• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கதைப்போமா - 01

MK14

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
16
13
43
Tamilnadu
❣️ கதைப்போமா ❣️

வணக்கம் 🙏 உறவுகளே,
‌. கதையின் பெயர் கதைப்போமா, ஆமாம், கத கதப்பான , விறுவிறுப்பான சுவையான "காதலும், கலாட்டாவும்" கலந்த தித்திப்பான கதைதான்.மிகவும் அழகான கல்லூரி வாழ்க்கை , கல்லூரி தேடலின் ஆரம்பமும் , முடிவும் காதல், அப்படி ஆரம்பித்த காதலும், முடிவுற்ற காதலும் ... நம் கதைப்போமாவில் பார்ப்போமே...

‌‌. . ❣️ பகுதி -1❣️

விறுவிறுப்பான, சென்னை அண்ணா சாலை,
கல்லூரி , மாணவர்களோ அங்குமிங்கும் தெறித்து ஓட,
காலை நேர சாலை போக்குவரத்து நெரிசலிலும்,
சிட்டாய் பறந்து
அண்ணா சாலையில் அமைந்திருக்கும் "கிரீன் வுட்" இன்ஜினியரிங் கல்லூரியை நோக்கி,
"மீரா" தனது இரு சக்கர வாகனமான "ஸ்கூட்டியில்" .... கல்லூரியின் உள்ளே நுழைகிறாள்.

வண்டி நிறுத்துமிடத்தில், அவள் தனது வண்டியை நிறுத்திவிட்டு, அவள் திரும்பிய நொடி ,
அருகில் வண்டியை நிறுத்தம் , செய்வதற்காக வந்த ,கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், வண்டியை நிறுத்தாமல் அவளையே உற்று நோக்கி அவளின் அழகை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதனை, கவனித்த "மீராவோ "
தனது இனிய குரலில் "ஹலோ...." பாயிஸ் , கொஞ்சம் தள்ளுங்க என்று தன் கையை அசைத்து கூறிவிட்டு, சிறு புன்னகையுடன் அவர்களைக் கடந்து கல்லூரியின் உள்ளே நுழைய புறப்படுகிறாள்....,

கல்லூரியில் இரு பக்கத்திலும் இருக்கின்ற மரங்களின் உச்சியில் இருந்த மலர்களோ, அவள் மீது வந்து விழுந்து வரவேற்றிட,
அந்த..., குயில்களின் இனிமையான சப்தத்தின் இன்னிசையுடன்,
இயற்கையே அவளை வரேவேற்க,
"அழகிய தேவதை " மெல்லிசை நடையில் நளினமாக நடந்து வருகிறாள்.

சின்ன இடையில் மெல்ல
நடை போடுகிறாள்,
கண்டவுடன் கட்டியிழுக்கும் ,
அந்த காந்த கண்களும்,
கண்களுக்கும் உதட்டுக்கும்
இடையே வடிவான மூக்கும்,
செர்ரி பழ நிறத்திலே
ரம்யமான உதடுகளும்,
மாதுளை பற்களும்,
தொட்டால் சிவந்து விடும்
ஆப்பிள் பழ கன்னங்களும்,
சரியான உயரமும்,
உயரத்திற்கு ஏற்ற எடையும்,
கொண்டு ......
சிற்பமாய் ஓர் தேவதையாய்,
இருள் சூழ்ந்த நேரத்தில்
மிதந்து வரும் வெண்ணிலவைப் போல் ,
வெண்மை நிற ஆடையில்
அவள் , கல்லூரிக்குள் நடந்து வரும் அழகை கண்ட மாணவர்கள் அனைவரும் வியந்து ரசித்து
பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கமோ மாணவிகள் கூட்டம், மறுபக்கமோ மாணவர்கள் கூட்டம்,
என அவரவர் பேசிக் கொண்டிருப்பதை கூட நிறுத்திவிட்டு , இவளை திரும்பிப் பார்க்கின்றனர்.

