கதைப்போமா
பகுதி -9
அலைபேசியின் சத்தம் கேட்டவுடன் இந்த முறை நிச்சயமாக " வெங்கி " தான் கால் பன்னுவார் என்ற முழு நம்பிக்கையில் , தனது தொலைபேசியை எடுத்துப் பார்க்கிறாள் ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது.
பச்சை பொத்தானை அழுத்தி, ஆவலோடு "ஹலோ" என்றிட,
ஓய்...."பெட்ரோல்" என்று பதில் வர,
அப்பாடா ....!என்று பெரும் மூச்சு விட்டவள்,
என்ன??? என்று அலட்சியமாக பதில் கேட்க
அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுந்து விட்டது, ஒருவேளை இவள் நமது அழைப்பிற்காக காத்திருக்கவில்லையோ??, நான் பேசுவோம் என்று எதிர்பார்க்கவில்லையோ??
நாம் தான் அவசரப்பட்டு போன் செய்தோமோ?? என்ன செய்வது ,பேசி பார்ப்போம் என்று மனதிற்குள் பேசிக்கொள்கிறான்.
சற்று நேரம் எதுவும் பேசாமல்,மௌனம் காக்கின்றான் "வெங்கி "
ஏய்.... "தகர டப்பா" லைன்ல இருக்கியா என் சைலன்ட்டா இருக்க ?? என்று மீரா கேட்ட பிறகு , ஒருவித நிம்மதியோடு பேச்சை தொடங்குகிறான் "வெங்கி "
என்ன மீரா என்னுடைய காலுக்காக தானே வெயிட் பண்ணிட்டு இருந்த,?? என்று இவன் கேட்க
ச்சா...ச்சா...
நான் ஏன்?? உன் காலுக்கு வெயிட் பண்ண போகிறேன்??
எனக்கென்ன வேற வேலை இல்லைன்னு நினைச்சியா???
இவ்வளவு நேரம், நான் எக்ஸ்ஸாம்ஸ்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு, என்னோட மம்மி கிட்ட பேசிட்டு இப்போதான் டின்னர் சாப்பிட போறேன் .
ஆமாம்....! நீ டின்னர் சாப்டியா?? என்று இவளுடைய உணர்வுகளையும் உள்ளடக்கி கொண்டு எதுவும் பீல் பண்ணாதது போல் அவனிடம் பேசுகிறாள்..
இவள். பேசும் தோரணையை வைத்து அவன் சரி இவள் நிஜமாகவே நம்மோடு கதைக்க விரும்பவில்லை போல நாம் இவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு சரி " மீரா" நீங்க சாப்பிடுங்க நான் வைக்கிறேன் "பைய்" என்றிட,
ஹலோ சார் ....! போன வைக்கிறதுக்கு முன்னாடி என்னோட நம்பர் எப்படி கிடைச்சது ?? அதை மட்டும் சொல்லிட்டு போன் வைங்க என்று மீரா கேட்க,
உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் .
"நீ ,தான் என்னோட காலுக்கு வெயிட் பண்ணல" என் கூட கதைக்கிறதுக்கும் விரும்பல .
நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும்?? நான் தான் தேவையில்லாத ரிஸ்க் எல்லாம் எடுத்து உன்னோட நம்பர தேடி கண்டுபிடிச்சது, இப்போ எல்லாமே வேஸ்ட் போ மீரா என்று செல்லமாக கோபித்துக் கொள்கிறான் "வெங்கி "
டேய் .....நீ ....தகர டப்பா இல்லை
சரியான "பால் டப்பா "..!
என்னது பால் டப்பாவா என்று ஒன்னும் புரியாதவனாய் கேட்க,
ஆமாம் ,நீ சரியான " பால் டப்பா" தான்...!
