• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 24

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 24

"நேத்து நித்திலாவை எங்கே அழைச்சிட்டு போன ஆரவ்" என்று தான் முதலில் கேட்டார், தாயின் கேள்வியில் சலிப்பாக முகத்தை சுழித்தவனோ,... "இப்போ உங்க ப்ராப்ளம் தான் என்ன மாம், அவளை எங்கே கூட்டுட்டு போனாலும் உங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு இந்த இடத்துக்கு தான் போறோம்னு சொல்லிட்டு தான் கூட்டிட்டு போகனுமா" என்றான்,..

"நான் அப்படி சொல்லலடா" என்றவறோ,... "அவளை இன்னும் நீ உன் மனைவியா அக்ஷப்ட் பண்ணிக்கலயா" என்று வினவ,... "ஃபோர்ஸ் பண்ணி மேரேஜ் பண்ணி வச்சிட்டு இப்போ இப்படி கேட்கிறது உங்களுக்கே நியாயமா படுதா மாம்" என்றான் ஆதங்கத்தோடு...

"சரிடா,.. ஆனா அவளோட லைஃபை ஸ்டார்ட் பண்ணிட்ட தானே, அப்புறம் ஏன்" வருத்தத்துடன் நிறுத்தியவர்,... "ஓகே நீ எப்போ அக்ஷப்ட் பண்ணிக்கணும்னு நினைக்கிறியோ அப்போ அக்ஷ்ப்ட் பண்ணிக்கோ, பட் அவ கஷ்டப்படுற மாதிரி நடந்துக்காத" என்றார் கண்டிப்புடன்,...

"அவ தான் சொன்னாளா நான் கஷ்டப்படுத்தறேன்னு" அவன் கோபமாக வினவிட,... "அவ சொல்லல, சொல்லவும் மாட்டா, அவளை பத்தி இன்னும் உனக்கு தெரியலடா, அவளை புரிஞ்சிக்கும் போது அவளை ஹர்ட் பண்ணியதை நினைச்சு நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ சொல்லிட்டேன்" என்றார்,...

"அப்படியா" அவன் நக்கலோடு சொல்ல, மகனை அழுத்தமாய் பார்த்தவர்,... "நான் சொல்றதை சொல்லிட்டேன், ஒரு அப்பாவி பொண்ணோட பாவத்தை வாங்கி கட்டிக்காத" என்றார்,...

"பேச வேண்டியதை பேசி முடிச்சிட்டீங்களா மாம், எனக்கு டையர்ட்டா இருக்கு, நான் ரூம் போறேன்" அலட்சியமாய் சொல்லும் மகனை பார்த்து வேதனையுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டவர், எழுந்து சென்றுவிட, ஆரவ்வும் தோள்களை குலுக்கிக் கொண்டு தனது அறை நோக்கி சென்று விட்டான்,....

நாட்கள் வேகமாக கடந்தது, இப்போதெல்லாம் ஆரவ்விற்க்கு கோபமும் கொஞ்சம் மூர்க்கமாக வெளிப்பட்டது, ஒரு கட்டத்தில் "என் லைஃபை விட்டு போய் தான் தொலையேன்டி" என்று அலறினான், அவன் என்ன தான் கோபம் கொண்டு கத்தினாலும் அமைதியாக முகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டாமல் வெறித்துக் கொண்டு நிற்பாள் நித்திலா, அவனது டார்ச்சருக்கு அவளது உடலும் உள்ளமும் இப்போது நன்கு பழகியும் கொண்டது,...

இந்நிலையில் சித்ராவின் ஒன்னு விட்ட அக்காவின் இளைய மகனான கௌரவ் அவர்களின் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு போவதற்காக வந்திருந்தான், கௌரவ் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டான், அவனுக்கும் கிட்டத்தட்ட ஆரவ்வின் வயது தான், இன்னும் திருமணமாகவில்லை, உள்ளூருக்கு ஒரு வேலையாக வரும் விஷயத்தை அக்கா மூலம் கேள்விப்பட்ட சித்ரா, வழக்கம்போல் அவனைத் தன் வீட்டிலேயே வந்து தங்கி கொள்ளச் சொல்லிவிட்டார், இது குடும்பத்தில் அடிக்கடி நடப்பது என்பதால் ஆரவ்வும் பெரிதாக கவலைப்படவில்லை....

