• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கதைப்போமா -07

MK14

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
16
13
43
Tamilnadu
❣️கதைப்போமா❣️
‌‌
‌. ❣️ பகுதி -7❣️

வெகு நாட்களுக்குப் ,பிறகு நேற்று இரவு தான் "விஜி"நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் , காலைப் பொழுது விடிந்தவுடன், விஜி எழுந்து "தன் காலை வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு " நேரத்தை பார்த்தால்
8 மணி ஆகிவிட்டது .

ஆனாலும், மீராவிற்கு பொழுது விடியவில்லை.

என்னடா..? இவ, இன்னும் தூங்கறாளே என்று அவளை எழுப்பலாமான்னு, அவளின் அருகே நாற்காலியை போட்டு மெல்ல அமருகிறாள் "விஜி "

மீரா தூங்கிக் கொண்டிருக்கும் போது, தன் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு மீராவின் அழகை ரசித்துக்கொண்டிருக்கிறாள் விஜி.

திடீரென மீராவின் அலைபேசி , அவள் தலையணைக்கு கீழிருந்து அலற , உடனே விழித்த கொண்டவளின் கண்களுக்கு முதலில் தெரிந்தது விஜியின் முகமே,

விஜியை பார்த்துக் கொண்டே, தன் புருவத்தாலே என்ன என்று ?? கேட்கிறாள் மீரா.

ஒன்றுமில்லை என்று விஜியும் தன் கண்களாலே அவளுக்கு பதில் அளிக்கிறாள்.

"மீரா" நேரத்தை பார்த்து , ஐயோ....! டைம் எட்டாகிருச்சா ??? இவ்வளவு நேரம் நான் தூங்கிருக்கேனா??? என்று கேட்க

ஆமாம் ...! எட்டாகிடுச்சு தான் , அதனால என்ன ?? இன்னைக்கு காலேஜ் லீவு தானே , இப்போ சீக்கிரம் எழுந்து என்ன பண்ண போறீங்க ?? என்று விஜி கேட்க

ச்சை...எனக்கு இப்படி ஒரு மம்மி எனக்கு கிடைக்கவில்லையே, இதுவே எங்கூட்டு மம்மியா இருந்தா, எட்டு மணி வரைக்கும் நான் தூங்கி இருந்தா வலக்கமாறு, பெட்டுக்கு வந்திருக்கும்.

நான் குடுத்து வெச்சது அவ்வளவு தான் என்று புலம்பிய படியே, பாத்ரூமில் நுழைகிறாள்.

சரி.... நாம நம் , வேலையை பார்ப்போம் என்று விஜி, காலை உணவுக்கான மணியை அடித்து விடுகிறாள், மாணவிகளை காலை உணவு அருந்துவதற்காக, "டைனிங் ஹாலுக்கு செல்ல" ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள்.

அனைத்து மாணவிகளையும், உணவருந்த அனுப்பிவிட்டு தனது ரூமில் நோட்டில், ஏதோ எழுதிக் கொண்டிருக்க,

குளியலறையை விட்டு வெளியே வந்த மீரா, என்னம்மா ??? ஏதோ , எழுதிட்டு இருக்கீங்க , சாப்பிடலையா ?? நீங்க என்று கேட்க,

இல்லம்மா ... நீங்களும் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்று கூற,

இல்லம்மா மணி 9 ஆச்சே சாப்பிட நேரமில்லை என்று , தனது கை கடிகாரத்தில் நேரத்தை பார்க்கிறாள் மீரா.

ஏம்மா..?? இன்னிக்கு காலேஜ் லீவு தானே, பிறகு என்ன அவசரம் என்று விஜ கேள்வி கேட்க,

லீவுதான்மா, பட், டூடே "சாட்டர்டே" காலேஜுக்கு , கரஸ்பாண்டன்ட் சார் வருவாங்கலாமே அவரோட சன் "அலெக்ஸ்" பத்தி சில விஷயம் அவர் கூட டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு.

சோ ‌‌..... அவர , மீட் பண்ணிட்டு வந்து சாப்பிடுகிறேன் என்றிட ,

என்னது அலெக்சா அவனெல்லாம் ஒரு ஜென்மமா?? அவன பத்தி சார் கிட்ட நீங்க, என்ன டிஸ்கஸ் பண்ணினாலும் ஒன்னும் நடக்காது அது சுத்த வேஸ்ட் என்று விஜியும் மற்றவர்களைப் போல் கூறுகிறாள்.

ஒரு நிமிடம் ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்கிறாள் மீரா ,அலெக்ஸ் என்ற பெயர் சொன்னாலே அனைவரும் சொல்லுகின்ற ஒரே பதில் எதுவாகத்தான் இருக்கிறது என்ன செய்வோம் என்று சிந்தனை செய்தாலும் சரி முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம் என்று ஒரு முடிவோடு அவரை சந்தித்து பேசலாம் என்று முடிவு எடுத்து விட்டாள்.