உண்மையா சொல்லப் போனா இவ்வளவு நேரம் , நான் உன்னுடைய அழைப்புக்காக மட்டும்தான் காத்திருந்தேன் .எனக்கு தெரியும் நிச்சயமாக நீ எனக்கு கால் பண்ணுவேன்னு என்றிட,
ஆமாம் நீ, ஏன் என் காலுக்காக வெயிட் பண்ணனும் என்று வெங்கி கேட்க,
அது மட்டும் இல்லை நான் ஏன் உன்னிடம் பேசுவதற்கு துடிக்கின்றேன் இது எதுவுமே எனக்கு புரியவில்லை...
புரிய வேண்டாம் "வெங்கி"
நாம் "கதைப்போம் " ...."கதைச்சுக்கிட்டே இருப்போம்".... புரியும் வரை "கதைப்போம்" புரிந்த பின்னும் "கதைப்போம் கதைப்போம்" டா...!
எஸ் ....! மீரா இந்த ஸ்வீட் இந்த அழகான பேச்சு இதுதான் என்னை திரும்ப திரும்ப உன்கிட்ட பேச தூண்டுது,
தெரியலப்பா எதோ ஒரு விஷயம், என்னை கட்டி இழுக்குது,
உன்னுடைய இந்த காந்த கண்களா???
இனிமையான பேச்சா??
அழகிய புன்னகையா??
ஒண்ணுமே புரியல ஒரு நாள் ஒரே நாள்ல "டோட்டலா விழுந்துட்டேன்".
உன்னுடைய கதகதப்பான, கதைப்பில் மிதந்து விட்டேன் .
இப்படியே இருவரும் கதைத்துக் கொண்டே இருக்க மணி இரவு 11 வார்டன் விஜி இப்பொழுது தான் வேலையை முடித்துவிட்டு அறைக்குள் நுழைகிறாள்.
என்ன மீரா நீங்க இன்னும் தூங்கலையா??? என்று விஜி கேட்க,
இதோ, ஒரு பைவ் மினிட்ஸ் அம்மா ஃப்ரண்ட் கூட ஃபோன்ல கதைச்சிட்டு இருக்கேன்.
ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன் என்று கூறிவிட்டு, மீண்டும் வெங்கியோடு பேச துவங்குகிறாய் மீரா.
இருவரும் விடிய விடிய பேசிக் கொண்டிருக்க என்னதான் பேசினார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை.
இரவு மணி இரண்டை கடந்து விட, தூக்கத்தில் இருந்து எதார்த்தமாக விழித்த விஜி, என்ன மீரா தூங்கலையா யார்கிட்ட போன்ல இன்னும் பேசிட்டு இருக்கீங்க ??என்று தூக்க கலக்கத்தில் கேட்கிறாள் விஜி...
அப்பொழுதுதான் ஒரு நிலைக்கு வந்த மீரா ஓகே "வெங்கி " தூங்கலாம் போன் வைங்க .நாளைக்கு கதைப்போம் பைய் என்று போனை வைத்து விட்டு,
விஜி கேள்விக்கு, என்னுடைய ஊரில் இருக்கும் தோழியுடன் தான் பேசிக் கொண்டிருந்தேன் .தூங்கலாம் அம்மா குட் நைட் என்று கூறிவிட்டு தூங்குகிறாள் மீரா.
மீராவுடன், பேசிய மகிழ்ச்சியில் வெங்கியும் மகிழ்வோடு உறங்குகிறான்.
மறுநாள் காலை, கல்லூரிக்கு வந்த மீரா வணக்கம் போர் இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு செல்கிறாள்.
கதிர் அன்று ப்ராஜெக்ட் தேவையான ஆதி செயல்களை முடித்து விட்டதா மீராவிடம் ப்ராஜெக்ட்டை காண்பித்து, மேலும் சில ஐடியா தரும்படி கேட்டிட மீராவும் அதற்கு ஏற்றார் போல் சில மாற்று யோசனைகள் சொல்கிறாள்.
