• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 19

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 19

அவள் சோர்வுடன் உறங்கி கொண்டிருந்த போது கூட அவன் விடவில்லை, அவள் இதழ்களில் முத்தாட தொடங்கி விட்டான், அவன் முத்தத்தில் உறக்கம் கலைந்தவளுக்கு நடப்பு புரிய, பெருமூச்சோடு விழிகளை மூடிக் கொண்டாள், உடல் அடித்து போட்டது போன்று வலித்தாலும் 'விட்டுடு' என்று சொன்னால் விடவா போகின்றான் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்து விட்டாள், அவனோ அவளுடன் கூடி கழித்த பிறகே எழுந்து குளிக்க சென்றான்...

சில நிமிடங்களில் குளித்தன் சாட்சியாய் உடலில் நீர்த்துளிகள் மின்ன, இடையில் டவலுடன் வந்தவன், இன்னும் எழாமல் கண் மூடி படுத்திருந்தவளிடம்,... "என்னோட காஸ்டியும் எங்கே? அயர்ன் பண்ணியா இல்லையா?" என்று மனசாட்சியே இல்லாமல் வினவிட, அவனது உயர்ந்த குரலில் விழிகளை சட்டென்று திறந்தவள், எழவே முடியாமல் எழுந்து அமர்ந்தபடி,.. "அ.. அது என்னால எழுந்துக்க முடியல, உடம்பு முழுக்க பெயினா இருக்கு" என்றாள் நலிந்த குரலில்...

அவளை கோபமாய் முறைத்தவனோ,... "எனக்கு அதெல்லாம் தெரியாது, இப்போவே என்னோட ட்ரஸ் எனக்கு அயர்ன் பண்ணி வேணும்" என்று கறாராக சொல்லிட, அவளுக்கு தான் அழுகை வருவது போல் இருந்தது, அவளால் இப்போது எழுந்து நிற்க முடியுமா என்று கூட தெரியவில்லை, இந்நிலையில் அவன் இவ்வளவு கறாராக வேலை செய்ய சொன்னதில் மனம் சுணங்கி போனவள்,... "ப்லீஸ் சார், இன்னைக்கு மட்டும் எனக்கு கருணை காட்டுங்க, நிஜமா என்னால எழுந்துக்க கூட முடியல" என்றாள், விழிகளும் அவளை மீறி கலங்கி போனது,...

அவளை உறுத்து விழித்தவனோ,.. "டூ வாட் ஐ சே" என்று இரக்கமின்றி கூறிட, அதற்கு மேலும் அவனிடம் பேசுவது பிரயோஜனம் இல்லை என்பது புரிந்தவள் மெல்ல எழுந்து கொள்ள முயன்றாள், உடலில் துணி இல்லை, பெட் சீட் தான் அவளை முழுவதுமாக மூடி இருந்தது, கண்களை சுழட்டி தனது உடையினை தேட, அதுவோ அந்த அறையின் மூலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்தது,...

"என்னோட புடவையை மட்டும் கொஞ்சம் எடுத்து தறீங்களா" அவன் வில்லன் என்பது தெரிந்தாலும் அவனிடம் உதவி கேட்கும் நிலை தான் இப்போது நித்திலாக்கு,..

அவனோ கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, ஏளன புன்னகையை வீசியவன்,.. "உனக்கு நான் வேலை பார்க்கணுமா" என்று வினவ,.. "ஜஸ்ட் இது ஒரு ஹெல்ப் தானே" என்றாள் அவளும்,...

"உனக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன்னு உனக்கு தோணுதா" அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவிட, அவனை வலியோடு பார்த்தவள், பின் போர்வையை உடலில் சுற்றிக் கொண்டு, அவன் சொன்ன வேலையை சிரமத்துடன் தான் செய்து முடித்தாள், அவள் செய்து முடிக்கும் வரையில் அவளை தான் பாரத்துக் கொண்டிருந்தான் வன்மத்தோடு,...

