• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 16

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 16

அன்று அலுவலகத்தில் கூட அவனுக்கு வேலை சரியாக ஓடவில்லை, எந்நேரமும் நித்திலாவை நினைத்து மனம் குழம்பிக் கொண்டிருந்தது, அந்த நாள் அவனுக்கு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது, ஆனால் அங்கேயும் சரியாக சொதப்பி இருந்தான்,
மீட்டிங்கில் அவன் வார்த்தைகள் சில இடைவெளிகளில் தற்செயலாக சிக்கியது, எண்ணங்கள் தெளிவாக வரவில்லை, அவனது மனம் முழுதும் நித்திலாவை பற்றி மட்டுமே யோசித்தது, அவனது உணர்வுளையும் கவனத்தையும் முற்றிலும் அவளுக்கே தெரியாமல் தன் வசப்படுத்தி இருந்தாள் பெண்ணவள், உள்ளத்திலும் உடலிலும் அவன் அவளை நினைத்து பதற்றம் கொண்டான், அந்த பதட்டத்தால் அவன் செயல் திறனும், கவனமும் குறைந்து, கம்பீரமான ஆரவ் அன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தான்,..

ஆம் அனைவரும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் தான் அவனை பார்த்தார்கள், மற்றவர்களின் கண்ணிற்கு அவன் இன்று சரியாக இல்லை என்பதும் புரிந்தே இருந்தது,
ஏனெனில், ஆரவ் எப்போதும் வேலை விஷயத்தில் கவனமாகவும், செயல்திறனுடனும் இருக்கும் ஒருவன், ஆனால் இன்று மற்றவர்களின் பார்வையில் விழும் அளவிற்கு தான் அவனின் நடவடிக்கைகள் இருந்தது, 'இன்னைக்கு சாருக்கு என்னாச்சு' என்ற தங்களுக்குள் கிசுகிசுத்தபடி தான் சென்றனர் அவனின் ஊழியர்கள்...

இவன் அலுவலகத்தில் இவ்வாறான குழப்பத்திலும் பதட்டத்திலும் இருக்க, வீட்டில் நித்திலாவிற்கோ அவனது நெருக்கத்தை நினைத்து, வெப்பமும் பதற்றமும் எழுந்தது, 'தாலி கட்டிவிட்டதால் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரா? இல்லையென்றால் இதில் வேறு எதுவும் சதி இருக்கிறதா' என்ற குழப்பமும் வேறு அவளுக்கு,..

மேலும்... 'இனி என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ' என்ற பயமும் அவளுக்கு எழுந்தது,
அவனது அடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை நினைத்த கணம், அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது, அவன் அருகாமை, பார்வை, வார்த்தைகள் இல்லாத அணுகுமுறை அவளின் உள்ளத்தையும் உடலையும் ஒரு விதமான கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்தது, அவன் அருகாமையில் ஒவ்வொரு நொடிக்கும் அவள் இதயம் துடித்து, மூச்சு ஒரு மாதிரி அழுந்தியது, அன்றய நாள் முழுக்கவே அவள் ஒருவித பதட்டத்துடனே தான் வலம் வந்தாள்,..

"ஏன்மா ஒரு மாதிரி இருக்கீங்க" சாப்பிடும் போது கூட, என்னவோ போல் இருந்தவளை கண்டு கணேசனும் கரிசனமாக கேட்டிருந்தார், அவள் என்ன சொல்லுவாள், சொல்லும் நிலையிலா அவள் இருக்கிறாள், "ஒன்னுமில்லண்ணா" என்பதோடு முடித்துக் கொண்டாள்,...

அன்றைய இரவும் தாய் மகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் நித்திலா, காலையில் போல் அடிக்கடி எல்லாம் அவன் அவளை பார்க்கவில்லை, ஆனால் அவள் மீது படியும் கணம், அவன் பார்வையில் மறைமுகமான மோகம் தெளிவாக வெளிப்பட்டது,...

மென்மையான பார்வை மட்டுமே இருந்த இருந்த போதிலும், அதுவும் அவளுக்கு கடுமையான பதட்டத்தையும், இதயத்துடிப்பையும் தான் ஏற்படுத்தியது, 'என்ன பார்வை இது, ஏன் இப்படி பார்க்கிறாரு' என்ற புலம்பல் தான் அவளிடம்,...

