• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 38

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 38

அடுத்த நாள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே நித்திலாவின் வீட்டின் முன்பு ஆஜராகி இருந்தான் ஆரவ், காலிங்பெல்லை பல முறை அழுத்தியும் யாரும் வந்து கதவை திறக்கவில்லை, நித்திலாவின் எண்ணிற்கு கூட அழைத்து பார்த்து விட்டான் ரிங் போய் கட்டாகியதே தவிர போனையும் அவள் எடுக்கவில்லை,.. 'என்னாச்சு,.. வீட்ல யாரும் இல்லையா? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன்கிறா' என்ற யோசனையுடன் நின்றிருந்தவன்,.. "அட ஆரவ் தம்பி, நீங்க எப்போ வந்தீங்க" என்ற குரலில் திரும்பியவன் கோமலத்தை கண்டு,,.. "இப்போ தான் வந்தேன்ம்மா, வெளியே போயிருந்தீங்களாமா" என்றான்,..

"ஆமா'ப்பா,.. மார்க்கெட் வரைக்கும் போயிருந்தேன், சரி வாசல்லையே ஏன் நிக்கிறீங்க, நித்திலா உள்ளே தானே இருக்கு" என்று சொல்ல,... "என்ன உள்ளே தான் இருக்காளா? ரொம்ப நேரமா காலிங் பெல் அடுச்சேன் திறக்கல அவ, அவ போனுக்கு கூட ட்ரை பண்ணேன் எடுக்கல" அவன் யோசனையுடன் சொல்லவும்,.. "என்னப்பா சொல்றீங்க, ஏன் வந்து அவ கதவை திறக்கல, அவ அப்படியெல்லாம் பண்ண மாட்டாளே, எனக்கு பயமா இருக்குப்பா" என்று அவர் பதட்டப்பட,.. அவனுக்கும் அதே படபடப்பு தான்,...

கதவை அவள் பேரை சொல்லி படபடவென்று தட்டினான், ஆனாலும் அவள் வந்து திறக்கவில்லை, அவனுக்கு வேறு வழியில்லை கதவை உடைத்து சென்று தான் ஆக வேண்டும் என்னும் நிலை வர, கதவை உதைத்து தள்ளி திறந்தவனுக்கு அவள் கதறும் சத்தம் கேட்டு நெஞ்சே வெடித்து விடும் உணர்வு தான்...

வேகமாக சத்தம் வந்த திசை நோக்கி சென்றான், அவள் அறையின் அட்டாச்டு பாத்ரூமினுள் இருந்து தான் சத்தம் வந்தது, பாத்ரூம் கதவும் அடைத்து இருந்த காரணத்தினால் தான் அவள் கத்தியது வெளியே வரை கேட்கவே இல்லை,..

நொடியும் தாமதிக்காமல் பாத்ரூம் கதவையும் உதைத்து தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு காலின் வழியாக குருதி வழிந்த நிலையில் கதறிக் கொண்டிருந்தவளை கண்டு அவன் இதயத்துடிப்பே நின்ற உணர்வு தான்....

கால் வழுக்கி விழுந்திருக்கிறாள் என்பது அவள் கிடந்த நிலையே அவனுக்கு சொல்லிவிட, "நித்திலா…!" என்று ஒரே அலறலோடு அவளிடம் பாய்ந்தான்...

குளிர்ந்த தரையில் வலியில் கதறிக் கொண்டிருந்தவள் அவனைப் பார்த்ததும் அழுகையோடு,
"ஆ.. ஆரவ்… காப்பாத்துங்க…" என்று குரல் சிதற சொன்னாள்...

அவனோ வியர்வை மல்கத் திகைத்து நின்றும், அடுத்த நொடி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளை இருகைகளில் தூக்கிக்கொண்டு, வேகமாக வெளியில் ஓடியவன் குரல் நடுக்கத்தோடு,. "கோமலாம்மா… சீக்கிரம் வாங்க" என்ற படப்படப்போடு காரை நோக்கி விரைந்தான்,..

கோமலமும் நித்திலாவின் நிலை கண்டு பதைபதைத்துவிட்டார், இருவரும் இணைந்து அவளை காரில் ஏற்றினார்கள், அவள் ஒவ்வொரு மூச்சையும் எடுக்கும் போதும் வலியால் குரல் குலுங்க,.. அவனோ,.. "எதுவும் ஆகாதும்மா,, நான் இருக்கேன், தைரியமா இரு" என்று சொல்லிவிட்டு கோமலத்திடம் அவளை ஒப்படைத்தவன், காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான்,..

அவளுக்கு அவன் தைரியம் சொல்லி இருந்தாலும், அவளது ஒவ்வொரு அலறலும் அவன் உயிரையே பிடுங்கி எடுக்கும் உணர்வை தான் தந்தது,
அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவனது வாழ்வே வெறுமையாகி விடும் என்ற உணர்வும் நெஞ்சை நெறித்து அழுத்தியது...