நாளை, நீங்கள் சொன்னது போல் இதை முடித்து விடுகிறேன் என்று கதிர் கூற வகுப்பு நிறைவடைந்து விடுகிறது. "தேங்க்யூ கைய்ஸ் " என்று கூறிவிட்டு மீரா, வகுப்பை விட்டு வெளியேறுகிறாய்.
வகுப்பை விட்டு வெளியே வந்த மீரா படிக்கட்டுகள் வேகமாக இறங்க அதே படிக்கட்டுகளில் வெங்கி வேகமாக ஏறி வருகிறான்,
வெங்கியை கடந்து வந்த மீரா கண்டு கொள்ளாதது போல் வேகமாக இறங்கி விடுகிறாள்.
அதுவரை படிக்கட்டுகளில் வேகமாக ஏறிக் கொண்டிருந்தது அவரை பார்த்துவிட்டு மெதுவாக ஏற, துவங்குகிறான் என்று தன் தலையை சாய்த்து நிமிர்ந்து பார்க்க அந்த நேரம் சரியாக விளங்கி பார்த்து விடுகிறான் அசடு வழிய இருவரும் சிரித்துக்கொண்டே அவரவர் வேலை பார்க்க துவங்குகின்றனர்.
மீராவிற்கு, இப்பொழுது எந்த வகுப்பும் இல்லாத காரணத்தினால் , அவள் ஆசிரியர் அறையை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது,
கையை குறுக்கே நீட்டி, நில்லுங்க...! ஒரு நிமிடம் என்று "அலெக்ஸ்" குரல் கொடுக்க,
அவனை கண்டவுடன் , எரிச்சலடைந்தாள் மீரா .இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல், "ஹாய்"... "அலெக்ஸ்"கிளாஸ்க்கு போகலையா நீங்க???என்று கேட்க
இங்க பாருங்க, உங்களுக்கு என்ன வேணும் ??? ஏன் தேவையில்லாத வேலை எல்லாம் பாக்குறீங்க?? வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க.
தேவையில்லாம என்னோட விஷயத்துல தலையிட்டீங்கன்னா, வேரோட சாய்ச்சிருவேன்.
இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன், நீங்க கண்ணகி குடும்பத்துல இருந்து வந்தீங்களா???
என்னை திருத்தி, இந்த காலேஜை சரி செய்ய போறீங்களா??? இதெல்லாம் நடக்காத விஷயம் காமெடி பண்ணாதீங்க.மிஸ்.... "மீரா" மேடம்.
எங்க அப்பா கிட்ட போய் என்ன பத்தி தேவையில்லாதது எல்லாம் பேசி அவர் பிரைன் வாஷ் பண்ணலாமன்ற எண்ணத்தை தூக்கி போட்டுறங்க,
இல்லன்னா ....உங்களை வெட்டி போட நான் யோசிக்க மாட்டேன் என்று முரட்டு தனமாக கூறவிட்டு வேகமாக "அலெக்ஸ்" செல்கிறான்.
ஆசிரியர்கள் அறையில் சென்று அமர்ந்த மீராவின் சிந்தனையில் அலெக்ஸ் பேசியது ஓடிக்கொண்டே இருக்க,
திடிரென்று அவளது அலைபேசிக்கு ஒரு செய்தி வருகிறது "வெங்கி" யிடம் இருந்து,
வெங்கியிடம் இருந்து முதல் முறையாக வாட்ஸ் அப் செய்தி வருவதால் மகிழ்ச்சியாக எடுத்துப் பார்க்கிறாள்.
அதில் வெங்கி "ஹாய் மீரா"
திஸ் ஈஸ் "வெங்கி "
இப்போ உனக்கு கிளாஸ் இல்லைனா கேன்டீன் வாயன் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று செய்தி அனுப்பியுள்ளான்.
செய்தியைக் கொண்ட மீரா மின்னல் வேகத்தில் பறந்து அடுத்த இரண்டு நிமிடத்தில் கேண்டினில் அமர்கிறாள்.
