• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 22

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அவனின் பதிலில் மூவரும் கண்ணீர் வராத குறையாக சிரிக்க அவர்களை முறைப்பதற்கு பதிலாக சோகத்தின் மொத்த உருவமாய் அமர்ந்திருந்தவனை கண்டு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினர்.

"சரி சரி மேட்டர் என்னனு சொல்லு..." என்றவாறு அரவிந்த் தீராவின் தோள் மீது கையைப் போட அவனை பாவமாக பார்த்தவன் நேற்று காலை தொடக்கம் இரவு வரை நடந்த அனைத்தையும் விதவிதமான ரியக்ஷனுடன் சொல்லி முடித்தான்.

அவன் கூறி முடிக்க மூவரும் ஒன்றுசேர ஆதித்யாவை தான் பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தற்கு தலைகீழாக அவன் வெகு சாதாரணமாக முகத்தை வைத்திருந்தது தான் நண்பர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

"மச்சிசி..." என திரூபன் இழுக்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் கை இரண்டையும் கோர்த்து நாடியை தாங்கிக் கொண்டு அமர்ந்தானே பார்க்க, அவர்களுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று ஊகிக்க தான் முடியாமல் போய்விட்டது.

நிதானமாக தீராவை ஏறிட்டவன் அவனின் கலங்கிய முகத்தைப் பார்த்து மனதைப் படித்தவன் போல "லெட்ஸ் மூவ்ஒன் டு த நெக்ஸ்ட் லெவல்..." என அழுத்தமாக ஆனால் மறைமுகமாக அவனின் திருமண பேச்சுவார்தையை எடுத்து வைத்தான் ஆதித்யா.

அதிர்ச்சியில் மூவரும் அவனை விழி விரித்துப் பார்த்தனர். பின்ன, தீராவிற்கு உள்ளுக்குள் அனு மீது ஆசைகள் கொட்டிக் கிடக்க, ஆதித்ய தேவ்விற்காக மட்டுமே அவனின் காதலை அனுவிடம் மறைத்து அவளை மனதளவில் காயப்படுத்தி இருந்தான். ஆதித்யாவிற்கு சிறு துளி அளவேனும் அவளைப் பிடித்திருக்காவிட்டால் நிச்சயம் அவன் தன் காதலை மனதிலே புதைத்திருப்பான். பரனியும் சங்கர நாராயணனும் தான் இவர்களின் பரம்பரை எதிரிகளாகிற்றே. அதனால் நிச்சயம் ஆதித்யா ஒத்துக்கொள்ள மாட்டான் என்றே இதுவரை தீரா நினைத்திருக்க இங்கு இவனின் பேச்சோ மூவரையுமே அசைத்துப் பார்த்தது. அவர்கள் அறிந்த ஆதித்ய தேவ் இவனில்லை என்று மட்டும் அவர்களுக்கு தெளிவாக புரிந்தது. (என்னங்கடா விட்டா என் ஹீரோவ வில்லனா ஆக்கிப்புட்டுடுவிங்க போலயே...அவன் சொக்கத்தங்கம் டா...)

வார்த்தைகள் தடுமாற அதிர்ந்த வாக்கிலே தீரா..."தேவ்..."என நெகிழ்ந்திருந்தான்.

அப்போதும் அதே அழுத்தப் பார்வையுடன் அவர்களுக்கு விளக்க விருப்பம் இல்லையாயினும் அவர்களுக்கு தெளிவை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் ஆதித்யா..

"சீ..திஸ் இஸ் யுவர் லய்ப்...என்னால இதுக்குள்ள ஒரு எல்லைக்கு மேலே தலையிட முடியாது.. இன்பெக்ட் உன் தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும் போது நான் கூட மூனாவது நபர் தான்..." என்கவும் "மச்சி டேய்..." என கலங்கினான் தீரா... அவர்களுடைய நட்பு அந்தளவுக்கு ஆழமாக இருந்தது என்பது உண்மை. ஒருத்தனுக்காக ஒருத்தன் தன் வாழ்க்கையே விட்டுக் கொடுக்குமளவுக்கு தான் அவர்கள் இருந்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஆதித்யாவின் இந்தப் பேச்சு ஏனோ மனதை வதைத்தது.

