கதைப்போமா
பகுதி -5
முதல் நாள் தன்னுடைய ,"கல்லூரி பணியை முடித்து" மீரா , வீட்டிற்கு வருகிறாள்.
வீட்டிற்கு வந்தவுடன் மீராவின் அத்தை அன்பாக மீராவை உள்ளே அழைத்து,
என்ன கணீணு ??? இன்னிக்கு காலேஜ் எப்படி இருந்தது??? , உனக்கு பிடிச்சிருக்கா டாமா??
பசங்க எல்லாம், உன்னிடம் நல்லா பழகினாங்களா ?? கூட வேலை பார்க்கிற டீச்சர் எல்லாம் நல்லா பேசினாங்களா ?? என்று மூச்சுக் கூட விடாமல் அடுக்கடுக்காய் கேள்வி கேட்கின்றாள் மீராவின் ஒரே அத்தை சுபா,
ஆம் , மீராவின் தந்தை கல்யாணசுந்தரம் அவர்களின் உடன் பிறந்த அக்கா, பெயர் " சுபா " கணவர், "முத்து மாணிக்கம் " இவர்களுக்கு ஒரே மகன்"ஷியாம்".
" முத்து" தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மகன் "ஷியாம்" "ஐடி" கம்பெனியில் பணிபுரிந்து வருகிறான்.
"மீரா" என்றால் அவளின், "அத்தை மாமா" இருவருக்கும் அவ்வளவு பிரியம்.
சென்னையில் வேலை பார்க்க, வேண்டும் என்ற ஆசையை மீரா அவள் தந்தையிடம் கூறும் பொழுது முதலில் மறுப்பு தெரிவித்தார்.
பிறகு , "மீரா"வின் மாமா ,அத்தை இருவரும் மீராவிற்காக, கல்யாணசுந்தரத்தை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார்கள்.
ஆமாம்....! அத்தை, இன்னிக்கு காலேஜ் ரொம்ப ஜாலியா போச்சு.
நான் நினைத்ததை விட பசங்க எல்லாம் சூப்பரா பழகினாங்க. ரொம்ப ஜோவியல்லா இருக்காங்க .
டீச்சர்ஸ்சும் நல்லா பழகுறாங்க எனக்கு செட் ஆகிடுச்சு அத்தை என்று பதில் அளிக்கிறாள்.
நல்லது, மா மீரா" நான் கூட பயந்துகிட்டு இருந்தேன் " உனக்கு இந்த ஊரு புதுசு எப்படி செட் ஆகுதோ ??? என்னவோன்னு,
அதற்கு , என்ன அத்தை எல்லாமே கத்துக்கிட்டா வரோம், பழகிக்கலாம் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் ,சுபாவின் ஆசை மகன், இருவரின் பேச்சுக்கு குறுக்கே வருவது போல்
ஹலோ...! " மீரா" காலேஜ் போயிட்டு வந்திட்ட போல , எப்படி ?? இன்னிக்கி, நீ பீல் பண்ண ?? என்று கேட்க
எஸ் ...."ஷியாம் ஐ ஃபீல் குட்" என்றிட,
சரி..., இருவரும் பேசிக்கொண்டு இருங்கள் ."நான் போய் இரண்டு பேருக்கும் காபி கொண்டு வருகிறேன்" என்று சுபா அடுப்படிக்கு செல்லவே,
சொல்லு மீரா..." உனக்கு நிஜமாவே காலேஜ் பிடிச்சிருக்கா??""
இங்கு செட் ஆகலைன்னா சொல்லு பா, வேற காலேஜ் பார்க்கலாம் என்று ஷியாம் கேட்க,
நோ...நோ...ஷியாம். எனக்கு இந்த காலேஜ் ரொம்ப பிடிச்சிருக்கு .
பசங்க எல்லாம் படக்குன்னு ஒட்டிக்கிட்டாங்க, ரொம்ப டிஃபரண்டா வெல்கம் , கூட பண்ணாங்க டா என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க,
இடையில் "அத்தை சுபா இருவருக்கும் காபி கொண்டு வந்து தருகிறாள்".
மீரா ...இந்தமா காபி ,
டேய்....நீயும் எடுத்துக்கோடா என்று கூறி அருகில் அமர்கிறாள்.
நான் கூட பயந்துகிட்டு இருந்தேன். மதியம் , உன் அப்பா கிட்ட பேசிகிட்டு இருந்தேன்.