இல்லை பரவாயில்லை அம்மா என்ன நடந்தாலும் பரவாயில்லை என்னோட திருப்திக்கு நான் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன் அவரிடம் சென்று பேசி பார்க்கிறேன் முடியாத நிலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறவே,

சரி மா உங்களுடைய முயற்சிக்கு நான் முட்டுக்கட்டை போட விரும்பவில்லை.
நீங்கள் இந்த கல்லூரிக்கு புதிது உங்களுக்கு கரஸ்பாண்டன்ட் சார், பழக்கம் இல்லை அதனால் எனக்கு ஒரு யோசனை வருகிறது என்றாள் விஜி

என்ன யோசனைமா கூறுங்கள் கேட்போம் என்கிறாள் மீரா...

என்னுடைய தம்பி மகன் இந்த கல்லூரியில் தான் வேலை பார்க்கிறான் தம்பி என்றால் சொந்த தம்பி அல்ல என்னுடைய சித்தப்பா மகன் அவனுக்கும் எனக்கும் ஒரு மன வருத்தம் அதனால் நான் சென்னை வந்த கூட என்னை வந்து பார்க்கவில்லை இப்போது வரைக்கும் என்னிடம் பேசவில்லை

ஆனால் தம்பி பொண்டாட்டியும் தம்பி மகனும் நான் சென்னையில் இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் வந்து என்னிடம் பேசி வீட்டுக்கு அழைத்தார்கள்

ஆனால் நான் போகவில்லை இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்பதால் நம்மிடத்திலே நாம் இருந்து கொள்வோம் என்று முடிவெடுத்து விட்டேன் ஆனால் தம்பி பிள்ளை மட்டும் என் மீது அவ்வளவு பாசமாக இருப்பான்.

என்னை அடிக்கடி இங்கு வந்து பார்த்துவிட்டு செல்வான் போன் பண்ணி பேசுவான் என்கிறாள் விஜி

ஹோ... அப்படியா அம்மா இந்த கல்லூரியில் யார் உங்கள் தம்பி மகன் பெயர் சொல்லுங்க என்று ஆவலோடு கேட்கிறாள் மீரா

அவன் பேரு வெங்கடேஷ் , பிள்ளைங்க எல்லாம் ,"வெங்கி சார்னு" ஆசையா கூப்பிடுவாங்க.

ஓஓஓ....எஸ்... பசங்க எல்லாம் வெங்கி சார் என்று சொன்னாங்க அவரும் பிசிக்ஸ் டிபார்ட்மென்ட் தானே லீவுல இருக்கிறதா சொன்னாங்களே அவர தான் சொல்றீங்களா நீங்க என்று மீரா கேட்க,

ஆமாம்மா அவனேதான் இப்ப லீவுல இருக்கான் அவன் அப்பா மிலிட்டரி ல இருந்து ரிட்டயர் ஆனார். அவங்க அம்மா வீட்டுல தான் இருக்கா கூட பொறந்தது ஒரு தங்கச்சி மெடிக்கல் படிச்சிட்டு இருக்கா.

அவன் திங்கட்கிழமை அன்று ,காலேஜ் வந்துருவான், அவன் கிட்ட சார் நல்லாவே பேசுவாரு .

அடுத்த வாரம் வேணும்னா, வெங்கி அழைச்சிட்டு நீ போய் பாரேன் மா என்று விஜி கூறிட

இல்லை மா... "நான் இப்போது போய் பார்த்துவிட்டு வருகிறேன்"
நடப்பது நடக்கட்டும் .என்று கூறிவிட்டு கல்லூரிக்கு சென்று 'தாளாளர்' அவர்களை சந்தித்து பேசுகிறாள் "மீரா."

'தாளாளர்' அறைக்குள் ,சென்று வந்த 'மீரா ' உள்ளே என்ன பேசினாளோ?? தெரியவில்லை , சற்று முகம் வாட்டத்தோடு தான் வெளியே வருகிறாள்.

நேராக ஹாஸ்டலுக்கு சென்று மீரா அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருக்க,

அதனை கவனித்த விஜி அருகில் வந்து என்ன மீரா அப்செட்டா இருக்க மாதிரி இருக்கு சார் உங்களை மதிக்கவில்லையா என்று கேட்க

பதில் ஏதும் பேசாமல் ,ம்ம்ம்.. ம்ம்... என்று மட்டும் தலையசைக்க,

நான் தான் முன்னவே சொன்னேனே, எனக்கு ,அவரைப் பற்றி நன்றாக தெரியும் .

அதனால் தான் "வெங்கியை"உடன் அழைத்துச் செல்லலாம் என்று சொன்னேன் சரி பரவாயில்லை போனது போகட்டும் அதை விட்டுத் தள்ளுங்கள் இனிமேல் சிந்திக்காமல் உங்கள் வேலையை பாருங்கள்.