அவனை தடுத்தவன் தான் கூற வந்ததை சொல்ல நாடி "நோ மோர் வேட்ஸ் தீரா..." என்று தொடர்ந்தவன் "என் வாழ்க்கையா இருந்தாலும் நான் யாரையும் தலையிட விடமாட்டேன்.பட் அதுக்காக உன் வாழ்க்க்கை எப்படியோ போகட்டும்னு விட்டுட்டு வாய் பார்த்துட்டும் இருக்க மாட்டேன். நான் விசாரிச்ச மட்டும் அவ வீட்டை விட்டு வந்துட்டா. அவளுக்கும் அவட அப்பாக்கும் இப்போ எந்த சம்பந்தமும் இல்லை. கோவிச்சிட்டு அவ வந்தாலும் எக்கேடோ கெட்டுப் போனு அவரும் பேசாமல் இருந்து விட்டார். சோ இனியும் அவளை அவளுடைய குடும்பத்தவங்க தேடி வரமாட்டார்கள்" என உறுதியாக கூறினான் தேவ். "அவள் உன்னை உண்மையா காதலிக்கிறாளானு எனக்கு தெரியாது. ஆனால் நீ லவ் இல்லைனாலும் நொடி நேரம் உன் கண்ணுல வந்து போன காதலை நான் கண்டு கொண்டேன்...அது அவள் உன்னை எந்தளவுக்கு காதலிக்கிறா என்றதை கூறுது" என ஆழமாக தீராவைப் பார்த்தான்.

அதில் அவன் திருதிருக்க, மற்றைய இரண்டு பேரும் கேவலமாக அவனைப் பார்த்து வைத்தனர். அசடு வழிந்து கொண்டே ஆதித்ய தேவ்வின் பக்கம் திரும்பினான்.

இங்கே ஆதித்யாவோ தீராவிற்காக அவனின் வருங்கால மாமனாரை மரியாதையாகவே பேசினான் என்பதை நண்பர்கள் கவனிக்காமல் இல்லை. நண்பனே என்றாலும் ஆதித்யா என்றால் மற்றைய மூவருக்கும் அவன் மேல் எப்போதும் மரியாதை இருக்கும். இன்று ஏனோ தன் பேச்சினால் இன்னும் உயர்ந்து நின்றான்.

"உன் லைய்ப்ல உன் விருப்பம் மட்டும் தான் முக்கியம். இதுக்கு மேலே அவளை மெரி பண்ணிக்கிறதும் பண்ணாததும் உன் விருப்பம்னு சொல்ல மாட்டேன். உன்னை நம்பி வந்த பெண்ணை நீ தான் பார்த்துக் கொள்ளனும்" என கட்டளையாக கூறினான். அதன் பிறகும் அங்கே மறு பேச்சு இருக்குமோ. இது தீராவிற்கு மட்டுமல்ல அங்கிருந்த மற்றைய இருவருக்கும் சேர்த்து கூறப்பட்ட செய்தி தான்.

ஓடி வந்தவன் ஆதித்யாவை நெகிழ்வுடன் அணைத்துக் கொண்டான்.பின்னர் ஏதோ நினைவு வந்தவனாக அவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து பயத்துடனே கேட்க வாயெடுத்தவனை பார்வையால் தடுத்திருந்தான் எனக்கு தெரியும் என்பது போல...

அவனின் தோரணை மேலும் எதையும் பேசவிடாமல் தீராவை தடுக்க "அது தானே இவன்ட இருந்து ஒரு பதில் வந்துட்டாலும்..." என முணுமுணுத்துக் கொண்டே மூவரும் வெளியே செல்ல எத்தணிக்க சரியாக அந்நேரம் பார்த்து விக்ரம் உள்ளே நுழைந்தான்.