'இப்போ தான்டி ஸ்டார்ட் பண்ணி இருக்கேன், இனிமே பாரு என் ஆட்டத்தை, உன்னை என் லைஃப்ல இருந்து ஓட வைக்கிறது தான் என்னோட குறிக்கோள், ஒவ்வொரு நாளும் என்னோட ப்ரீத் கூட உனக்கு டார்ச்சரா தான் இருக்க போகுது, உன்னை கதற வைக்கிறேன்டி' மனதில் வன்மத்துடன் சொல்லிக் கொண்டவன், அவள் அயர்ன் பண்ணி வைத்த உடையை எடுத்து அணிந்து கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டான், அவன் சென்றதும் தனது உடையை எடுத்து அணிந்து கொண்டு, தனதறைக்கு வந்தவள், குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்,...

ஷவரின் கீழ் நின்றவளின் மீது நீர் படபடவென்று விழுந்து, உடல் முழுவதும் வழிந்தோடியது. அந்த குளிர்ந்த நீர், ஒரு நிமிடம் அவளை ஆறுதல் செய்யும் போல இருந்தாலும், அடுத்த நிமிடம் ஒவ்வொரு துளியும் அவளின் தோலின் மேல் அவன் கொடுத்த காயத்தினை எரிய செய்தது,...

அவனது பற்தடயங்கள், அவசரமாய் பதிந்த முத்தங்களின் சின்னங்கள், நகக் கீறல்கல் என அவன் கொடுத்த காயங்கள் அனைத்தும் அவளின் சிவந்த மேனியில் அச்சு அச்சாக தெரிந்தது,..

தண்ணீரின் சத்தம் அறையை முழுமையாக நிரப்பி, வெளி உலகம் அமைதியாகிவிட்டது போல இருந்தது, ஆனால், அந்த சத்தத்தின் நடுவே, அவளின் உள்ளம் மட்டும் கதறிக் கொண்டிருந்தது, உடல் சோர்வால் தளர்ந்திருந்தது, விழிகள் நீரை அதுபாட்டிற்கு ஊற்றிக் கொண்டிருக்க, அந்தக் கண்ணீரின் சுவையும், நீரின் சுவையும் கலந்து அவளின் உதடுகள் வரை வழிந்தன, அவளின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் அவள் எவ்வளவு வேதனைப்படுகிறாள் என்று சாட்சி சொன்னது போலிருந்தது...

ஆனால், அந்த வேதனையை யாரிடம் சொல்லி நிம்மதி பெறுவது? அவள் உயிரோடு இருப்பது கூட ஒரு தண்டனையாகவே தோன்றியது, இரவு அவன் செயல் ஒவ்வொன்றுக்கும் அவள் அமைதியாக இருந்தாள் தான், அவனது தொடுதலில் உருகி சிலிர்த்து போனாள் தான், தன் விருப்பத்துடன் தான் அவனுடன் கலந்தாள், அதற்கு காரணம் என்ன வென்றும் அவளுக்கு புரியவில்லை, கணவன் என்ற பந்ததினால் ஏற்றுக் கொண்டேன் போல என்று நினைத்த்வளுக்கு, காலையில் அவள் உடல் எவ்வளவு பலவீனமாக இருக்கும் என்பதை உணர்ந்தும், அவன் மனசாட்சி இல்லாமல் நடந்துகொண்டது தான் அவளை அதிகமாய் வலிக்க வைத்தது, இரவின் கூடலின் போது அவன் தன்னை ஏற்றுக்கொண்டான் என்று நினைத்தவளுக்கு, அவன் வெறும் உடல் சுகத்துக்காக மட்டுமே தன்னை நாடி இருக்கிறான் என்பது புரிய வந்ததும், உள்ளம் சிதறியது....

அன்று அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை, அறையிலேயே தான் இருந்தாள், சாப்பாட்டு நேரத்தின் போது கணேஷன் வந்து அழைத்த காரணத்தினால், பேருக்கு கொறித்து விட்டு வந்திருந்தாள், கணேஷனுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது, 'இந்த பொண்ணுக்கு என்ன பிரட்சனையோ' என்று மனதில் அவளுக்காக வருத்தப்பட்டுக் கொள்வார், அன்று அவள் உணவையும் சரியாக சாப்பிடவில்லை, எனவே மாலை நேரம் அலுவலகம் முடிந்து வந்த சித்ராவிடம்,.. "நித்திலாம்மா இன்னைக்கு சரியா சாப்பிடலம்மா, ரூம்லயே தான் இருந்தாங்க, முகமெல்லாம் வாடி போய் இருந்தது" என்று கணேஷன் கூறி இருந்தார்,...

