• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கதைப்போமா -08

MK14

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
16
13
43
Tamilnadu
❣️கதைப்போமா❣️

❣️ பகுதி -8❣️

"வெங்கி -மீரா" இருவரும் முதல்வரின் அறையை விட்டு வெளியே வந்தவுடன்,

ஏய் .... "பெட்ரோலு " ன்னு ஆனந்தத்தோடு, கடைசில நீ, அங்க சுத்தி, இங்க சுத்தி இங்கேயே வந்துட்டியே ...! என்று சிரித்துக் கொண்டான் வெங்கி

மங்கி சார்...‌ மங்கி சார்னு.... பசங்க எல்லாம் ரொம்ப பெருமையா பேசினாங்களே , அது நீங்க தானா??? என்று புருவத்தை உயர்த்தி நக்கலாக வெங்கியை பார்க்கிறாள் மீரா,

ஏதே.... மங்கி சாரா??? என்று ஷாக் ஆனான் வெங்கி,

ஐயோ ...."சாரி ,சாரி " வெங்கி... சார் சொல்லி இருக்காங்க , போல என்னுடைய காதில் தான், "மங்கி சார்னு" விழுந்திருச்சு , போல என் ஸ்வீட் "தகர டப்பாவே", என்றிட

யப்பா சாமி .....உன் காதுல , இதுவும் விழும் இதுக்கு மேலயும் விழும், என்னென்ன இன்னும் விழுந்துச்சோ??? தெரியலையே என்று புலம்பியப்படியே,

ஓகே...லீவ்..இட்

ஐம் வெங்கடேஷ்....!

"ஹெட் ஆப் தி பிசிக்ஸ்" டிபார்ட்மெண்ட்...!

அப்பா பெயர் என்று வெங்கி ஆரம்பித்த உடனே,
அப்பா - வேலாயுதம் (ரிட்டையர்ட் ஆர்மி ஆபிசர்)
அம்மா-சரஸ்வதி (ஹோம் மேக்கர்)
தங்கை- தீபா(மெடிக்கல் படிக்கிறா,)

அது மட்டும் இல்லாமல், சார்..... ரொம்ப நல்லவரு , வல்லவரு நாளும் அறிஞ்சவரு அப்படித்தானே மிஸ்டர் மங்கி சார்...,, ச்சை .... வெங்கி சார்...!

ஏய் ...! நீ இப்போ அடிதான் வாங்க போற, சரி ....என்ன பத்தி உனக்கு எப்படி தெரியும்?? என் ஜாதகமே உன்கிட்ட இருக்கு போல...

பசங்க சொன்னாங்களோ என்று ஒருவித , சந்தேகத்தோடு இழுக்க???

பசங்க யாருமே சொல்லல பா ,
என்றாள் மீரா....

அப்போ, வேற யாரு சொல்லி இருப்பா??? என்று சிந்தனையோடு கேட்கிறான் வெங்கி,

என்னவோ , புரியாத புதிராகவே, இருக்கிறது .சரி போகட்டும் விடு என்னை பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டிங்க , பட் உங்கள பத்தி எனக்கு எதுவுமே தெரியாதே.

சோ ....உங்கள பத்தி டீடெயில்ஸ் எனக்கு சொல்லுங்களேன் , என்று ஆவலோடும், ஆர்வமாகவும் " வெங்கி ,மீராவிடம்" கேட்க,

ஹே... வெயிட்... மேன்...
‌. என்ன..?? என்னமோ, புதுசா "வாங்க, போங்கன்னு " எல்லாம் பேசுற, இது நல்லாவே இல்லை,

எப்பவும் , போல "வா ,போன்னு " பேசேன் , அதான் ஜோவியலா இருக்கு என்று கூறிய மீராவை சற்று நிமிர்ந்து பார்க்கிறான் "வெங்கி "


அப்படிங்கற....! என்று அவன் இழுக்க,
ஆமாங்கிறன்...! என்று இவள் இழுக்க,

இவர்கள் , இருவரும் "இழுத்து, இழுத்து" பேசிக் கொண்டிருக்க , கல்லூரியில் முதல் வகுப்பு முடிந்து, பெல் அடித்து விட்டது.

