கதைப்போமா
பகுதி -3
"வெள்ளை சட்டை ,எழுந்திருக்கவும்" என்று பேராசிரியர் மீரா கூறியவுடன் யார் அந்த மாணவன் ???என்றே
மற்ற மாணவர்கள் அனைவரும்
அவன் புறமே உற்று நோக்க,
வகுப்பறையின் நடுபெஞ்சில் இருந்த மாணவன் , யார் ..? என்று பார்த்தால் நமது கல்லூரியின், " டாப் ஸ்டார் சூரிய பிரகாஷ் " தான் அனைவராலும் "சூரி" என்று அன்பால் அழைக்கப்படும் மாணவன் தான்.
குறும்புக்கு சொந்தக்காரன் தான் ஆனால் வம்புக்கு போகாதவன். படிப்பு சற்று ஏறாது தான் , ஆனால் தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவான்.
ஆசிரியை அழைத்தவுடன் முகத்தில் சிரிப்பை வைத்துக்கொண்டு,
" மனதில் ஒரு நடுக்கத்தை வைத்துக்கொண்டான்".
என்னெல்லாம் கேட்க போறாங்களோ?? தெரியலையே ,
காலையில், நடந்ததை வைத்து ஏதாவது ஆப்பு வச்சிருவாங்களோ ??
நாம, வேற டீச்சர் என்று தெரியாமல் "பாட்டு வேற பாட சொன்னோமே" ஐயையோ ...!தெய்வமே..!
என்ன நடக்கப் போதோ???
தெரியலையே ,
எல்லார் முன்னாடியும் மானம் கப்பல் ஏறிடுமோ..?? என்று மனதுக்குள்ளே புலம்பியபடி நிற்கின்றான் "சூரி"
சூரியெழுந்தவுடன், ஆசிரியை மீரா அவன் பெஞ்சின் அருகில் வந்து,
ம்ம்ம்.... நீங்கதானே ,இந்த கல்லூரியில் "டாப் ஸ்டார் சூரி" என்று சிரித்துக் கொண்டே கேட்க,
"சூரி", பதில் கூறும் முன்பே , அருகில் இருந்த, அவன் நண்பனில் ,ஒருவன் "ஆமாம் .....மேம் ..!"
அதேதான், துரையே தான் இவரே தான் அந்த "டாப்ஸ்டார் சூரி" என்றிட,
அச்சச்சோ ....! "இது தெரியாம போச்சே" டாப்ஸ்டாருக்கு, " சலாம் ..." எல்லாம் போடணுமே ,நான் அதெல்லாம் செய்ய மறந்துட்டேனே,
சாரி....."குருநாதா " சலாம்...! போற்றவா, என்று தன்னுடைய புருவத்தை உயர்த்தி காலை நடந்த குறும்புத்தனங்களை நினைத்து விளையாட்டாக கேட்டிடவே,
அய்யய்யோ...! சத்தியமா, நீங்க டீச்சர் என்று தெரியாமல், " ஏதோ, நமக்கு ஜூனியர் பொண்ணா "இருக்குமோன்னு , நினைச்சு சும்மா...உங்க கிட்ட , ப்ளே பண்ணிட்டேன்.
மேம் ....! எதுவும் மனசுல வச்சுக்காதீங்க ப்ளீஸ் ....."உங்க கைய , காலா, நெனச்சு மன்னிப்பு கேட்டுக்குறேன்... "மன்னிச்சிருங்க டீச்சர்....! "
என்று பள்ளிக்கூட பிள்ளை போல் ,"சூரி" ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்பதை கண்ட அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவேயில்லை.
அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து ,"மேம் ...! அதெல்லாம், இருக்கட்டும் காலையில், நீங்கள் "சூரி" காதில் மட்டும் , ஏதோ.. ஒரு ரகசியம் சொன்னீங்களே??? அது என்ன ரகசியம்?? என்று இப்போது எங்களுக்கும் சொல்லுங்களேன் என்று கேட்க,
டேய் ...! "நாற வாயா வாய மூடுடா" என் மானத்தைக் வாங்க நீ ஒருத்தன் போதுமே, என்று அவனின் வாயை பொத்தி அமர வைக்கிறான் சூரி,
மேம்.... ! அது ஒன்னும்மில்லை இவனுங்களுக்கு, என்னை கேலி கிண்டல் செய்ய வேண்டும்னா, "பரோட்டா ,சால்னா" சாப்பிடற மாதிரி அவ்வளவு சுகமா இருக்கும்.
"தயவு செஞ்சு என்ன மன்னிச்சு....! "இப்போ கிளாச ஆரம்பிச்சு....!
என்று விளையாட்டாய் கூறவே,
"யூ, ரியல்லி நாட்டி பாய் ...."
என்று கூறிவிட்டு , தனது முதல் நாள் வகுப்பினை வெற்றிகரமாக துவங்குகிறாள்.
கரும்பலகையில் ஒரு வரைபடத்தை வரைந்து , அதற்கான விளக்கங்களையும் அழகாக விளக்கிக் கொண்டிருக்கிறாள்.
இத்தனை, நாட்கள் இல்லாமல் இன்று மட்டும் ஏனோ , இந்த வகுப்பினை எந்த மாணவர்களும் வெளியேறாமல் விருப்பத்தோடு கவனித்து மகிழ்வோடு வகுப்பறையில் இருக்கின்றனர்.
இப்படியே விறுவிறுப்பாக வகுப்பு நடந்து கொண்டிருக்கவே வகுப்பு நிறைவு மணி சத்தம் ஒலிக்கிறது.
மணி சத்தம் கேட்டவுடன் ,"ஓகே , மை டியர் இந்த பிராப்ளம் சால்வ் பண்ண மாதிரி எக்சர்சைஸ் நீங்க சால்வ் பண்ண ட்ரை பண்ணுங்க , டவுட் இருந்தா "டுமாரோ வி வில் பி டிஸ்கஸ்"
தேங்க்யூ ...! என்று, கூறிவிட்டு வகுப்பை விட்டு வெளியேற தயாரான நிலையில் ஒரு மாணவன் எழுந்து "எக்ஸ்கியூஸ் மீ மேம்...!"
உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று கூறவே,
எஸ் மா.... சொல்லுங்களேன், என்று மீரா ஆவலோடு கேட்க ,
நான் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் சென்ற ஆண்டு முழுவதும், ஒரு நாள் கூட நான் பிசிக்ஸ் வகுப்பு அட்டன் பண்ணது இல்லை.
எனக்கு தெரிஞ்சு இந்த காலேஜ்ல நான் சேர்ந்ததுல இருந்து முதல் முறையாக "பிசிக்ஸ் வகுப்பு" ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா கவனிச்சேன்.
நான் மட்டும் இல்ல மேம்,பல பேர் வகுப்பில் இன்ட்ரெஸ்ட்டா இருந்தோம்.
உங்களால தான் இந்த சப்ஜெக்ட் மேலயே எங்களுக்கு இன்ட்ரஸ்ட் வந்துடுச்சு .
"தேங்க்யூ மேம்" என்று , அந்த மாணவன் கூறுவதை கேட்ட"மீரா" ஒரு வித பூரிப்போடும் ,மனநிறைவோடும் வகுப்பை விட்டு வெளியேறுகிறாள் ஆசிரியை மீரா...
அடுத்த வகுப்பு மீராவிற்கு இல்லாத காரணத்தினால் ஆசிரியர்களின் ஓய்வறைக்கு செல்கிறாள்.
ஆசிரியர்களின் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு அமர்ந்திருக்கும் ஆசிரியர்களை பார்த்து வணக்கம் வைக்கிறாள்.
ஹலோ சார் ....!
ஹாய் மேம்.....!
ஹலோ சார் ....!
என்று அங்கு அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து மரியாதை செய்கிறாள்.
