• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கதைப்போமா - 06

MK14

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
16
13
43
Tamilnadu
❣️ பகுதி -6❣️

"மாமா, அத்தை, மீரா" அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில், சரியான நேரத்தில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே, " கல்யாணசுந்தரத்தின்" அவரின் அழைப்பு வருகிறது.

அத்தையிடம் ..., "மீரா " அத்தை போனை என்னிடம் கொடுங்கள், அப்பாவிடம் நான் விவரத்தை கூறுகிறேன் , என அலைபேசியை வாங்கி மீரா தன் தந்தையிடம் பொறுமையாக பேசி "ஹாஸ்டல் செல்வதற்கு அனுமதி வாங்குகிறாள்".

முதலில் ஆத்திரம் அடைந்த சுந்தரம், பிறகு.. , மீராவிற்காக ஒப்புக்கொண்டார்.

அப்பா, அத்தையிடம் நான் போனை தருகிறேன் நீங்களே உங்களுக்கு முழு சம்மதம் என்று அத்தையிடம் கூறி விடுங்கள் என்று அத்தையிடம் அலைபேசியை கொடுத்துவிட்டாள்.

"அக்கா, தம்பி" இருவரும் பேசி முடித்து ஒரு வழியாக முடிவெடுத்தனர்.

நாளை முதல் மீரா ஹாஸ்டலில் தங்குவதற்கு குடும்பமே அனுமதி தந்து விட்டது.

அப்புறம் என்ன மீரா உனக்கு ஹாப்பி தானே ..?? மாமாவே பர்மிஷன் கொடுத்துட்டார் "யூ என்ஜாய் மா"

"பட் தி சேம் டைம் " கேர்ஃபுல் "மீரா" உன்னோட டியூட்டில மட்டும் கவனத்தை செலுத்து அந்த ஸ்டுடென்ட் பத்தி உனக்கு எந்த கவலையும் வேண்டாம் ஓகேவா "டேக் கேர்" என்று ஷியாம் கூற ,

பதில் ஏதும் பேசாது மீரா தலையை மட்டும் ஆட்டி தனது சம்மதத்தை தெரிவிக்கிறாள்.

ஓகே மீரா....."நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்" நீ ஹாஸ்டல் , போன பிறகு உனக்கு என்ன வேண்டும்?? என்றாலும், தயங்காமல் எனக்கு ஒரு கால் மட்டும் பண்ணு ஓகேவா பாய் என்று ஷியாம் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.

இப்படியே இன்றைய பொழுது கழிந்து மறுநாள் விடிந்தது.

மீரா கல்லூரிக்கு புறப்பட்டாள்.

கல்லூரிக்கு செல்வதற்கு முன் "மீரா ஹாஸ்டலுக்கு சென்று விஜயலட்சுமியை பார்த்து,நான் இன்று மாலை எனக்கு தேவையான திங்ஸ் எல்லாம் கொண்டு வந்து விட்டேன் இன்று முதல் இங்கு தங்கிக் கொள்கிறேன் .

இந்த செய்தியை உங்ககிட்ட சொல்லத்தான் வந்தேன். இப்போ நான் கிளாஸ் போறேன் பாய் மேம் என்று சொல்லிவிட்டு வகுப்பறைக்கு செல்கிறாள்.

மீரா வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்கள் , அத்தனை ஆர்வத்தோடும் மிகுந்த சந்தோஷத்தோடும் காலை வணக்கம் கூறி வரவேற்றனர்.

"எஸ்... எஸ்.. குட் மார்னிங்..! மை டியர்ஸ்" மார்னிங் எல்லாரும் ஏதோ.., ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல என்று கேட்க ,

எஸ் மேம் ....என்று அனைவரும் வேகமாக கத்தவே,

நீங்க எப்படி இன்ட்ரஸ்டா இருக்கிறதை பார்த்தால், எனக்கு இன்னும் கொஞ்சம் எனர்ஜி கிடைக்கிறது என்று மகிழ்வோடு கூறி அதே மகிழ்ச்சியில் நாம் இப்பொழுது வகுப்பை துவங்கலாம் .