மேலும், கௌரவுடன் அவனுக்கு அத்தனை நெருக்கமுமில்லை, அவ்வப்போது சந்திக்கும்போது ஃபார்மாலிடிஸ்க்காகவே இரண்டு வார்த்தைகள் பரிமாறிக் கொள்வான் அவ்வளவே, இந்த முறையும் கூட அதுவே நடந்தது.. "ஹாய்... கௌரவ் வெல்கம்" ஒரு சின்ன சிரிப்புடன் கேட்டுவிட்டு, தனக்கே உரிய அலட்சியம் கலந்த நடையில் அவன் ரூமுக்குள் போய் விட்டான்....

கௌரவ்வோ புன்னகைத்தபடி சில பல கதைகளை எல்லாம் சித்ராவுடன் பேசிக் கொண்டிருந்தான், அவன் கொஞ்சம் உடைத்து பேசும் குணம் கொண்டவன், மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் ஜாலியாக பேசும் கேரக்டர்,..

நித்திலா அந்த வரவேற்பு பக்கம் வந்தபோது, அவனது பார்வை அவளை ஒரு நொடி தட்டி நிற்க, அதனை கவனித்த சித்ரா "இது நித்திலா ஆரவ்வோட வைஃப்" என்று அறிமுகம் செய்து வைத்தார்,...

"ஹாய் நித்திலா, ஐம் கௌரவ்" என்று நட்பாக புன்னகைத்தவனிடம் அவளும் புன்னகைத்துக் கொண்டாள்,...

அன்றைய இரவு அனைவரும் டேபிளில் கூடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், நித்திலா தான் வழக்கம் போல் பரிமாறினாள், கௌரவ் சிரித்தபடியே அனைவருடனும் பேசிக் கொண்டிருந்தவன் நடுவில் நித்திலாவிடம் திரும்பி, "நீங்க என்ன வேலை பார்க்கறீங்க நித்திலா? இல்லைனா ஹவுஸ் வைஃப் மட்டும் தானா" என்று கேசுவலாக கேட்டான்.

நித்திலா, சற்று தயகத்தோடு மெதுவாக.. "ஹவுஸ்வைஃப் மட்டும் தான்" என்று சுருக்கமாக சொல்ல "அப்படியா? ஆனா உங்களுக்கு நல்ல டேலண்ட்ஸ் இருக்கிற மாதிரி தோணுது, பெயிண்டிங், ரைட்டிங், குக்கிங் இந்த மாதிரி எதிலையாவது க்ரியேட்டிவ் சைட்ல ட்ரை பண்ணி இருக்கீங்களா" என்று ஆர்வமாக வினவ,, நித்திலா அவன் கேள்விக்குப் பதில் சொல்லவே தயங்கினாள், இருப்பினும் மெலிதாய், "நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போ ஸ்கெட்ச்சும், ரங்கோலியும் நல்லா போடுவேன், ஒருசில poem-ம் எழுதுவேன், ஆனா படிப்பிற்க்கு பிறகு அது எல்லாம் அப்படியே நின்று போயிடுச்சு, இப்போ அதை பத்தி யோசிக்க கூட வாய்ப்பு கிடைக்கல" என்றாள்,...

அவளது குரலில் இருந்த ஏமாற்றம் கௌரவின் கவனத்தை கவர,
"அது தவறில்லையா நித்திலா, பெண்களுக்கு உள்ள டேலண்ட்ஸ் அப்படியே வீணாகக்கூடாது, உங்களை மாதிரி நிறைய பேர் வீட்டுப் பொறுப்புகளுக்காக தங்கள் திறமையை அடக்கிக்கிட்டு இருக்காங்க, ஆனா உண்மையா சொன்னா… ஒரு வீட்டை நடத்துறது தான் பெரிய டேலண்ட் அப்படின்னாலும், உங்க கலைகளை உங்க மனசுக்கு பிடித்ததை வாழ வைக்கணும், இல்லேன்னா அது உங்களுக்குள்ளேயே சுமையாய் மாறிடும், நான் சொல்றது சரி தானே சித்தி" என்று அவன் சித்ராவிடம் திரும்பி வினவ, அவரும் ஆம் என்று தலையசைத்தவர், தன் எண்ணத்தை பற்றியும் கூற, அதனை தொடர்ந்து அங்கே அவர்களுக்குள் கலந்துரையாடல் நிகழ, அவர்களுள் ஒருவனாய் உட்கார்ந்திருந்த ஆரவிற்க்கோ பற்றிக் கொண்டு வந்தது,..