தீரா எதைப் பற்றி கேட்க வந்தான் என அறியாதவனா ஆதித்யா !? வர்ஷினியுடனான தன் வாழ்க்கையைப் பற்றியே அவன் கேட்க வருகிறான் எனத் தெரிந்தே அவனை தடுத்திருக்க அக்கணம் பரபரப்புடன் விக்ரம் உள்ளே நுழைய அவன் பார்வை கூர்மையாக விக்ரமின் மீது படிந்தது.

இந்த மூவரும் அவனைத் தான் கலவரத்துடன் பார்த்து நின்றனர். இது ஆதித்யாவின் ஆபிஸ் பற்றிய விடயம் என்பதால் தங்களால் எதுவும் கேட்டு விட முடியாமல் நடப்பதை கவனிக்க தொடங்கினர்.

ஆனால் விக்ரமோ எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே பயத்தில் வார்த்தை வருவதும் பின் விழுங்குவதுமாக கையை பிசைந்து கொண்டு நின்றான்.

"ம்ம் டெல் மீ..வட் ஹெப்பன்ட்...?" இப்போது தேவ் தான் ஆரம்பித்து இருந்தான்.

அவனின் குரலில் இவ்வளவு நேரமும் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் விக்ரமை விட்டுப் பறந்து விட்டது. உப் என வாயை குவித்து ஊதியவன் கோபத்தில் "இப்போ சொல்ல போறிங்களா இல்லையா விக்ரம்...?" என சத்தமிட "சார்..." என அதிர்ந்ததில் பயத்தில் வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

தீராவே, சொல் என்பது போல கண்ஜாடை காட்ட வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் "சா..சார்.. அ..அந்த டெண்டர்க்காக தயாரித்த ஃபைல் மி...மி..மிஸிங்..." என எப்படியோ கூறி முடித்த அடுத்த நொடி ஆதித்ய தேவ் அமர்ந்திருந்த ச்செயார் தள்ளிப் போய் விழுந்தது.

"வாட்...?" என ஆவேசத்துடன் அவன் கத்த விக்ரமிற்கு நா வறண்டு போனது.

"என்ன சொல்றீங்க விக்ரம்...?" என பற்களை அவன் கடிக்க அது அங்கிருந்த அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்தது.

எத்தனை கோடி பெறுமதியான டெண்டருக்காக தயாரித்த கொடேஷன் ஃபைல்.. சர்வ சாதாரணமாக அவன் காணவில்லை என கூறி விட்டான். அந்த டெண்டர் கைவிட்டுப் போனால் பரவாயில்லை. அதைப் போல நூறு மடங்கு அடுத்த நிமிடமே அவன் சம்பாதித்து விடுவான். அவனிடம் அதற்கான திறமை ஏராளம் கொட்டிக் கிடந்தது. ஆனால் தன் ஆபிஸிலே திருட்டு போய் இருக்கிறது என்றால் எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்... நிமிடத்துக்கு நிமிடம் இவன் பாறையாக இறுக விக்ரம் பயத்தில் உறைந்திருந்தான்.

விக்ரமிடம் தவறில்லை என அவனுக்கு தெரியும். இருந்தும் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை. எங்கே தவறு செய்தேன் என நினைத்து மண்டை சூடாகியது தேவ்விற்கு.

"ஹொவ் இஸ் பாசிபல்...?"என விக்ரமிடம் உறும, "த்..த்.. தெரியல சார்.." என கூறியவனுக்கும் அந்த பதில் பிடிக்கவில்லை தான்.

அவனை முறைத்தவன் "இத்தனை நாளும் நடக்காத ஒன்றை இன்னைக்கு மட்டும் செய்ய எவனுக்கு தைரியம் வந்தது...?" என ஏதோ திட்ட வந்தவன் வார்த்தைகளை வாய்குள்ளே விழுங்கிக் கொண்டான்.

பின் எதேச்சையாக திரும்பி வாசல் பக்கம் பார்க்க அங்கே கண்களில் கண்ணீருடன் உறைந்து போய் நின்றிருந்தாள் வர்ஷினி.

விக்ரம் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திலேயே வர்ஷினியும் உள்ளே வந்திருந்தாள். ஏதோ கோப்பு ஒன்றில் தேவ்விடம் கையெழுத்து வாங்கவே அவள் வந்திருக்க அவர்களின் பேச்சில் கால் நகர மாட்டேன் என ஸ்தம்பித்து நின்றாள் மாது அவள்.

