• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 28

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 28

வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும், எதுவும் பேசாமலே இறங்கி கொண்டவர்கள் வீட்டை நோக்கி நடந்தனர், ஹாலில் அமர்ந்து மேகஸீன் பார்த்தும் கொண்டிருந்த சித்ரா இருவரையும் குழப்பமாக பார்த்து விட்டு,... "என்ன இப்படி நனைஞ்சு போய் வந்திருக்கீங்க, மழை பெய்த மாதிரியும் தெரியலையே என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும், ஏன் இப்படி ஈரமாகி வந்திருக்கீங்க" என்று வினவ,... அவரது கேள்விக்குப் புன்னகை கலந்த கிண்டலுடன், "ஸ்விம்மிங் பூல்ல குளிச்சிட்டு வர்றோம், மாம்..." என்று சொன்ன ஆரவ், தன் அறையை நோக்கி சென்று விட,

சித்ராவோ இன்னும் சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் நித்திலாவை கேள்வியாய் பார்க்க, அவளோ சற்றே வெட்கத்தில் முகம் குனிந்து அமைதியாக தனது அறைக்குள் சென்றாள்...

இருவரும் உள்ளே சென்றவுடன், அந்த இடத்தில் சில நொடிகள் அசையாமல் நின்ற சித்ராவிற்க்கு
ஆரவ்வின் வார்த்தைகளில் இருந்த அந்த சிறிய புன்னகையும்,
நித்திலாவின் முகத்தில் தெரிந்த வெட்கமும், அவர் மனதில் புது எண்ணத்தை கிளப்பியது....

'இந்த பையன் என்ன புதுசா கிண்டலெல்லாம் பண்ணுறான், சிரிச்சிட்டு வேற போறான், நித்திலாவை புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டானா? அவன் முகத்துல இருந்த அந்த புன்னகை அதற்கான சின்னமா? நித்திலா முகத்துல இருந்த வெட்கம் தான் அதுக்கு அடையாளமா? இந்த காட்சியை பார்க்க எவ்வளவு அழகா இருக்கு, இவங்களுக்குள்ள இப்போ தான் மாற்றம் வந்திருக்கு, இது அப்படியே தொடர்ந்தா ரொம்ப நல்லா இருக்கும், தொடரனும், கடவுள் மனசு வச்சிட்டாருன்னு தோணுது' என்று மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டார்,...

ஈர உடையை கூட மாற்றும் மனநிலை இல்லாமல் அறைக்கு வந்ததும் மெத்தையில் விழுந்த பெண்ணவளின் உதடுகளில் மறைக்க முடியாத நாணப் புன்னகை இருந்தது, இன்று அவனுடன் நடந்த அந்த முத்த யுத்தத்தில் தானும் இசைந்து, அவனுக்கு சரிசமமாக முத்தமிட்டதை நினைத்தவுடனே முகம் சிவந்து வெட்கத்தில் மூழ்கினாள்....

தாய் தந்தையின் பாசத்திற்காக ஏங்கி போயிருந்த வெறுமையை சித்ரா தனது அடைக்கலத்தினாலும் அக்கறையாலும், அன்பாலும் நிரப்பி இருந்தார், யாராவது அன்பாக பேசினாலே உடனே உருகி விடும் மனம் அவளுக்கு, அதனால் தான் கௌரவ்வின் அண்ணன் பாசத்திலும் நெகிழ்ந்து போனாள்...

இன்றும் அதே தான் நடந்தது,
கணவனின் அக்கறை, அவன் பாதுகாப்பு, அவன் உரிமை
அவளது உள்ளத்தை சிதறடித்து அளவில்லா சந்தோஷத்தை கொடுத்திருந்தது...

'அன்னைக்கு கௌரவ் அண்ணா சொன்னது உண்மை தான்
அவருக்கு என்மேல் நிறைய அன்பு இருக்கு...' என்பதை நினைக்கும் போதே மனம் சந்தோஷத்தில் ஆடிப்போனது, அன்பிற்காக ஏங்கிய பெண்ணின் உள்ளம், ஆரவ்வின் இன்றைய செயலால் சிலிர்த்து எழுந்தது....