கௌரவ்வின் கேள்விக்கு அவள் பதில் சொன்ன விதமும், கௌரவின் ஆர்வமான கேள்விகளையும் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு கோபம் வெளிப்பட ஆரம்பித்தது அதுவும் அவளின் மீது மட்டுமே...

அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்ற பின்பு, ஹாலிலிருந்து ரூமுக்குள் போக முயன்ற நித்திலாவை இழுத்து நிறுத்திய ஆரவ்,.. "எதுக்குடி அவன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுன" என்று கோபத்தோடு கேட்டவனை
அச்சத்தோடு பார்த்தவள்,.. "அ..அவர் கேட்டாரு நான் சும்மா பதில் சொன்னேன்" என்றாள்

"நீ அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அவன் இனி என்ன கேட்டாலும் நீ அவாய்ட் பண்ணணும் புரியுதா? என்னோட பர்மிஷன் இல்லாம நீ அவன்கிட்ட பேசவே கூடாது" என்று கடுமையாய் எச்சரிக்க, அவளும் சோர்வுடன் "சரி" என்று அமைதியாக தலையசைத்து விட்டு, தனது அறைக்கு நடந்து விட, அவளது அந்த அமைதிதான் ஆரவுக்கு மேலும் கூடுதல் எரிச்சலை தந்தது...

'அவன்கிட்ட அவ்வளவு பேசிட்டு என்கிட்ட வெறும் தலையை மட்டும் ஆட்டிட்டு போறியா, ரூமுக்கு வருவள்ல அப்போ கவனிச்சிக்கிறேன்டி உன்னை' ஆத்திரத்துடன் உறுமியவன் அவனது அறையை நோக்கி தான் சென்றான்,..

கௌரவ் அந்த வீட்டிற்க்கு வந்து சில நாட்கள் கடந்திருந்தது, ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தவன், இப்போதெல்லாம் நித்திலாவை கவனிக்க ஆரம்பிதிருந்தான், அவளின் முகத்தில் தெரியும் சோர்வு, கண்களில் எப்போதும் மறைக்கப்பட்ட வலி, அதை எதையும் வெளியில் காட்டாத அமைதி இவை எல்லாம் அவனுக்கு ஸ்ட்ரைக்காக ஆரம்பித்தது....

நேற்றைய இரவு அவள் பொட்டு தூக்கம் கூட உறங்கவில்லை, விடிய விடிய அவளை களவாடியவன், அலுவலகம் போகும் போது அவளை ஓய்வெடுக்க முடியாத அளவிற்க்கு பல வேலைகளையும் கொடுத்து விட்டு போயிருந்தான், அதன் விளைவு அவள் மிகவும் பலவீனமாகி போனாள், அன்றைய மாலை, சித்ரா மகன்களுக்கு பிடித்த சமையலை செய்து தருகிறேன் என்று கிச்சனில் பிஸியாக இருக்க, நித்திலா அவருக்கு உதவியாக இருந்தாள், கௌரவ்வும் அப்போது அங்கு தான் இருந்தான், அவளுக்கே தெரியாமல் நித்திலாவை உற்றுநோக்கி கொண்டிருந்தான், தண்ணீர் எடுக்கும்போது கிளாஸ் கூட அவள் கையில் நடுங்கியதை கவனித்தவன்,"நீங்க ஓகே தானே நித்திலா, ரொம்ப சோர்வா இருக்கீங்க போல…” என்று அக்கறையாக வினவினான்..