அனைவரும் உங்கள் புத்தகத்தை மூடி வைத்து விடுங்கள் .ஒரு நோட்டு பென் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், சில நோட்ஸ் தருகிறேன் நோட் பண்ணிக்கோங்க.

ஆசிரியர் பாடம் எடுக்க எடுக்க மாணவர்கள் ஆர்வத்தோடு பாடத்தை கவனித்தனர் அவர் கூறிய நோட்ஸ் எல்லாம் சரியாக எழுதிக் கொண்டு வந்தனர்.

இச்சமயம் மீரா கரும்பலகையில் ஒரு வரைபடத்தை வரைந்து அதன் விளக்கம் கூறி , இரண்டு மூன்று மாணவர்களிடம் மீண்டும் அந்த விளக்கத்தை எடுத்துரைக்கச் சொல்கிறாள்

மாணவர்களும் ஆர்வத்தோடு பாடத்தை கவனித்ததால் , அவள் கேட்ட கேள்விக்கு எல்லாம் மாணவர்கள் சரியாக பதிலளிப்பது அவளின் பயிற்சிக்கு வெற்றி தருவதாக மகிழ்ந்தாள்.

இப்படியே, வகுப்பு ஆர்வமாக சென்று கொண்டிருக்க, மீண்டும் வேறு வரைபடத்தை வரைந்து அதையும் நடத்தி முடித்துவிட்டு இப்பொழுது நான் ஒரு சில கேள்விகள் கேட்கப் போறேன் என்று கூற

மாணவர்கள் அனைவருமே கேட்கலாம் என்று ஆர்வத்தோடு கத்தினார்கள்.

டாப் ஸ்டார் அவர்களே என்று மீரா
அழைக்கவும்

உள்ளேன் அம்மா என்று தன் வருகையை நிரூபித்தான் சூரி.

நீங்க வந்து இருக்கிறது தெரியும் ஸ்டாரே, நான் இங்கு "அட்டெண்டன்ஸ் எடுக்கவில்லை" எழுந்திரிங்க தலைவரே நீங்கள் முதலில் பிள்ளையார் சுழி போட்டு துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்றிட,

ஐயோ ...! இருக்கட்டும் மேம் உங்கள் பெரிய மனசு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,

இருந்தாலும், சின்ன பசங்க பாருங்க எல்லாம் எவ்வளவு ஆவலா இருக்காங்கன்னு,

நீங்க கொஸ்டின் கேப்பீங்கன்னு அவங்க எல்லாம் ஆவலா காத்திருக்காங்கலே ,

பாவம் பச்ச பிள்ளைங்க.
. ஈஸியான கொஸ்டின் எல்லாம் கேட்ருங்க கடைசியா எனக்குன்னு ஒரே ஒரு கஷ்டமான கொஸ்டின் கேளுங்க மேம் என்று கூறவே,

ஹோ... அப்படியா இருக்கட்டும், இருக்கட்டும் , எப்ப கேட்டாலும் உன்னை தானே கேட்க போகிறேன் ,இப்பொழுது உன்னிலிருந்து துவங்குகிறேன் என்று ஒரு கேள்வியை கேட்க,

பதில் தெரியாமல் திரு திரு என்று முழிக்கப் போகிறான் . என்ற மீராவின் எண்ணத்திற்கு ஏமாற்றம் கிடைத்தது போல் அவன் ஒரு பதில் கூறுகிறான். [A+b]=ab+. என்று துவங்கியவுடன் ,

வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் வேகமாக சிரித்து விடவே,

ஆசிரியர் மீராவிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை .ஆனாலும் சிரிப்பை அடக்கிக்கொண்டு சூரி யின் அருகில் வந்து,

எப்பா தங்கமே நம்ப இன்னும் ஏழாம் வகுப்பு படிக்கல காலேஜ் , செகண்ட் இயர் வந்தாச்சு ஞாபகம் இருக்கட்டும்.

இருந்தாலும் கூட பதில் தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்காமல் , ஏதோ ஒன்று உளறிய, நமது டாப் ஸ்டாருக்கு , அனைவரும் கைத்தட்டி பாராட்டவும் என்று கலகலப்பாக பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில் மணி அடித்து அந்த வகுப்புக்கான நேரம் முடிந்து விடுகிறது.