அவன் அவளுக்கு இத்தனை நாட்கள் கொடுத்த வலிகளும் காயங்களும் அன்றைய நாளில் மாயமாய் மறைந்து போனது, அவன் இன்று காட்டிய அந்த அக்கறை, அந்த உரிமை
அதுவே அவனை தூக்கி அவள் இதயத்தில் அமர வைத்திருந்தது,..

இதற்கு தான் சொல்வார்களோ...
பெண்களின் மனம் மென்மையானது என்று! ஒரு கடும் காற்றில் சிதறிப் போகும் பூங்கொடி போலவும்,
ஒரு துளி மழையில் செழித்து மலர்கின்ற பூமி போலவும் இருக்கிறது பெண்மனம்....

வலிகள் எத்தனை இருந்தாலும்,
ஒரு நெஞ்சார்ந்த புன்னகை, ஒரு சின்ன அன்பு, அவற்றை எல்லாம் கரைத்துப் போட்டு புதிய உலகம் காட்டி விடுகின்றது, அந்த உலகத்தில் தான் இப்போது நித்திலாவும் நுழைந்திருந்தாள்....

அன்றை இரவு உணவு முடிய, ஆரவ்விற்காக தான் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள் நித்திலா, அவளது கவனம் பாலின் மீது இருக்காமல், அவனின் நினைவிலேயே தான் சுற்றிக் கொண்டு இருந்தது...

இப்போதே அவனின் அருகாமை வேண்டும் என்ற ஏக்கம், அவளுக்கு பொதுவாக இப்படியான உணர்வுகள் எல்லாம் வராது, நேற்றைய இரவு வரை அவன் அருகில் வந்தால் பதட்டம் மட்டுமே அவளை சூழும், ஆனால் இன்றோ அவனின் நெருகத்திற்காக அவளது உடலும் உள்ளமும் ஆசை பட, அந்த நேரம் ஒரு வலிய கரம் ஒன்று வந்து அவளது இடையை தழுவியது...

அரண்டு விலகாமல் அது தன் கணவன் என்பதனை உணர்ந்து அவள் கண்கள் மெதுவாக மூடிக் கொள்ள, அவன் இதழ்களோ அவளது தோள் வளைவில் அழுத்தமான இதழொற்றல் ஒன்றை வைத்தது,...

வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததிலிருந்தே அவளின் அருகாமைக்காக தானே அவனும் ஏங்கிக் கொண்டு இருந்தான்,
அவனுக்கு அவள் இசைந்து கொடுத்தது அவன் மனதை முழுமையாகக் கைப்பற்றிய உணர்வை தந்தது அதன் பின் பொறுமை கொள்வது சாத்தியமா? அவளைத் தேடியே அவன் வந்து விட்டான்,...

அவளது தோள்வளைவில் முத்தமிட்டு சில நொடிகள் தங்கியவனின் மூச்சே, நித்திலாவின் உடலின் மீது சூடாய் பரவியது, அவள் கண்களை மூடியபடியே, நடுங்கும் உள்ளத்தோடு அந்த உணர்வை சுமந்தாள்....

அடுத்த நொடி ஸ்டவ் மீது இருந்த பாலை அவனே ஆஃப் செய்து விட்டு,
எதுவும் பேசாமல் திடீரென அவளைத் தன் கரங்களில் தூக்கிக் கொண்டான், அவளுக்கு எதிர்ப்பு சொல்ல மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை, அவள் இருகைகளாலும் அவனது கழுத்தை பற்றிக்கொண்டாள்...

அவன் பார்வையில் இன்று எந்தக் கோபமும், எந்த வன்மையும் இல்லை
முழுமையான உரிமையும் பேராசையும் மட்டுமே இருந்தது...