தம்பி ரொம்பவே ஃபீல் பண்ணுச்சு,மா வேலைக்கு போகணும்னு ஒத்த கால்ல நின்னு இந்த புள்ள வேலைக்கு போயிடுச்சு , இதுல" நீ சப்போர்ட் வேற, வீடே , அவ இல்லாமல் வெர்ச்சோடி கிடக்கன்னு,
எப்ப பாத்தாலும், ஏதாவது தொனதொன்னு பேசிட்டு சிரிச்சுக்கிட்டு கிண்டல் கேலி செஞ்சுகிட்டு, இருப்பா நான் வீட்ல இருக்கின்ற போது நேரம் போவதே தெரியாது .
இப்ப வீடே அமைதியா இருக்கு நான் என் வேலையை பார்க்கிறேன். என் பொண்டாட்டி அவ வேலைய பாக்குறா ... வீட்ல கலகலப்பு இல்லாம வெரிச்சோடி கிடக்கு,
பரவாயில்ல..., வேற என்ன செய்வது?? இத நான் பழகிக் கிட்டு தான் ஆக வேண்டும்.
நாளை அவ கல்யாணம் பண்ணி எப்படியும் வேற வீட்டுக்கு போக தான் போறா, அதற்கு இப்பவே டிரையல் பாக்குறதா நினைத்துக் கொள்கிறேன்.
இப்படி எல்லாம் உன் அப்பா ரொம்ப பீல் பண்ணி புலம்பி கொண்டு இருந்தான் மா.பிறகு , நான் தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தேன்.
போகப், போக பழகிடுவான் கோவக்காரன் தான் ஆனா குணம் நிறைஞ்சவன்.
என்று சுபா பேசிக் கொண்டே போக,
அத்தை... போதும்.... உங்கள் தம்பி புராணம் ஆரம்பிச்சிட்ங்களா??
உங்கள் தம்பியை பற்றி பேச ஆரம்பித்தால் உங்களுக்கு நேரம் போறதே தெரியாதே, .
எனக்கும்" அப்பா ,அம்மாவை" விட்டு வர வேண்டும் என்று ஆசை எல்லாம் இல்லை.
உண்மையா சொல்லப்போனால் நான் வீட்ல இல்லைனா அம்மா நேரத்துக்கு சாப்பிடாது , அப்பா கரெக்டா மருந்து எடுக்க மாட்டார்.
நான் இல்லாத வாழ்க்கையை, என் அப்பா அம்மா இருவரும் பழகிக் கொள்ள வேண்டும்.
"என்னோட சிறு பிரிவை கூட, அவர்களுக்கு ஏற்கும் மன தைரியம் இல்லை " அதனால் தான் சற்று தொலைவில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன்.
அட..... !"பைத்தியக்காரி" நீ இல்லாத வாழ்க்கையை, ஏன்...? என் தம்பியும் தம்பி பொண்டாட்டியும் ஏத்துக்கணும்??? என்றே சுபா கேட்க,
அதெல்லாம் , ஒன்றும் இல்லை அத்தை நான் என்னுடைய பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் லேட்டா வந்தா கூட அம்மா படபடன்னு பயப்படுது.
நான் இன்னும் ஸ்கூல் பிள்ளை என்று நினைத்துக் கொண்டு என் அப்பா அதான் உங்க ஆசை தம்பி என்னை பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட விடமாட்டார்.
வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடக்க எனக்கு இஷ்டமில்லை.
அது மட்டும் இன்றி என்னை சுற்றி மட்டுமே , அவர்களது நினைப்பு இருக்கிறது .அதை தாண்டி அவர்களும் வரவேண்டும் நானும் வரவேண்டும் அதற்காகத்தான் இந்த முடிவு என்று அத்தைக்கு விளக்கம் தருகிறாள் மீரா.
ஏம்மா..., கண்ணு என் தம்பிக்கு நீ ஒத்த பொண்ணு டா தவமா தவம் இருந்து தேவதை போல வந்த பொண்ண நீ, பிறகு உன்னை கண்ணுக்குள்ள வச்சு காக்காம எப்படி பாப்பான்??
சரிதான் அத்தை, "ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி " பற்றி நிறைய மெகசீன்ல படிச்சிருக்கேன் , எனக்கு அந்த காலேஜ்ல "ஒன் மந்தாவது வேலை பார்க்கணும் அது என்னுடைய ட்ரீம்",
கண்டிப்பா , அந்த எக்ஸாம் பாஸ் பண்ணிட்டு "ஒன் மந்தாவது அந்த காலேஜ்ல ஒர்க் பண்ணிட்டு ஊருக்கு அப்பா கிட்டயே போயிடுறேன்" அதுவரைக்கும் ப்ளீஸ் என்னோட மைண்ட யாருமே மாத்தாதீங்க என்கிறாள்.