தாயும் மகனும் சாப்பிட்டுவிட்டு அவரவர்களின் அறைக்கு சென்று விட, ஹாட்பேக் மற்றும் சிறு சிறு பாத்திரங்கள் கிடக்கவும், அதனை விலக்கி வைத்து விட்டு போய் படுக்கலாம் என்று அந்த வேலையில் தான் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா, கணேஷ் இந்த வேலைகளை காலையில் வந்து கவனித்துக் கொள்வார் தான் என்றாலும், இரவு முழுவதும் பாத்திரங்களை கழுவாமல் போடுவதற்க்கு அவள் எப்போதுமே விரும்பமாட்டாள், இந்த வாடைக்கே கரப்பான் பூச்சி, பல்லி வந்து குடியேறிவிடும் என்று அதனை கழுவிக் கொண்டிருந்தவள், அங்கிருந்த இன்டர்காம் ஒலிக்கவும் அவளுக்கோ படபடப்பு,...

சித்ராவிற்க்கு ஏதாவது தேவையாக இருந்தால் நேரடியாகவே வந்து கேட்டுவிடுவார், இன்டர்காம் ஒலித்தால் நிச்சயம் அது ஆரவ்வாக தான் இருக்கும் என்று அறிந்தவள், படபடக்கும் மனதுடன் ரிசீவரை எடுத்து காதில் வைக்க, அந்த பக்கமிருந்தோ.. "மில்க் எடுத்துட்டு வா, நிறைய நட்ஸ் போட்டு" என்று என்று ஒருமாதிரி குரலில் அவன் சொல்லிவிட்டு வைத்து விட, இவளுக்கோ பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை,...

'இந்த டைம் நான் அவர் ரூம்க்கு பால் எடுத்துட்டு போகனுமா கடவுளே' என்று தலையில் கரத்தை வைத்தபடி நின்றவள், நேரம் செல்வதை உணர்ந்து ப்ரிட்ஜிலிருந்த பாலை எடுத்து காய்ச்ச தொடங்கி இருந்தாள், நிறைய நட்ஸ் வேறு போடணும் என்று சொல்லி இருந்தானே, எனவே பால் காயும் நேரத்தில் அவள் மற்ற வேலைகளையும் கவனித்தாள், அவள் செயல் மெதுவாகவும் திறமையாகவும் இருந்த போதும், உள்ளே அவள் மனதில் அவன் மீது ஏற்பட்ட பதட்டமும், கவலையும் ஒரே நேரத்தில் விளங்கியது....

பாலை தயார் செய்து கண்ணாடி டம்ளரில் ஊற்றியவளுக்கு, அதனை கொண்டு சென்று அவனிடம் கொடுக்கும் தைரியம் தான் இல்லை, சமையல் கட்டிலிருந்த பாலையே வெறித்தபடி நின்றவளுக்கு மீண்டும் ஒலித்த இன்டர்காமின் ஒலியில் உடல் தூக்கிப்போட்டது,... வேகமாக சென்று எடுத்தவள்... "இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க" என்று வந்த அவனின் கோபக்குரலில்,.. "ஸாரி சார், இதோ கொண்டு வரேன்" என்று சொல்ல, அவனும் வைத்து விட்டான்,...

மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு, தன் பயத்தையும் பதட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து, அவனறையை நோக்கி நடந்தவள், அவன் அறையின் வாயிலின் முன்பு தான் நின்றாள், உள்ளே செல்லவே கால்கள் வர மறுத்தது, இருப்பினும் தன்னை சமன்படுத்திக் கொண்டு,... 'சீக்கிரம் பாலை கொடுத்துட்டு கிளம்பிடனும்' என்று தன்னிடம் தானே சொல்லிக் கொண்டு, கதவை விரல்கள் கொண்டு நாசுக்காக தட்ட,.. "உள்ள வா" என்ற அவனின் குரல் கண்ணீரென்று வரவும், மெல்ல அடியெடுத்து வைத்து கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்,...

அவனோ லேப்டாப்பின் திரையை பார்த்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தான், அந்த காட்சி அவளுக்கு பெரிதாய் நிம்மதியை தர,
'நல்ல வேலை, ஏதோ வேலையா இருக்கார், பாலை வச்சிட்டு உடனே கிளம்பிடலாம்' என்று மனதில் நினைத்தபடி "சார்… பால்…" என்று மெல்லிய குரலில் சொல்ல, அவனும்
"அங்கே வச்சிடு," என்றான் அவளைப் பார்க்காமலேயே....