அவளுக்கு பின்புறத்திலிருந்து "ஹாய்...." என்று குரல் வருகிறது.
திரும்பி பார்த்தால் "வெங்கி" நிற்க சிரித்த முகத்தோடு , என்ன "வெங்கி" ஏதோ....! முக்கியமான விஷயம் , பேச வேண்டும் என்று சொன்னியே,
கம்....கம்.....சிட்..... என்றிட
அவனும் புன்னகை முகத்தோடு மனம் நிறைய மகிழ்வோடு அவளுக்கு எதிர் புறத்தில் இருக்கும் நாற்காலியில் அமருகிறான்.
ஹே மீரா, நம்ப இன்டர்டே ப்ராஜெக்ட் காம்படிஷன் டேட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு கம்மிங் சண்டே எங்க தெரியுமா பெங்களூர்ல,
யாரெல்லாம் போறோம் தெரியுமா???
என்னது போறோமா??? என்று மீரா கேட்க,
ஆமாம் பா ...! பிரின்சிபால் சார் தான் சொன்னார்.
கதிர், நிஷா, சுஜி , நீ.. நான் நாம ஐந்து பேரும் காலேஜ் கார்ல போக போறோம் என்று ஆனந்தமாக கூறுகிறான்.
இவளுக்கும் உள்ளுக்குள் சந்தோஷம் இருக்கிறது .ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் , நான் வரணுமா நான் எதற்கு வர வேண்டும்?? நான் இப்பவே போய் சார் கிட்ட , நான் போகலன்னு சொல்லிடுறேன் என்று கூறியவுடன் அவனது முகம் வாட்டமானது.
அவன் முகம் வாட்டமானதை கண்ட மீரா
ஹே... கூல் கூல் பாய்.... நான் சும்மாதான் சொன்னேன்.
நான் உன் கூட வரேன் சரியா "மூஞ்ச பாரு, மங்கி மாதிரி வச்சுக்கிட்டு.... வெங்கி மாதிரி வச்சிக்கோ பா என்கிறாள்...
அவனும் ஒரு வித சந்தோஷத்தில் சிரித்தபடியே,
நிஜமா நீ வரல என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறான் .
கண்டிப்பாக உன்கூட வரேன் என்று கூறிய மீரா இப்போது , நான் கிளாசுக்கு போலாமா ??? டாட்டா, என்று கூறிவிட்டு கிளாஸுக்கு செல்கின்றாள்.
அன்றைய நாள் கல்லூரி முடிந்து மீரா ஹாஸ்டலுக்கு சென்று "விஜி"யிடம் தான் பெங்களூர் , செல்லும் விஷயத்தை கூறுகிறாள்.
விஜியும், மிகுந்த சந்தோஷத்தோடு ,"சரி மா ,"பார்த்து பத்திரமாக போயிட்டு வாருங்கள் . பசங்களையும் பத்திரமாக அழைத்துச் சென்று வாருங்கள் .அதோடு போட்டியில் , வெற்றி பெற்று வாருங்கள் என்று வாழ்த்து கூறுகிறாள்.
சரிங்க மா..... நான் கொஞ்ச நேரம் படித்துவிட்டு வருகிறேன் ,என்று மாடிக்கு புத்தகத்தை எடுத்து செல்ல மீராவை கண்டவுடன் "தொப்பி தாத்தா" "ஹாய் மீரா...!" என்க....
மீராவும் பதிலுக்கு "ஹாய் தொப்பி தாத்தா " என்று கூறவும் அருகில் உள்ள மாணவிகள் எல்லாம் அவளை சூழ்ந்து அவர்களும் தொப்பி தாத்தாவுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியே அந்த நாள் நன்றாக முடிந்து உறங்குவதற்கு அனைவரும் சென்றனர்.
