• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கனா காணும் பேனாக்கள் - 2025 (போட்டி முடிவுகள்)

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,391
442
113
Tirupur
வணக்கம் ப்ரண்ட்ஸ்..

இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த போட்டி முடிவுகள்

வைகையின் கனா காணும் பேனாக்கள்-2025

போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வைகையின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும்.

இந்த முறை அனைத்து கதைகளும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

எழுதப்பட்ட அனைத்து கதைகளும் மிகவும் சிறப்பான கதைகளே. அதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
முதல் முறை கொடுத்த கால அவகாசத்தில் கதையை முடித்த எழுத்தாளருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதைத் தொடர்ந்து எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

போட்டியின் முடிவுகளை வீடியோ மூலம் வெளியிட வேண்டும் என்று ஆவல். அதனால் அந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.


போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற இவர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சிறப்பு பரிசுகள் பெரும் எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

கொடுத்த கால அவகாசத்தில் கதையை முடித்த எழுத்தாளர் ஷன்மதிக்கு வைகையின் சார்பாக வாழ்த்துக்கள். மேலும் அவருக்கு சிறப்பு பரிசும் காத்திருக்கிறது.

சு(நர)கமான சுடரே கதையை எழுதிய அறிமுக எழுத்தாளாரான எழுத்தாளர் சுப்புலட்சுமி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர் கதையும் சிறப்பு பரிசு பெருகிறது.

மேலும் போட்டியின் கடைசி நேரத்தில் பங்கெடுத்து, குறுகிய நேரத்தில் கதையை பதிவிட்டு முடித்த எழுத்தாளர் ஜீரஃப் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் கதையும் சிறப்பு பரிசு பெருகிறது.

மேலும் கதையை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ட்ராபி அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்ந்து வைகையில் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் எழுதி மேலும் பல பரிசுகள் பெற, என் சார்பாகவும் வைகையின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், போட்டி ஆரம்பித்த நேரத்தில் இருந்து தொடர்ந்து கதை படித்து கருத்து தெரிவித்து அனைவருக்கும் பூஸ்ட் போல எனர்ஜி கொடுத்த வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

அனைத்து கதைகளையும் படித்து ரிவியூ கொடுத்த கௌரி சிஸ் மற்றும் சஃப்னா இருவருக்கும் நன்றிகள்.

உங்களால் மட்டுமே இந்த போட்டி சாத்தியம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த வாசக தோழமைகளுக்கு வைகையின் நன்றியும் வணக்கமும்…

என்றும் இணைந்திருப்போம்,
அன்புடன்
வதனி
 

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
111
87
28
Chennai
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