சித்ரா தான், தான் இல்லாத சமயங்களில் அவ்வப்போது நித்திலாவை கவனித்துக் கொள்ள சொல்லி இருந்தார், அதன் அடிப்படையில் கணேசன் தகவலாக சொல்லி விட்டு நகர, தனது லேப்டாப் பேக்கை சோபாவிலேயே வைத்து விட்டு நித்திலாவின் அறைக்கு தான் நடந்தார்,...

"நித்திலா" என்ற அழைப்போடு அறைக்குள் வந்தவரின் குரலில், படுத்திருந்தவள் எழ முயல,.. அவரோ,.. "பரவாயில்ல படுத்துக்கோ, என்னாச்சு நித்திலா உடம்பு எதுவும் முடியலையா" என்று கேட்டு அவளது நெற்றியை தொட்டு பார்க்க, லேசாக காய்ச்சல் இருந்தது,...

"ஃபீவரா இருக்கு, டேப்லட் போட்டியா" அக்கறையாக அவர் வினவ,.. "இல்ல மேடம், அது தானா சரியாயிடும்" என்று சோர்வுடன் சொன்னவளை முறைத்தவர்,... "தானா எப்படி சரியாகும், படிச்ச பொண்ணு தானே நீ" என்று திட்டிவிட்டு, வெளியே சென்றவர், காய்ச்சலுக்கான மாத்திரை மற்றும் தண்ணீரோடு வந்தார்,...

"இந்தா முதல்ல இந்த டேப்லட்டை போடு" அவளிடம் நீட்ட,...மறுக்காமல் வாங்கி கொண்டவளோ,... "நீங்க ஏன் மேடம் இதெல்லாம் பண்ணுறீங்க" சங்கடத்துடன் கேட்டபடி அவர் தந்த தண்ணீரையும் வாங்கி கொள்ள,..."இதெல்லாம் நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா, எனக்கு முடியலனா நீ தானே கவனிச்சிப்ப, அப்போ உனக்கு முடியலைனா நான் தான் கவனிச்சுக்கனும்," அவர் அழுத்தமாக பார்வையில் வினவ, அவர் அன்பில் நெகிழ்ந்தவள்,... "தேங்க்ஸ் மேடம்" என்றாள் சிறு முறுவலோடு,...

ஆரவ்வினால் சிதறி போயிருந்த மனம் சித்ராவின் அன்பினால் குளிர்ந்து போனது, காயம்பட்ட மனதிற்கு இதமாகவும் இருந்தது,...

"ஆரவ் உன்கிட்ட நல்ல விதமா நடந்துகிறானா நித்திலா" மனதை உறுத்திய கேள்வியை அவரால் கேட்கமால் இருக்க முடியவில்லை, இப்போது இவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் அவனாக இருக்குமோ என்ற கவலை வேறு,..

அவளோ சில நொடிகள் அமைதி காத்தவள்,... "அவருக்கு பிடிக்காம தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, அவர் மனசு மாற நிறைய டைம் தேவைப்படும் மேடம், இவ்வளவு சீக்கிரத்துல யாராலயும் பிடிக்காத கல்யாணத்தை அக்ஷப்ட் பண்ணிக்க முடியாதுல்ல" என்றாள்,

அவளின் தெளிவான பேச்சு அவருக்கு நிம்மதியை தர,.. "உண்மை தான், அவனுக்கு டைம் கொடுக்கலாம், நீயும் டைம் எடுத்துக்க, ஆனா மனசு சேருவதற்குள்ளாகவே வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டீங்க, இதுவும் நல்லதுக்கு தான், இதுவே நாளடைவில் உங்களை ஸ்ட்ராங்கா இணைக்குற பாலமா இருக்கும், ஆனா ஒன்னு நித்திலா, அவன் உன்னை ஹர்ட் பண்ணா என்கிட்ட நீ தயங்காம சொல்லிடனும், புரியுதா" என்று கண்டிப்புடன் சொல்லியிருக்க, அவளும் சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்,...