வெங்கி யின் அழைப்பை எதிர்பார்த்த மீரா அழைப்பு வராததால் தானே போனை எடுத்து வெங்கிக்கு போன் செய்து,
பால்டப்பா??? ஒழுங்கா கால் பண்ண மாட்டியா உனக்காக நான் வெயிட் பண்ணனுமா என்று பொய்யாக கோபத்தை காட்ட,
ஹே....சாரி...பா..... பிரண்ட் அப்பாவுக்கு உடம்புக்கு முடியல , அவர ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு, அவரை வீட்டில் விட்டுட்டு இப்போதான் நான் வீட்டுக்கு வந்தேன் .சோ டென்ஷன்ல கால் பண்ணல சாரி பேபி....
அழகாக அவன் பேசுவதை கேட்ட மீரா,
சோ... ஸ்வீட் டா பால் டப்பா, நீ... பொழச்சு போ உன்னை மன்னிச்சிட்டேன்....என்றிட
இப்படியே இருவரும் இரண்டு மணி நேரம் , கதைத் கொண்டே தூங்கி விடுகிறார்கள்.
மறுநாள் காலை , கல்லூரி விடுமுறை என்பதால் மீரா பொறுமையாக எழுந்து குளித்துவிட்டு,
பெங்களூர் ட்ரிப் செல்ல வேண்டி இருப்பதால், அதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி வருவதற்காக, "மாணவி நிஷாவை" உடன் அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டாள் .
மீரா வண்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுது , அவளுக்கு எதிரில் வந்த வண்டியில் உள்ள ஒரு தபால்கார பெண்மை ,மயக்க நிலையில் தள்ளாடிட,
அதனைக் கண்ட, மீரா தன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு , அவளை அருகிலுள்ள வீட்டில் தண்ணீர் வாங்கி அவளுக்கு முதலுதவி செய்து, தன்னுடன் வந்த மாணவி நிஷாவை அந்த தபால்கார பெண்மணியே ஹாஸ்டலுக்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க, சொல்கிறாள்.
மயக்க நிலையில் இருந்தாலும் மீரா பேசுவதை கேட்ட தபால்கார பெண்மணி இல்லைங்க மேடம் எனக்கு இதற்கு பக்கத்து, தெருவில் நான்கு வீட்டுக்கு அஞ்சல் கொடுத்தாக வேண்டும்.
இன்று அந்த வீடுகளில் அஞ்சல் கொடுக்கவில்லை , என்றால் யாரேனும் ஒருவர் அலுவலகத்திற்கு போன் செய்து விட்டால் , எனக்கு கெட்ட பெயர் ஆகிவிடும் .
அதனால் நான் இங்கேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டு என் பணியை பார்க்கிறேன். நீங்கள் போயிட்டு வாருங்கள் மேடம் ,என்று கூறுவதைக் கேட்ட மீராவிற்கு மனம் வரவில்லை அவளை தனியே விட்டுச் செல்ல,
நான்கு போஸ்ட் தானே மேடம் என்கிட்ட குடுங்க அந்த வீட்ல நான் போயி கொடுத்துவிட்டு வருகிறேன் .நீங்க கொஞ்சம் நேரம் , ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடுங்க என்று கூற
இல்லை மேடம் உங்களுக்கு எதற்கு வீண் சிரமம் நீங்கள் ஏதோ வேலையாக சென்றீர்கள் நீங்கள் செய்த இந்த உதவியே எனக்கு போதும் என்று அந்த தபால்கார பெண்மணி கூற,
இல்ல சிஸ்டர் , உங்கள இந்த நிலைமையில விட்டுட்டு போக ,எனக்கு மனசு வரல.
நீங்க இந்த பொண்ணு கூட ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடுங்க, அந்த நான்கு வீட்டுக்குள்ள, போஸ்ட் மட்டும் என்கிட்ட கொடுங்க .