'நல்லதாக போச்சி' என்று நிம்மதி அடைந்தவள், பால் டம்ளரை கட்டிலின் அருகிலிருந்த மேஜை மீது வைத்துவிட்டு திரும்பிய கணம், "உன்னை நான் போக சொல்லலையே…" என்ற ஆரவ்வின் ஆழ்ந்த கட்டுப்பட்ட குரல் அவளை அங்கேயே உறையவைத்தது, அவள் கைகளை ஒன்றோடொன்று நெருக்கிக் கொண்டாள், பதட்டத்தில் இதயம் துடிப்பது அவள் காதுகளுக்கே கேட்டது,...

அவனோ லேப்டாப்பை மெதுவாக மூடி, ஓரமாக வைக்க, அந்தச் சிறிய சத்தம் கூட அவளின் உள்ளத்தை திடுக்கிட செய்தது, படுக்கையில் அமர்ந்திருந்தவோ அவளை நோக்கி ஒரு ஆழ்ந்த பார்வையை வீசிவிட்டு எழுந்து, மெதுவாக அவளை நோக்கி தான் வந்தான்,...

அவனது ஒவ்வொரு அடியும் தன்னை நெருங்க நெருங்க, அவளின் சுவாசம் சுருங்கியது, 'இப்போ என்ன செய்யப்போகிறார்?’ என்ற கேள்விகள் அவளை உலுக்கியது, வெளியில் அமைதியாக நிற்பது போல இருந்தாலும், உள்ளே அவளின் இதயம் கட்டுப்பாடின்றி துடித்துக்கொண்டிருந்தது.....

அவன் அருகில் வருவதை உணர்ந்து, பார்வையை தரையில் பதித்துக்கொண்டவளுக்கு
அவனின் நிழல் கூட அவளை முழுமையாக மூடிவிட்டதுபோல் தோன்றியது, சில அங்குல இடைவெளியில் நின்றவனின் விழிகளிலோ மோகம் பற்றி எரிந்தது, அதற்கு மேலும் தன் உணர்வுகளை அடக்க முடியும் என்று தோன்றவில்லை, அவளது கன்னங்களை மெல்ல பற்ற, விழிகளை அதிர்ந்து விரித்தவள்,.. "சார் ப்ளீஸ்" என்று இறைஞ்சல் பார்வையில் அவனை நோக்க, அவனோ,... "உன் புருஷன் தானே நான் ஜஸ்ட் ஒரு கிஸ் தான்" அவன் தாப குரலில் சொல்ல,... 'எனக்கு வேண்டாம்…' என்ற சொல்லை மனம் உச்சரித்தாலும், உதடுகள் அதை வெளிப்படுத்தவில்லை, அடுத்த கணமே, அவனும் அவளின் இதழ்களைத் தன் இதழ்களை கொண்டு மூடி இருந்தான்...

ஆழ்ந்த இதழ் முத்தம் நீண்டுகொண்டே போனது, அந்த இதழ் முத்தத்தினால் அவன் ஆசை கொழுந்து விட்டு எரிந்தது, மென்மையாக கையாள முயன்றவனுக்கு தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை, அவனின் வன்மை முத்தத்தினால் அவளும் திணறி போய்விட்டாள், அவள் தடுக்க நினைத்தாலும் அவன் விரல்கள் அவளின் கன்னங்களை இறுகப் பிடித்திருந்ததால் அசைய கூட முடியவில்லை அவளால், அவளின் மூச்சுகள் அனைத்தும் அவன் சுவாசத்தில் கலந்தது...

எதிர்த்து தள்ளும் சக்தி இல்லாமல் அவள் அமைதியாகக் கண்களை மூடிக்கொள்ள, அவனோ இதழ் வழியே அவள் உயிரை குடித்து விட்ட பிறகு தான் அவள் இதழ்களையே விடுவித்தான், அவளோ ஒற்றை முத்தத்திற்கே துவண்டு போய் விட்டாள், அவனுக்கோ இந்த முத்தம் மேலும் மோகத்தை தூண்டி விட்டதே தவிர குறையவில்லை, ஆனாலும் இப்போதே அவளை மொத்தமாக கொல்லை கொள்ளவும் விரும்பவில்லை,...