எனக்கு கொஞ்சம் அலுவலக பணி இருக்கிறது நான் என் பணியை முடித்துவிட்டு வருகிறேன் என்று விஜி கூற,

"ஓகே மா ...!" நானும் , ஹாஸ்டலுக்கு தேவையான சில திங்ஸ் வாங்க வேண்டி இருக்கு. பக்கத்துல இருக்கும் மாலுக்கு போயிட்டு வந்து விடுகிறேன் என்று மீரா கூறிவிட்டு புறப்பட்டாள்.

அருகில் இருக்கின்ற மாலுக்கு சென்று அங்கு அவளுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கி கொண்டிருக்கும் போது,

தற்செயலாக எதிரில் வந்தவனோ, வேகமாக அவளை கடந்து மேலே, ஏறி செல்ல, என்ன நினைத்தானோ?? ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிப் பார்த்து,

ஹே...நம்ப "பெட்ரோலு" என்று பெரும் மகிழ்ச்சியோடு மனதிற்குள் சொல்லிக்கொண்டே ,

ஓய்.....! பெட்ரோல் என்று வேகமாக கத்த,
அவளைத்தவிர அங்குள்ள அனைவரும் திரும்பி பார்த்தனர்.

ஏறிய படிக்கட்டுகளில், மீண்டும் இறங்கி அவளுக்கு முன்பு, மூச்சிரைக்க வந்து நிற்கின்றான்.

மூச்சிரைக்க வந்து நின்றவனை பார்த்த மீரா ஒரு நொடி எங்கேயோ,பார்த்தது போல் இருக்கிறதே என்று யோசிக்க,

ஹே.... ! "பெட்ரோல் " என்ன யோசிக்கிற?? ஞாபகம் வந்துவிட்டதா??
என்று அவன் கேட்க,

ஏய்... எஸ்..." ஹலோ" நீயா....!
"தகர டப்பா " என்றிட,

எஸ்.....! சரியா சொல்லிட்டியே என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க,

ம்ம்ம்.... உன்னை மறக்க முடியுமா?? ஃபுல் கட்டு கட்டிட்டு, நண்பன பட்டினி போட்டவன் தானே?? என்று விளையாட்டாய் கேட்க,

அவனும் , சிரித்துக்கொண்டே , தன் இடது கையால் தலை முடியை வருடிக் கொண்டேன் அசடு வழிவது போல் நிற்க,

இடையில் ஒரு குரல்,"டேய் ,மச்சான்"
உன்னை எங்கெல்லாம் தேடுவது எங்கே என்ன பண்ற?? என்று அவன் நண்பன் கேட்க,

ஓகே..." டப்பா ". பைய்....!
என்று சிரித்துக் கொண்டே ,"மீரா"
அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல,


இவனும் " பைய்" பெட்ரோல் என்று கூறிவிட்டு நண்பனோடு விரைந்து செல்கிறான்.

சிறிது தூரம் சென்ற பிறகு அவன் ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டு இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தோமே அவளிடம், பெயர் கேட்க மறந்து விட்டோமே என்று வேகமாக திரும்பிப் பார்க்கிறான் ஆனால் அவளோ தொலைதூரம் சென்று விட்டாள்.

ச்சை... மிஸ் ...பண்ணிட்டோமே என்று எண்ணிக் கொண்டே , ஏதோ...ஏக்கத்தோடு செல்கிறான்.

அய்யோ.... இந்த தகர டப்பா பெயரை கேட்காமல் வந்து விட்டோமே என்று திரும்பிப் பார்த்தால் திரும்பிப் பார்க்காமல் நண்பனோடு தொலைதூரம் சென்று விட்டவனை கவனித்தவள்,

மெல்லிய புன்னகையோடு, அவன் பெயரை கேட்டிருக்கலாமோ மிஸ் பண்ணிட்டேனே, இன்று ஒருவித வருத்தத்தோடோ நடந்து செல்கிறாள்.

இப்படியே இது சிந்தனையோடு ஹாஸ்டலுக்கு வந்து நுழைக்கிறாள்.

என்னம்மா,..! பர்சேஸ்லாம், முடிஞ்சதா??
என்று விஜி கேட்க,

மௌனமாய், தலையை மட்டும் அசைத்து ம்ம்.... என்கிறாள்,

என்ன ஆச்சு ???இவளுக்கு, உம்முன்னு இருக்காளே, சரி.... காலையில் நடந்த சம்பவம் இன்னும், இவள் மனதை வருடுகிறது போல என்று விஜி மனதுக்குள்ளயே பேசிக் கொள்கிறாள்.

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. திங்கட்கிழமை வந்தது காலையில் எழுந்து சுறுசுறுப்பாக மீரா கல்லூரிக்கு புறப்படுகிறாள்.