சிரிக்க முயன்றவள்..."இல்லை… நா நல்லா தான் இருக்கேன், எனக்கு ஒன்னுமில்லை" என்று சொல்ல,
அவளது அந்த பொய்யான சிரிப்பு கௌரவிற்க்கு கொஞ்சம் வேதனையை கொடுத்ததது, "ஏதாவது சொல்லணும்னா என்கிட்ட நீ தாராளமா சொல்லலாம் நித்திலா, என்னை உன்னோட அண்ணனா நினைச்சுக்கோ, மனசுல இருக்கிறதை சொல்லு" என்றான், அவன் வந்த நாளிலிருந்து தானே பார்க்கிறான் அவளது சோர்வான முகத்தை, வாய்விட்டு அவள் சிரித்து கூட அவன் பார்த்ததில்லை, சித்ராவிடம் பேசும் போது மட்டும் லேசாக சிரிப்பாள், ஏதோ மர்மம் இருக்கு என்பதை அறிந்து கொண்டவன் மனதில் உறுத்தியதை அடக்க முடியாமல் கேட்டிருக்க, அவளோ அவனை அண்ணனாக நினைத்து கொள்ள சொன்னதில் நெகிழ்ந்தவள்,.. "எனக்கு ஒரு பிரட்சனையும் இல்லண்ணா, நீங்க கவலைப்படாதீங்க" என்றாள்,..

அவளுடைய அண்ணன் என்ற அழைப்பில் புன்னகைத்தவன்,.. "பிரட்சனை எதுவும் இல்லைனா எனக்கும் சந்தோஷம் தான்," என்று சொல்ல, அவனது பாசத்தில் அவள் இதழ்கள் விரிந்து புன்னகைத்தது, அந்தச் சமயத்தில் தான் ஆரவ் மேலிருந்து இறங்கி வந்தான், அவன் பார்வைக்கு காட்சியாக இருந்தது கௌரவ் நித்திலாவுடன் பேசிக் கொண்டிருப்பதும், அவள் சிரிக்க முயற்சிப்பதும் தான்...

அவனது முகத்தில் ஏற்கனவே கனன்று கொண்டிருந்த கோபம், இப்போது இன்னும் தீவிரமாய் மாறியது....

அந்த இரவு மீண்டும் "அவன்கிட்ட பேசக் கூடாதுனு தானேடி சொன்னேன், என்னவோ சிரிச்சு சிரிச்சி பேசிக்கிட்டு இருக்க" என்று கடுமையாய் வினவினான்...

நித்திலாவோ,.. "இல்ல அவர் ஏதோ கேள்வி கேட்டார், நானும் சிரிச்சு அவாய்ட் பண்ணினேன், அவ்வளவு தான்" என்று சொல்ல, அவளை சட்டென்று பிடித்து இழுத்து சுவரோடு சாய்த்தவன்,... "அவன் கிட்ட நீ சிரிக்கிறதை இனி நான் பார்த்தேன், கொன்னுடுவேன்" அவனது விழிகள் எரியும் நெருப்பைப் போல் தீஞ்சுவாலையாய் மின்ன, அந்த கோபத்திற்குள் இருந்த பொறாமையும், உரிமை உணர்வும் அவளின் உள்ளத்தை உலுங்கியது,
'என் மேல கூட பொஸஸிவ் வருதா' ஆச்சரியபட்டு போனவள், அவன் கண்களை தான் நேருக்கு நேராக சந்தித்தாள், ஆனால் முழுதாக எதையும் உணர முடியவில்லை 'நீ என்னோடவள்… உன் சிரிப்பு கூட எனக்கு மட்டுமே உரிமையானது, உன்னோட மூச்சு கூட என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கனும், வேற யாருக்காகவும் உன் முகம் மலரக் கூடாது' என்று அவன் விழிகளும் திகைப்பூட்டும் கோபமும் உரக்கக் கத்தியது...

அந்த கண்கள்... அந்த கோபம்… அவளுக்குப் புரியாத ஒரு புதிராக தான் இருந்தது, அவளுக்கு என்ன நினைப்பதென்று தெரியவில்லை,
அது வழக்கமாக காட்டும் கோபம் போலவும் இல்லை, கொஞ்சம் உரிமை கலந்த கோபம் போல தோன்றியது....

ஒரு நொடி அவள் மூச்சே முட்டியது,
அவனது கைகள் அவள் தோள்களில் பதிந்திருக்க, அவளோ உள்ளுக்குள் 'இது என்ன உணர்ச்சி, ஏன் இப்படி ரியாக்ட் பண்ணுறாரு, நிஜமாவே பொஸ்ஸசிவ்வா? இல்ல அடக்கு முறையா?' என்பது புரியாமல் குழம்பினாள்...
 
  • Angry
Reactions: shasri