• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 22

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 22

அடுத்த மூன்று நாட்கள் அவளுக்கு தொந்திரவு கொடுக்கவில்லை ஆரவ், ஆனால் அந்த மூன்று நாள் இரவும் அவளை அணைத்தபடி தான் உறங்குவான், அவன் பக்கமிருந்து வார்த்தைகளோ, வன்மமோ எதுவும் இல்லை, ஆனாலும் அந்த அமைதியான அணைப்பில் கூடலில் கூடக் கிடைக்காத ஒரு தனி நிறைவு அவனுக்கு கிடைத்தது போல் இருந்தது, அவளுக்கோ அவனது அந்த அணைப்பில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினாள்,...

அவள் உடல் இயல்பான நிலைக்கு வந்தவுடன், அவளுடன் கூடிக் கழிக்க ஆரம்பித்துவிட்டான் ஆனால் வன்மையாக அல்ல, நித்திலாவிற்கோ குழப்பம்… 'அவர் உண்மையிலேயே மாறிவிட்டாரா? இல்லை பதுங்கி பாயப்போகிறாரா?' என்ற எண்ணம் தான் அவளை எந்நேரமும் பதட்டத்துடனே வைத்திருந்தது...

இந்நிலையில் அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்திருந்த ஆரவ், "வெளியே போகணும் ரெடியாகி வா" என்றான் நித்திலாவிடம்...

அவன் வெளியே அழைத்ததில் அவளால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை, 'எங்கே கூப்பிடுகிறார்' என்ற பதட்டம் தான், எனவே "வெளியே எங்கே" என்றாள் திக்கலுடன்,...

திரும்பி அவளை முறைத்தவனோ,,.. "எங்கேன்னு சொன்னா தான் வருவீங்களோ, சொன்னதை மட்டும் செய்டி" அவனது கோபத்தில் அவளும் வாயை மூடிக் கொண்டு தயாராகி வர சென்றாள்,..

சித்ரா இன்னமும் வீடு வரவில்லை, அதனால் அவரிடம் சொல்லாமல் போகவும் அவளுக்கு மனம் உறுத்தியது, அதை அவனிடமும் சொல்லமுடியாதே,..

உறுத்தலுடன் தான் தயாராகி வந்து அவனின் முன்பு நின்றாள், புடவை தான் அணிந்திருந்தாள், தன் முன்னே வந்து நின்றவளை ஏற இறங்க பார்த்தவனின் முகத்தில் சலிப்பு தெரிய, அவளோ 'எதற்காக இப்படி பார்க்கிறார்' என்று தான் நினைத்தாள்...

"வா" என்ற ஒற்றை சொல்லோடு அவன் முன்னே நடக்க, அவளும் அவனை பின்தொடர்ந்தவள், சித்ரா அவர் அறைக்குள் நுழைவதை கண்டு, அவர் வந்து விட்டதை அறிந்தவள் "நான் மேடம் கிட்ட சொல்லிட்டு வரேன்" என்றாள், போக முனைந்தவளின் கரம் பிடித்து தடுத்தவன் "தேவை இல்லை" என்று சொல்லிக் கொண்டிருந்த நேரம் அவர்கள் குரல் கேட்டு திரும்பிய சித்ரா, அவர்களின் அருகில் வந்திருந்தார், இருவரும் வெளியே எங்கோ செல்வது அவர்களின் உடை தோரணையில் தெரிய,.. "வெளிய எங்கேயும் போறீங்களா என்ன" என்றார்,...

"ஆமா மேடம், இன்னைக்கு நீங்க ஆஃபிஸ் விட்டு வர லேட்டாகிடுச்சா மேடம், நல்லவேளையா வந்துடீங்க, உங்ககிட்ட சொல்லாம போறது உறுத்தலாவே இருந்தது, "என்று சொன்னவளை கண்டு கனிவாய் புன்னகைத்தவர்,.. மகனின் புறம் திரும்பி "எங்கே போறீங்க" என்றார்...

"ஏன் மாம் சொல்லிட்டு தான் போகனுமா? என் பொண்டாட்டி தானே இவ" என்றான் பொண்டாட்டியென்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்து,....