பெல் அடிக்கும் சத்தம் கேட்டுத்தான், இருவரும் ஒரு நிலைக்கு வந்து வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற நினைவு வருகிறது.

ஐயோ....! மீரா உன்கிட்ட பேசிட்டு இருந்ததில் , "டைம் போனதே தெரியல" பர்ஸ்ட் ஹவரே முடிஞ்சிருச்சு பா.

எனக்கு பைனல் இயர் கிளாஸ் இருக்கு நான் போறேன் நீயும் கிளாஸ்க்கு போ, லஞ்சில் மீட் பண்ணுவோம் பைய் என்கிறான்.

இருவரும் பைய் சொல்லிக்கொண்டு அவரவர் வகுப்பிற்கு சென்று விட்டனர்.

வகுப்பிற்கு , செல்லும் வழியில் ஏனோ?? இருவரும் அவர்களுக்குள் நடந்த உரையாடலை நினைத்து சிரித்துக்கொண்டே , நடந்து செல்கின்றனர் வகுப்பறையை நோக்கி.

எப்படா?? உணவு இடைவேளை வரும்??? என்பது போல் இருவரும், வகுப்பறையில் கடிகாரத்தை பார்த்து கொண்டே நேரத்தை தள்ளிக் கொண்டே இருக்க ,

இருவரும் ஆவலோடு எதிர்பார்த்த உணவு இடைவேளை நேரம் வந்துவிடுகிறது.

இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காலை பேசியதில் மீதம் வைத்ததை எல்லாம், இப்பொழுது பேசிக் கொள்ள, அதாவது மீரா தன்னை பற்றி அறிமுகம் செய்து கொள்கிறாள்.

ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பணிபுரிய ஆர்வம் என்று அவள் கூறியவுடன்,

நான் இரண்டு முறை தேர்வு எழுதி அதில் பாஸ் பண்ணி விட்டேன் . ஆனால் இந்த மாணவர்களை விட்டு எனக்கு அங்கு செல்ல மனமில்லை.

என்னிடம், நிறைய மாடல் கொஸ்டின் இருக்கு நான் உனக்கு தருகிறேன் அதை எல்லாம் படித்தாலே போதும் நிச்சயமாக பாஸ் பண்ணிடலாம் என்று வெங்கி கூற

ஹே... சூப்பர் பா..... அப்போ இந்த டைம் நான் நிச்சயமா எக்ஸாம்ல பாஸ் பண்ணிடுவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு . என பேசிக்கொண்டே,

" ஓகே டைம் ஆயிடுச்சு " விஜி மேம் வெயிட் பண்ணுவாங்க.. நான் ஹாஸ்டல் போறேன் என்று கூறுகிறாள்

விஜயலட்சுமி மேடம் அவங்க , ஏன்?? உனக்காக வெயிட் பண்றாங்க?? என்று இவன் கேட்க

ஆமாம்....! பா, நான் ஹாஸ்டல்ல அவங்க கூட தான் , அவங்க ரூம்ல தான், ஸ்டே பண்ணி இருக்கேன் .

சோ லன்ச் ஒன்னாதான் இரண்டு பேரும் சாப்பிடுவோம் . அவங்க எனக்கு வெயிட் பண்ணுவாங்க .நான் கிளம்புறேன் பைய் என்று கூறிவிட்டு கிளம்புகிறாள் .

ஏய்.... மீரா , திரும்பவும் நாம எப்போ பேசலாம் ?? என்று இவன் கேட்க,

டேய் ..."தகர டப்பா"... எப்ப வேணாலும் பேசலாம், எனக்கும் உன்கிட்ட பேச ரொம்ப பிடிச்சிருக்கு.இங்கதானே இருக்கேன் , இப்ப கிளம்புறேன் "டாட்டா" என்று கூறிவிட்டு சிட்டாய் பறந்து விட்டாள்.

அன்றைய நாள் கல்லூரி முடிந்து, மாலை "வெங்கி, மீராவிற்காக"
கீழே ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருக்கிறான்,

அவன், எதிர்பார்த்ததுபோல் "மீரா" அங்கு வரவில்லை .அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நேரம் ஆனது அவன் வீட்டுக்கு புறப்பட்டான்.