மீராவை, கண்டவுடன் அனைத்து ஆசிரியர்களும் "ஹாய் ,ஹலோ "
என்று அவர்களும் பதிலுக்கு மரியாதை செய்துவிட்டு அருகில் இருக்கும் இருக்கையில் வந்து அமரும்படி ஒரு ஆசிரியை அழைக்கிறார்.
ஹலோ .....!மீரா ,என் பெயர் "மோனிஷா" நான் "கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் " என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள்.
அருகில் இருந்த மற்றொரு பேராசிரியர் வணக்கம்....! மீரா, என்னுடைய பெயர் மனோகரன் நான்" கணிதம் டிபார்ட்மெண்ட் "என்றிட.
இப்படியே, அங்கு இருக்கும் ஒவ்வொருவரும் அவரவர்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர். அறிமுகம் முடிந்து அவரவர் , அவரவர் வேலையை பார்க்கத் துவங்கினார்கள்.
"மீராவும் ,மோனிஷாவும்" மட்டும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
" மோனிஷா அவரைப் பற்றியும் ,மீரா அவளை பற்றியும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்கிறார்கள்".
இப்படியே, நேரம் செல்ல ஓய்வு நேரம் முடிந்து மணி அடித்து விடவே, லஞ்ச் டைம் வந்துவிடுகிறது.
மோனிஷா மீராவை பார்த்து ஆமாம் மீரா நீங்க லஞ்ச் கொண்டு வந்தீங்களா?? என்று கேட்க,
இல்லை மோனி.... நான் லஞ்ச் கொண்டு வரவில்லை ."டியூட்டில ஜாயின் பண்ற ஐடியாவில் வரல ஜஸ்ட் இன்டர்வியூ அட்டன் பண்ற ஐடியா தான் வந்தேன் " பட் , மை லக் இன்டர்வியூல செலக்ட் ஆகி ஜாப்ல சேர்ந்துட்டேன்.
என்றிட,
சோ ஸ்வீட்.... "மீரா" உங்களுக்கு இருக்கும் திறமைக்கும் ,அறிவிக்கும், அழகுக்கும், நீங்கள் எப்படி செலக்ட் ஆகாமல் இருப்பீங்க??
"ரியலி, யூ ஸ்மார்ட் " என்று புகழாரம் சூடிவிட்டு, வாருங்களேன் என்னுடைய லஞ்ச் ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம் ,என்று மோனிஷா மீராவை அன்பாக அழைக்கிறாள்.
சாரி .....மோனிஷா , மார்னிங் ஹாஸ்டல் வார்டன், விஜயலட்சுமி மேம் , என்னை ஹாஸ்டலுக்கு லஞ்ச் சாப்பிட கூப்பிட்டாங்க ,
சோ... அவங்க வெயிட் பண்ணுவாங்க நான் இன்னிக்கு அவங்க கூட சாப்பிட்டு நாளைக்கு உங்க கூட சாப்பிடுறேனே என்று அழகாக பதிலளித்து,
நீங்க சாப்பிடுங்க "மோனிஷா "நான் ஹாஸ்டல் போயிட்டு வருகிறேன் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஹாஸ்டலை நோக்கி புறப்பட்டாள்.
மீரா.... சொன்னது போலவே ஹாஸ்டல் வார்டன் "விஜயலட்சுமி" மீராவின் வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.
"மீரா "உள்ளே நுழைந்ததும்,
ஏனோ , தெரியவில்லை "விஜயலட்சுமிக்கு" அத்தனை சந்தோசம் வாங்க மீரா மேடம் ...! என்று அன்பாக அழைத்து, ஹாஸ்டலில் அவள் ரூமை காண்பித்து, இதுதான் நீங்க தங்கப் போகும் மாடமாளிகை என்று சிரித்துக் கொண்டே கூறுகிறாள்.