நாளை பார்ப்போம் என்று கூறிவிட்டு மீரா வகுப்பறையை விட்டு வெளியேறுகிறாள்.

வகுப்பறையில் என்னதான் சிரித்து பேசி மகிழ்ந்தாலும் , அவளுக்குள் இருக்கும் "அலெக்ஸ்" பற்றிய வருடல் நீங்கவே இல்லை.

அவனை எப்படியாவது, சரி செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது.

சரி, நாம் பேசித்தான் பார்ப்போமே என்று அவளுக்குள் எழுந்த ஒரு எண்ணத்தால்,
அவனுடைய வகுப்பறைக்கு செல்கிறாள்.

வகுப்பில் கணித பாடம் நடந்து கொண்டிருக்கிறது. இவள் ஜன்னல் வழியாக பார்க்கிறாள்.

அனைவரும் வகுப்பை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்க கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் அலெக்ஸ் மட்டும் பாடத்தை கவனிக்காமல் காலை உயர்த்தி டிஸ்க் வைத்துக் கொண்டு காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாடல் கேட்டு கொண்டிருப்பதை கவனித்த மீரா வேகமாக வகுப்பறைக்கு வருகிறாள்.

எக்ஸ்கியூஸ் மீ ....! சார், என்று அழைக்க அவரும் எஸ் மேடம்‌.....! வாருங்கள் என்று கூறவே

வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் எழுந்து "குட் மார்னிங்" மேம் என்று மரியாதை செய்ய

அலெக்ஸ் மட்டும் அந்த இடத்தை விட்டு எழும்பவே இல்லை.

அவ்வளவு கோபம் இருந்தாலும், அதனை மீரா வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளடக்கிக்கொண்டு, "சார் ...சாரி ஃபார் டிஸ்டர்பன்ஸ்" நான் அந்த ஸ்டுடென்ட் அலெக்ஸ் கிட்ட கொஞ்சம் பர்சனலா பேச வேண்டும்.

கொஞ்சம் வெளியே அழைத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்று கேட்கவே,

அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே "அலெக்ஸ்" பத்தி தெரிந்ததால் மீராவுடன் அனுப்புவதற்கு சற்று யோசனை செய்கிறார்.

என்ன சார் யோசிக்கிறீங்க ??
எனக்காக ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் அனுப்புங்க என்று கேட்க

சரி மேடம் ....! அழைத்துச் செல்லுங்கள் என்று மீராவிடம் கூறிவிட்டு அலெக்சை திரும்பி பார்க்கிறார்.

நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போல் ஒரு பார்வை பார்க்கிறான் அலெக்ஸ்.

அலெக்ஸ் ஒரு நிமிஷம் வெளியே வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று மீரா பொறுமையாக கூப்பிட்டவுடன் மறுப்பு தெரிவிக்காமல் எழுந்து மீராவுடன் செல்கிறான்.

ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, பேச துவங்குகிறாள்.

ஹே கியூட் பாய்....
நீ எவ்வளவு ஹான்ஸம்மா இருக்க தெரியுமா???

அந்த ஃப்ரண்ட்ல ஹேர் மட்டும் லைட்டா கட் பண்ணிடு , கிளீன் ஷேப் வச்சுக்கோ அப்புறம் பார்மல் போட்டு இன்னிங்ஸ் பண்ணினா உன்னுடைய ஹையிட் அண்ட் வெயிட்டுக்கு நீ அவ்வளவு ரொம்ப ஸ்மார்ட்டா இருப்ப.

இப்படி மீரா மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருக்க,

அலெக்ஸ் கோவமாக இப்பொழுது உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?? நான் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் , நீங்கள் எனக்கு எடுத்துரைக்க வேண்டாம் .என்று கூறிவிட்டு வேறு ஏதாவது பேச வேண்டுமா எனக்கு டைம் ஆகுது
என்று பதில் கூறுகிறான்.

