கண்ணீர் - 23
காரில் சாய்ந்து நின்று, தன்னந்தனியாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த நித்திலா… "உன்னை நான் உட்கார்ந்திருக்க தானே சொன்னேன், இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" ஆரவின் குரல் புயலாய் காதில் விழவும் விழுகென்று நிமிர்ந்தவள், கண்கள் கலங்கி, சிவந்த விழிகளோடு அவனை பார்த்தாள்...
அவனோ, அவள் கண்ணீரைப் பார்த்தும் ஒரு கணம் கூட தளராமல்
புருவம் சுருக்கி, கோபமாகவே பார்த்தான்...
"வேணும்னே தானே இப்படியொரு இடத்துக்கு என்னை அழைச்சிட்டு வந்தீங்க, அந்த கூட்டத்துல தனியாவும் விட்டுட்டு போயிருக்கீங்க, இது உங்களுக்கே சரியா இருக்கா" குரல் நடுங்கிக் கொண்டே கேட்டாள் நித்திலா...
அவனோ சிரித்தபடி, "ஆமா வேணும்னே தான் அழைச்சிட்டு வந்தேன், இந்த மாதிரி இடமெல்லாம் உனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சு தான் உன்னை வதைக்கனும்னே அழைச்சிட்டு வந்தேன்" அவன் சொன்னதைக் கேட்டவுடனே நெஞ்சுக்குள் ஒரு பிளவு ஏற்பட்டது போல உணர்ந்தாள் நித்திலா, அவள் விழிகள் கலக்கத்துடனும் வேதனையுடனும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்து, அவளின் கண்ணீரும் இன்னும் வழிந்துகொண்டே இருக்க,
அதனை வெற்றி சிரிப்போடு பார்த்தவனோ,... "என்கூட இருக்க போற ஒவ்வொரு நாட்களும் இப்படி தான் நீ கண்ணீர் சிந்திக்கிட்டு இருக்கணும், உன்னோட இந்த கண்ணீர் தான் என்னுடைய சந்தோஷத்துக்கும், வெற்றிக்கும் அடையாளம்” என்று கொடூரமாய் சொன்னவன், விறுவிறுவென்று நடக்க, அவளோ,.. "எங்கே போறீங்க" என்றாள் பதட்டமாய்,...
அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வலிக்க வைத்தாலும், அவன் செல்லும் வேகத்தை கண்டு எங்கே இந்த இடத்திலேயே தன்னை விட்டு சென்று விடுவானோ எனும் பயம், அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கிட்டதட்ட ஓடினாள்,...
அவனோ நடந்து கொண்டே,... "நான் கிளம்புறேன், உன்னை என்னால அழைச்சிட்டு போக முடியாது" என்று கூறி காரை அன்லாக் செய்து உள்ளே ஏறிக் கொள்ள, அவளோ "தயவு செய்து… என்னை விட்டுட்டு போயிடாதீங்க…" என்று கண்ணீர் கலந்த குரலில் கெஞ்சினாள், ஆனால் அவளது கண்ணீரும், கெஞ்சலும் அவனது கல்லான மனதை எட்டவில்லை, அவளது கதறலை கிஞ்சித்தும் மதிக்காமல் அவளை அங்கேயே விட்டுவிட்டு எஞ்சினை ஸ்டார்ட் செய்ய,
அடுத்த கணமே கார் சீறிப் பாய்ந்திருந்தது,..
அந்த பிரம்மாண்டமான பார்க்கிங் ஏரியாவில் அவள் மட்டும் தனிமையில் நின்றுக் கொண்டிருந்தாள், அவளின் அழுகை சத்தம் அந்த இடத்தை நிறைத்திருந்தது, ஆரவ்வின் கார் தூரத்தில் மறைந்து போன அந்த கணத்திலேயே நித்திலாவிற்க்கு அங்கு நிற்கும் தைரியம் கூட இல்லை,
மனம் முற்றிலும் சிதறி, அந்த
பார்க்கிங்கிலிருந்து கால்கள் நடுங்க நடுங்க வெளியேறனாள்...
வெளியில் இருள் மூடிய சாலையின்
இருபுறமும் காற்றில் ஆடிக் கொண்டிருந்த மரங்கள் ஓசை எழுப்பின, சாலையில் வேகமாக பாய்ந்துகொண்டிருந்த வண்டியின் ஹெட்லைட் ஒவ்வொரு முறையும் அவளின் முகத்தைத் தொடும் போது, ஒருவித அச்சத்தில் கண்களைச் சுருக்கிக்கொண்டாள்....
அந்தக் கார்களை நிறுத்தி உதவி கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் எழுந்தாலும் அறிமுகமில்லாதவர்களை நம்புவதற்கே பயமாய் இருந்தது,
வீட்டிற்கு செல்லும் பாதை கூட தெரியாமல் கண்களிற்கு முன்னால் தெரிந்த பாதையில் கால் போன போக்கில் மெதுவாக நடந்துக்கொண்டிருந்தாள்,...