மருத்துவமனைக்கு வந்து சேர, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டாள் நித்திலா, அவள் கையை உயிர் பிழைக்கும் கயிறு போல இறுகப் பிடித்துக் கொண்டு, பிரசவ வார்டின் கதவு வரை நடந்து சென்றான் ஆரவ்...

"சார், நீங்க உள்ளே வரக்கூடாது" என்று செவிலியர் தடுக்க, அவனது கால்கள் அந்த இடத்திலேயே வேரூன்றி நிற்க, நித்திலாவோ அவனது கரத்தை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு, சோர்வும் வலியும் கலந்த முகத்துடன் அவனை நோக்கி மெலிந்த குரலில்,.. எனக்கு உங்க மேல எந்தக் கோபமும் இல்ல…" என்றாள்...

அவன் அவளது விரல்களை மெதுவாகத் தடவி, குரல் துடிக்க…
"எனக்கு தெரியும்'மா… அதை நீ சொல்லவேண்டியதில்லை…" என்றான்...

ஆனால் அவளோ சுவாசம் சிதறியபடி, தலையசைத்துக் கொண்டு, "இல்லைங்க… இப்போ சொல்லணும்னு தோணுச்சு… ஒரு வேளை நான் பிழைக்காம போயிட்டா…" என்று அவள் வார்த்தைகளை முடிக்கும் முன்,
கண்களில் நீர் பெருகி, அவளது வாயை விரைவாக தன் கரத்தால் மூடி இருந்தான் அவன்..

"தயவு செய்து அப்படி சொல்லாதே நித்திலா… உனக்கு எதுவும் ஆகாது… இப்படி பேசி என்னை கொல்லாதே…" என்றான் குரல் நடுங்க...

அவள் கையை இன்னும் அழுத்தமாய் பிடித்து கொண்டவனோ,.. "உங்களை கஷ்டப்படுத்தறதுக்காக நான் சொல்லலை… ஆனா எனக்கு நிறைய ரத்தம் போய்ட்டு இருக்கு… என்னால அதை உணர முடியுது… ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகிட்டா… அதை தாங்கிக்கிற மனதைரியம் உங்ககுக்கு இருக்கணும்… நான் கடைசி வரை உங்களை மன்னிக்கலைன்னு நீங்க ஃபீல் பண்ணக்கூடாது… அதுக்காக தான் சொல்றேன்… சத்தியமா… எனக்கு உங்க மேல எந்தக் கோபமும் இல்ல… சமீப நாட்கள்ல நீங்க காட்டுன அன்பும் அக்கறையும்… அது என்னை உருக்கி விட்டது… எனக்கு இது போதும்ங்க… இது போதும்…" என்று கண்களில் நீர் வடிய சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு,
அடுத்த நொடியே பெரிதான வலி ஒன்றும் படுத்தி விட்டது...

அதற்கு மேல் தாமதப்படுத்த விரும்பாத செவிலியர்கள் விரைவாக அவளது கையை அவனிடமிருந்து பிரித்து, அவளை உள்ளே அழைத்துச் சென்றனர், அவள் கையை பிரித்த அந்த நொடியே, ஆரவின் மனம் வெறுமையடைந்த உணர்வு,
உயிரற்ற சிலை போல உணவற்று போய் நின்று கொண்டிருந்தான்....

அந்தச் சமயத்தில், கோமலம் மூலம் விஷயம் கேள்விபட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தார் சித்ரா, கவலை நிறைந்த முகத்துடன், கண்ணில் சோர்வுடன் கரங்கள் நடுங்கியபடி கதவின் அருகில் சாய்ந்திருந்த மகனின் அருகில் விரைந்து வந்தவர்,.. "ஆரவ்… என்னடா கண்ணா?, நித்திலா எப்படி இருக்கா" நடுங்கிய குரலில் கேட்க, தாயை கணடவன், அடுத்த நொடியே அவளது மார்பில் சாய்ந்து குழந்தை போல கதறி அழ தொடங்கி இருந்தான்...

சித்ராவே ஒரு கணம் ஆடிப்போய்விட்டார்,.. "எ.. என்னாச்சுடா" என்று வினவ, "அ.. அம்மா… நித்திலாவுக்கு எதுவும் ஆகக்கூடாது… அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது…" என்று உடைந்த குரலில் துடித்த மகனின் கேசத்தை தடவிக் கொண்டே, கண்ணீர் தாங்கிக் கொண்டு,.. "ஒன்னும் ஆகாது கண்ணா… உன் நித்திலாவுக்கு ஒன்னும் ஆகாது… அவ நல்லபடியா திரும்பி வருவா" என்று தைரியம் கொடுத்தாள்...