"பட் சொல்லிட்டு போறதுல தப்பில்லையேப்பா" அவர் கூர் பார்வையில் வினவ,.. "ஜஸ்ட் ஒரு அவுட்டிங்" அவன் சொல்ல,... அவரோ அதற்கு மேலும் எதுவும் கேட்டு அவனை கோபப்டுத்த விரும்பவில்லை,.. நித்திலாவிடம் திரும்பியவர்,... "ஜாக்கிரதையா போயிட்டு வா நித்திலா" என்று சொல்ல, அவளும் புன்னகையோடு தலையசைதாள்...

அதன் பிறகு இருவரும் புறப்பட்டு விட, ஜோடியாக போகும் அவர்களை பார்த்து சந்தோசம் கொண்ட சித்ரா,... 'என் ஆரவ் மாறிட்டு வரான்னு தோணுது, எப்படியோ ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும்' என்று நினைத்துக் கொண்டவர், தன் வேலையை கவனிக்க சென்றார்....

ஆரவ் காரை ட்ரைவ் செய்தபடி இருக்க, அவன் அருகே அமர்ந்திருந்த நித்திலா, சில நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்ததில் கொஞ்சம் சுகமாக உணர்ந்தாலும், அவனுடன் தனியாக வந்த எண்ணமே உள்ளத்தை எந்நேரமும் திக்திக்கென்றே வைத்திருந்தது,
எங்கே அழைத்து போகிறான் என்பதை சொல்லாததால் மனதிற்குள் புலம்பிய படி தான் வந்தாள்...

சற்றுநேரத்தில், கார் ஒரு மூன்று அடுக்குமாடி கட்டடத்தின் முன் நின்றது, அந்த பில்டிங் இரவின் இருளில் ஜெகஜோதியாய் பிரகாசித்தது, அந்த பில்டிங்கை சுற்றிலும் இருந்த பரந்த கார்பார்க்கிங்கில் நிறைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் மனித நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது, அந்த பார்க்கிங் ஏரியாவிலும் சீரியல் விளக்குகள் தொங்க விடப்பட்டு பளபளப்பாய் எரிந்து, விழாக்கோலம் போல இருந்தாலும், அந்த இடத்தை ஒரு வித அச்சமூட்டும் பிம்பமாகவே காட்டியது நித்திலாவிற்க்கு..

'இது என்ன இடம்?' என்று குழப்பத்தில் இருந்த அவளின் எண்ணத்தை உடைத்தது அவனது கட்டளை குரல்...

"இறங்கு" மனம் படப்படவென்று அடித்தாலும் அவன் சொன்னபடி காரிலிருந்து இறங்கினாள்...

"என் கூட வா" என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு அவன் முன்னே நடக்க, அவள் பயத்தோடும் படப்படப்போடும் அவனைப் பின்தொடர்ந்தாள்....

கட்டிடத்தின் கதவைத் தாண்டியவுடனே, வெளியே இருந்த அமானுஷ்ய அமைதிக்குப் எதிராக முற்றிலும் மாறுபட்ட ஓசை அவளது விழிகளை மிரண்டு விழிக்க செய்தது,...

கருப்பும் சிவப்பும் கலந்த விளக்குகள் இடைவிடாமல் ஃபிளாஷ் அடித்து அவளது கண்களை மோத, தரையை குலுக்கியபடி அடித்த இசையின் தாளம், அவளது மார்பையே அதிர வைத்தது,...

சுற்றிலும் ஆண்களும் பெண்களும் ஒருவரின் தோளில் ஒருவர் சாய்ந்து சிரித்தபடி குடித்துக் கொண்டிருந்தார்கள், குட்டி உடை அணிந்திருந்த பெண்கள் கையில் மதுகோப்பையுடன் இருக்க, இன்னும் சிலர் மேடையின் அருகே துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்கள்,
சிலர் போதையில் தடுமாறி, தள்ளாடியபடி இருந்தார்கள்....

பார்கவுண்டரில், வண்ணம் மின்னும் கண்ணாடி பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன, பானங்களை ஊற்றிக் கொண்டிருந்த பார் டெண்டரின் கைகள், இசையின் தாளத்தோடு போட்டியிட்டது போல வேகமாக அசைந்தன, முழு இடத்தையும் மது வாசனை சூழ்ந்திருந்தது....

அதை உணர்ந்தவுடனே, நித்திலா முகம் சுழித்தாள், புருவங்கள் சுருங்கியது, 'இது என்ன இடம்… என்னை இங்கே ஏன் அழைச்சிட்டு வந்தார்' என்ற அந்த கேள்வி அவளது முகத்திலேயே தெரிந்தது,..