அந்த இருள் நிறைந்த சாலையில் ஆட்கள் நடமாட்டமே இல்லை,
இப்போது ஏதாவது ஆபத்து வந்தால் கூட அவளை காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள், அந்த எண்ணமே அவள் மனதை படபடக்க வைத்தது, நெஞ்சு துடிப்புடன் நடந்து கொண்டிருந்தவளின் பின்புறத்திலிருந்து திடீரென்று ஒரு கார் வேகமாக வந்து, அவளை இடித்து விடுவது போல் நெருங்கி விட்டு சற்று முன்னால் பிரேக் அடித்து நின்றது,...
அவளுக்கோ நடுக்கத்தில் உயிரே போய்விட்டு வந்த உணர்வு தான், அவள் அந்த காரை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நேரம்,
அந்த காரின் கதவு திறக்கப்பட்டு இரு வாலிபர்கள் இறங்கினர், அவர்களின் கைகளில் மதுபாட்டில்கள் இருந்தது, அவர்களின் பார்வையும் சாதரணமாக இருக்கவில்லை,
நேரடியாக அவளை மேலிருந்து கீழ் வரை அலசியது அவர்களின் பார்வை, பின்னர் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர், அந்த சிரிப்பின் ஒலி அவளின் இரத்தத்தையே உறைய வைத்தது....
அவள் ஆபத்தை உணர்ந்தாலும் ஓடுவதற்க்கு கூட துணிவில்லை,
மூச்சு முட்டி போய் நின்றிருந்தாள்,
அவளை நோக்கி முன்னேறிய அந்த வாலிபர்களின் சிரிப்பே பயமாக இருந்தது, அவர்கள் தன்னை நெருங்கி வருகிறார்கள் என்பதை உணர்ந்ததும் அவளின் கால்கள் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்து விட்டது, ஒருவன் கையில் இருந்த பாட்டிலை சாலையோரத்தில் அடித்து உடைக்க, அந்த சத்தம் நெஞ்சே வெடித்து விடும் அளவிற்கு அவள் இதயத்தை போய் தாக்கியது...
"செமையா இருக்கா" என்ற ஒருவனின் வார்த்தையில்,
மெல்ல காலில் சக்தி வந்தது போல நடுங்கியபடி பின்வாங்கினாள்,
ஆனால் கால்கள் அவளை சுமக்க மறுத்தன, கண்ணீர் அடங்காமல் வழிந்துக் கொண்டிருந்தது,...
அந்த நேரத்தில் திடீரென்று ஒரு வண்டியின் ஹார்ன் காதைக் கிழித்தது போல ஒலித்தது.
இருளைத் துளைத்த ஹெட்லைட்டின் ஒளி அவளைச் சுற்றி பளிச்செனப் பரவ, அந்த இரு வாலிபர்களும் ஒருகணம் பயத்தில் தடுமாறினார்கள்....
வண்டி நேராக அவளருகில் நின்றது,
கதவை திறந்தபடி இறங்கிய ஆரவ்வைக் கண்டவுடன்
அவள் இதயம் துடித்தது, அந்த நொடியில் பெரிய நிம்மதி ஒன்று அவள் மனதை ஆக்கிரமித்தது...
அடுத்த கணம் ஆரவின் கண்களில் தெரிந்த கனல் அவர்கள் இருவரையும் மிரளச் செய்ய,
இருவரும் காரில் பாய்ந்து ஏறி அவசரமாக கிளம்பி இருந்தனர்,...
இப்போது அவள்மீது அழுத்தமாக பார்வையை பதித்தவனோ,..
"எப்படி ஃபீல் பண்ண, த்ரில்லிங்கா இருந்திருக்குமே," என்றான் கொடூர புன்னகையோடு...
அவனை வலியோடு பார்த்தவள் எதுவும் பேசவில்லை, "நான் சொல்லும் போதே போயிருந்தா, இப்படி கஷ்டப்பட வேண்டி வராதுல"
என்று புன்னகையோடு அவளை வதைத்தான்....
அவள் அப்போதும் அமைதியாய் கண்ணீரோடு தான் நின்றாள், "நீயே தேடிக்கிட்டது தானே அனுபவி" என்று சொன்னவனோ,.."வண்டிலே ஏறு," என்று கட்டளையோடு சொல்ல
அவளும் மெல்லக் காருக்குள் ஏறிக் கொண்டாள்....
அவள் பார்வை முழுக்க சாளரத்துக்குப் பின் இருள் நிறைந்த சாலையை வெறித்தபடி இருந்தது,
கண்ணீரால் சிவந்த கண்கள் இன்னும் துடித்துக் கொண்டே இருந்தன, அவளின் கண்ணீர் வழிந்த முகத்தைக் கண்டு, ஆரவ் மெதுவாக புன்னகைத்தான்....
"வரக் கூடாதுன்னு தான் நினைச்சேன்" அவன் மெதுவான ஆரம்பிக்க, அவள் பக்கவாட்டாக திரும்பி அவனை பார்த்தாள், அவன் பார்வை நெருப்பை போல அவளை எரித்தது, "உன்னோட இந்த பயம் கலந்த கண்ணீர், அது எனக்கு மட்டுமே சொந்தம்னு தோணுது,
உன்ன நிம்மதியா வைக்குறது கூட என்கிட்ட தான் சாத்தியம்னு உனக்கு புரியணும்" அவன் குரலில் மென்மையும் கொடூரமும் ஒன்றாக கலந்திருப்பதை உணர்ந்த
அவளின் உள்ளம் மேலும் நடுங்கியது....