என்றும் இல்லாத ஒர் புத்துணர்வு அவளை சுற்றி கிடக்கிறது, இன்று மட்டும் ஏனோ??

மகிழ்வோடு , கல்லூரிக்கு சென்றவளுக்கு, அங்கும் "ஓர் மகிழ்ச்சியான செய்தி " அவள் செவிக்கு வந்து விழுந்தது.

கல்லூரிக்கு சென்ற உடனே, முதல்வர் மீராவிற்கு ஓர் அழைப்பு கொடுக்கிறார்.

"எக்ஸ்கியூஸ் மீ ....! சார் ,குட் மார்னிங்..! என்று நுழைந்தவளை,

எஸ்....! கம்மிங் மீரா ஹேப்பி மார்னிங் என்று அவரும் பதிலளித்து,

இப்போது நான் உங்களை எதற்காக அழைப்பேன் என்று தெரியுமா??

இல்லை சார்.....!தெரியாதே,

நெக்ஸ்ட் மந்த் இன்டர் காலேஜ் காம்படிஷன் வருகிறது .அதில் பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டுடென்ட்ஸ, நீங்களும் மிஸ்டர் வெங்கி சாரும், கேர் பண்ண வேண்டும்.

இதுவரை யாரும் முயற்சிக்காத ப்ராஜெக்ட் நாம பண்ண வேண்டும் அதற்கு தகுந்தாற்போல் மாணவர்களுக்கு நீங்கள் இருவரும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறுகிறார் ‌.

எஸ்...ஸுயர், பட் "வெங்கி" சார், யாருன்னு ??? எனக்கு தெரியாதே , அவர் லீவுல இருக்கிறதா பசங்க சொன்னாங்களே,

ஹோ.... நீங்க இன்னும் அவரை மீட் பண்ணலையா இதோ இப்போ வந்து விடுவார், நானே இன்றோ தருகிறேன் என்றிட,

ஓகே சார் நான் போய் என் வொர்க் பார்க்கிறேன் பிறகு சார் வந்தவுடன் வருகிறேன் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நான் சிறப்பாக செய்கிறேன் என்று கூறிவிட்டு நிறைய விட்டு வெளியேறுவதற்காக திரும்பிட,

அப்பொழுது ,"எக்ஸ்க்யூஸ் மீ சார் ...!" என்று ஒரு குரல் உள்ளே வருகிறது,

எஸ் கம்மிங் என்று முதல்வர் கூற,

உள்ளே வருவது. பேராசிரியர் "வெங்கி"

அவனின் வருகையை சற்றும் எதிர்பாராத "மீரா", ஒர் நிமிடம் சிலை போல் நிற்கிறாள்,

சிலை போல் நிற்கின்ற மீராவை கண்டவனும், மலைத்தே நிற்கிறான்.

வாங்க வெங்கி என்று முதல்வர் அழைக்க,

"எஸ்.... சார்" என்று "மீரா"வை பார்த்துக் கொண்டே , உள்ளே வருகிறான் "வெங்கி"...!

அவன் உள்ளே வரும் வரை அவனை பார்த்துக் கொண்டிருந்த மீராவிடம், ஹலோ மீரா,

நான் சொன்னல்ல வெங்கி இவர்தான் என்று முதல்வர் அறிமுகம் செய்ய,

ஏய்...." தகர டப்பா ", உனக்குத்தான் எல்லோரும் இவ்வளவு பில்டப் கொடுத்தாங்களா என்று மக்களான பார்வையோடு ,ஹாய் சார் ...என்கிறாள்.

பதிலுக்கு அவனும் ஹாய் மேடம் என்று கூறுகிறான்..

வெங்கி ஷீ ஈஸ் மீரா, இவங்களும் பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் தான், நாம செய்யப் போற நெக்ஸ்ட் இன்டர் டே ப்ராஜெக்ட்கு உங்க கூட இவங்களையும் ஹெல்ப்புக்கு சேர்த்துக்கோங்க

இருவரும் சேர்ந்து அருமையான ப்ராஜெக்ட் செய்து நமது கல்லூரியை வெற்றியடைய செய்ய வேண்டும் இப்பொழுது நீங்கள் இருவரும் வகுப்புக்கு செல்லலாம் என்று இருவரையும் அனுப்பி விடுகிறார் முதல்வர்.

ஆமாம் ....! ஏற்கனவே சந்தித்துக் கொண்டு , அறிமுகமான "பெட்ரோல் தகர டப்பா " தான் இவர்கள் இருவரும் "வெங்கி- மீரா"

❣️ தொடரும் ❣️
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கரஸ் என்ன சொல்லி இருப்பார் மீராக்கிட்ட 🤔

டப்பா 🤩 பெட்ரோல் 🤣🤣🤣