வீட்டிற்கு சென்ற பிறகும் அவனால் , எந்த வேளையிலும் ஈடுபட முடியவில்லை, ஏன் அவள் வரவில்லை?? பேசவில்லை ??என்ற குழப்பம் ஒரு பக்கம் குழப்பிக் கொண்டிருக்கிறது..

நேரம் ஆக, ஆக ,எந்த வேலையும் அவனால் செய்ய முடியவில்லை, ஏன் இந்த மாற்றம் ??ஏன் இந்த குழப்பம்??? என்று அவனுக்கு அவனை கேள்விகள் கேட்டுக்கொள்கிறான்..

இப்பொழுது இருக்கின்ற மனநிலையில் அவனுக்கு, அவளிடம் பேசினால் மட்டுமே குழப்பங்கள் தீரும்.

மன அமைதி கிடைக்கும் .
ஆனால், எப்படி பேசுவது?? என்ன செய்வது?? "ஹாஸ்டலுக்கு, நேரில் சென்று அத்தையை பார்ப்பது போல், இவளை பார்த்து பேசி விட்டு வருவோமா?" என்று ஒரு யோசனை அவனுக்குள் வருகிறது .

அது ...‌அத்தை , தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? அதுவும் இல்லாமல் இப்பொழுது, மணி எட்டாகி விட்டதே, டின்னர் டைம் வேற இப்பொழுது ஹாஸ்டலுக்கு போனால் சரியாக இருக்காது.

என்ன பண்ணலாம்??? சரி... யோசிப்போம் , என்று தீவிரமாக யோசிக்கிறான் "வெங்கி"

அவனது தீவிரமான யோசனையில் ஒரு யோசனை அவன் மூளைக்கு கிட்டியது.


ஐடியா..! என்று சந்தோஷமாக, கத்திக் கொண்டே தன்னுடைய அலைபேசியை வேகமாக எடுத்து தன்னுடைய, அத்தை விஜிக்கு போன் பண்ணுகிறான்.

விஜியின் தொலைபேசியிலா, என்னடா?? " வெங்கி" கால் பண்றானே, சரி ...ஏதாவது முக்கியமான செய்தியாகத்தான் இருக்கும் என்று அலைபேசி சிணுங்கிய உடனே போனை எடுத்து சொல்லுப்பா என்கிறாள் " விஜி "

அத்தை நலமா இருக்கீங்களா?? என்று நலன் விசாரிக்க,
நல்லா இருக்கேன் பா நீ எப்படி இருக்க?? ஏதோ , வேலைனு ஒரு வாரம் காலேஜ் லீவு போட்டியே ?? இன்னைக்கு காலேஜ் வந்துட்டியா ?? உன்னோட வேலை எல்லாம் நல்ல விதமா முடிஞ்சதா?? என்று விஜி அக்கறையோடு விசாரிக்கிறாள் .

ஆமாம் ....! அத்தை, என்னுடைய எல்லா வேலைகளும் நன்றாக முடிந்தது. அது மட்டும் இல்லாமல் இப்பொழுது "இன்டர் டே ப்ராஜெக்ட் வொர்க்" என்னுடைய பொறுப்பில் சார் ஒப்படைத்து விட்டார்.

அது சம்பந்தமாகத்தான் இப்பொழுது உங்களுக்கு போன் செய்தேன் என்று சமாளிக்கிறான் .

என்னப்பா சொல்ற ?? ப்ராஜெக்ட் சம்பந்தமா என்கிட்ட கேட்க போறியா. ?? அதை பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதே , என்று விஜி குழப்பமாக பதில் கூற,

இல்லை இல்லை ....அத்தை "நியூ வா பிசிக்ஸ்க்கு ஒரு ஸ்டாப் வந்தாங்கல மீரா" அவங்க உங்க கூட தங்கி இருக்கிறதா கேள்விப்பட்டேன் .

அவங்க தான் ப்ராஜெக்ட்டுக்கு ஹெட், சோ..... அவங்க கூட கொஞ்சம் டீடைல்ஸ் பேசணும் .