தலை முடிகள் கலைந்து, இதழ்கள் சிவந்து, புடவை லேசாக விலகி நின்றவளை கண்டு அவனிமிருந்து உஷ்ணத்துடன் கூடிய பெருமூச்சு வெளிவந்தது, இன்னும் கொஞ்ச நேரம் அவள் அங்கு இருந்தாலும் அவனால் தன்னை கண்ட்ரோல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து,.. "கோ" என்றான், அவளுக்கோ அவன் சொன்ன வார்த்தைகள் கூட உரைக்கவில்லை, ஒரு மாதிரி பேயடித்தது போலவே தான் நின்றிருந்தாள், அவனுக்கோ அவளை பார்க்க பார்க்க உணர்வுகள் கரைப்புரண்டு ஓடியது, மூச்சை இழுத்து தன்னை கட்டுப்படுத்தியவன்,.. "இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தாலும், கட்டில்ல உன்னை எனக்கு விருந்தாக்கிடுவேன்" என்ற அவனுடைய குரல், அவளின் நெஞ்சில் ஒரு அசைவை கிளப்பியது, விழுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு படபடப்பு மட்டுமே, அவனது சிவந்த விழிகளில் தெரிந்த காமத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்டவள், அதற்கு மேலும் அங்கு நிற்பாளா? அடித்து பிடித்துக் கொண்டு ஓடாத குறையாக, அந்த அறையை விட்டு வெளியே ஓடி இருந்தாள்,...

அவளை அவனே போக சொல்லி விட்டான், ஆனால் தன் தாப உணர்ச்சியை எப்படி தீர்த்துக் கொள்வது என்று தான் தெரியவில்லை, பைத்தியம் பிடிப்பது போன்று இருந்தது, ஒரு கட்டத்தில் அவளை போக விட்டிருக்க கூடாதோ என்று கூட தோன்றியது, அவள் அறைக்கு செல்லலாமா? என்ற எண்ணம் கூட வந்தது, அதே சமயம் 'நீ என்ன அவ்வளவு பலவீனமானவனா? உன்னை கண்ட்ரோல் பண்ணிக்க உனக்கு தெரியாதா, நீ என்ன போதை மருந்து உட்கொண்டது போல இப்படி தவிக்கிறாய்' என்று உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது,...

தலையை தாங்கி பிடித்துக் கொண்டான், ஒரு பக்கம் ஆசை நெருப்பாய் தூண்ட, மனசாட்சியோ கத்தி அடக்க முயன்றது, உள்ளே ஓடும் அந்த போராட்டத்தில் அவன் முழுவதும் சிதறிப்போனான்,
ஒவ்வொரு மூச்சும் நெருப்பாய் எரிந்தது, ஒவ்வொரு சிந்தனையும் அவளை நோக்கி தான் சென்றது,
அவளைப் போகச் சொல்லியது தவறோ என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டவனுக்கு, மூச்சு மெல்ல அடைபட்டு போன உணர்வு,
உடம்பு முழுக்க நெருப்பு போல எரிந்த அந்த சூட்டைக் கட்டுப்படுத்த முடியாமல், அவன் நேராக குளியலறைக்குள் நுழைந்து ஷவரின் கீழ் தான் நின்றான்,...

குளிர்ந்த நீர் அவன் தலையில் விழுந்த அந்த நொடி, சூட்டில் கொதித்த ரத்தம், மெதுவாக சீரான ஓட்டத்துக்கு திரும்பியது, முடிகள் வழியே வழிந்த நீர் முகத்தையும், மார்பையும் நனைத்து செல்ல, அந்த நெருப்பு மெல்ல அடங்கி கொண்டிருந்தது....

ஆனால் ஒவ்வொரு துளியுடனும் அவள் உருவம் தான் அவன் கண்முன்னே விரிந்தது, நீர் அவன் கண்ணை மூடி, காதை அடைத்து, உள்ளத்தை மூழ்கடித்துக் கொண்டிருந்தாலும், கலைந்த கூந்தலுமாய், சிவந்த இதழ்களுமாய் நின்றிய அவள் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தாள்,..

மூச்சை பெரிதாக இழுத்து, பற்களை கடித்துக் கொண்டு, அவளை பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்தான், 'நீ தான் உன்னை அடக்கணும் ஆரவ்' என்று மனசாட்சியும் சத்தமிட்டது...

நீண்ட நேரம் அந்த குளிர்ந்த நீருக்கடியில் நின்று கொண்டிருந்தபின் தான் அவனுடைய சூடு சற்று குறைந்தது, ஆனால் அவளைப் பற்றிய காய்ச்சல் மட்டும் இன்னும் உள்ளே நிசப்தமாகக் கொதித்துக் கொண்டே இருந்தது....