நீதான் பிடிவாதகாரிய ஆச்சே,
உன்ன மாத்த முடியுமா??
என்னமோ பண்ணிட்டு போ...
நான் போய் என் வேலையை பார்க்கிறேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறான் அத்தை சுபா.
சோகமாக இருந்த மீராவை,
ஹே..." மீரா" ஏன் அப்செட்டா இருக்க காலேஜ்ல எதுவும் ப்ராப்ளமா?? இல்ல , மாமா வொரி பண்ணத நினைச்சு, நீ வொரி பண்ணிட்டு இருக்கியா?? என்று ஷியாம் கேட்க?
அது, இல்ல ஷியாம் பிரச்சனைன்னு சொல்ல முடியாது டா.
இன்னிக்கு காலேஜ்ல பைனல் இயர் கிளாசுக்கு போனேன் அங்கு ஒரு பையன் கிளாஸ்ல சுவிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் .
அவனை தண்டிக்க முயன்ற போது அவன் கோபமாக வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டான். பேராசிரியர் என்ற மதிப்பு அவனிடம் ஒரு துளி கூட இல்லை ."அவன் உடையும், அவன் நடையும் "கல்லூரி மாணவன் போல் இல்லை .
பிறகு, அவனுடைய வகுப்பு சக மானவர்கள், அவனைப் பற்றி கூறினார்கள் .
கல்லூரி தாளாளரின் மகனாம் அவனுடைய பழக்கங்கள் எதுவுமே சரியில்லை .அவனோடு சேர்ந்தால் உடன் இருக்கும் மாணவர்களும் தவறான பழக்கத்திற்கு ஆளாகி விடுவார்கள் , என்று கவலையாக இருக்கிறது .
இதை எப்படி சரி செய்வது ???என்று சிந்தித்து கொண்டு இருக்கிறேன் என்றிட
அட... அட ....போமா , நீ இன்னும் எந்த காலத்துல இருக்க??? சென்னையில இதெல்லாம் ரொம்ப சகஜமான விஷயம் தான்.
அது மட்டும் இல்லாம நீ என்ன வேலையா இங்க வந்தியோ?? அந்த வேலையை மட்டும் பாரு, சும்மா அவன திருத்துறேன், இவனை திருத்துறேன்னு சொல்லி உனக்கு நீயே சூனியம் வச்சுக்காத இது உனக்கு தேவை இல்லாத வேலை என்று ஷியாம் கூறவே,
என்னப்பா எல்லாரும் இப்படியே சொன்னீங்கன்னா யாரு தான் அவன திருத்துறது??என்று கேட்க
நீ ஒரு ஆள் நெனச்சா அவன திருத்த முடியாது. இவ்வளவு நாள் அவங்க பேரண்ட்ஸ்சாலே திருத்த முடியல, நீ திருத்த போறியா?? சும்மா காமெடி பண்ணாம வேலையை பாருமா என்று கூறுகிறான் ஷியாம்.
ஷியாம் சொல்லுவது, மீராவிற்கு கோபத்தை தந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளடக்கிக் கொண்டு இப்படியே, எல்லோரும் சுயநலமா பேசுறாங்களே, நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கிறாள்.
ஹே... "மீரா" அத விட்டு தள்ளுப்பா அதை திங்க் பண்ணாம போய் வேற ஏதாவது ஒர்க் இருந்தா பாரு , நானும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். இன்னிக்கு எனக்கு நைட் டியூட்டி இருக்கு என்று சொல்லிவிட்டு ஷியாம் அவனது அறைக்கு செல்ல எழுந்தான்.
இல்ல ஷியாம் ஒரு நிமிஷம் உட்காரன் ,உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று எழந்தவனை மீண்டும் அமரச் செய்து,
இங்கேயே , இரு ஷியாம் "நான் போய் அத்தையும் மாமாவையும் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று மீரா இருவரையும் அழைத்துக் கொண்டு வந்து மூவரையும் ஒரே இடத்தில் அமர வைக்கிறாள்.
"அத்தை ,மாமா, ஷியாம் "உங்க மூணு பேர் கிட்டயும் நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் அதற்காகத்தான் கூப்பிட்டேன் என்றிட
என்ன மீரா புதிரெல்லாம் போடுற??