ஆரவோ, அவரை இறுகப் பற்றிக் கொண்டு இன்னும் கதறிக் கொண்டே இருந்தான், அந்த நொடி வரை தன் மகனின் வலிமையை மட்டும் பார்த்திருந்த சித்ரா, இன்று அவன் உள்ளம் உடைந்திருப்பதை எண்ணி கண்கள் பனித்தது, மேலும் நித்திலா எப்படி இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளவும் மனம் ஏங்க, அங்கு நின்ற கோமலத்தை கேள்வியாய் பார்க்க,.. அவரோ,.. "டாக்டர் யாரும் இன்னும் ஒன்னும் சொல்லலம்மா" என்றார்,..

கோமலத்தின் கண்களிலும் கண்ணீர், வேலைகாரியாக வந்திருந்தாலும் பெற்ற மகளை போல தானே கவனித்து கொண்டார் நித்திலாவை, அவளும் அம்மா என்ற வார்த்தையில் அவரை உருக வைத்தவளாயிற்றே, ரத்தம் வெளியேறிய நிலையில் துடித்தவளை கண்டதிலிருந்து அவரின் படபடப்பும் இன்னும் குறையாமல் தான் இருந்தது,...

மூவரும் கடவுளிடம் பிராத்தனை வைத்தபடி மருத்துவரின் நல்ல செய்திக்காக காத்திருந்தனர்,
பல நிமிடங்கள் அவர்களின் உயிரையே ஊசலாட வைத்திருந்த பிரசவ வார்டின் கதவு திறந்தது,
வெளியே வந்த மருத்துவரின் முகத்தை ஒரே பார்வையில் பார்த்த மூவரும் மூச்சை பிடித்துக் கொண்டு நிற்க, மருத்துவர் சற்றே புன்னகையுடன்,... "காங்கிராட்ஸ் மிஸ்டர் ஆரவ்… உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது" என்று சொல்ல,.. அவனுக்கு சந்தோசம் அளவில்லாதாய் இருந்தாலும், மனைவி எப்படி இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளும் தவிப்பு அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் செய்திருக்க,...

மெதுவாக,.. "நித்திலா எப்படி இருக்கா டாக்டர்" என்றான்,.. "ஷிஸ் இஸ் சேஃப் நவ், ரத்தம் நிறைய போயிருந்தாலும் டைம்லி ட்ரீட்மெண்ட் கொடுத்ததால ஸ்டேபிள் ஆகிட்டாங்க, சோர்வா இருக்காங்க, ரெஸ்ட் எடுத்தா சரியாகிடுவாங்க. கவலைப்பட வேண்டாம்" அந்தச் சொற்கள் ஆரவ்வின் இதயத்தைச் சற்று இலகுவாக்கின, மூச்சு திணறியிருந்த அவன் மார்புக்குள் ஒரு ஆழ்ந்த சுவாசம் வந்து சேர்ந்தது, அவனது கண்கள் தானாகவே கண்ணீரால் நனைந்தன, அந்தக் கண்ணீரில் பயமும் இருந்தது, நிம்மதியும் இருந்தது...

சித்ரா அவனது தோளைத் தொட்டு, "பாரு, உனக்கு பொண்ணு பிறந்திருக்கா, நித்திலாவும் நலமா இருக்கா… இனிமேல் கவலை வேண்டாம்" என்று சொல்லவும்,
அவனது உள்ளத்தில் அடங்காத நிம்மதி அலை மோதியது, உயிரையே புதிதாய் பெற்றதுபோல் நிம்மதி அடைந்தான்,...

ஓரிரு நிமிடங்களின் பின் செவிலியர் ஒருவர் புன்னகையுடன் வெளியே வந்தவர், கைகளில் ஒரு சிறிய சுருள் போல மெல்ல மடித்திருந்த பிங்க் பிளாங்கெட்டில் புதைத்து வைத்திருந்த குழந்தையை நீட்டியபடி,.. " சார் உங்க குழந்தை" என்று சொல்லி குழந்தையை ஆரவ்வின் கரத்தில் வைத்தார்...

நடுங்கும் விரல்களால் பிளாங்கெட்டை அசையாமல் பிடித்து, தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், குட்டி பொம்மை போல் இருந்த தன் மகளின் சிறிய முகம் அவனது மார்பில் நெருங்கியதும், அவன் மூச்சே தடுமாறியது...

குழந்தையின் முதல் அழுகை அவனது கண்களில் கண்ணீரை பெருகச் செய்தது, அந்தச் சத்தத்தை கேட்டு, ஆரவ்வின் இதயம் உடைந்தது போல இருந்தாலும், உடனே புதிய உயிரின் நெகிழ்ச்சியால் நிரம்பிப் போனது...

மெல்ல குனிந்து தன் மகளின் நெற்றியில் சிறிய முத்தம் பதித்தவன் 'என் நித்திலாவின் அன்பின் பரிசு' என்று மனதில் சொல்லிக் கொண்டான், அவனது கைகளில் குழந்தை நிம்மதியாய் துயில் கொண்டது, அந்த நொடியே, ஆரவ் வாழ்வில் புதிதாய் பிறந்ததாய் உணர்ந்தான்,...
 
  • Love
Reactions: shasri