக்கத்தின் சூடு, அவனது பார்வையின் வருடல் இதெல்லாம் அவளை முற்றிலும் கட்டுப்பாட்டில் வைக்கும் உணர்வு,
அவள் சுவாசம் சற்று தளர்ந்தாலும், அவனின் வெப்பம் இன்னும் அவளை பிடித்துக் கொண்டிருக்கும் பிரம்மை தான் அவளுக்கு,...
தனது அலுவலகத்தை நோக்கி தான் காரை செலுத்திக் கொண்டிருந்தான் ஆரவ், நித்திலாவின் அருகாமையினால் உருகிவிட்டதை நினைத்து மனம் பதட்டம் கொண்டது,
அவளது அருகாமை, அவள் சுவாசத்தின் நெறி, அவள் சிறு அசைவுகள் இவை அனைத்தும் அவனை கட்டுப்படுத்த முடியாதவாறு கவர்ந்திழுத்தது,...
கால்கள் Accelerator-ஐ நெருங்கினாலும், கவனம் முழுதும் சாலையில் இல்லாமல், அவன் உள்ளம் முழுவதும் அவளை பற்றியே சுற்றி வந்தது, அவளை இன்னும் அருகில் கொண்டு வந்து என்னென்னவோ செய்ய வேண்டும் என்ற ஒரு தடுக்க முடியாத ஆசை அவனது உடல் முழுவதிலும் பரவியது....
போக்குவரத்து பாதையில் கார் நன்றாக நகர்ந்தாலும், அவன் சுவாசம் தீவிரமாய், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது, அவளை நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவன் உடலிலும் மனதிலும் ஒரு வெப்பம், ஒரு பதட்டம் உருண்டு அவனை சீர்குலைத்தது, அலுவலகத்தை நெருங்கி வந்த பிறகும் கூட, அவனுக்கு நித்திலாவை மீண்டும் தனது அருகாமையில் காண வேண்டும் என்ற ஆசை தீவிரமாக உள்ளுக்குள் எழுந்தது... 'வீட்டுக்கு போலாமா' அவன் மனம் யோசிக்க,..
"ஓ மை காட்" தன்னுள் எழுந்த ஆசையை எண்ணி, வாய்விட்டே கத்தி இருந்தவனுக்கு, தனக்கு என்னவானது என்பது தான் புரியவே இல்லை, 'இப்படி நீ அவளுக்காக ஆசை படக் கூடாது' என்று தன்னைத்தானே கட்டுப்படுத்த முயன்றாலும், எழும் வெப்பத்தைத் தடுக்கவும் முடியவில்லை அவனால்,..
அவள் வேண்டும் என்ற உணர்வு, அவன் மனதில் தீவிரமாக பதிந்திருந்தது, அவனது உள்ளமும் உடலும் அவளுக்காய் ஆசை கொண்டது, ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு அசைவிலும் அவள் அருகாமை அவனை மேலும் உருகச் செய்து, கட்டுப்பாடில்லாத ஆசை மேலோங்கி, அவனது உள்ளம் முழுதும் அவளைத் தேடி துடித்தது,
அவன் தன்னைக் கட்டுப்படுத்த முயன்ற போதும், அவளின் அருகாமை அவனை மொத்தமாக தன் வசத்தை இழக்க செய்து, அவளை பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்தும், அது முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் இந்த முரட்டு நாயகன்,...

Last edited: