பகுதி -4
மதிய உணவு அருந்திவிட்டு தனக்கு கொடுக்கப்பட்ட அடுத்த , வகுப்பிற்கு செல்வதற்காக "மீரா" வகுப்பறையை நோக்கி வருகிறாள்.
ஆசிரியை மீராவின்" வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு , வகுப்பறையின் வெளியே நின்று கொண்டு இருந்த மாணவர்கள், "மீரா" வருவதை கண்டு உள்ளே நுழைந்து ஆசிரியரை முதல் நாள் சிறப்பாக வரவேற்பதற்காக, ஆயத்த நிலையில் வைக்கிறார்கள்.
"மீரா" வகுப்பில் நுழைந்த உடனே மாணவர்கள் பலூன் வெடித்து , கைதட்டி உற்சாகமாகவும் மிகுந்த ஆனந்தத்தோடும் வரவேற்று மகிழ்ந்தனர்.
இவர்களின் வரவேற்பு மீராவிற்கு, சற்று வித்தியாசமாகவும், உற்சாகமாகவும் இருந்தது ,அவளுக்கு மிகவும் பிடித்தது.
ஹலோ கைய்ஸ்... "குட் ஆப்டர்நூன்" எவ்ரி ஒன், "ஐ ,அம், மீரா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மாணவர்களை அறிமுகம் செய்துகொள்ள சொல்கிறாள்.
மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வந்த நிலையில், மீராவும் மாணவர்களின் அறிமுகத்தை ஆர்வத்தோடு கவனித்து வருகிறாள்.
இதே நிலையில், இறுதி பெஞ்சில் உள்ள மாணவர்களின் அறிமுகத்திற்காக கடைசி பெஞ்சிற்கு செல்லும்பொழுது, அங்கு அமர்ந்திருந்த ஒரு மாணவனை கண்டு எரிச்சல் அடைகிறாள்.
ஹே....வாட்ஸ் யுவர் நேம்??? என்று கோவமாக கேட்க,
அந்த , மாணவன் பதில் சொல்லாமல் மீராவை முறைத்தபடியே , தன் வலது கையால் மேசையை வேகமாக தட்டிவிட்டு கழுத்தை திருப்பிக் கொள்கிறான்.
மேலும் ஆத்திரமடைந்த மீரா ,
ஹலோ.... உன்னை தான் கூப்பிடுறேன், "கிளாஸ் ரூம்ல சுவிங்கம் சாப்பிடற "யூ ஸ்டுபிட் , ஹவ் யூ சென்ஸ்"??
என்று கோவமாக கேட்கவே,
ஆத்திரமடைந்த அந்த மாணவன், வேகமாக எழுந்து ஆசிரியையை முறைத்துக் கொண்டே வகுப்பறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
மிக்க மகிழ்ச்சியோடு, வகுப்பறைக்குள் வந்த மீராவிற்கு இந்த சம்பவம் மனதிற்கு வருத்தத்தை தந்தது.
மீராவின் முகத்தில் சோர்வை கண்ட மாணவர்கள்," மேம்" இவன் எப்பவுமே இப்படித்தான்.
நீங்கள் வொரி பண்ணாதீங்க ப்ளீஸா.கிளாஸ் ஸ்டார்ட் பண்ணுங்க என்று ஒரு மாணவன் கூற ,
பதில் ஏதும் பேசாது மீரா ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலே இருந்திட,
மேலும் இன்னொரு மாணவன் எழுந்து நாம் இவனை திருத்தவே முடியாது இவன் நமது கல்லூரி தாளாளர் அவர்களின் ஒரே மகன் , அந்த திமிர் தான் அவனுக்கு. அவன் பெயர் அலெக்ஸ் .
இவன், கல்லூரிக்கு வருவதே சும்மா பொழுது போக்குவதற்காகத்தான். இருக்கின்ற பெண் பிள்ளைகளை கிண்டல் செய்து கொண்டு ஜாலியா டைம் பாஸ் பண்ணிட்டு கிளம்பிடுவான்.
இதுவரை அவன் படித்ததாக சரித்திரமே இல்லை .ஆனால் அவன் மட்டும் எப்படி பாஸ் பண்ணுகிறான் என்று யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது என்கிறான்.
இதனை கேட்ட மீரா
ஹோ... அப்படியா ???
இப்பதான் எனக்கு விஷயம் புரிகிறது.
சரி இதை எப்படி ஹேண்டில் பண்ணனும் ?? என்று எனக்கு தெரியும், இதை மேலும் வளராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் .நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் இப்பொழுது நாம் பாடத்திற்கு செல்வோம் என்ற கூற,
இல்லை மேம் , நீங்கள் அவனை எதுவும் செய்யாதீர்கள் இப்படித்தான் ஏற்கனவே வந்த பிசிக்ஸ் சார் , ஒருத்தரு இவனை திருத்த முயற்சித்த போது அவருக்கு இங்கிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் இங்கு பணிபுரியும் , வெங்கடேஷ் சாரும் இவனை திருத்துவதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்து அத்தனையும் தோல்வியில் தான் முடிந்தது.
இதனால் அவருடைய ஜாபுக்கு கூட ஆப்பு வந்தது ஆனால் மாணவர்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்து "வெங்கி" சார் கட்டாயம் இந்த கல்லூரியில் இருக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்த பிறகு அவரை இங்கிருந்து அனுப்பவில்லை.
எங்கள் அனைவருக்கும் "வெங்கி" சார் என்றால் அவ்வளவு இஷ்டம்.
ஹோ.... வெங்கி சாரா??? யார் அவர்???
நான் இன்னும் மீட் பன்னலையே அவரை என்று சொல்ல,
நோ.... மேம் அவர் லீவ்ல இருக்கார்.மன்டே தான் காலேஜ் வருவார் என்க...
ம்ம் ம்ம்.... என்று தலை அசைக்கிறாள்.
அதனால் தான் மேம்,சொல்கிறோம், நீங்களும் அவன் விஷயத்தில் தலையிட்டால் வேலையிலிருந்து அனுப்பி விடுவார்கள்.
எங்களுக்காக பொறுத்து கொள்ளுங்கள் மேம்,
என்று கூறிய மாணவிக்கு மீரா பதில் ஏதும் பேசாமல் தலையை மட்டும் அசைத்து விட்டு பாடத்திற்குள் செல்கிறாள்.
இப்படியே ...! பேசிக் கொண்டிருக்க இந்த வகுப்பு நேரம் முடிந்து விட , மீரா ஓகே .....நாளைக்கு லெசன் பார்க்கலாம்.
இன்று இவனோட டென்ஷனானால நாம லெசன் எதுவும் பார்க்க முடியல "சாரி, டியர்" ஷோரா நாளிலிருந்து ,நாம லெசன் பார்க்கலாம் .
தேங்க்யூ....கைய்ஸ் என்று கூறிவிட்டு வகுப்பேறையை விட்டு வெளியேறி ஆசிரியர்கள் அறையை நோக்கி செல்கிறாள்.
ஆசிரியர் அறையின் உள்ளே நுழைந்து
மோனிஷா அருகில் அமர்கிறாள் மீரா..
முகம் சற்று வாட்டத்தோடு வந்து அமர்ந்த மீராவை பார்த்த "மோனிஷா" சற்று தயக்கத்தோடு,மீரா உங்களுக்கு என்ன ஆச்சு ??
ஏதோ டென்ஷனா இருப்பது மாதிரி தெரியுதே, என்ன என்று ஆராய்ந்து கேட்க,
ஆமாம் ....! மோனிஷா, கொஞ்சம் டென்ஷன்தான், இருக்கு , இப்போ பைனல் இயர் , கிளாசுக்கு போனேனா, அங்கு அலெக்ஸ் என்ற ஒரு மாணவன் வாயில சுவிங்கம் வச்சிக்கிட்டு கிளாஸ் ரூம்ல இருக்கான்.
அவன்கிட்ட கேட்டதுக்கு ரொம்ப திமிரா பேசுறான் அதான் செம டென்ஷனா இருக்கு என்று பதில் கூறவே
ம்ம்ம் ....இவ்வளவுதானா ????அவன் யாருக்கும் அடங்கவே மாட்டான், அவனை திருத்தவும் முடியாது .
நமது பிரின்சிபால் சாரே எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத நிலையில் விட்டு விட்டார். எப்படியோ போகட்டும் என்று, இந்த வருடத்தோடு அவன் இந்த கல்லூரியை விட்டு வெளியேறிடுவான் பிறகு, எந்த தொல்லையும் இருக்காது அதுவரை சற்று பொறுமையாக இருங்கள் என்று கூறவே ,
அது எப்படி ??? மோனிஷா நாம அமைதியா இருக்க முடியும் .கிளாஸ் ரூம்ல " இருரெகுலரா இருக்கான்"
நல்ல பழக்கவழக்கங்களும் இல்லையே, இது மற்ற மாணவர்களையும் பாதிக்குமே ,இதற்கு என்னதான் சொல்யூஷன் ???இதை சும்மா விடக்கூடாது என்று ஆழமாக சிந்தித்து பேசிக் கொண்டிருக்கிறாள் மீரா.
சரி ...." மீரா" நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க .இதுக்கு என்ன சொல்யூஷன் யோசிப்போம் .வாங்க இப்போ வீட்டுக்கு கிளம்புவோம் என்று பேசிக்கொண்டே இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
இருவரும் தனித்தனியே அவரவர் வண்டியை எடுத்துக்கொண்டு கல்லூரியின் வெளியே வந்தனர்.
"மோனி, மீராவிடம்" நீங்களும் இதே ரூட்லதானே போறீங்க, அந்த ஹைவேஸ் வரைக்கும் சேர்ந்து போகலாம். பிறகு நான் லெஃப்ட் எடுக்கிறேன் நீங்கள் ரைட் எடுங்கள் என்று பேசிக்கொண்டே இருவரும் சாலையில் செல்கின்றனர் .
ஹைய்வேஸ் முடியும் இடத்தில் இருவரும் பைய் சொல்லிக்கொண்டு அவரவர் செல்லும் பாதையில், செல்கின்றனர்.
மீரா சென்று கொண்டு இருக்கும் பொழுது , யாரும் இல்லாத அந்த சாலையில் ஒருவன் மட்டும் வண்டியை தள்ளிக் கொண்டு தனியாக செல்கிறான்.
தனிமையில் செல்கின்றவனை கடந்து சென்ற மீரா, தனது வண்டியின் இடதுபுறம் கண்ணாடி வழியாக அவனை பார்த்து ஒரு நிமிடம் யோசிக்கின்றாள்.
அருகில் சென்று அவனிடம் ,என்ன பிரச்சனை என்று கேட்போமா?? இல்லை நம் வேலையை பார்த்துக் கொண்டு நாம் சென்று விடுவோமா?? புது ஊராக இருக்கிறதே , யாரும் இல்லாத இடம் வேறு என்ற பயம் அவளின் நெஞ்சை வருடுகிறது.
என்ன நடந்தாலும் பரவாயில்லை துணிச்சலாக கேட்டுத்தான் பார்ப்போமே, என்று ஒரு மன துணிச்சலோடு சென்ற வேகத்தில் திரும்பி வந்து அவன் வண்டியின் எதிரே நிறுத்துகிறாள்" மீரா" தனது வண்டியை.
ஏய்.... லூசா நீ ...! இப்படி வந்து மேல இடிப்பது போல் வண்டியை நிறுத்துகிறாயே??
அங்கே பார் நம்பர் பிளேட் நசுங்கி விட்டது. எடு 500 ரூபாயை என்று அவன் கேட்டிட,
இந்த தகர டப்பா வண்டிக்கு 500 ரூபாய் ரொம்ப அதிகம் தான் என்று நக்கலாக சிரித்துக்கொண்டே கூறுகிறாள்.
அவள், சிரித்திடவே இவனும் அசடு வழிவது போல், ஹே....ஷ்உஉஉஉஉஉ.....! ப்ளீஸ் .... சும்மா தாம்பா கேட்டேன் என்று தலையை சொரிந்து கொண்டே கூற,
மீராவும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே ,"சரி ,சரி "தகர டப்பாவை ஏன்...??? தள்ளிக் கொண்டு வருகிறாய் என்று கேட்க
ஏதே ... தகர டப்பா???
யூ....பிளடி... என்றிட
ஐயோ...! நான் ஒன்னும் உங்களை சொல்லல உங்கள் வண்டியை சொன்னேன் என்று மீராவும் பதில் கூற,
அவனை , தப்பா பேசாதீங்க அவன் என்னுடைய நண்பன் .அவன் ஒன்னும் தகர டப்பா இல்லை பெட்ரோல் போட மறந்து விட்டேன். அதனால் இவன் என் மீது கோபமாக இருக்கிறான்.
அதான் அவனை சமாதானம் செய்வதற்காக இரண்டு பேரும் அப்படியே சும்மா ஜாலியா பேசிக்கிட்டே நடந்து போயிட்டே இருக்கோம் என்கிறான் .
என்னது நண்பனா???
இந்த வண்டியா???
சரி அது போகட்டும்...!
லஞ்ச் சாப்பிட்டீங்களா என்றிட
பரவாயில்லையே மேடம் நான் யாருன்னு தெரியலன்னா, கூட என் மீது இவ்வளவு அக்கறையா நான் சாப்பிட்டேன்னா ??? என்று கேட்கிறீர்களே , இதுதான் நம் தமிழர் பண்பாடு .
நான் சாப்பிட்டேன் அதுவும் சிக்கன் பிரியாணி ஃபுல் கட்டு கட்டிட்டேன் என்று சிரித்துக் கொண்டே கூற,
நினைச்சேன் அப்பவே நினைச்சேன் நண்பனு சொன்னா , பத்தாது நீங்க மட்டும் ஃபுல் கட்டு கட்டிவிட்டு அவன பட்டினியா போட்டா?? அதனால தான் அவன் நடக்க விட்டுட்டான் .நடங்க நடங்க , நல்லா நடங்க தின்ன சோறு செரிக்கட்டும்.என்று கேலி பேச,
வேற என்ன எல்லாம் என் நேரம் என்று அவன் புலம்பிக்கொண்டு இருக்க,
ஆமாம் ....! இங்கே பெட்ரோல் பங்க் எங்கே இருக்கு ?? என்று கேட்க,
அட போங்கம்மா ....அது இன்னும் மூணு கிலோ மீட்டர் போகணும். எப்படி இவன தள்ளிட்டு போகப் போறேன்னு தெரியல இப்பவே என்னுடைய முழி பிதுங்கிவிட்டது, என்று அழுத்துக் கொண்டு அவன் கூறுவதைக் கேட்ட "மீரா" எண்ணத்தில் ஒரு எண்ணம் தோன்றுகிறது .
ஆம், அவளிடம் இருக்கும் பெட்ரோல் கொஞ்சம் தரலாமா என்ற எண்ணம் தான்.
மீரா எப்பொழுதும் தன்னுடைய வண்டியில் முன்னெச்சரிக்கையாக அரை லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வைத்துக் கொள்வது அவளது வழக்கம்.
அவள் வண்டியிலிருந்து இறங்கி தனது வண்டி பெட்டியை திறந்து பாட்டிலில் இருக்கும் பெட்ரோலை எடுத்து அவனிடம் நீட்டுகிறாள்.
"தெய்வமே உன்னைத்தான் தேடி வந்தேனே" என்று பாடல் பாடிக் கொண்டே பாட்டிலை கையில் வாங்குகிறான்.
"இதற்கு பெயர் தான் கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என்று அர்த்தம் போல "என்று கூறிக் கொண்டே பாட்டிலை திறந்து வண்டியில் பெட்ரோலை ஊத்துகிறான்.
வண்டியில் பெட்ரோலை ஊற்றிவிட்டு "தேங்க்யூ தெய்வமே " என்று கூறிக்கொண்டே , திரும்பிப் பார்க்கையில் அந்த இடத்தில் அவள் இல்லை சிட்டாய் பறந்து வெகுதூரம் சென்றுவிட்டாள்.
யாருனே, தெரியல்லையே, கரெக்டா வந்து ஹெல்ப் பண்ணிட்டு திரும்பி பார்ப்பதற்குள் காணமே ,
சரி பார்க்கலாம்.... என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு இருக்க அவனின் கைபேசி அலற,அலைபேசியை எடுத்து பேசி இதோ வந்து கொண்டே இருக்கிறேன்பாஸ். இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவேன் என்று கூறிவிட்டு அலைபேசியை அணைத்து விடுகிறான்.
தொடரும்