நான் சென்று கொடுத்து விட்டு வந்துடறேன் , என்று அவளிடம் வலுக்கட்டாயமாக கேட்டு , தபால்களை வாங்கிக்கொண்டு, அந்தந்தவீட்டில் ஒப்படைக்க புறப்பட்டாள் மீரா.
முதலாவதாக ஒரு வயதான பெண்மணி, வீட்டிற்கு சென்று தபாலை , அந்த பெண்மணி இடம் கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்புகிறாள்.
அடுத்ததாக ஒரு வீட்டிற்கு செல்கிறாள் வீட்டு வாசலில் நின்று,இரண்டு முறை , சார்....!
மேடம்....!
சார்.....! என மாற்றி மாற்றி, இரண்டு மூன்று முறை அழைக்கிறாள் ஆனால் உள்ளிருந்து யாரும் வெளியே வரவில்லை.
வெளியே இருக்கும் காலிங் பெல் அழுத்தி பார்க்கிறாள். மணி சத்தத்திற்கும் யாரும் வெளியே வரவில்லை, ஆனால் வீட்டு கதவு திறந்துதான் இருக்கிறது என்பதை கவனித்தவள்,
சரி உள்ளே ஆள், இருக்கின்றது. தபாலை நிலபடிக்கு அருகில் இருந்த ஒரு மேசையில் வைத்துவிட்டு செல்வோம் என்று நினைத்தவள் தபாலை கொண்டு போய் மேசை மீது வைத்துக் கொண்டிருக்கும்பொழுது உள்ளிருந்து ஒரு பெரியவர் வருகிறார்.
யாருமா??? நீ??
இங்கு என்ன பண்ற??? அவர் கோபமாக மீராவிடம் கேட்க,
நான் தபால் நிலையத்திலிருந்து வருகிறேன் சார் இந்த தபாலை உங்களிடம் ஒப்படைக்க சொன்னார்கள் என்று அவள் கூறுவதை காதில் கூட வாங்காத அந்த பெரியவர்,
தபால் கொடுக்க வந்தால் கூப்பிட்டு கொடுத்துவிட்டு போக வேண்டும் இப்படி அலட்சியமாக எங்கேயாவது வைத்து விட்டுப் போனால் காற்றில் பறந்து எங்கேயாவது போய்விட்டால் எங்களுக்கு அந்த செய்தி கிடைக்காமல் போய்விடும்.
ஏன் இப்படி ???அலட்சியமாக வேலை செய்கிறீர்கள்?? இப்படி எல்லாம் மீராவிடம் கோபத்தை காட்ட,
மீராவிற்கும் ஆத்திரம் வந்துவிட, எத்தனை ,முறை சார் உங்களை அழைப்பது??
உங்களுக்கு காது கேட்கவில்லை??? என்றால், அது என் மீது தவறு இல்லை.
வாசலில் காலிங் பெல் வேலை செய்வது போல் வைக்க வேண்டும். கடமைக்கு வைத்தால் இப்படித்தான், என்று இவள் ஒரு புறம் கத்த,
அந்த பெரியவர் ஒருபுறம் கத்த இருவருக்கும் சண்டை பெரிதாகி விடுகிறது.
குளியல் அறையை விட்டு வெளியே வந்த அந்த, பெரியவரது மகனுக்கு இவர்கள் சண்டை காதில் விழவே, அங்கு இருந்த அம்மாவிடம் ,"என்னமா வாசல்ல ஒரே சத்தமா இருக்கு" போய் பாத்தீங்களா ?? என்று கேட்க
இது என்ன புதுசா டா??? தபால் கொடுக்க ஒரு பொண்ணு வந்துச்சு , அது கிட்ட வழக்கம் போல உங்க அப்பா சண்டை போட்டுட்டு இருக்காரு .
அவர திருத்த முடியாது , தானா அடங்கி உள்ளே வருவாரு நீ போய் சட்டையை போட்டுட்டு சாப்பிட வா என்று கூற,
இல்லம்மா எப்பொழுதும் விட இன்று சத்தம் பெரிதாக இருக்கிறது.