அப்போது சித்ராவிற்காக தலையசையத்தாள் தான், ஆனால் 'உங்கள் மகன் என்னை அப்படி துன்புறுத்துகிறான் இப்படி துன்புறுத்துகிறான்' என்பதை சொல்லி அவரை நோகடிக்க விரும்பவில்லை அவள், தனக்காக அவர் நிறைய செய்து விட்டார், இப்போது அவருக்கு நான் செய்ய வேண்டிய ஒரே ஒரு உதவி நிம்மதியை கொடுப்பது மட்டும் தான் என்ற முடிவில், அவர் மகன் தனக்கு கொடுக்கும், கொடுக்க போகும் துன்புறுத்தல்களை எல்லாம் தாக்கு பிடிக்க வேண்டும் என்ற மன பக்குவத்திற்கு வந்திருந்தாள், அவளால் எந்தளவிற்கு தாங்க முடியும் என்று தெரியவில்லை, ஆனால் முடிந்த மட்டும் தாங்கி கொள்ளும் எண்ணத்திற்கு வந்து விட்டாள் சித்ராவிற்காக மட்டுமே,...

மாத்திரை போட்டதும் காய்ச்சலும் விட்டிருந்தது, உடலில் சுறுசுறுப்பும் வந்திருந்தது, எழுந்தவள் படுத்தே இருந்தால் களைப்பாக தான் இருக்கும் என்ற எண்ணத்தில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருக்கும் கணேசனுக்கு கொஞ்சம் உதவி செய்தாள்,...

சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் தாயும் மகனும் உணவு மேஜையில் ஆஜராகி இருந்தனர், தொழிலை பற்றி மகனிடம் விவாதித்துக் கொண்டிருந்த சித்ரா, அந்த பேச்சு முடிவு பெற்ற நேரம் நித்திலாவிற்க்கு காய்ச்சல் வந்த விஷயத்தை பற்றியும் சொன்னார், அவன் முகத்தில் சின்ன மாறுதல் கூட வரவிவில்லை, தான் பாட்டிற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தான், அதனை கண்ட சித்ராவிற்கு ஒரு பெருமூச்சொன்று வெளிப்பட, சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டார்,....

"வரும் போது பால் எடுத்துட்டு வா" அவளிடம் அதிகார தோரணையில் சொல்லிவிட்டு அவன் அறைக்கு நடந்து விட, அவளிடமிருந்தும் ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது,...

அவள் அவன் கேட்ட பாலை எடுத்து செல்ல, அவனும் நிதானமாக குடித்து விட்டு, அந்த இரவும் அவளை விடவில்லை, சோர்வான உடலோடும், தாங்க முடியாத உள்ளக் காயங்களோடும் இருந்தவள், 'இன்னும் என்னிடம் என்ன தேடுகிறாய்?' என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தள்ளாடினாள்..

ஆனால், அவன் பார்வையில் ஆசை மட்டும் மேலோங்கி, அவளின் வலியைக் உணரவே இல்லாதவன் போல நடந்துகொண்டான், அவள் உள்ளம் ஓய்வை தேடியபோதும் அவனது விருப்பங்களுக்கே அடிமையாகிக் கொண்டது,
உடலால் போராடினாலும், மனம் எதிர்க்க முயன்றாலும், அவனது பாசாங்கான முத்தங்களில் சிக்கி, மீண்டும் சிக்குண்டவளாய் தான் ஆனாள்....

இரவு நீண்டது… தூக்கம் மீண்டும் அவர்களுக்கு எட்டாத ஒன்றாகிப் போனது, அவன் விருப்பம் முடிந்தவுடன், அவளை ஒரு காலியான பொருள் போல விட்டு விட,
அவளோ அந்த நொடியும் வெறுமையை மட்டும் தான் உணர்ந்தாள்...
 
  • Angry
Reactions: shasri