அவன் காலடி ஒவ்வொன்றும் அவளை அவன் அறைக்குள் அழைத்துச் செல்ல, அவள் உள்ளத்தில் சுவாசம் நிற்கும் அளவிற்கு பரவசம் பெருகியது....

அறைக்குள் நுழைந்தவுடன்
கதவை காலினால் மூடியவன்,
அவளை மெதுவாக மெத்தையில் அமர்த்தியபோது, அவனது கரங்களின் சூட்டும், அவளது இதயத் துடிப்பும் ஒன்றாய் கலந்தன…

அவள் அருகே வந்து நிதானமாக அவளது முகத்தைத் தன் கரங்களில் தாங்கியவனின் விழிகளில் சந்திக்க இயலாமல், அவளது விழிகள் நாணத்தில் கீழே குனிந்திருந்தாலும், அவன் பார்வை அவளை விட்டு இம்மியும் விலகவில்லை....

"கார்ல கிடைச்சது இப்போ எனக்கு வேணும்" அவனின் குரல் தாழ்ந்தும் தீவிரமாகவும் அவளது செவியில்பட்டு ஒலிக்க, நித்திலா அசரீரியாய் அவனை நோக்கிப் பார்த்தாள், இதுவரை அவனது கோபத்தையும், கட்டளையையும் கேட்டு பழகி போனவளுக்கு, இன்று அவனது வேண்டுகோளில் இதயத்தில் ஒரு அசைவை உணர்ந்தாள்....

இருப்பினும் "எ.. என்னால முடியாது" என்று தடுமாறினாள், கன்னங்களில் சிவப்பு பரவியது, ஆனால் அவனது கண்களில் தெரிந்த உணர்ச்சி, பொறுமை மற்றும் காத்திருப்பு இதெல்லாம் அவளது மனதைப் பிணைத்தது, சிறு புன்னகையுடன், மெதுவாக முன்வந்து தன் உள்ளார்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்தினாள்..

அந்த நொடியில் அவன் உள்ளத்தினால் அதிர்ந்தான், அத்தனை நாட்களாக அனுபவித்த உணர்வுகளின் முன் இது வேறு மாதிரி இருந்தது, அவள் கொடுத்த அந்த மௌன ஒப்புதல், பரிவு, பாசம் அவனது இதயத்தை பூரணமாக உருகச் செய்தது....

வெட்கத்துடன் அவள் மெதுவாக விலக முயன்றாலும், அவனுக்கோ அவளது அருகாமையை விட்டு விலக மனமில்லை, உணர்வுகள் நிறைந்த பார்வையுடன் அவளை நெருங்கினான், அவளும் அவனுள் அடங்கி போனாள்,..

அந்த அறை முழுவதும் குரலில் வரும் மென்மையான சத்தங்கள், இருவரின் மனங்களில் எழும் அசைவு உணர்வு மட்டுமே நிரம்பி இருந்தது....

நேசமும், பொறுமையும், மனதின் தீவிரமும் மட்டுமே அந்த இரவுக்கு நிறைவாக அமைந்தது, இத்தனை நாட்களில் இல்லாத காதல் உணர்ச்சி அன்று முழுமையாக வெளிப்பட்டது, இது வரை கோபத்திலும் வலியிலும் மட்டுமே வாழ்ந்த உறவில், இன்று காதலின் தீவிரம் அவர்களுக்குள் பாய்ந்து ஓடியது, விடிய விடிய, அந்த அறையில் அவர்களின் இல்லறம் உணர்வுகளின் ஒற்றுமையால் நிரம்பி, இதயம் மற்றும் மனதின் அமைதி, நேசம், பரிவு ஆகியவைகளுடன் முழுமையாக வெளிப்பட்டது....