பேச்சில் குறியாக நின்றிருந்தவர்களில் ஒருவரும் வர்ஷினியை கவனித்திருக்கவில்லை.

இதயம் தடதடக்க நின்றிருந்தவளுக்கு அவன் அவளையே பார்க்க அதிர்ந்து விட்டாள். மீண்டும் தன்னை சந்தேகப்படுகிறானா..!? என்று நினைத்தவள் தன் கண்களை விழிநீருடன் விரித்தாள்.

அங்கிருந்த எல்லோரும் வந்தவளை சும்மா தான் பார்த்தனர். ஆனால் அவளுக்குத் தான் சந்தேகமாய் பார்ப்பது போல இருக்க, உதடு துடிக்க அன்று போல இன்றும் தலையை இடம் வலம் ஆட்டியவள் நொடியும் தாமதியாமல் கொண்டு வந்த ஃபைல் கைநழுவி விழ, அதனைக் கூட கவனிக்காமல் அறையை விட்டு வெளியே ஓடினாள்.

அப்போது தான் அவனுக்கும் புரிந்தது.. "ச்சே..." என கோபமாக மேசையில் ஓங்கி தட்டியவனும் வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

இவர்களை குழம்பிப் போய் பார்ப்பது விக்ரம் உட்பட நண்பர்களின் நிலையாகிப் போனது.



...



இங்கே காலையில் விழித்த அனுவிற்கு தீராவின் நினைவாகவே இருந்தது. பின் குளித்து விட்டு வந்து உடை மாற்றிக் கொண்டாள். தன் காதலன் தனக்காக வாங்கித் தந்த முதல் பொருள். ஆசையாக அணிந்தவள் ஆயிரம் தடவை கண்ணாடியில் தன்னை பார்த்து சிரித்து வெட்கப் பட்டுக் கொண்டாள். ஆனால் உடையவன் ரசிக்கத்தான் அருகில் இல்லை. நேரம் கடக்க என்ன செய்வது ஏது செய்வதென புரியாமல் சும்மா இருக்கவும் பிடிக்காமல் நகத்தைக் கடித்து யோசித்துக் கொண்டிருந்தவளை வார்டன் யாரோ பார்க்க வந்திருப்தாக அழைக்க உதட்டை பிதுக்கிக் கொண்டே சென்று விட்டாள்...


...


அமராவிற்கோ ஆதித்யாவுடன் பேசவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆபிஸில் இருந்து நள்ளிரவிலே வீட்டுக்கு வந்தவன் யாரையும் கவனியாமல் அறைக்குள் சென்று கதவை மூடியவன் தான். அதன் பின் எப்போது விழித்தான் எப்போது ஆபிஸ் சென்றான் என யாருக்குமே தெரியாது.

...

அதிகாலையில் சூரியன் தன் கதிர்களை வானெங்கும் படரவிட்டிருக்க சேவல் கூவிய சத்தத்தில் கண் விழித்தாள் கிராமத்து சிலையழகி...

என்றும் போல இன்றும் வெறிச்சோடிக் கிடந்த வீடு தன்னை பயமுறுத்தினாலும் இது தான் நிதர்சனம் என உணர்நதவளுக்கு ஏன் ஒவ்வொரு காலையிலும் தான் விழிக்கிறோம் என்று தான் தோன்றியது.

வாழ்க்கையில் தான் விரும்பிய ஒன்றுமே தன்னுடன் இருந்ததில்லை. அப்படி இருக்க தன்னை மட்டும் ஏன் இறைவன் உயிருடன் வைத்திருக்கிறான் எனத் தான் தினமும் நினைக்கிறாள். ஆனால் ஏதோ ஓர் மூலையில் தன்னை வெறுத்தாலும் தன்னை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என அந்த கஷ்டமான நேரத்திலும் மனநிம்மதி அடைந்தாள் பெண்ணவள். அவள் ரதி.

தொடரும்...

தீரா.