அதில் , கூட்டமாக நின்ற மாணவர்களில் ஒருவன் மீராவின் அழகை கண்டவுடன் , டேய்......அங்க பாருங்கடா, "ஒரு புயல் மிதந்து வருகிறது" ....!
என்று தனது, இரு கைகளையும் அவள் புறம் காட்டி சத்தமாய் கூற,

இவன் கூறுவதைக் கேட்ட மற்ற நண்பர்களும் அவள் புறம் திரும்பி பார்த்தவுடன் , !! ப்பா..‌.!! யார்ரா இவ?? நம்ப சீனியரா?? இல்ல ஜூனியரா ??? என்று கேள்வி கேட்க,

டேய் ....,மச்சான் , இவ சினியரும் ,இல்லாம ஜூனியர் இல்லாம, நம்ம கிளாஸ்க்கே வந்துட்டா எப்படி இருக்கும்??? என்று
அனைவரும், அவளை பார்த்து ரசித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறனர்.

ஆனால், அந்த குழுவில் இருந்த ஒருவன் மட்டும், மீராவை திரும்பி கூட பார்க்கவில்லை பெயர் "கதிர்", நண்பனிடம் ஏன்டா..?? இப்படி அலையீறிங்க? என்று அழுத்துக்கொண்டவன் அருகில் இருந்த மற்றொரு நண்பன் "சூரி", சூரியபகரகாஷ்..... கல்லூரியின் டாப் ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுவான்.

யார்ரா??? இவன்...." சித்தரா போக வேண்டியவன் ,எல்லாம் இப்படி சிவில் இன்ஜினியரிங் காலேஜ்ல வந்து உட்கார்ந்து இருக்கான், என்றே கேலியாக சிரிக்கவே,

போங்கடா.... டேய்....! உங்களையெல்லாம் திருத்தவே, முடியாது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறான் ,"கதிர்".

டேய்...! இவன் ,""சித்தர்" இல்ல... டா "புத்தர்" என்று, சூரி .....
மீண்டும் கிண்டல் பேசிக்கொண்டிருக்கும் நேரம், இவர்களின், மிகஅருகில் வந்த "மீரா" வை கண்டவுடன் குறுக்கே கையை நீட்டி மறைத்து ,

ஹாய்..... ! என்கிறான் "சூரி"
அதனை கவனித்த "மீராவும்"
ஹலோ......! என்று , தனது புன்னகையோடு பதில் அளிக்கிறாள்..

மீரா...., புன்னகையோடு பதில் கூறிய மகிழ்வில் துள்ளி குதித்துக் கொண்டிருந்த சூரி தன்னுடைய சந்தோஷத்தை உள்ளடக்கிக்கொண்டு, ஏய்.... ! பொண்ணு....!
நான் உனக்கு சீனியர், சீனியருக்கு சலாம் போடணும்னு உனக்கு தெரியாதா ?? என்று கேட்க,

ம்ம்ம்.... அது என்ன பொண்ணு???
என்று "மீரா" ,சூரியிடம் பொய்யான கோபம் காட்டவே,

இல்ல ..... உங்க நேம் தெரியாதுல அதான் பொண்ணுன்னு சொன்னேன், அது...! ஒன்னும் தவறு இல்லையே??? நீங்க பொண்ணுதானே??? பையன் இல்லையே , என்று கையைத் தட்டி வேகமாய் சிரிக்கிறான்‌ சூரி....

ம்ம்ம்..... அதுவும் சரிதான்....
நான் பொண்ணுதான் என்று தன்னுடைய பற்களை கடித்துக் கொண்டே பதில் அளிக்கிறாள் " மீரா".

ஏய்.....பொண்னே, எங்க போற இங்கே வா வந்து இந்த சீனியருக்கு சலாம் போட்டுட்டு போமா, என்று கிண்டலாக கூறுகிறான் சூரி.