நீங்க மாறனும் அலெக்ஸ் கண்டிப்பா மாற வேண்டும். இது உங்களுடைய கல்லூரி நிறைய மாணவர்களை உருவாக்கிக்கிட்டு இருக்கீங்க ,
மாணவர்கள் சொல்லக்கூடாது எதிர்கால இன்ஜினியர்கள் உருவாக்கிக்கிட்டு இருக்கீங்க, அப்படிப்பட்ட நீங்களே இது மாதிரி சின்ன சின்ன தவறுகள் செய்யும்பொழுது அது நிறைய மாணவர்களை பாதிக்க செய்யும் .

அதுமட்டும் இல்லாமல் உங்கள் மனநிலையும் பாதிக்கும் சற்று யோசித்துப் பாருங்கள் என்று அவள் பேசிக் கொண்டிருக்க

ஆத்திரமடைந்த அலெக்ஸ் உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புத்தி இல்லையா எனக்கு என்னை பார்த்துக் கொள்ள தெரியும்.

"டோன்ட் கிராஸ் மை வே" புரியுதா என்னோட வழியில், குறுக்கிட்டா தூக்கி அடிச்சிட்டு போயிட்டே இருப்பேன் .என்று ரவுடி போல் கத்தி விட்டு தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பாக்கை எடுத்து தன் உள்ளங்கை போட்டு அதை நன்றாக தேய்த்து வாயில் அடைத்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறான் அலெக்ஸ்.

மேலும் எரிச்சல் அடைந்த மீரா இவனை என்னதான் செய்வது ?? இப்படி பொறுக்கி போல் நடந்து கொள்கிறானே, இதற்கு உடனடியாக கட்டாயம் தீர்வு எடுத்தாக வேண்டும் என்று வேகமாக முதல்வரின் அறைக்கு சென்று,

நடந்த செய்தியை முதல்வரிடம் எடுத்து கூறுகிறாள்

இது போல் நடப்பது முதல்வருக்கு புதிதல்ல , எனவே அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக பதில் கூறுகிறார்.

என்ன சார் ...நான் இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் . நீங்க ரொம்ப கேரளாசா பதில் சொல்றீங்க, என்று மீரா. ஆவேசமாக முதல்வரிடம் கேட்க

இல்லை மீரா..... நாங்கள் எவ்வளவு முயற்சி செய்து பார்த்து விட்டோம். ஆனால் கை மீறி போன ஒரு விஷயம் மாத்த முடியாது.

இன்னும் நான்கு மாதத்தில் அவன் இந்த கல்லூரி படிப்பை முடித்து சென்று விடுவான் .பிறகு , எந்த பிரச்சனையும் இருக்காது இதை பெரிது படுத்தாமல் நீங்கள் உங்களது வேலையை பாருங்கள் என்று கூறுகிறார்.

என்னடா முதல்வரே இப்படி சொல்கிறார்கள் இருந்தும் அவன் மனம் இல்லாமல் மீண்டும் ஒருவரை முதல்வரிடம் , தாளாளர் சார் அவர்களை நான் ஒரு முறை பார்த்து பேச வேண்டும் எனக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும் என்று கேட்கிறாள் .

தாராளமாக பேசலாமே, சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இங்கு அவர் வருவார் அவர் வரும்பொழுது நாம் பேச முடியும்.

ஆனால் , அவரிடம் நீங்கள் "அலெக்ஸ்" பத்தி பேசுவது , வேஸ்ட் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு நான் தடை போடவில்லை என்று முதல்வர் அனுமதி தருகிறார்.

சரி.... தேங்க்யூ சார் ...! என்று , கூறிவிட்டு வெளியேறுகிறாள் மீரா

இப்படியே, இந்த நாள் முடிந்து விட மாலை கல்லூரி முடிந்த , பிறகு மீரா ஹாஸ்டலுக்கு வருகிறாள் .

இன்று மீரா ஹாஸ்டலுக்கு வருவதை தெரிந்துகொண்ட "விஜயலட்சுமி" மேடம் மற்றும் அங்கு உள்ள மாணவிகள் அனைவரும் சேர்ந்து "மீரா" வை பயங்கரமாக வரவேற்றனர்.