வாங்க என்னன்னு பார்க்கலாம்,??? நிச்சயமாக , இவர் மீதுதான் தவறு இருக்கும், அந்த பெண்ணை காப்பாற்றுவோம் ...! என்று அம்மாவையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறான்.
மீராவை காப்பாற்றுவதற்காக உள்ளிருந்தவன் கோவமாக , அப்பா நிறுத்துங்கள்....! என்று கூறிக்கொண்டு வெளியே வருகிறான்.
உள்ளிருந்து வந்தவன் குளியலறையில் இருந்த ,அந்த நிலையிலே துண்டை மட்டும் கட்டிக்கொண்டு, மேல் சட்டை இல்லாமல் வரவே,
அதனை கண்ட "மீரா "பெரியவரிடம் உள்ள சண்டையை நிறுத்திவிட்டு அவனை பார்த்து குப்பென்று சிரித்து விடுகிறாள்.
வேகமாக வெளியே வந்தவன் "வெங்கி"ஆமாம் வெங்கி வீடு என்று தெரியாமல் தபால் கொடுக்க வருகிறாள்.
அந்த இடத்தில் மீராவை எதிர்பார்க்காத வெங்கியோ, வெட்கத்தில் தலையை சொரிந்து கொண்டு, வெளியே வந்த வேகத்தில் உள்ளே சென்று விடுகிறான்.
உள்ளே சென்று ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்து, உள்ளே வாங்க மீரா என்று அழைக்கிறான்
அவனின், " அப்பா அம்மா" இருவரிடமும் மீராவை அறிமுகம் செய்து வைக்கிறான். எங்கள் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் என்று அறிமுகம் செய்ய,
நல்ல துணிச்சலான, பொண்ணுதாமா நீனு என்று வெங்கியின் அப்பா கூற,
ஆமாங்க...! நிச்சயமா உங்களையே சமாளித்து இருக்காளா, திறமையான பொண்ணுதான் இவ,
வாமா உள்ளே வா ஏன் வெளியிலேயே நிற்கிற...! என்று வெங்கியின் அம்மா உள்ளே அழைத்துச் செல்கிறாள் மீராவை.
வாம்மா.... !"வந்து உட்காரு " நான் போய் குடிக்க ஏதாச்சும் கொண்டு வருகிறேன் என்று அம்மா கூற,
இல்லை ஆன்ட்டி
... எதுவும் வேண்டாம்.ஆக்ட்சுவலி,
தபால் கொடுக்கிற லேடிக்கு கொஞ்சம் ஹெல்த் பிராப்ளம் .
அதான் அவங்கள ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு, நான் தபால வாங்கி வந்தேன் .
கடைசியில் இப்படி இங்கே வருவேன். "இதையெல்லாம் பார்ப்பேன்னு.." நெனச்சு கூட பாக்கல. என்று வெங்கியை பார்த்து சிரித்துக் கொண்டே கூறுகிறாள்.
மீரா சொன்னது,வெங்கியை ஆனால் வெங்கியின் அம்மாவோ அவன் அப்பாவை சொல்கிறாள், என்று நினைத்துக் கொண்டு அவர் எப்பவுமே அப்படித்தான்மா என்று கூறிய வெங்கியின் அம்மாவை பார்த்து மீராவும்,
எப்பவும் இப்படித்தானா??? என்று வேகமாக சிரிக்கின்றாள்..
சரிங்க....! ஆண்டி இதுக்கு மேல என்னால முடியாது.நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு,
வெங்கியை பார்த்து சிரித்துக் கொண்டே வரேன் சார்ர் என்று கூற,
அடிங்க.....ஓடி போ......!
என்கிறான்....!
மீராவும் சிரித்துக்கொண்டு வெங்கியின் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
தொடரும்