அதன் பிறகு அவன் ஓர் வார்த்தையும் பேசவில்லை, வண்டி ஓடும் சத்தமும், இருவருக்கிடையே பரவிய அந்த
மௌனமும் மட்டும் அந்த இடத்தை ஆட்கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தனர், அவன் முதலில் இறங்கி கொள்ள, அவள் காரினுள் இருந்த தண்ணீர் போத்தலை கையில் எடுத்தபடி இறங்கினாள்,..
நீரினால் முகத்தை அடித்து கழுவிக்கொண்டவள் புடவை முந்தானையால் துடைத்து விட்ட பிறகே உள்ளே செல்ல, சித்ரா ஹாலில் அமர்ந்திருந்தார், நித்திலாவைக் கண்டதுமே அவள் முக வாட்டத்தை சட்டென்று அறிந்து கொண்டவர்,.. "என்னாச்சி நித்திலா ஒருமாதிரியிருக்க" என்று வினவ, மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்த ஆரவ்வின் கால்கள், அவள் என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதை எதிர்பார்த்து அப்படியே நின்று விட்டது,..
நித்திலாவோ,... "அதெல்லாம் ஒன்னுமில்ல மேடம், லாங் ட்ரைவ் எனக்கு ஒத்துக்கல" என்று சரளமாக பொய் கூறிட, அவரோ அவளை இன்னமும் நம்பாத பார்வை தான் பார்த்தார், அவர் பார்வையை சந்திக்க முடியாமல் "நான் ரூம்க்கு போகவா மேடம்" என்று வினவ,... "சரி போ" என்றவரின் மனம் கவலையில் உறுத்த ஆரம்பிக்க, ஆரவ்வும் மாடியேறி தனது அறை நோக்கி சென்றிருந்தான்,...
அன்றைய இரவும் அவளை விடவில்லை அவன், இன்று சற்று வன்மையோடு தான் கையாண்டான், ஆனால் மிகவும் மோசமாக அல்ல, அதனால் அடுத்த நாள் அவள் அவனுக்காக வேலைகளை சிரமம் இல்லாமல் தான் செய்தாள், அன்று ஆரவ் நேரமே அலுவலகம் சென்று விட, சித்ராவிற்கு உணவு பரிமாறி கொண்டிருந்தாள் நித்திலா,..
இப்போதும் அவளது முகத்தில் வாட்டம் தெரிந்தது, நேற்று இரவு அந்த பப்பில் ஆரவ்வின் செயல் அவள் மனதை மிகவும் பாதித்திருந்தது அல்லவா! அதனால் உறங்கி எழுந்த பின்னரும் கூட அவளால் அத்தனை சுலபமாக அதனை மறக்க முடியவில்லை,..
அவளை கவனித்துக் கொண்டிருந்த சித்ரா, தொண்டையை செருமிக்கொண்டு.. "ஆரவ் உன்னை கஷ்டபடுத்தற மாதிரி எதுவும் நடந்துகிறானா நித்திலா" என்றார்...
அந்த கேள்வி, சில வினாடிகள் அவளை உறைய செய்தாலும், தன்னை சமன்படுத்திக் கொண்டு அவருக்கு சட்னியை வைத்தவள்.. "அப்படியெல்லாம் எதுவும் இல்லை மேடம்" என்றாள்,...
சரளமாய் அவள் சொன்னாலும், குரலில் இருந்த அந்தச் சிறு நடுக்கம் சித்ராவின் கண்களில் படாமல் இல்லை, அவள் மறைக்கிறாள் என்பது புரிந்தது, அவரது நெஞ்சில் அவளை எண்ணி பரிதாபமும் மகனின் மீதான கோபமும் கலந்து வேதனையை கொடுத்தது,...
"என்கிட்ட மறைக்கணும்னு அவசியம் இல்ல நித்திலா, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு, இதை தான் நான் உன்கிட்ட திரும்ப திரும்ப சொல்றேன்" என்றார்,...
"நான் எதையும் மறைக்கல மேடம்" இப்படி சொல்பவளிடம் அவர் என்ன எதிர்பார்க்க இயலும், ஒரு பெருமூச்சோடு மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அமைதியாக சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டார், ஆனாலும் மனதின் உறுத்தல் மட்டும் நீங்கவே இல்லை, அன்று மாலை நேரத்தில் யோசனையுடன் அமர்ந்திருந்தவர்... "என்ன மாம் ஓவர் திங்கிங்கா இருக்கீங்க" என்று கேட்டபடி வந்த மகனை அழுத்தமாய் பார்த்துவிட்டு... "உன்கிட்ட பேசணும் உட்காரு" என்ற சொல்ல, அவனும் புருவ முடிச்சிக்களுடன் தாயின் அருகில் அமர்ந்தான்,..