ஹாஸ்டல் எங்கும் பலூன் கட்டி ஜிகினா வெடித்து ஆர்ப்பாட்டம் செய்து வரவேற்றனர்.

இந்த அளவு வரவேற்பினை எதிர்ப்பார்க்கவில்லை மீரா. அவளுக்கு காலையிலிருந்து இருந்த மன அழுத்தத்திற்கு , இது சற்று ஆறுதலாக இருந்தது.

அங்குள்ள மாணவிகளிடம் மீராவின் வருகை அவ்வளவு சந்தோஷம் அதை தாண்டி விஜயலட்சுமி மேடத்திற்கு எல்லையற்ற சந்தோஷம் தந்தது.

இப்படியே அனைவரும் மகிழ்ந்து, வேண்டிக்கொண்டிருக்க நேரம் சென்றது தெரியவில்லை,

ஆறு மணிக்கு ஹாஸ்டலுள் வந்தவள், இப்படி அவளைச் சுற்றி நின்று அனைவரும் பேசி மகிழ்ந்தே, இரண்டு மணி நேரம் கடந்து மணி எட்டாகிவிட்டது.

சரியாக எட்டு மணி ஆனதும் , வார்டன் விஜயலட்சுமி சாப்பாடு மணியடித்து அனைவரையும் சாப்பிட டைனிங் ஹாலுக்கு அனுப்பி விடுகிறார்.

மீரா நீங்களும் வாங்க நாமளும் சாப்பிட்டு வரலாம் என்று கூறி மீராவையும் சாப்பிட அழைத்துச் செல்கிறாள்.

சாப்பாடு மற்ற வேலைகள் என அனைத்தையும் முடித்து விட்டு இருவரும், உறங்குவதற்காக அறைக்கு வருகிறார்கள்.

விஜயலட்சுமி , மீராவிடம் முதல் முறையாக எனக்கு துணையாக ஒருவர், உடன் இருக்கிறார் என்னுடன் தங்கப் போகிறார் என்று நினைத்தால் எல்லையற்ற மகிழ்வோடு இது "நினைவா ,கனவா" என்று கூட புரியவில்லை என்று கூற

ஏன் இப்படி??? சொல்றீங்க இதற்கு முன்னால் உங்களுக்கு யாரும் இங்கு துணை இல்லையா?? என்று மீரா கேட்க

இங்கு மட்டும், இல்லை எங்குமே எனக்கு துணை என்று யாரும் இல்லை என்று பதிலளிக்க ,

குழப்பத்தோடு பதில் ஏதும் கேட்காமல் மௌனமாக விஜய்யின் முகத்தையே பார்க்கிறாள் மீரா ,

ஆமாம் ....! என்னுடைய கணவர் செயின் ட்ரிங்கர், ஒருமுறை அவருக்கும் எனக்கும் பயங்கர சண்டை வந்தது அப்பொழுது அவரிடம் இருந்து என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் தப்பித்து ஓட வேண்டும் என்று பயத்தில் என் மூன்று மாத குழந்தையை தூக்கிக்கொண்டு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.

எதிர்பாராத விதமாக அங்கு ஒரு சம்பவம் நடந்தது அதில் என்னுடைய குழந்தையை தவற விட்டேன்.

மறுபடி எனக்கு என் வீடு திரும்ப மனமில்லை ‌, அந்த ஆளை, பார்க்கவும் பிடிக்கவில்லை .

அவரோடு வாழ இஷ்டமில்லை என்ன செய்வது ?? என்று சிந்தித்த பொழுது, சரி பட்டணம் வந்து ஏதாவது வேலை செய்து கொள்ளலாம் கையில் தான் டிகிரி சான்றிதழ்கள் இருக்கிறதே என்று தைரியத்தில் புறப்பட்டு சென்னை
வந்து விட்டேன்.

முதலில் ஒரு பள்ளிக்கூடத்தில் பிரைமரி ஆசிரியராக ஏழு ஆண்டு காலம் பணிபுரிந்தேன்.

பிறகு, ஒரு ஆசிரமத்தில் ஆசிரியராக இரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்தேன்.