அவளது முகத்தைப் பார்த்த ஆரவ், ஒரு பக்க சின்ன சிரிப்புடன் நின்றான், அவனுக்கோ இது பழக்கமான இடம்
ஆனால் நித்திலாவுக்கோ
இந்த இடமே அவளை விழுங்குவதை போல ஒரு அசிங்கமான உணர்வைத் தான் தந்தது,...

இதற்காக தானே அவன் அவளை அழைத்து வந்தது...

அவள் சுற்றிலும் நடக்கும் காட்சிகளை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே,
"நாம இங்கே ஏன் வந்திருக்கோம்?” என்று அவனிடம் அடக்க முடியாமல் கேட்டிருக்க, அவனோ "என்ஜாய் பண்ணத்தான்…" என்றான் தோள்களை குலுக்கி,.. அவனின் பதில் அவளுக்கு பீதியை தான் கிளம்பியது,...

கூட்டம் நிறைந்த நடன மேடை,
கோஷமாய் சத்தமிடும் பக்கங்கள் எதுவும் இல்லாத சிறிது அமைதியாக இருந்த ஓரமாக இருக்கும் சோஃபாவின் பக்கம் அவளை அழைத்துச் சென்றவன் "இங்கே உட்காரு" என்றான், அவனது குரல்,
சுற்றிலும் பரவி இருந்த சத்தத்திற்குள்ளும் கட்டளையாக ஒலித்தது....

அவளும் மிரளும் விழிகளுடன் சுற்றி நோட்டமிட்டபடி அமர்ந்து கொண்டாள், அந்த மூலையில், நீங்கியிருந்த சத்தங்களும் விளக்குகளும் இருந்தும், அவளுக்குள் இருந்த சங்கடம் மட்டும் சற்றும் குறையவில்லை....

அவள் மிரளும் விழிகளை கண்டு உதட்டிற்குள் மர்மமாக சிரித்துக் கொண்டவன்,"நீ இங்கேயே இரு, நான் இப்போ வந்திடுறேன்" என்று சொன்னவன், அவள் உணரும் முன்னரே பாரின் பக்கம் நடந்துசென்று விட, நித்திலாவிற்க்கோ இதயத் துடிப்பு கூடியது, இந்த மாதிரி இடங்களுக்கெல்லாம் அவள் வந்ததே இல்லை, சுற்றிலும் கூச்சலிட்டு சிரிக்கும் குரல்கள், கண்ணாடிகள் மோதும் சத்தம், மது வாசனை இவை
எல்லாமே அவளை ஒரு குளிர்ந்த சங்கடத்தில் மூழ்கச் செய்தது....

'என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டாரே' தவிப்பாக அமர்ந்திருந்தவளுக்கு
உள்ளமெல்லாம் என்னவோ செய்தது...

அந்த நேரம், குடி போதையில் இருந்த ஒரு இளைஞன், தள்ளாடியபடி அவளது மேசைக்க்கு அருகே வந்து நின்றவன், அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தபடி, "ஹாய் பியூட்டிஃபுல்… உங்களை இங்க பார்த்ததே இல்லயே, தனியா வந்திருக்கீங்களா?” என்று கேட்டு புன்னகைத்தான்,...

நித்திலாவிற்கோ உடல் நடுங்கியது,
கண்கள் பதற்றமாய் கூட்டத்தினுள் ஆரவ்வை தேடியது, 'எங்கே போயிட்டாரு' அவள் தவிப்போடு அவனை தேட, அந்த புதியவனோ
"சின்ன டிரிங்க் பண்ணலாமே"
தள்ளாடிய குரலில் பேசி, அவளின் கையைத் தொட முயன்றான்....

நித்திலா பயத்தில் எழுந்தே விட்டாள்
"டோண்ட் டச் மீ!" தடுமாறிய குரலில் சொன்னவளுக்கு, இதயத் துடிப்பு காது வரை சென்று மிரட்ட, அவனோ,.. "ஹேய் கூல்,.. வொய் டென்ஷன் பேபி, ஓகே ட்ரிங்க் வேண்டாம், டான்ஸ் பண்ணலாமா" என்று அங்கே ஆடிக் கொண்டிருந்தவர்களை பார்வையால் காட்டிட, அவளுக்கோ பயத்தை மீறிய கோபம்,...