"சலாம் , போட நான் ஒன்னும் குரங்கு இல்லை..." வேணும்னா வணக்கம்...! வைக்கிறேனே., என்ன பாஸ்....! என்று தன் இருபுருவங்களையும் உயர்த்தி அவனிடம் கேட்கவே,

ரைட் விடு.... சலாமும் வைக்க வேண்டாம் .வணக்கமும் வைக்க வேண்டாம். ஒரே ஒரு பாட்டு பாடிட்டு கிளாஸு க்கு ஓடிவிடு என்கிறான்...

உடனே மீரா, சூரியின் அருகில் வந்து அவனின், வலது பக்க காதில் தனது கைகளை மறைத்துக் கொண்டு பாஸ் முதலில் பேன்ட்ல ஜிப்ப போடு , பிறகு நான் "பாட்டு பாடுகிறேன்" என்று கூறிவிட்டு , தன் கையை வாயில் பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே, அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறாள் புன்னகை அரசி மீரா.

அவள்..... கடந்து சென்ற பிறகு சூரியின் அருகில் இருந்த நண்பர்கள் கூட்டமோ, டேய்....! மச்சான் , அவ அப்படி உன் காதில் என்ன தான் சொன்னா?? என்று கேட்க, " சூரியோ " பதில் ஏதும் சொல்ல முடியாமல்," திரு, திரு" என முழித்துக் கொண்டே,
அவ்வ்வ்வ்....... !
என் மானமே போச்சுடா
, நான் அசிங்கப்பட்டுட்டன் குமாரு, அசிங்கப்பட்டுட்டன் குமாரு,
என்று தன்னுடைய ஆள்காட்டி விரலை பற்களில் வைத்து கடித்துக் கொண்டே புலம்பிக் கொண்டிருக்க,

அந்த, நேரத்தில் கல்லூரியில் மணி அடித்துவிடவே, அனைவரும் அசெம்பிளி இறைவணக்கத்திற்காக கல்லூரியின் வளாகத்தில் கூடி நிற்கிறார்கள்,

கல்லூரியில் வழமையாக நடக்கின்ற இறைவணக்கம், நடந்த பிறகு கல்லூரியின் முதல்வரோ " மைக்கை பிடித்து".. குட் மார்னிங் ...!
கைய்ஸ் , என்று கூற மாணவர்களும் பதிலுக்கு குட் மார்னிங் சார்....!
என்று உற்சாகமாக கூறுகிறார்கள்.

"நவ், ஐ அம் கோயிங் டு சே ஒன் வெரி குட் நியூஸ் ஃபார் யூ எவ்ரி ஒன் மை டியர் ஸ்டுடென்ட்ஸ்"....! ,
என்று கூறவே மாணவர்கள் அனைவரும் சத்தமாக கத்தி மகிழ்கின்றனர்.

மாணவர்கள் ஆங்காங்கே குழப்பத்தோடு அப்படி , என்ன குட் நியூஸ் ??? ஆக, இருக்கும் ஒருவேளை ஏதாவது காம்படிஷனா இருக்குமோ...??? இல்ல ....நம்ம காலேஜ்ல யாராவது எதுலயாவது, அச்சீவ் பண்ணி இருக்காங்களா ???? சார் .....
என்ன சப்ரைஸ் வச்சிருக்கார்??? ஒண்ணுமே புரியலையே???
என்று மாணவர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி குழப்பத்தோடே நிற்கிறார்கள் முதல்வரின் பதிலிற்காக மிகுந்த ஆவலோடு.


மாணவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட "முதல்வர்" அதாவது ,ஸ்டுடென்ட் .
நாம ஏற்கனவே சொன்ன மாதிரி civil department physics staff, இல்லாமல் இருந்ததுல , சோ....
இப்போ ஸ்டுடென்ட் உங்களுக்கு, எந்த கவலை வேண்டாம்
நீங்க எல்லாம் கேட்ட மாதிரியும் பிசிக்ஸ்க்கு ஒரு சூப்பர் ஸ்டாப்
நமக்கு கிடைச்சிருகாங்க,

அவங்கள பத்தி சொல்லனும்னா
"வெரி ஸ்மார்ட்" அண்டு ஆல்சோ
" வெரி ஆக்டிவ் பர்சனன்"
"பெஸ்ட் டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ் ,
இன் திஸ் பீல்டு",
அவங்க பெயர் "மீரா" அவங்க நேட்டிவ் கும்பகோணம், என்று கூறிக்கொண்டே , மீராவை பார்த்து ,மேம் ....ப்ளீஸ்....
" கம் ஆன் தி ஸ்டேஜ்"...! என்று அழைத்திடவே,

மீராவும் அழகிய புன்னகையுடன் "மலர்ந்த அழகிய செந்தாமரை மலர்"...! போல், மேடையில் சென்று அனைவரையும் பார்த்து தன் இருகைகளைக் கூப்பி "வணக்கம்..! வைக்கிறாள்.

சற்றும், இதை எதிர்பார்க்காத மாணவன் "சூரி" என்னடா இது????
நம்ம கிளாசுக்கு வரப்போற ஃபிகர்ன்னு நெனச்சா, நமக்கு ஆப்பு வைக்க
போற ஸ்டஃப்பாடா, ????


இதனை பார்த்த நண்பன் "கதிர்" அவனது வாயில் கையை பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல், தேவையான மச்சான் ???
உனக்கு இதெல்லாம் .....
காலேஜுக்கு வந்தோமா , படிச்சோமா, போனமா , அதை விட்டுட்டு இதெல்லாம் தேவையாடா உனக்கு???
என்று சிரித்துக் கொண்டே இருக்கிறான்.

அட..,போடா மச்சான்...! நானே வேதனைல இருக்கேன், நீ வேற வாய மூடுடா வெறுப்பேத்தாத,
நீ வேணும்னா சாமியாரா போய்க்கோ... என்னால அதெல்லாம் முடியாது.
நான் லைஃப்ல என்ஜாய் பண்ணனும் டா.

என்ஜாய்மென்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளாஸ்ல "செம மொமென்ட்டா" தெரியும் டா...
இல்ல ...அது எப்படி??? மச்சான் நமக்கு சீனியரும் இல்லாம, நமக்கு ஜூனியரும் இல்லாம, நம்ம கிளாஸ்க்கே வரணும்னு சொன்னியே ?? இல்ல ,... இல்ல ..., ஆசைப்பட்டியே,
அது நடந்துருச்சு டா.
என்று சூரியின் நண்பர்கள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிண்டல்களை புரிந்து கொண்ட ,"சூரி" எப்படி டா ???இவனுங்க வாய அடைக்கிறது. என்று யோசித்து,
ஆமாண்டா.., மச்சான்...! நமக்கு சீனியரும் இல்லாம ஜூனியர் இல்லாமல் நமக்கு வாத்தியாரா வரணும் தான் ஆசைப்பட்டேன். அதனாலதான் அப்படி சொன்னேன் இப்ப என்ன நம்ப கிளாசுக்கு டீச்சரா வந்துட்டாங்க என்று மனதுக்குள் வேதனையோடும் முகத்தில் சிரிப்போடும் கூறி சமாளிக்கிறான் "சூரி"...

அதெல்லாம் , இருக்கட்டும் மச்சான்
உன் காதுல என்னமோ லாஸ்ட்டா சொன்னாங்கல்ல??
அது மட்டும் என்னன்னு...?? சொல்லேன்டா என்று இடையில் ஒருவன் கேட்க,

ச்சை....!
இவன் வேற ஞாபகப்படுத்திக்கிட்டு, டேய் போடா...! அது , இப்ப ரொம்ப முக்கியமான கேள்வி,அடுத்த செமஸ்டர்ல கேள்வி கேட்க போறாங்க பாரு, நீ பதில் எழுதி ஃபுல் மார்க் வாங்க போற இருக்கிற டென்ஷன்ல,நீ வேற பேசாம மூடிட்டு போயிடு அறை வாங்காம .என்றிடவே,

சரி டா ...."மாப்ள...!" நீ டென்ஷனா இருக்க , நான் உன்னை மேலும் டென்ஷன் ஆக்க விரும்பல,
கிளாஸ்ல.... நம்ம டீச்சர் கிட்ட போய் அந்த டவுட்டை கேட்டுக்கலாம் என்று நண்பன் சிரித்துக் கொண்டே கூறுவதைக் கேட்ட சூரி,

டேய்...... நீங்க கேட்டாலும் கேட்டு வைப்பீங்க, கிளாஸ்ல போய் கேட்டு என் மானத்தைக் வாங்கி வைக்காதீங்க டா. நீங்க எல்லாம் என் நண்பர்களே இல்லை. துரோகிங்க என்று அனைவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ,அசெம்பிளி டிஸ்பஸாகி வகுப்பறைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது.

அவரவர் வகுப்பிற்கு அந்தந்த மாணவர்கள் வகுப்பறையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

வகுப்பறைக்கு செல்லும் வழியில் சூரியிடம் கதிர், " டே ....மச்சி.!
நமக்கு " டுடே ஃபர்ஸ்ட்" ஹவர்
" பிசிக்ஸ்" தான் மேம் .
கிளாசுக்கு வர போறாங்க, ரெடியா இருந்துக்கோ ."பாய் டா",
நான் கிளாஸ் போறேன். என்று கேலி செய்துவிட்டு வகுப்பை நோக்கி வேகமாக செல்கிறான் "கதிர்."

ஐய்யோ.....! இப்ப நான் என்ன செய்வேன்??? கிளாசுக்கு போறதா?? இல்லையா?? எத்தனை நாட்கள் கட்டடிக்க முடியும், என்று யோசித்துக் கொண்டே, கிளாசுக்கு போவோம்
நடக்கிறது நடக்கட்டும் என்று "சூரி "

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..."
என்ற பாடலை பாடிக்கொண்டு வகுப்பறை நோக்கி செல்கிறான்.

❣️ தொடரும் ❣️
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கலகலப்பான அமர்க்களமான ஆரம்பம் 🤩😍

ஸ்டூடெண்ட்ஸ்க்கு அதிலும் சூரிக்கு செம்ம பல்பு 🤣🤣🤣

கதிர் மீராவை கண்டுக்கவே இல்ல...🙄 அசெம்பிளில சூரிகிட்ட கிளாஸ்ல செம மொமெண்டா இருக்கும்னு சொன்னானே... 🧐🤔 அப்போ மீரா அவனோட அக்காவா இருக்குமோ? 🤣🤣🤣 அதனால தான் கிளாஸ்க்கு அவசரமா ஓடினானோ? 🤣🤣🤣

இப்போ சூரி கிளாஸ்க்கு போவானா மாட்டானா? 🤩🤩🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK14

MK14

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
16
13
43
Tamilnadu
கலகலப்பான அமர்க்களமான ஆரம்பம் 🤩😍

ஸ்டூடெண்ட்ஸ்க்கு அதிலும் சூரிக்கு செம்ம பல்பு 🤣🤣🤣

கதிர் மீராவை கண்டுக்கவே இல்ல...🙄 அசெம்பிளில சூரிகிட்ட கிளாஸ்ல செம மொமெண்டா இருக்கும்னு சொன்னானே... 🧐🤔 அப்போ மீரா அவனோட அக்காவா இருக்குமோ? 🤣🤣🤣 அதனால தான் கிளாஸ்க்கு அவசரமா ஓடினானோ? 🤣🤣🤣

இப்போ சூரி கிளாஸ்க்கு போவானா மாட்டானா? 🤩🤩🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
Thank u sis