என்று மாமா கேட்க,
புதிர் இல்லை மாமா,
நாளை முதல் கல்லூரியில் இருக்கின்ற ஹாஸ்டலில் நான் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன், என்று மீரா கூறி முடிக்கும் முன்பே ஆத்திரமடைந்த மாமாவும் அத்தையும்,
நிறுத்து மீரா இதற்கு தான் உன் அப்பாவிடம் சண்டை போட்டு , சமாதானம் செய்து உன்னை இங்கு அழைத்து வந்தோமா??
மாமா ....ஒரு நிமிடம் கோபப்படாமல் நான் சொல்லுவது கேளுங்கள் என்றிட,
"மாமா ,அத்தை " நான் இங்கு தங்குவதில் உங்களை விட எனக்கு மிகுந்த சந்தோஷம்தான், ஆனால் என்னுடைய வசதிக்காகத்தான் நான் ஹாஸ்டலில் தங்கிக் கொள்கிறேன்.
தினமும் இத்தனை தூரம் வந்து செல்வது உடல் சோர்வாக ஆகிவிடும்.
அது மட்டும் இல்லாமல் எனக்கு பிரைவசி வேண்டும் .
வெளியில தங்கினாதான் எனக்கும் சற்று மன தைரியமும் அதிகமாகும். எதையும் சமாளிக்கும் குணமும் உண்டாகும் என்று மீரா தன் நிலையை எடுத்துக் கூற,
"மாமாவும் ,அத்தையும்" விருப்பம் தெரிவிக்காத நிலையில் ஷியாம் மட்டும், "அப்பா ,அம்மா " இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க .
அவ எங்க போறேன்னு?? சொல்றா ஹாஸ்டல்ல , தானே தங்குகிறேன் சொல்றா. பக்கத்துல தானே இருக்கு அவளோட பிரைவசிக்காக அவ கேட்கிறாள் இதில் ஒன்னும் தப்பு இல்லையே ,
அவளோட விருப்பப்படி, அவ அங்கேயே ஸ்டே பண்ணட்டும் .டைம் கிடைக்கும் பொழுது அவ இங்கு வரட்டும் நாம அங்க போய் பார்க்கலாம்.
அவளுக்கும்.
அப்போதுதான் துணிச்சல் கிடைக்கும் என்று எடுத்து கூற
மாமா முத்து மட்டும் சம்மதிக்க இல்லைங்க, நான் சம்மதிக்கவே மாட்டேன் என்று சுபாவின் குரல் குறுக்கே வருகிறது.
உன்னை வைத்துக்கொள்ள நான் சிரமப்பட்டு , ஹாஸ்டலுக்கு அனுப்பி விட்ட மாதிரி உன் அப்பன் நினைத்துக் கொள்வான் .
அது மட்டும் இல்லாம உன்ன தனியா விடுறதுக்கா ,"நான் உன்ன இங்க அழைத்து வந்தேன்" என்னம்மா ..!.நீ இப்படி எல்லாம் எனக்கு சங்கடத்தை தருகிற என்று சுபா புலம்பிக்கொண்டிருக்க ,
அருகில் சென்று மீரா , என் செல்ல அத்தைல, அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை ,"அப்பா ,அம்மாவிடம்" நான் பேசிக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் .
என்னமோ பண்ணுமா ...! நீ ஜாக்கிரதையா இருந்தா, அதுவே எனக்கு போதும் .
இது போதும் அத்தை உங்களோட இந்த அனுமதியே எனக்கு போதும் நாளை முதல் நான் ஹாஸ்டல்ல தங்கிக் கொள்கிறேன்.
உங்களுக்கு என்ன பத்தி எந்தவித பயமும் வேண்டாம் அங்கு ஹாஸ்டல் வார்டன் ,"விஜயலட்சுமி மேடம்" என்னோடு நன்றாக பழகுகிறார்கள்,
பிள்ளைகளும் அன்பாக பழகுகிறார்கள் அதனால் எனக்கு அங்கு புதிதாக, இருக்கும் உணர்வு வராது என்னை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் அத்தை என்று கூறிட,
இவர்கள் பேசிக் கொண்டே இருக்க, அந்த நேரத்தில் சரியாக கல்யாணசுந்தரம் சுபாவின் அலைபேசிக்கு அழைப்பு தருகிறான்.
கையில் அலைபேசியை எடுத்து சுபா இதோ சுந்தரம் தான் கூப்பிடுகிறான் என்க,
தொடரும்