"பொறுக்கி" என்று திட்டியவளுக்கோ அதற்கு மேலும் அங்கு இருப்பது சரியாக படவில்லை, அங்கு இருக்க இருக்க மூச்சு முட்டுவது போல் இருக்கவே, வேகமாக வாயிலை நோக்கி நடந்தாள், ஆனால் அது அவளுக்கு சுலபமாக இருக்கவில்லை, அவள் செல்லும் பாதையில் கூட்டம் இன்னும் அடர்ந்திருந்தது, மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த ஆண்கள், தங்களுக்குள் சிரித்து கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள், யாராவது அவளை பார்த்துவிடுவார்களோ, யாராவது தொட்டு விடுவார்களோ என்ற அச்சத்தோடு, அவள் தனது உடலை சுருக்கிக் கொண்டு தான் அவர்களுக்குள் வழியைத் தேடி நடந்தாள்...

அவள் கண்கள் வாயிலைத் தேடிக் கொண்டே இருந்தன, ஆனால் அந்த வாயில் தொலைவில் இருந்தது, குறையாத பதட்டத்துடன் கூட்டத்தை தாண்டிக்கொண்டு சென்ற போது, திடீரென ஒரு கை அவளது தோளைத் தொட்டது, அதிர்ச்சியுடன் திரும்பியவளின் கண்கள் பெரிதாகி விரிந்தன, அங்கே மதுவின் வாசனை வீசிய முகத்தோடு அரை மூடிய கண்கள் கொண்ட ஒரு இளைஞன், "எங்கே போற ஸ்வீட்டி, என்கூட வா" என்று சிரிக்க, அவள் உடல் நடுங்கியது, குரல் வெளியே வரவில்லை, விலக முயன்றவளுக்கு முடியவில்லை, அவனது பிடி மேலும் வலுவாகியது, கூட்டத்தின் ஒலி அவளுக்கு தூரமாய் மறைந்து, அவள் காதுகளில் அவன் சிரிப்பு மட்டுமே ஒலித்தது...

அந்த கணத்தில் கூட அவள் கண்கள் ஆரவ்வை தான் தேடியது, அந்த நேரம் உள்ளே இருந்த ஒரு குரல்,.. 'இன்னுமா அவனை நம்பிக்கிட்டு இருக்க' என்று கேட்பது போல் இருக்க, வலியுடன் விழிகளை அழுந்த மூடி திறந்தவளுக்கு திடீரென்று தைரியம் பிறந்தது போல் இருக்க,
தன்னைத் தொட்ட கையை வலுக்கட்டாயமாகத் தட்டிவிட்டு, கூட்டத்தை பின் தள்ளியவாறு வெளியேறினாள், மனதில் ஓடிக்கொண்டிருந்தது பயமும் வெறுப்பும் மட்டுமே 'இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது…' என்ற எண்ணம் மட்டுமே அவளை முன்னோக்கி தள்ளியது....

வாயிலை தாண்டி வெளியே வந்தவுடன் குளிர்ந்த இரவு காற்று முகத்தில் பட்டது, ஆனால் அந்த காற்றுக்கூட அவளது நெஞ்சில் இருந்த அழுத்தத்தை குறைக்கவில்லை, அந்த பரந்த பார்க்கிங் ஏரியாவில் யாருமின்றி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன, அந்த வெறிச்சோடிய இடத்திற்குள் நடந்தவளுக்கு தன்னிடம் இருந்த சக்தியெல்லாம் உடைந்துவிட்ட உணர்வு...

ஒரு காரின் மீது சாய்ந்து நின்று, பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டாள், நெஞ்சு பிளந்தது போல மூச்சு முட்டியது, அடுத்த கணம் கண்ணீர் தன்னாலேயே வழிந்தது...
முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு அழுதாள், அந்த அழுகை சத்தம் அந்த வெறிச்சோடிய பார்க்கிங் ஏரியாவில் மட்டுமே ஒலித்தது, சுற்றிலும் யாருமே இருக்கவில்லை, அந்த அமைதிக்குள் அவளது அழுகை தான் எக்கோவாய் திரும்பி வந்து மனதை இன்னும் சிதைத்தது....
 
  • Angry
Reactions: shasri