அதன் பிறகு, டெம்ப்ரவரியாக ஒரு லைப்ரரியில் ஓராண்டு காலம் பணிபுரிந்தேன் .

இப்படியே நாடோடி போல் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, ஒருநாள் செய்தித்தாளில் இந்த கல்லூரி விளம்பரம் பார்த்து இங்கு இண்டர்வியூ அட்டென்ட் பண்ணி உடனே ஜாப்ல சேர்ந்துட்டேன்.


கிட்டத்தட்ட இங்கு நான் ஒரு எட்டு வருடமாக பணிபுரிந்து வருகிறேன். என்று பேசிக்கொண்டே கண் கலங்குகிறாள் "விஜி "

விஜியின் அருகில் வந்து கண்களை துடைத்துவிட்டு, கவலை பட வேண்டாம் மேம்,

எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளலாம் .சரி ....உங்கள் கணவரை பற்றி ஏதாவது தெரியுமா ???இப்பொழுது அவர் என்ன செய்கிறார்??? எங்கு இருக்கிறார் ..???தெரியுமா என்று கேட்க,

தெரியும் ..அவர் இப்பொழுது குடிப்பதில்லையாம். என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று திருந்தி விட்டதாக,நான் ஆசிரமத்தில் பணிபுரிந்த போது என்னை வந்து கூப்பிட்டார்.

அவர், எனக்கு செய்த கொடுமைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தால் , அவரோடு சேர்ந்து வாழ்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

இப்படியே இந்த வாழ்க்கை எனக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கு .அதனால் நான் அவரிடம் செல்லவில்லை.

நான் பணிபுரிந்த அதே ஆசிரமத்தில் இப்போது அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

எப்போவாவது இருவரும் பார்த்துக் கொள்வது உண்டு.

இன்று போல் அவர் அன்று திருத்தி இருந்தால். நான் என் குழந்தையை தொலைத்து இருக்க மாட்டேன்.

எல்லாமே கை மீறி போயிடுச்சு. என் மகள் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் வயது தான் இருந்திருக்கும். என்று ஆதங்கமாக கூற,

பிறகு, உங்கள் மகளை நீங்கள் தேடவேயில்லை யா என்றிட,

எங்கு போய் மா தேடுவது??

அவளைப் பற்றி எந்த தகவலும் இல்லை மா...!

இப்ப ஏன் கவலைப்படுறீங்க??? என்னையே , உங்க பொண்ணா நினைச்சுக்கோங்க,

இனி உங்களுக்குன்னு ஒரு உறவு இருக்கான்னு யாராவது கேட்டா , என் பொண்ணு இருக்கா அப்படின்னு சொல்லுங்க அம்மா என்று கூற,

மீரா அம்மா என்று அழைத்ததும் இத்தனை நாட்கள் மனதில் தேக்கி வைத்திருந்த வழிகள் வேதனைகள் எல்லாம் பறந்து போனது போல் அவளுக்கு ஓர் உணர்வு .

அம்மா என்று யாரும் கூப்பிட மாட்டார்களா என்ற ஏக்கம் தீர்ந்தது போல் ஓர் உணர்வு.

மீராவை கட்டிக்கொண்டு சத்தமாக அழுது ,தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள் விஜி,

என்னது மா ....குழந்தை பிள்ளை மாதிரி அழுதுகிட்டு வாங்க , டைம் ஆயிடுச்சு இருவரும் தூங்கலாம் .

நாளை சாட்டர்டே காலேஜ் லீவு தானே நாளை நாம நிறைய பேசலாம் , என்று மீரா விஜியை படுக்கையறைக்கு அழைத்துச் செல்கிறாள்.

❣️ தொடரும் ❣️
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அலெக்ஸுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு 🤔

மீராவை பொத்தி வளர்க்கிற அவ அப்பா அம்மா மேல ஏனோ சந்தேகம் வருதே 🧐 நிஜமாவே மீரா பெத்த பொண்ணா இல்ல... 🧐

விஜி பேசுறதை பாத்தா மீரா தான் தொலைச்ச அவங்க பொண்ணா 🤔