அவங்க நம்பர் எனக்கு தெரியாது அதனால தான் உங்களுக்கு போன் செய்தேன் அவங்க கிட்ட இப்போ பேச முடியுமா ?? அத்தை என்று நல்ல பிள்ளை போல் கேட்கிறான் "வெங்கி "

யாரு மீரா வா ?? இதோ, இங்க தானே இருக்கா .இப்பவே அவ கிட்ட போனை தருகிறேன் என்று ஒன்றும் அறியாத விஜி உடனே போனை மீராவிடம் கொடுத்துவிட்டு அவள் வேலையை பார்ப்பதற்காக அரையை, விட்டு வெளியேறி விடுகிறாள் விஜி.

ஹலோ.... என்று மீரா கூறியவுடனே, "வெங்கி "

நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் உங்கள் நினைவில் உலாத்தி கொண்டிருக்கிறார். அவரை சரிசெய்ய அவரிடம் நீங்கள் அரை மணி நேரம் பேசியாக வேண்டும் என்கிறான் "வெங்கி"

என்ன விளையாட்டு "வெங்கி" இது என்றே , மீரா தன்னுடைய குரலை உயர்த்தி பேசுகிறாள்,

ஹே... சாரிப்பா... போன வச்சிடாத ஏதோ... உன்கிட்ட பேசணும் போல தோணுச்சு. அதனாலதான் போன் பண்ணி ப்ளீஸ் கோச்சுக்காத சாரி என்கிறான்.

உனக்கு என்கிட்ட பேசணுமா??
என்னோட நம்பருக்கு கால் பண்ண வேண்டியதுதானே, இப்படி அம்மா நம்பருக்கு கால் பண்ணா அம்மா என்னை பத்தி என்ன நினைப்பாங்க என்று மீரா கேட்க,

என்னது அம்மாவா..?? என்று வெங்கி இழுக்க,

ஆமாம் விஜி மேடம் எனக்கு அம்மா மாதிரி நான் அவங்கள அம்மா என்று தான் கூப்பிடுகிறேன் என்கிறாள்

ஓய்....அப்போ ....நீ எனக்கு முறை பொண்ணா???? என மிகுந்த சந்தோஷத்தோடு வெங்கி மீராவிடம் கேட்க,

அடிங்க...ஆசை தான்

மூஞ்சி வை போனை... இன்னொரு தடவை இப்படி அம்மாவுக்கு கால் பண்ணி என்கிட்ட பேசற வேலை வச்சுக்காத என்று கண்டிப்பாக கூறுகிறாள்.

அப்போ உன் நம்பர் குடு , உன் நம்பர் எனக்கு தெரியாதே அப்பதானே உனக்கு நான் போன் செய்ய முடியும் என்று அவன் கேட்க

உனக்கு நிஜமாகவே என்னிடம் பேச வேண்டும் என்று தோணுச்சுன்னா எப்படியாவது நீயே என்னுடைய நம்பரை கண்டுபிடித்து எனக்கு கால் பண்ணு அப்போ நாம "கதைப்போம்" விடிய விடிய கதைப்போம் இப்போ போன் வைக்கிறேன் "குட் நைட்" பைய்...!
என்று கூறி போனை வைத்து விட்டாள்.

அடுத்த நாள் காலை கல்லூரிக்கு சென்றவுடன் முதல் ஹவரில், மீரா இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு செல்கிறாள்.

அங்கு ப்ராஜெக்ட் வொர்க் பத்தின டீடெயில்ஸ் மாணவர்களிடம், எடுத்துரைத்து யாரெல்லாம் பங்கு கொள்ள போறீங்க ?? என்று கேட்க

கதிர் உடனே எழுந்து நான் , ஒரு சஜஷன் சொல்லலாமா என்று கேட்கிறான்

எஸ்..." கதிர் " சொல்லுங்க என்று கூறியவுடன் ,
கதிர் அவன் எண்ணத்தில் இருக்கின்ற ப்ராஜெக்ட் வொர்க் பத்தின ஐடியாவை தெளிவாக வகுப்பில் விவரிக்கிறான் .

அதைக் கேட்டு மீரா " ரியலி ,யு குட் வெரி நைஸ் "ஆல்சோ கண்டிப்பா இந்த ப்ராஜெக்ட் நாம பண்ணலாம் கதிர் என்று அனுமதி தருகிறாள் மீரா .