அடுத்த நாள் காலை, நித்திலா கண் திறக்கும் போது, மணி பத்து மணியை காட்டி இருந்தது,
அருகில் ஆரவ் இல்லை, அவள் முதல் முறையாக, மனதின் முழு சம்மதத்தோடு, அவனுடன் இணைந்திருக்கிறாள் அல்லவா!
அவள் இதழ்களில் நெகிழ்வும் வெட்கப்புன்னகையும் வந்தமர்ந்தது,

கடந்த இரவில் நடந்த நினைவுகள், அவளின் உள்ளத்த்தில் மென்மையாகக் கசிந்தன,
அவள் சற்று வெட்கம் கொண்டாலும், அந்த இசைவு, அந்த பூரிப்பு, அவளின் உள்ளத்தில் இனிமையான சாயல் போல பரவி கொண்டிருந்தது....

அந்த பூரிப்புடன் சில நேரம் படுத்திருந்தவள் நேரம் போவதை உணர்ந்து, எழுந்து தயாராகினாள், காலை உணவை தனியாக தான் உண்டாள், கணேசனுக்கு சமையலில் கொஞ்சம் உதவி செய்தாள், சித்ராவும் சாப்பிட வர மாட்டேன் என்று போன் செய்து சொல்லி இருக்க, ஹாலில் தான் அப்போது அமர்ந்திருந்தான், அந்த நேரம் அருகில் மேஜையிலிருந்த போன் ஒலிக்க, 'யாராக இருக்கும்' என்ற யோசனையுடன் எடுத்தவளுக்கு,.. "என்னடி பண்ணுற" என்ற ஆரவ்வின் குரல் அவள் இதழ்களில் புன்னகையை பரவச் செய்தது,...

முதல் முறையாக அவளிடம் என்ன செய்கிறாய் என்று கேட்கிறான், மனம் சந்தோஷத்தில் பூத்துக் குலுங்க, சில நொடிகள் சந்தோஷத்தில் பேச்சு வராமல் திக்கு முக்காடிப் போனவள்,.. "ஏய் லைன்ல இருக்கியா" என்ற அவனது உயர்ந்த குரலில், "ஹாங் இருக்கேன்" என்றாள் அவசரமாக,...

"சாப்பாடு எடுத்துட்டு ஆபிஸ் வா" அவன் சொல்ல,... "ஆபிஸ்'க்கா? எதுக்கு?" என்றாள்,.. "சொன்னதை மட்டும் செய், சீக்கிரம் வா" என்பதோடு அவன் வைத்து விட, அவள் தான் யோசனையுடனே அவனுக்காக உணவை கேரியரில் போட ஆரம்பித்திருந்தாள்,...

அனைத்தையும் தயார் படுத்தி முடித்தவள், ஆட்டோவில் தான் அவன் அலுவலகம் நோக்கி சென்றாள்,
கொஞ்ச நேரத்தில் அழுவலுகம் வந்து சேர்ந்தவளுக்கு, உள்ளே போகவே தயக்கம், அவள் வேலை செய்த ஆபிஸ் தான் என்றாலும், ஆரவ்வின் மனைவியாக இப்போது தானே முதல் முறை வருகிறாள், அதனால் சங்கடம், யாரும் எதுவும் சொல்லி விடுவார்களோ எனும் பயமும் வேறு, ஆனால் அவள் பயந்தது போல் இல்லாமல் அவளை தெரிந்தவர்கள் எல்லாம் இன்முகமாகவே அவளை நலம் விசாரித்தனர், கவிதாவும் "உன்னை ரொம்ப மிஸ் பண்னேன் நித்திலா" என்றாள், அனைவரிடமும் பேசி விட்டு ஆரவ்வின் அறை நோக்கி வந்தவள், மெதுவாக கதவை தட்ட அவனும் "கம்மின்" என்ற மிடுக்கான குரலில் அனுமதி தந்திருந்தான்..

உள்ளே வந்தவளை,.. ஏறெடுத்து பார்த்தவன்,... "வெயிட் பண்ணு" என்றான், அவன் லேப்டாட்ப்பில் பிசியாக இருப்பது தெரிய, சிறு தலையசைப்புடன் அவளும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்,...
 
  • Love
Reactions: shasri