சூப்பர் மேடம்....! ரொம்ப கலகலப்பா இருக்கும்ல. எந்த நேரமும் மாணவர்களின் சிரிப்பு சத்தம். பேச்சு பாட்டு, டான்ஸ் , உற்சாகம் இப்படி நீங்களும் எல்லாம் விஷயங்களும் என்ஜாய் பண்ணி ஹேப்பியா இருப்பீங்கல்ல என்று கேட்கவே,
எஸ்....மீரா... மேம் என்று விஜயலட்சுமி சொல்லி முடிக்கும் முன்னே,
"மீரா" மட்டும் சொன்னால் போதுமே, பக்கத்துல மேம் கட் பண்ணுங்க .நான் உங்களை விட ரொம்ப , ரொம்ப சின்ன பொண்ணு சோ , உரிமையா என்னை மீரா என்று கூப்பிடுங்கள் என்று விஜியிடம் , "மீரா"கூறவே
அப்படியே ஆகட்டும் மீரா எனக்கும் உங்களிடம் புதுசா பழகுவது போல் உணர்வு வரவில்லை ஏதோ எனக்கு நீண்ட நாள் பழகிய ஒரு உறவு போல் உணர்வாகிறது என்று பதில் கூறவே ,
ம்ம்ம்..... என்று மெல்லிய புன்னகையை வீசிய படி, இந்த தெரியாத ஊர்ல வந்து அறிமுகம் இல்லாத நபர்களோடு எப்படி பழகுவது ?? எங்கு இருப்பது ?? என்று ஒரு சிறு பயம் நெஞ்சோடு இருந்தது, ஆனால் இப்போது , உங்களுடைய நட்பு கிடைத்தது இல்லை நட்புன்னு சொல்லக்கூடாது உங்கள் துணை கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு .
அது மட்டும் இல்லாமல் ரொம்ப தைரியமாகவும் இருக்கு." ரியலி, ஐ, லைக் ,யு ,என்று " மீரா" கூற,
எனக்கு, கூட அதே எண்ணம் தான் .
"மீரா " இத்தனை நாட்கள் தனியாக இருந்துட்டேன் .இப்போது , என் கூட ஒருத்தவங்க இருக்க போறாங்கன்னு நினைச்சாலே ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
எனக்குன்னு ஒரு துணை வரப்போகிறது, அதுவும் இத்தனை அழகான , அன்பான தேவதையே வர போறது நினைச்சா ரொம்ப , ரொம்ப சந்தோஷமா இருக்கு .என்று," விஜி" தன்னுடைய எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள்.
சரி.... சரி ....நாம, இங்கே இப்படியே பேசிக் கொண்டிருந்த நேரம் ஆகிடும். வாங்க , நம்ம போய் சாப்பிட்டு பொறுமையா பேசலாம் .
இனிமே நான் உங்க கூட தானே இருக்க போறேன் நிறைய பேசலாம் . சீக்கிரமா லஞ்ச் முடிச்சுட்டு போகணும்.
எனக்கு மதியம் கிளாஸ் இருக்கு "ஃபர்ஸ்ட் டே , லேட்டா போன , ஸ்டுடென்ட்ஸ் என்ன வச்சு செஞ்சிடுவாங்க .
சோ.... வாங்க சாப்பிட போலாம் என்று விஜியை பிடித்து வலுக்கட்டாயமாக "மீரா" இழுத்துச் செல்கிறாள் .
விஜிக்கு, மீரா பேசி பழகும் விதம், உரிமையோடு பழகும் விதம் ஈர்த்தது...
இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவுடன், மீரா ஓகே மேம் எனக்கு கிளாஸ் இருக்கு முடிச்சிட்டு ஈவினிங் கிளம்புறேன் .நைட்டு உங்களுக்கு கால் பண்றேன், எப்போ ஹாஸ்டல் வரேன் என்று டீடைல்ஸ் சொல்றேன்.
ஓகே மீரா ....போயிட்டு வாங்க , பாய் என்று கூறிவிட்டு அவள் ஹாஸ்டல் உள்ளே செல்கிறாள்.
"மீரா" தனது உணவை முடித்துவிட்டு, மதியம் வேறு ஒரு வகுப்பிற்கு செல்ல புறப்பட்டாள்.
மீராவின் வருகைக்காக அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
தொடரும்