எனக்கு தெரியும் மேம் இந்த ப்ராஜெக்ட் கட்டாயம் செலக்ட் ஆகும் என்று இது நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது யோசித்தது .

இந்த ப்ராஜெக்ட் செய்வதற்கு நிறைய செலவு ஆகும் என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது அந்த செலவை யோசித்து தான் நான் ஐடியாவை எனக்குள்ளேயே வைத்துக் கொண்டேன்.

இப்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் வேற யாரையாவது வைத்து நீங்கள் இந்த ப்ராஜெக்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அமருகிறான்.

நோ கதிர் இந்த ப்ராஜெக்ட் ஐடியா உங்களுடையது நீங்கள்தான் கட்டாயம் பண்ண வேண்டும் .

பணம் தான் பிரச்சனைனா அதற்கு மாற்று யோசனை ஏதாவது நமக்கு கிடைக்கும் நான் ஐடியா பண்றேன் என்று ஒரு நிமிடம் சிந்தித்தவள்,
"எஸ் ஐ காட் இட் " ஒரு நிமிஷம் இருங்க நான் வரேன் ,என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறி முதல்வரின் அறைக்கு செல்கிறாள் மீரா

வகுப்பறையில் நடந்தவற்றை மீரா எடுத்துக் கூறி முதல்வரிடம் அனுமதி பெற்று தகவல் பலகையில் ப்ராஜெக்ட் வொர்க்காக தங்களால் முடிந்த உதவி செய்யவும் என்று ஒரு நோட்டீஸ் பலகையில் ஒரு தகவல் ஒட்டுகிறாள்.

அந்த தகவலை பார்த்த மாணவர்கள் அவரவர்களால் முடிந்த பண உதவி செய்கிறார்கள்

பணத்தை கதிரிடம் தந்து அந்த ப்ராஜெக்ட் வேலையை துவங்கச் சொல்கிறாள் மீரா

இப்படி செய்த மீராவை கல்லூரியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுகிறார்கள் மாணவன் கதிர் நன்றி பாராட்டுகிறான்.

கதிரும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ப்ராஜெக்ட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வந்து வேலைபாடுகளை இனிதே துவங்குகிறான்.

அன்றைய கல்லூரி பொழுது மிகவும் ஆர்வத்தோடும் விறுவிறுப்போடும் முடிந்தது.

ஹாஸ்டலுக்கு சென்ற மீரா, ஹாஸ்டல் மொட்டை மாடியில் அமர்ந்து அவளுடைய தேர்விற்காக படித்துக் கொண்டிருக்கிறாள்.

என்னதான் படித்துக் கொண்டிருந்தாலும் அவளது எண்ணத்தில் இன்று வெங்கி கால் பண்ணவா நான் கதைக்க முடியுமா???
என்று பல எண்ணங்கள் அவளுக்குள் முடி கொண்டு இருக்கிறது.

அவன் ஒழுங்கா ,அவன் அத்தை நம்பருக்கு அழைத்தே பேசினாலும் பேசியிருப்பான் .

நாம வேற பெரிய இவ மாதிரி நம்பர் கண்டுபிடித்து பேசுன்னூ சொல்லிட்டோமே , நம்ப நம்பர எப்போ கண்டுபிடிப்பது எப்படி பேசுவான்னு தெரியலையே??? என்று மனதுக்குள் புலம்பிட,

அந்த நேரம் பார்த்து அங்கு உள்ள மாணவிகள் இரண்டு மூன்று பேர் அவள் அருகில் வந்து அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஒரு வயதானவர் வாக்கிங் சென்று கொண்டிருக்க அவரை, இங்கு இருந்த மாணவிகள் கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதனை எல்லாம் கவனித்த மீரா ஏன் இந்த பெரியவரை கேலி செய்கிறீர்கள்?? என்று கேள்வி கேட்க ,

பின்ன என்ன மேம் தினமும் இவருக்கு இதை வேலைதான் நாங்கள் படிக்க வரும் இந்த நேரம் அவருக்கு தெரியும்.

அவரும் சரியாக இங்கு வந்து விடுவார் நாங்கள் சாப்பிட போகும் போது அவரும் அப்போதுதான் கீழே இறங்குவார்.

அதுவரை அங்கிருந்து , இங்கேயே பார்த்துக் கொண்டிருப்பார் என்று ஒரு மாணவி கூற,

குறுக்கே வந்த இன்னொரு மாணவியின் குரல், சின்னஞ்சிறுசு நம்பினாலும் நம்பலாம் இந்த பெருசையெல்லாம் நம்பவே கூடாது என்றிட,

நீங்கள் எல்லோரும் பேசுவது தவறு அந்த பெரியவர் எதார்த்தமாக கூட இங்கு வரலாம் நீங்கள் கூட்டமாக
இருப்பதை பார்ப்பதற்கு அவருக்கும் ஒரு பொழுதுபோக்காக கூட இருக்கலாம்.

அதனை நாம் ஏன் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும் .

நாமும் அவருடன் இயல்பாக பேசினால் நமக்கு இது தவறாகவே தெரியாதே, இப்போது பாருங்கள் என்று மீரா ,அந்த இடத்தை விட்டு எழுந்து முட்டை மடியின் சுவர் அருகில் சென்று

அந்த பெரியவரை பார்த்து ஹாய்... தொப்பி தாத்தா என்று அழைக்கிறாள்.. அவர் தலையில் தொப்பி அணிந்திருந்ததால்.

மீரா , அழைத்தவுடன் அவருக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் அங்கிருந்து தன் சைகையால் "ஹாய்.... காட்டுகிறார் தொப்பி தாத்தா ...

இந்த மாணவிகள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் அவர் எதார்த்தமாக பேசுவதை கண்ட மாணவிகள் மீராவிற்கும் வெட்கத்தில் தலை குனிந்தார்கள்.

மாணவிகளிடம் மீரா , நாம் யாரையும் அவர்கள் தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது .

உங்களது தவறான எண்ணத்தை அழித்துவிட்டு வாருங்கள் அந்த தாத்தாவோடு பிரண்ட்ஷிப்பாக இருப்போம் என்று அனைவரும் அந்த தாத்தாவுடன் நட்பு கொண்டு ஜாலியாக பேசி பழகிக்கிறார்கள்.

மீராவை போன்று அனைவரும் அவரை தொப்பி தாத்தா என்றே அழைத்தனர் அவர்கள் அப்படி பிரியமாக அழைப்பது தாத்தாவிற்கு மிகவும் பிடித்து போனது.

இவர்கள் எப்படி நேரம் போனதே தெரியாமல் மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்க மணி எட்டை தொட்டுவிட வார்டன் சாப்பாட்டு மணி அடிக்கிறார்.

மணி சத்தம், கேட்டவுடன் அனைவரும் கீழே இறங்கி சாப்பிட செல்கின்றனர்.

மீரா தன்னுடைய அறைக்கு சென்று புத்தகத்தை வைத்து விட்டு அவளும் சாப்பிடுவதற்காக, அறையை விட்டு வெளியேறி வரும்பொழுது அவளது அலைபேசி சினுங்குகிறது.

வெளியே சென்றவள் அலைபேசியின் சப்தம் கேட்டு வேகமாய் ஓடி வந்து அலைபேசியை , ஆவலாய் எடுத்து திரையைப் பார்த்தால் அவளது அம்மா அழைப்பு வருகிறது.

வெங்கியின் அழைப்பை எதிர்பார்த்தவளுக்கு, அம்மாவின் அழைப்பு வந்தது ஏமாற்றம் தந்தது.

அம்மாவிடம் பேசி முடித்துவிட்டு தொலைபேசியில் வைத்துவிட்டு சாப்பிட புறப்பட்டாள்.

மீண்டும் ஒருமுறை அவளது அலை பேசி அலரிட, மிகுந்த ஆவலோடு மீண்டும் ஒருமுறை வந்து அலைபேசியை கையில் எடுத்து பார்க்கிறாள்....!


❣️ தொடரும் ❣️
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வெங்கிக்கு லவ் @ ஃபர்ஸ்ட் சைட்டா 🤣🤣